Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
800 திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Wed, 14 Jul 2021 08:01:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png 800 திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “800 படம் நிச்சயமாக உருவாக்கப்படும்” – முத்தையா முரளிதரன் அறிவிப்பு https://touringtalkies.co/800-film-will-definitely-be-made-muttiah-muralitharan-announcement/ Wed, 14 Jul 2021 08:01:37 +0000 https://touringtalkies.co/?p=16174 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் படமாக தயாரிக்கப்படுவதாக சென்ற வருடம் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது. படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இடம் பெறாது என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்தாலும், இந்தப் படத்திற்கு தமிழகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. முத்தையா முரளிதரனும் ஒரு […]

The post “800 படம் நிச்சயமாக உருவாக்கப்படும்” – முத்தையா முரளிதரன் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் படமாக தயாரிக்கப்படுவதாக சென்ற வருடம் அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்தில் முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் இயக்குநர் ஸ்ரீபதி ரங்கசாமி படத்தை இயக்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இடம் பெறாது என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் உறுதியளித்தாலும், இந்தப் படத்திற்கு தமிழகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

முத்தையா முரளிதரனும் ஒரு இலங்கை தமிழர்தான். ஆனால் அவர் மலைத்தோட்ட தமிழர். விடுதலைப்புலிகளை சிங்கள ராணுவம் ஒழித்து அங்கு போர் முடிவுக்கு வந்தவுடன் இலங்கை அரசுக்கு ஆதரவாக முத்தையா முரளிதரன் பேசினார் என்பதால் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்தப் படத்தில் நடிப்பதை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், பாடலாசிரியர்கள் வைரமுத்து, தாமரை உள்பட பலர் கோரிக்கை வைத்தார்கள்.

இந்தநிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதற்கு டிவிட்டரில் பதிலளித்த விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையை குறிப்பிட்டு “நன்றி வணக்கம்” என பதிவிட்டு படத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார்.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க மாட்டார். அவருக்கு அதிக அழுத்தங்கள் வந்த காரணத்தினால், படத்தில் இருந்து நின்றுவிடுமாறு நானே வேண்டுகோள் விடுத்தேன். வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கப் போகிறோம்.

இந்தக் கொரோனா நோய் முற்றிலும் காணாமல் போன பிறகு எனது சுயசரிதையை கருவாகக் கொண்ட இந்த 800’ திரைப்படம் நிச்சயமாகத் திரைக்கு வரும்…” என்று முத்தையா முரளிதரன் தெரிவித்தார்.

The post “800 படம் நிச்சயமாக உருவாக்கப்படும்” – முத்தையா முரளிதரன் அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! https://touringtalkies.co/director-seenu-ramasamy-complaint-about-death-threatens/ Wed, 28 Oct 2020 06:46:33 +0000 https://touringtalkies.co/?p=9370 தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர். இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று காலை டிவீட்டரில் […]

The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.

]]>

தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக இயக்குநர் சீனு ராமசாமி திடீர் புகார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சீனு ராமசாமி தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’, ‘தென் மேற்குப் பருவக் காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’, ‘கண்ணே கலைமானே’, ‘மாமனிதன்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியவர். இதில் ‘தென்மேற்குப் பருவக் காற்று’ படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதையும் வென்றவர்.

இவருக்குத் தற்போது கொலை மிரட்டல் வந்துள்ளதாக அவரே புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று காலை டிவீட்டரில் ஒரு அவசரச் செய்தியொன்றை பகிர்ந்தார் சீனு ராமசாமி.

அதில், “என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் அவசரமாகப் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் சீனு ராமசாமி இது குறித்துப் பேசுகையில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ பிரச்சனையில் எல்லோரையும் போலவே நானும் தம்பி விஜய் சேதுபதியிடம் ‘அதில் நடிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்தேன்.

இதற்கடுத்து நான் விஜய் சேதுபதிக்கு எதிரானவன் என்று சித்தரித்து எனக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் வருகின்றன.

எனக்கும், தம்பி விஜய்சேதுபதிக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை போல இதனை சித்தரிக்கின்றனர். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி அதனைக் கூர்மையாக்கி எங்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.

எனக்கு அரசியல் பற்றிய சினிமாக்களை எடுக்கத் தெரியும். ஆனால் சினிமாவிற்குள் இருக்கும் அரசியல் தெரியாது. தம்பி விஜய் சேதுபதியின் நலன் கருதியே அவரை அந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேன். ஆனாலும் எனக்கு மிரட்டல்களும், ஆபாச அர்ச்சனைகளும் வந்து கொண்டேயிருக்கின்றன.

இது பற்றி தம்பி விஜய் சேதுபதியிடமும் நான் பேசினேன்.  விஜய் சேதுபதியின் ரசிகர்களும் என்னுடைய தம்பிகள்தான். அவர்கள் இதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். நமக்கு இடையே யாராலும் முரண்பாடுகளை உருவாக்க முடியாது’ என்று விஜய் சேதுபதியும் என்னிடம் கூறியிருக்கிறார்.

ஆபாச வார்த்தைகளால் தொலைபேசியில் நள்ளிரவிலும் மிரட்டல் விடுக்கின்றனர். அதனால்தான் ட்விட்டரில் அப்படி ஒரு பதிவை போட்டேன். இது தொடர்பாக காவல் துறையில் எழுத்துப்பூர்வமாகவும் புகார் தரப் போகிறேன்..” என்று கூறினார் சீனு ராமசாமி.

The post “800 படம் எதிரொலியாக எனக்குக் கொலை மிரட்டல் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி புகார்..! appeared first on Touring Talkies.

]]>
‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி..! https://touringtalkies.co/vijay-sethupathy-exit-from-800-movie/ Mon, 19 Oct 2020 10:29:49 +0000 https://touringtalkies.co/?p=8988 கடந்த சில நாட்களாக தமிழ்ச் சினிமாத் துறையை சுழன்றடித்த விஷயம் ‘800’ திரைப்படத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வேடமேற்று நடிகர் விஜய் சேதுபதி நடிப்பாரா.. மாட்டாரா என்பதுதான். இலங்கை இனப் படுகொலையை இதுவரையிலும் கண்டிக்காமலும், ராஜபக்சேவின் ஆட்சியையும், கட்சியையும் எப்போதும் உயர்த்தியே பேசி வரும் முத்தையா முரளிதரன் ஒரு ‘தமிழினத் துரோகி’ என்று தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இலங்கையில் இருக்கும் தமிழின அமைப்புகளும் கோபம் கொண்டுள்ளன. இந்த நேரத்தில், […]

The post ‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
கடந்த சில நாட்களாக தமிழ்ச் சினிமாத் துறையை சுழன்றடித்த விஷயம் ‘800’ திரைப்படத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரன் வேடமேற்று நடிகர் விஜய் சேதுபதி நடிப்பாரா.. மாட்டாரா என்பதுதான்.

இலங்கை இனப் படுகொலையை இதுவரையிலும் கண்டிக்காமலும், ராஜபக்சேவின் ஆட்சியையும், கட்சியையும் எப்போதும் உயர்த்தியே பேசி வரும் முத்தையா முரளிதரன் ஒரு ‘தமிழினத் துரோகி’ என்று தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், இலங்கையில் இருக்கும் தமிழின அமைப்புகளும் கோபம் கொண்டுள்ளன.

இந்த நேரத்தில், “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது அவருக்கு அழகல்ல. பெருமையல்ல.. அவர் அதில் நடிக்கக் கூடாது. தமிழக மக்கள் அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்று அடையாளப் பெயரை சூட்டியிருக்கிறார்கள்.

அந்தப் பெயருக்கேற்றவாறு அவர் நடந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக அவர் நடந்து கொள்ளக் கூடாது…” என்றெல்லாம் விஜய் சேதுபதி மீது கடும் கண்டனங்கள் கடந்த சில நாட்களாக ஒலித்துக் கொண்டிருந்தன.

ஆனால் விஜய் சேதுபதி இத்தனை கண்டன அறிக்கைகள் மற்றும் வேண்டுகோள்களுக்கும் பதில் சொல்லாமல் அமைதி காத்து வந்தார்.

இந்த நேரத்தில் முத்தையா முரளிதரன் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார். அந்தச் செய்தியில் “விஜய் சேதுபதியை இந்தப் படத்தில் நடிக்க வைப்பதன் மூலம் அவரது நடிப்பு கேரியரில் பிரச்சினை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டரில் நடிக்க வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் செய்தியை உடனடியாக தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் ஷேர் செய்துள்ள விஜய் சேதுபதி, “நன்றி வணக்கம்” என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

இதனால், முத்தையா முரளிதரனின் கோரிக்கையை விஜய் சேதுபதி ஏற்றுக் கொண்டு படத்தில் இருந்து விலகியிருக்கிறார் என்றே தோன்றுகிறது..!

The post ‘800’ படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி..! appeared first on Touring Talkies.

]]>
“உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டியில்லையா..?” – விஜய் சேதுபதியை கண்டித்தவர்களிடத்தில் ‘சித்தி’ ராதிகா கேள்வி..! https://touringtalkies.co/actress-radhika-condemns-who-are-they-asked-vijay-sethupathy-not-to-act-800-movie/ Fri, 16 Oct 2020 09:19:41 +0000 https://touringtalkies.co/?p=8898 கடந்த 3 நாட்களாக தமிழ்ச் சினிமாவில் ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவிருக்கிறார். “அந்தப் படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கக் கூடாது…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, கவிஞர் தாமரை, தோழர் தியாகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி […]

The post “உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டியில்லையா..?” – விஜய் சேதுபதியை கண்டித்தவர்களிடத்தில் ‘சித்தி’ ராதிகா கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>

கடந்த 3 நாட்களாக தமிழ்ச் சினிமாவில் ஒரு விஷயம் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று கதையான ‘800’ என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கவிருக்கிறார்.

“அந்தப் படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கக் கூடாது…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, கவிஞர் தாமரை, தோழர் தியாகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், நடிகர் விவேக், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பல முக்கிய சினிமா பிரபலங்களும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அறிமுகப்படுத்திய நடிகையான ‘சித்தி’ ராதிகா.. “இது போன்று விஜய்சேதுபதியை நடிக்கக் கூடாது என்று சொல்வது முட்டாள்தனமானது…” என்று கூறியுள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள சித்தி ராதிகா, “முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது’ என்று துள்ளுபவர்களுக்கெல்லாம் வேறு வேலையில்லையா..? ஏன் இவர்கள் சன் ரைஸர்ஸ் குழுவின் தலைமை கோச்சாக இருக்கும் முத்தையாவை நீக்கும்படி கோரவில்லை.. அது அரசியல் பின்புலமுள்ளது என்பதாலா..? விஜய் சேதுபதி ஒரு நடிகர்.  நடிகரை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடாது. விஜய் சேதுபதி, விளையாட்டு இரண்டையும் முட்டாள்தனமாக அணுகக் கூடாது..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செய்தி வைரலானவுடன் ஒன்றரை மணி நேரம் கழித்து மீண்டும் 2 செய்திகளை டிவீட்டரில் போட்டுள்ளார் சித்தி ராதிகா.

அதில் “சன் டிவி மற்றும் சன் ரைசர்ஸ் உரிமையாளர்கள் வலுவான அரசியல் பின்புலத்துடன் இருந்தாலும் தங்களுடைய அரசியலுடன் விளையாட்டு மற்றும் சினிமா துறைகளை சேர்க்காமல் தனியாகக் கையாண்டு வருகிறார்கள். அதுபோல, நமது சினிமா துறையும் அரசியலலில் இருந்து விலகியிருந்தால் என்ன..?

நான் அந்த ட்வீட்டை இட்டது சர்ச்சைகளை உருவாக்குவதற்காக அல்ல. நமது திரையுலகையும், சக கலைஞர்களையும் ஆதரிப்பதற்காகத்தான். அதனால்தான் நடுநிலையான தன்மையோடு தொழில் செய்பவர்களுக்கு சாட்சியாக இருக்கும் சன் ரைசர்ஸ் பெயரை இணைத்து எழுதினேன்..” என்று கூறியுள்ளார்.

இதற்கு அவரது குருவான இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பதில் என்னவோ..?

The post “உங்களுக்கெல்லாம் வேற வேலை வெட்டியில்லையா..?” – விஜய் சேதுபதியை கண்டித்தவர்களிடத்தில் ‘சித்தி’ ராதிகா கேள்வி..! appeared first on Touring Talkies.

]]>
“800 படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கண்டனம்..! https://touringtalkies.co/bharathiraja-request-to-vijay-sethupathy-not-to-act-in-800-movie/ Thu, 15 Oct 2020 06:22:46 +0000 https://touringtalkies.co/?p=8834 பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த […]

The post “800 படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கண்டனம்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் தாமரை இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

அன்பின் கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு,

பாசத்திற்குரிய பாரதிராஜா எழுதிக் கொள்வது..

வணக்கம்.

மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர்.

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும் .. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன்.

நிற்க.

தாங்கள் செய்யவிருக்கும் ‘800’ என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக அது உருவாகப் போவதாக அறிந்தேன்.

நம் ஈழத் தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்தபோது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க, முழுக்க ஆதரித்தவர்.

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்..?

 எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரளீதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான்.

அடிபட்ட வலியை நினைவு கூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்..? மறுத்திருக்கலாமே… என கேட்கின்றனர்.

அவர்களின் வேதனையும், வலியும் புரியும். அதேசமயம், அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காண முடிந்தது.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான்  கோரிக்கை வைக்கிறேன்.

இனத் துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா..?

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல்  படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள்.

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவு கொள்ளப்படுவீர்கள்.

பின் குறிப்பு :  ‘800’ திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

‘800’ – திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்த திரைப்படம் எடுத்தால் பல ஈழத் தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை  உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியீட்டு இருந்தீர்கள்.

துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா…? இல்லை.. உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பாதா…? அனைத்து துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றை புரட்டிப் பாருங்கள்.. பாடம் சொல்லும்.

ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன்கள் வந்தால்கூட ஈடு செய்ய முடியாது.

உண்மையிலேயே நீங்கள்  தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி  தீயாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக  தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு , காற்றோடு, கலந்த போன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை,  உலகரங்கில் எடுக்க முன் வாருங்கள்… ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாக பணியாற்றக் காத்திருக்கோம்.

நன்றி

இயக்குநர் பாரதிராஜா

The post “800 படத்தில் நடிக்க வேண்டாம்” – விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கண்டனம்..! appeared first on Touring Talkies.

]]>
“எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..! https://touringtalkies.co/kavingar-thamarai-advice-to-vijay-sethupathy-about-800-movie/ Wed, 14 Oct 2020 15:49:05 +0000 https://touringtalkies.co/?p=8811 பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த […]

The post “எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>

பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய்சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான தாமரை இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

விஜய் சேதுபதி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்…!

என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின் வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளரும் முன்பாகவே உங்களை எச்சரித்துவிட வேண்டுமென்றுதான் விரும்பினேன்.

முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்ததுகூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப்பட்டு வந்தது. 

ஆரம்பக் காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளானபோது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத் தலைவர் ”அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்” என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும்.

முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்ததுகூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக்கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே…

ஐயகோ !

சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று போட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, ‘இந்த நாள் இனிய நாள்’ என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்…. காணாமல் போன தம் வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, ‘நாடகம்’ என்று வர்ணித்தார்.

இனப் படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே??? அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !?

ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும்…?!

வரலாறு பல கதைகள் சொல்லும் வி.சே அவர்களே..! அது தன் பாட்டுக்கு எழுதிப் போகும்…. எட்டப்பன் ஒரேயொரு குட்டி வேலைதான் செய்தான், இன்றளவும் ‘எட்டப்பன்’ என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமல்லவா..? உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா…?

நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள். எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள்..!

என்னது… நட்டமென்றா சொன்னேன்..??! மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன். என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன். என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன். இதில் நட்டமென்ன வந்தது நட்டம்..?? ஒரு தமிழ்ப் பெண் தன் ‘பங்களிப்பாக’ இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல்!..

நாமென்ன போர் முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா?.. போராட்டங்களில் முன் வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா?..

அண்ணனைக் காணோம்.. அக்காவைக் காணோம்.. அம்மாவை சாகக் கொடுத்தோம்.. என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா..?? இசைப் பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா..? இல்லை.. அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தோமா..?

ஒரு பாடலை எழுத மறுக்கிறோம். ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம். அவ்வளவுதானே..? என்ன ‘நட்டம்’..?

நமக்குத் தெரிந்த வகையில் ‘பங்களி’க்கிறோம், அவ்வளவுதானே..??

நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலை நிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும். நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும்.

தமிழர்களாகப் பிறந்துவிட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம், புறம், அடுப்படி, மூன்று வேளை சோறு..????

தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது..! காலக் கோளாறு இது..!

தமிழன் தாழலாம்.. ஆனால் வீழக் கூடாது…

வீழ்த்த முனைபவர்கள் பல வேடமிட்டு வரத்தான் செய்வார்கள். நாம் ஏமாந்து விடக் கூடாது. நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள். நாம் தூங்கிவிடக் கூடாது.

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில்..! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக் கூடாது..!

மக்கள் செல்வன்’ விஜய சேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள்..

என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம்..! உலகத் தமிழர்கள் நம் பக்கம் இருக்கிறார்கள்.

பி.கு.: சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது..! அதை ஏற்று நடியுங்கள். வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம் !

தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை! படம் வெளியிட்டிருக்கிறேன். கண்ணாடி முன் நின்று ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்..!

The post “எட்டப்பனாகிவிடாதீர்கள்…” – விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>
“முத்தையா முரளிதரனாக நடிக்காதீர்கள்..” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு வேண்டுகோள்..! https://touringtalkies.co/thozar-thiyagu-appeals-to-vijay-sethupathy-not-to-act-in-800-movie/ Wed, 14 Oct 2020 15:13:50 +0000 https://touringtalkies.co/?p=8808 பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன. முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய […]

The post “முத்தையா முரளிதரனாக நடிக்காதீர்கள்..” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதை ‘800’ என்கின்ற பெயரில் சினிமாவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். அவருடைய கெட்டப் தாங்கிய பலவித போஸ்டர்கள் நேற்று முதல் வெளியிடப்பட்டு வருகின்றன.

முத்தையா முரளிதரன் ஈழத்தில் நடைபெற்ற தனி ஈழப் போராட்டங்கள் எதையும் ஆதரித்தவரில்லை. மாறாக இலங்கை அரசுகளை மட்டுமே தொடர்ந்து ஆதரித்து பேசியும் வந்திருக்கிறார். இதனால், தமிழகம் மட்டுமன்றி அவருடைய சொந்த நாடான தமிழ் ஈழத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

இதையொட்டி தமிழகத்தில் இருந்து பல்வேறு பிரமுகர்களும், சினிமா பிரபலங்களும் இந்தப் படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்க’த்தின் பொதுச் செயலாளரான தியாகுவும் இது குறித்து விஜய் சேதுபதிக்கு கோரிக்கை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இது :

நடிகர் விஜய் சேதுபதி – இதுவே கடைசி விளம்பரமாக இருக்கட்டும்.

அன்பிற்குரிய விஜய் சேதுபதி அவர்களே..!

வணக்கம்.

நீங்கள் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு வீர்ர் முத்தையா முரளிதரன் வேடத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதாக ”முதல் தோற்ற விளம்பரங்கள்” (first look posters) வந்துள்ளன. இவையே கடைசித் தோற்ற விளம்பரமாகவும் இருந்து விட்டால் நல்லது.

இதற்கு மேல் நீங்கள் இந்தப் படத்திலிருந்து விலகிய செய்தி தவிர வேறு எதுவும் வராமலிருக்க வேண்டும் என விரும்பும் தமிழர்கள் சார்பில் உங்களுக்கு இந்த மடல். உங்கள் முகவரி எனக்குத் தெரியாது. ஆனால் எப்படியும் இந்த மடல் உங்கள் பார்வைக்குச் சென்று விடும் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்.

ஒரு நடிகர் என்ற முறையில் எந்தக் கதை மாந்தராகவும் நடிக்க உங்களுக்கு உரிமையுண்டு, அதுதான் உங்கள் ’தொழில் தர்மம்’ என்பதில் ஐயமில்லை. திரு முத்தையா முரளிதரனைப் பொறுத்தவரை உலக சாதனை புரிந்த ஒரு தலைசிறந்த கிரிக்கெட் வீர்ர் என்பதில் மறுப்புக்கே இடமில்லை. ஆக, அவராக நீங்கள் நடிப்பது உங்கள் இருவருக்குமே இயல்பாகப் பெருமை தரக் கூடியது என எடுத்த எடுப்பில் தோன்றத்தான் செய்யும்.

ஆனால், நீங்கள் நடிகர் என்பதோடு குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அன்பைப் பெற்ற தமிழ்க் கலைஞராகவும் விளங்குவதற்கு உங்கள் நடிப்புத் திறன் மட்டுமே காரணமன்று. அறம் சார்ந்த முற்போக்குக் கண்ணோட்டமும் உடையவராகத் தமிழ் மக்களிடையே நீங்கள் கொண்டிருக்கும் படிமமும் சேர்ந்துதான் உங்களுக்குப் புகழ் சேர்த்துள்ளது எனக் கருதுகிறேன்.

முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் மட்டும்தான் என்றால் இந்த மடல் எழுத வேண்டிய தேவையே எழுந்திருக்காது.

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் உச்சம் கண்டதே சிங்கள அரசின் தமிழர் இனவழிப்பு, போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சற்றொப்ப ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்களே, குடும்பத்துடன் சரணடைந்தவர்கள் உட்பட பல்லாயிரம் தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்களே, இந்த உண்மைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும், முத்தையா முரளிதரனுக்கும் தெரியும்.

ஆனால் இந்தக் கொடிய இனவழிப்பைத் தலைமையேற்று நடத்திய இராசபட்சேக்களுக்கு முரளி ஆதரவு தெரிவித்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தமிழரான அவர் இனவழிப்பின் நிறைவை மகிழ்ந்து கொண்டாடி சிங்களப் பேரினவாதிகளுக்குத் தன் விசுவாசத்தைக் காட்டிக் கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒன்றரை இலட்சம் உயிர்களை மாய்த்த கொலைகாரச் சாதனையை முத்தையா முரளிதரன் இரசித்துச் சுவைத்தார் என்பது தெரிந்த பின்னும் 800 விக்கெட்டுகளைச் சாய்த்த அவரது ’தூஸ்ரா’வை இரசிக்கவும் கொண்டாடவும் தமிழர்களுக்கு எப்படி மனம் வரும்..?

அருள் கூர்ந்து எண்ணிப் பாருங்கள் விஜய்!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்புப் போர்க் காலத்தில் நடந்த போர்க் குற்றங்கள், மானிடப் பகைக் குற்றங்கள். மாந்தவுரிமை மீறல்கள் பற்றியெல்லாம் வந்துள்ள ஐநா அறிக்கைகள். மாந்தவுரிமைப் பேரவைத் தீர்மானஙகள், சேனல் நான்கின் ஆவணப் படங்கள்… இவை குறித்தெல்லாம் உங்களுக்குத் தெரியாமலிருக்காது என நம்புகிறேன்.

எவ்வளவு தரவுகள் தேவையானாலும் உங்களுக்கு அனுப்ப தமிழ் இளைஞர்கள் அணியமாய் உள்ளனர்.

உங்களைப் போன்றவர்களை இழந்து விடக் கூடாது என்ற அக்கறை தவிர வேறு நோக்கமில்லை.

நீங்கள் நினைக்கலாம், யாரோ சிலர் விடுக்கும் வேண்டுகோளை மதிக்க வேண்டுமா என. இல்லை, விஜய். இது உலகத் தமிழினத்தின் ஒன்றுபட்ட இதயத் துடிப்பு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று தமிழகச் சட்டப் பேரவையும், சிறிலங்காவின் வட மாகாண சபையும் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

இலங்கையைப் புறக்கணிக்கும் கோரிக்கையின் தொடர்ச்சியாகத்தான் அப்போதைய முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் சென்னையில் இலங்கை வீர்ர்கள் விளையாடும் ஐபிஎல் போட்டிகள் நடத்தத் தடை விதித்தார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள்.

இன்றளவும் சன் குழுமத்தின் முதலாளி கலாநிதி மாறன் தனது ஐதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்குப் பந்து வீச்சுப் பயிற்சியாளராக விலைக்கு வாங்கி வைத்துள்ள முத்தையா முரளிதரனை அன்று தமிழகத்தின் சார்பில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளேவிட மறுத்தார்.

இன்று அதே முரளிதரனின் படிமம் உங்கள் அரிதார வடிவில் தமிழ்நாட்டுக்குள்ளும் புலம்பெயர் தமிழுலகத்துக்குள்ளும் நுழையும் முயற்சி பத்துக் கோடித் தமிழர்களையும் இழிவுபடுத்துவதல்லவா?

விளையாட்டிலும், கலையிலும் அரசியல் கலக்கலாமா…? என்று ஒரு கலப்படக் கும்பல் கிளம்பி வரும்.

அவர்களுக்கு நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டிய சில வரலாற்றுப் பக்கங்களை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். “கொழும்புக் கொழுப்பைக் கரைக்கும் அரசியல் எது?” என்ற கட்டுரையில் தோழர் நலங்கிள்ளி புரட்டிக் காட்டும் அந்தப் பக்கங்கள் உங்கள் பார்வைக்கு:

தமிழகத்தில் அனைவரும் அறிந்த பெயர் மார்லான் பிராண்டோ. ஆலிவுட்டின் பெரும் நடிகர். சிவாஜி கணேசனைத் தமிழகத்தின் மார்லான் பிராண்டோ என்று தமிழ்த் திரைச் சுவைஞர்கள்  போற்றிய போது, இல்லை, மார்லான் பிராண்டோதான் அமெரிக்காவின் சிவாஜி என்றார் அறிஞர் அண்ணா. மார்லான் பிராண்டோ நாயகனாக நடித்த ’காட்ஃபாதர்’ நீங்களும் பார்த்திருப்பீர்கள்.

இப்படிப்பட்ட நடிகர்தான் உலகத் திரைப்பட நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் 1961-ல் ஒரு கோரிக்கை விடுத்தார். ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகும் முன்பு அப்படத்தைத் தென்னாப்பிரிக்காவில் திரையிடக் கூடாதென ஒப்பந்தம் செய்து கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஏன் தெரியுமா…? தென்னாப்பிரிக்க வெள்ளை நிறவெறி அரசு, கறுப்பின மக்களை எதிர்த்து இனஒதுக்கலைக் கடைப்பிடித்து வந்ததால் அந்த அரசை எல்லா வகையிலும் உலகமே புறக்கணித்தது. இந்தப் புறக்கணிப்பில் ஆலிவுட்டும் சேர்ந்து கொண்டது. ஆலிவுட் கலைஞர்களில் வெள்ளையர்கள் பெரும்பான்மையாக இருந்தும் அவர்களைத் திரட்டி தென்னாப்பிரிக்காவுக்குப் பாடம் புகட்டியவர் மார்லான் பிராண்டோ.

அவ்வளவு பெரிய பாடம் இல்லையென்றாலும் முத்தையா முரளிதரன் போன்றவர்களின் இரண்டகத்துக்கு நீங்கள் சிறிய பாடமாவது புகட்டலாமே விஜய்?

இன ஒதுக்கல் கோலோச்சிய காலத்தில் தென்னாப்பிரிக்கா சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி விட்டு வந்த தமிழக பக்திப் பாடகர் பித்துக்குளி முருகதாசை இந்திய அரசு நேரில் அழைத்துக் கண்டித்தது.

விளையாட்டுத் துறைப் புறக்கணிப்பால் தலைசிறந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீர்ர்கள் கிரயம் பொல்லாக், பேரி ரிச்சர்ட்ஸ் போன்றோர் தங்கள் கிரிக்கெட் வாழ்வையே இழந்தனர். தம் வாழ்நாளில் ஒரே ஒரு சர்வதேச ஆட்டம் கூட அவர்களால் ஆட  முடியவில்லை.

கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒப்பாரும் மிக்காருமில்லாத மட்டையடி வீர்ராக விளங்கியவர் யார் என்று முத்தையா முரளிதரனிடமே கேட்டுப் பாருங்கள், டான் பிராட்மன் என்ற விடை கிடைக்கும்.

பிராட்மன் 1971-ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபர் ஜான் ஃபார்ஸ்டரைச் சந்தித்த போது, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் கறுப்பின வீர்ர்களைச் சேர்த்துக் கொள்ளாமை குறித்துக் கேள்வி எழுப்பினார். அறிவில் பின்தங்கிய கறுப்பர்களால் எப்படி வெள்ளையர்கள் போல் அழகாகக் கிரிக்கெட் விளையாட முடியுமெனக் கிண்டலடித்தார் ஃபார்ஸ்டர்.

“நீங்கள் கேரி சோபர்ஸ் எனும் மாபெரும் கறுப்பினக் கிரிக்கெட்டர் பந்தடித்து ஆடும் ஒயிலையும் மிடுக்கையும் கண்டதில்லையா ஃபாஸ்டர்…?” எனக் கேட்டார் பிராட்மன். “நிறவெறியில் நீங்கள் முரண்டு பிடிக்கும்வரை ஆஸ்திரேலியக் கிரிக்கெட் அணி, ஒருபோதும் தென்னாப்பிரிக்காவின் வாசல் மிதியாது” என்று அறிவித்தார்.

மண்டேலா சிறையிலிருந்து மீண்டு வந்ததும், பிராட்மன் குறித்து அன்புடன் வினவினாராம்..! விளையாட்டுத் துறையிலான இன ஒதுக்கலைக் கைவிட்ட பிறகு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியை நெல்சன் மண்டேலாவே இந்தியாவுக்கு அழைத்து வந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கிரகாம் கூச் தலைமையிலான இங்கிலாந்து அணி தடையை மீறி தென்னாப்பிரிக்கா செல்லலாம் என 1982-ல் முடிவெடுத்தது. இந்தப் பயணம் ‘கலகப் பயணம்’ என்றும், பயணம் சென்றோர் ‘கலக அணியினர்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

”ஆல்-ரவுண்டர்’ இயான் போதமைத் தவிர முழு வலிமையுடன் தென்னாப்பிரிக்காவில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து அணியினரை உலக ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். அவர்களைக் ‘கேவலமான பன்னிருவர்’ என இங்கிலாந்து நாடாளுமன்றமே வண்ணித்தது.

அது மட்டுமல்ல, அந்த அணியினர் பன்னாட்டுக் கிரிக்கெட்டிலிருந்து மூன்றாண்டுக் காலத்துக்கு விலக்கி வைக்கப்பட்டனர். இங்கிலாந்தின் தலைசிறந்த மட்டையாளர்களில் ஒருவரான ஜெஃப்ரி பாய்காட் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது.

வரலாற்றில் ஒரே ஒரு முறைதான் இந்தியா டேவிஸ் கோப்பை டென்னிஸ் இறுதிப் போட்டிவரை முன்னேறியது. அது 1974ஆம் ஆண்டு. விஜய் அமிர்தராஜ் ஒற்றையர் ஆட்டத்திலும், விஜய் ஆன்ந்த் உடன்பிறப்புகள் இரட்டையர் ஆட்டத்திலும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்ததால் கோப்பை இந்தியாவுக்கே என்று நம்பப்பட்டது.

ஆனால் இந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது…? புறக்கணிப்பது தவிர வேறு வழியில்லை என்று இந்திய அரசு சொல்லி விட்டது.

பிற்காலத்தில் ஐ.நா. துணைக் கூட்டம் ஒன்றில் விஜய் அமிர்தராஜ் இது பற்றிப் பேசினார். ”அப்போது ஏமாற்றமாக இருந்தாலும் இந்தப் புறக்கணிப்பு எவ்வளவு சரியானது என்பதைத் தெரிந்து கொண்டபோது பெருமைப்பட்டேன்” என்றார். விஜய் அமிர்தராஜுக்குக் கிடைத்த பெருமை சிறிதாவது விஜய் சேதுபதிக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?

ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போது பின்னெடுப்பது உங்களுக்கு சங்கடமாகத் தெரியலாம், ஆனால் எதிர்காலம் உங்களைப் போற்றும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

விஜய் சேதுபதி அவர்களே…! முத்தையா முரளிதரன் பற்றிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தம் செய்த பின் எப்படிப் பின் வாங்குவது… என்று நீங்கள் தயங்கத் தேவையில்லை.

நம் காலத்தின் தலைசிறந்த பூதியல் (இயற்பியல்) அறிவியலர் ஸ்டீபன் ஹாக்கிங் 2013-ம் ஆண்டு இசுரேலில் ஒரு கல்வி நிறுவனத்தின் ஒன்று கூடலுக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.

இசுரேல் நாட்டின் அதிபரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் பாலத்தீனர்களுக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் கொடுமைகளைக் கண்டித்து அவர் இம்மாநாட்டைப் புறக்கணிக்க வேண்டும் என்று பல நண்பர்களும் கேட்டுக் கொண்டபோது அதை ஏற்று இசுரேல் செல்வதில்லை என்று அறிவித்தார். துயருற்ற பாலத்தீன மக்களுக்கு அவரால் முடிந்த ஒரு சிறு ஆறுதல்..!

உங்கள் சக தமிழர்களுக்கு சிங்களப் பகை புரிந்த கொடுமைகளை நியாயப்படுத்திய ஒருவராக நடிக்க மறுத்து, விஜய், நீங்களும் தரலாமே சிறு ஆறுதல்..?

அண்மையில் மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமண்யம் போன்ற தமிழ்நாட்டுத் திரை ஆளுமைகள் இலங்கை செல்ல ஒப்புக் கொண்டு பிறகு தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுப் போகாமலிருந்த செய்தி தெரியுமா உங்களுக்கு..?

அமிதாப்பச்சன் போன்ற வேற்றுமொழி ஆளுமைகளும் கூட தமிழர்களின் உணர்வை மதித்து இலங்கை நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சர்வதேச இந்தியத் திரைப்பட விழா சொதப்பியதே. நினைவுள்ளதா…? இந்தி நடிகர்கள்கூட தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள். தமிழராகிய நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்…?

இனவழிப்புக்கு நீதி கோரித் தமிழினம் கடினமான நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு நீதியை மறுக்கும் இனக் கொலைக் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் இரண்டகருக்கு ஊக்கமளிப்பதாக இருந்து விடக் கூடாது என விரும்புகிறேன், விரும்புகிறோம்.

அன்புடன்,

தியாகு / பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

14/10/2020

The post “முத்தையா முரளிதரனாக நடிக்காதீர்கள்..” – விஜய் சேதுபதிக்கு தோழர் தியாகு வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>