Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor lingesh – Touring Talkies https://touringtalkies.co Mon, 12 Dec 2022 15:05:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor lingesh – Touring Talkies https://touringtalkies.co 32 32 கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் https://touringtalkies.co/college-road-movie-trailer-release-function-news/ Mon, 12 Dec 2022 15:04:33 +0000 https://touringtalkies.co/?p=28459 நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம்.  மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது. ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். உயர் படிப்புகளை படிப்பதற்கான […]

The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் லிங்கேஷ் நடிக்கும் ‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “நமது மாநிலம் கல்வியை மிக முக்கியமானதாக கருதும் மாநிலம்.  மாணவர்கள் கல்வி கற்க உணவு கொடுத்து அடிப்படைக் கல்வியை கொடுத்து வருகிறது.

ஆனால் உயர் படிப்புகள் என்று வரும்பொழுது இங்கு பணம் பெரும் முக்கிய பங்காற்றுகிறது. கல்வி கற்க கல்விக் கடன் வாங்கியே பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

உயர் படிப்புகளை படிப்பதற்கான திறமையும், தகுதியும் இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் பலரால் படிக்க முடியாமல் போகிறது.

அதிலும் கல்விக் கடன்  வாங்கி படிக்கும் மாணவர்களின் நிலைமை பெரும் துயரமானது. கல்விக் கடன் வாங்குவதிலிருந்து அதை கட்டி முடிக்கும் வரையிலும் மாணவர்களுக்கு இருக்கும் உளவியல் பிரச்சினைகள் ஏராளம்.

இந்தப் படம் அந்தக் கல்விக் கடன்கள் குறித்துதான் விரிவாகப் பேசுகிறது. அதை இளைஞர்களுக்கு பிடிக்கும்விதமாக பொழுதுபோக்கு அம்சங்களோடு பேசியிருக்கிறோம். இந்த காலேஜ் ரோடு படம் சஸ்பென்ஸ் நிறைந்த கலகலப்பான படமாக இருக்கும். கமர்சியல் கலந்த சமூகப் பொறுப்புள்ள படமாக உருவாக்கியிருக்கிறோம்…” என்றார்.

நிகழ்வில் இயக்குநர் ஜெய் அமர்சிங், மற்றும் நடிகர்கள் கலந்து கொண்டனர்.

The post கல்விக்கு எதற்கு கடன்? உண்மையை பேச வரும் ‘காலேஜ் ரோடு’ படம் appeared first on Touring Talkies.

]]>
வில்லன் நடிகர் கதாநாயகனாகிறார்..! https://touringtalkies.co/villain-actor-lingesh-turns-to-be-hero/ Fri, 06 Nov 2020 08:00:31 +0000 https://touringtalkies.co/?p=9758 ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘குண்டு’ ‘ஜடா’ ஆகிய படங்களில் நடித்தவர் லிங்கேஷ். வில்லனாக பல படங்களில் நடித்த நடிகர் லிங்கேஷ், இப்போது முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். தயாரிப்பாளர்கள் பிரவீன் மற்றும் சரத் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். தனி இசைக் கலைஞராக அறியப்பட்ட ஆப்ரோ இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகிறார். இந்தியில் டோட்டல் தமால் படத்தின் ஜப்பானிய ஒளிப்பதிவாளர் கெய்க்கோ மற்றும் கோபி அமர்நாத்திடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். […]

The post வில்லன் நடிகர் கதாநாயகனாகிறார்..! appeared first on Touring Talkies.

]]>
‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’, ‘குண்டு’ ‘ஜடா’ ஆகிய படங்களில் நடித்தவர் லிங்கேஷ்.

வில்லனாக பல படங்களில் நடித்த நடிகர் லிங்கேஷ், இப்போது முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

தயாரிப்பாளர்கள் பிரவீன் மற்றும் சரத் இருவரும் இணைந்து இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.

தனி இசைக் கலைஞராக அறியப்பட்ட ஆப்ரோ இந்தப் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகிறார்.

இந்தியில் டோட்டல் தமால் படத்தின் ஜப்பானிய ஒளிப்பதிவாளர் கெய்க்கோ மற்றும் கோபி அமர்நாத்திடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் சுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

படத் தொகுப்பு அஷோக், கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜெய் அமர்சிங்.

இவர் லண்டன் திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இயக்குநர் அஹ்மத்திடம் துணை இயக்குநராகப் பணி புரிந்தவர்.

கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படம் கல்லூரி மாணவர்களின் கதை என்பதால் கல்லூரி மாணவர்போல இருக்க வேண்டுமென்று இரண்டே மாதங்களில் பதினாறு கிலோ எடையை குறைத்திருக்கிறார் லிங்கேஷ்.

கலர்புல்லான அதே சமயம் சமூகக் கருத்தையும் பேசுகிற கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும்,  மாணவர்களின் இயல்பான வாழ்வில் நடக்கும் காதல் கொண்டாட்டம் சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இது இருக்கும்.

இந்தப் படத்திற்குப்பிறகு லிங்கேஷ், இயக்குநர் ப்ராங்ளின் இயக்கும் படத்திலும், இதே நிறுவனத்தின்  அடுத்தப் படத்திலும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

சமீபத்தில் இந்தப் படத்திற்கான போட்டோ சூட் நடைபெற்றிருக்கிறது.

தீபாவளிக்குப் பிறகு இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

The post வில்லன் நடிகர் கதாநாயகனாகிறார்..! appeared first on Touring Talkies.

]]>