Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
actor aadhi – Touring Talkies https://touringtalkies.co Thu, 19 May 2022 15:02:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png actor aadhi – Touring Talkies https://touringtalkies.co 32 32 நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் நடந்தேறியது https://touringtalkies.co/actor-aadhi-actress-nikki-galrani-wedding-news/ Thu, 19 May 2022 11:26:58 +0000 https://touringtalkies.co/?p=22160 நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ‘யாகாவராயினும் நாகாக்க’, ‘மரக நாணயம்’ ஆகிய படங்களில் ஆதியும், நிக்கி கல்பானியும் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது. கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்து கொண்டனர். இன்று மே 19-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் அதிகாரப்பூர்வமாக தற்போது கணவன் மனைவியாக […]

The post நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் நடந்தேறியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

யாகாவராயினும் நாகாக்க’, ‘மரக நாணயம்’ ஆகிய படங்களில் ஆதியும், நிக்கி கல்பானியும் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்து கொண்டனர். இன்று மே 19-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் அதிகாரப்பூர்வமாக தற்போது கணவன் மனைவியாக மாறிவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மணமகன் ஆதி தங்க நிற குர்த்தா உடையிலும், மணமகள் நிக்கி கல்ராணி தங்கம் மற்றும் பச்சை நிறம் கலந்த உடையில் தோற்றமளித்தார்கள்.

முன்னதாக நடந்த ஹல்தி விழாவில் நடிகர்கள் நானி, சந்திப் கிஷன், ஆர்யா, சாயிஷா, சிரிஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண வரவேற்பில் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், விஜயகுமார், ஜீவா, அருண் விஜய், நானி, R.k.சுரேஷ், பாபி சிம்ஹா, ஆனந்தராஜ், விஜய் வசந்த், ஆரி, சந்திப் கிஷன், பரத், சிரிஷ், நந்தா, ஆடுகளம் நரேன், சக்தி வாசு, ஜெய பிரகாஷ், பாண்டியராஜன், மயில்சாமி, கணேஷ் வெங்கட்ராமன், சாம்ஸ், சசிகுமார், பாகியராஜ், பூர்ணிமா, சாந்தனு, விக்ரம் பிரபு, தர்சன் கணேசன், சண்முக பாண்டியன் (விஜயகாந்த் மகன்), ரவி மரியா, டேனியல் ஆனி போப், பிரிதிவி பாண்டியராஜ், நடிகைகள் ராதிகா, சோனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்திரி ரகுராம், சுஹாசினி, ரோகிணி, இயக்குநர்கள் K.s.ரவிக்குமார், ஹரி, N.லிங்குசாமி, சாமி, கோபி, ரமணா, எழில், ப்ரிதிவ் ஆதித்யா, கணேஷ் விநாயக், வசந்தபாலன், R.கண்ணன், போயப்பட்டி ஶ்ரீனு, GNR.குமரவேல். தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி, பிலிம் சேம்பர் தலைவர் காட்றகட்ட பிரசாத், முன்னாள் பிலிம் சேம்பர் தலைவர் C.கல்யாண், அபிராமி ராமநாதன், அல்லு அரவிந்த், T.சிவா, N.சுபாஷ் சந்திர போஸ், T.G.தியாகராஜன், ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், கிருஷ்ணா ரெட்டி, ஏடித நாகேஸ்வர ராஜா, கமல் போரா, தனஞ்செயன். இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவி ஶ்ரீ பிரசாத். பாடகர் கிரிஷ், எடிட்டர் k.L.பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, டான்ஸ் மாஸ்டர் ஜெப்ரி வர்டன், காஸ்டியூம் டிசைனர் ஷெர், ஆகியோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் நவீனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைவரையும், மணமகன் தந்தை டைரக்டர் ரவிராஜ் பினிசெட்டி, தாயார் ராதா ராணி, அண்ணன் சத்யா பிரபாஸ் பினிசெட்டி, மணமகள் நிக்கி கல்ராணி தந்தை மனோகர் கல்ராணி, தாயார் அனிதா ரேஷ்மா, ஆதி மானேஜர் அஜய்குமார், PRO ஜான்சன், ரியாஸ் அகமத் ஆகியோர் வரவேற்றார்கள்.

இந்தக் காதல் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் #AadhiWedsNikki என்கிற ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகின்றன.

The post நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி திருமணம் நடந்தேறியது appeared first on Touring Talkies.

]]>
நடிகர் பிரகாஷ்ராஜ், ஆதி நடிக்கும் ‘கிளாப்’ படத்தில் இணைந்தார்…! https://touringtalkies.co/clap-movie-news/ Wed, 25 Nov 2020 08:20:48 +0000 https://touringtalkies.co/?p=10364 இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கும் ‘கிளாப்’ படம்,  பன்மொழி திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது. Big Print Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் இப்படத்தைத் தயாரிக்கிறார். P.பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், மைம் கோபி, முனீஷ்காந்த் மற்றும் பல பிரபலமானவர்கள் குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய […]

The post நடிகர் பிரகாஷ்ராஜ், ஆதி நடிக்கும் ‘கிளாப்’ படத்தில் இணைந்தார்…! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கும் ‘கிளாப்’ படம்,  பன்மொழி திரைப்படமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

Big Print Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் I.B.கார்த்திகேயன் இப்படத்தைத் தயாரிக்கிறார். P.பிரபா, ப்ரேம், மனோஜ் & ஹர்ஷா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் ஆதி, ஆகான்ஷா சிங் மற்றும் க்ரிஷா க்ரூப் மூவரும் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும், மைம் கோபி, முனீஷ்காந்த் மற்றும் பல பிரபலமானவர்கள் குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் முக்கிய அம்சமாக இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு மிகப் பெரும் தூணாக அமைந்துள்ளது.

இப்போது இந்தப் படத்தில் ஒரு புதிய வரவாக மூத்த நடிகரான  பிரகாஷ் ராஜ் இணைந்திருக்கிறார். இதனால் படக் குழுவில் அனைவரும் பெரும் உற்சாகத்துடன்,  மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இயக்குநர் பிரித்வி ஆதித்யா இது குறித்து பேசும்போது, “சினிமாவில் பலருக்கு முன்னுதாரணமாக, மிகச் சிறந்த நடிகராக திகழும் பிரகாஷ் ராஜ் போன்ற நடிகரோடு பணிபுரிவது வளரும் இயக்குநர்கள் அனைவருக்குமே ஒரு பெரும் கனவு.

நடிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே மிகச் சிறந்த நடிகராக தன்னை அவர் வடிவமைத்து கொண்ட விதமும், அவர் தேர்ந்தெடுத்து நடித்த பாத்திரங்களில் வெளிப்படுத்திய நடிப்பும்,  இந்திய சினிமாவில் பன்மொழிகளிலும் அவர் பணியாற்றிய விதமும், அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் பெரும் பயணம். 

ஒரு நடிகராக மற்றுமின்றி இயக்குநராக, தயாரிப்பாளராக, தரமான படைப்புகளை தந்து, இன்று இந்திய சினிமாவில் மிக முக்கிய ஆளுமையாக வளர்ந்து நிற்கிறார். 

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கிறார் என்கிறபோதே இந்திய மொழிகள் பலவற்றிலும் எதிர்பார்ப்புமிக்க படமாக மாறிவிடும் அளவுக்கு இந்தியாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் ஈர்த்துள்ளார் அவர். 

இந்தப் பொது முடக்க காலத்திற்கு பிறகு எங்கள் படமான கிளாப்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் இணைவது பெரும் மகிழ்ச்சி. எப்போதும் முழு ஆர்வத்துடன், படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும்   எளிமையாக பழகி, நேர்மறைத் தன்மையோடு பெரும் உற்சாகத்தை பரப்புகிறார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது கிளாப்’ படத்தின் படப்பிடிப்பு துவக்கப்பட்டுள்ளது. படத்தை வரும் 2021-ம் ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்…” என்றார்.

The post நடிகர் பிரகாஷ்ராஜ், ஆதி நடிக்கும் ‘கிளாப்’ படத்தில் இணைந்தார்…! appeared first on Touring Talkies.

]]>