The post ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன் appeared first on Touring Talkies.
]]>இணைய தலைமுறையினரின் கையடக்க கணினி முதல் அவர்கள் பணியாற்றும் மடிக் கணினிவரை டிஜிட்டல் திரை நாயகியாக காட்சியளிக்கும் நடிகையான ஸ்ருதிஹாசன், சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கும் முன்னணி நட்சத்திர நடிகையும் ஆவார்.
மில்லியன் கணக்கிலான மக்களை தன் சமூக வலைதள பக்கங்களின் பின் தொடர்பாளர்களாக கொண்டிருக்கும் இவர், தன்னை பற்றிய செய்திகளையும், தான் உணர்ந்த உணர்வுகளையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நேர்மையானவர். இதற்கு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட காணொளிகளும், எண்ணங்களும் சாட்சி.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் தயாராகி வரும் இரண்டு தெலுங்கு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது.
மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’ என்ற திரைப்படத்திலும், மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ எனும் திரைப்படத்திலும் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சங்கராந்தி திருவிழா விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில் அவர் நடிப்பில் தயாராகி இருக்கும் இரண்டு படங்களும் வெளியாவதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
அத்துடன் ரசிகர்களுக்கு முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post ரசிகர்களுக்கு ‘இரட்டை’ விருந்தளிக்கும் ஸ்ருதிஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post பாலகிருஷ்ணா – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் தயாரித்திருக்கிறார்கள்.
இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. மாஸ் ஹீரோவான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் துனியா விஜய், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். பிரபல கதாசிரியர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, தேசிய விருது பெற்ற கலைஞர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சந்து ரவிபதி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்கள்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக்கிற்கான மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்நிலையில் பட குழுவினர், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்திருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ சங்கராந்தி விடுமுறையை முன்னிட்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ம் தேதி வெளியாகிறது.
சங்கராந்தி என்பது தெலுங்கு பேசும் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழாவாகும். மேலும் சங்கராந்தி விடுமுறை தேதியில் வெளியான மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணாவின் பல திரைப்படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, தொழில் ரீதியாக மிக பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் காரணமாகவே பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகியிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’யையும் எதிர்வரும் சங்கராந்தி விடுமுறையில் படக் குழு வெளியிடுகிறது.
The post பாலகிருஷ்ணா – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>The post நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் புதிய திரைப்படத்தில் நடிகர் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா இதுவரை திரையில் தோன்றிராத- மக்கள் விரும்பும் வேடத்தில் நடிக்கிறார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
இசையமைப்பாளர் எஸ். எஸ். தமன் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பாலையா..’ எனத் தொடங்கும் பாடல், அவரது ரசிகர்களுக்கான கீதமாக அமைந்திருக்கிறது. பாடலின் மெட்டு, பாடல் வரிகள், இசை, பின்னணி குரல்… ஆகியவை பாலகிருஷ்ணாவின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பாடலில் அவரது தோற்றம், நடை, நடனம்… என அனைத்தும் ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருக்கிறது.
‘சரஸ்வதி புத்திர’ ராம ஜோகையா சாஸ்திரியின் பாடல் வரிகளும், பாடகர் கரீமுல்லாவின் காந்த குரலும், ‘ஜெய் பாலையா..’ எனும் பாடல், ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது மேலும் இந்தப் பாடல் பாலகிருஷ்ணாவின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து திரையிசை பிரியர்களுக்கும் பிடித்த பாடலாக நீண்ட காலத்திற்கு இசைபாடல்களின் பட்டியலில் முன்னணியில் இருக்கும். இந்தப் பாடலை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சங்கராந்தி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
The post நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு appeared first on Touring Talkies.
]]>The post ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’ appeared first on Touring Talkies.
]]>எமிலி கார்ல்டன் எழுதி, டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் தயாராகும் ‘தி ஐ’ எனும் படத்தினை ஃபிங்கர்பிரிண்ட் ஃபிலிம்ஸ் மற்றும் அர்கோனாட்ஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு தற்போது கிரிஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் மற்றும் கோர்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசன் கலந்து கொண்டிருக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு என இந்திய திரையுலகம் முழுவதும் தன் திறமையை நிரூபித்திருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன், ‘டிரெட்ஸ்டோன்’ எனும் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரின் முக்கிய வேடத்தில் நடித்து, சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் இசை திறமையால் உலகம் முழுவதிலும் உள்ள இசை ஆர்வலர்களிடத்தில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியவர். இதன் காரணமாக தற்போது திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.
இவர் தற்போது நடித்து வரும் ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் திரைப்படம் உளவியல் திரில்லர் ஜானரில் உருவாகும் திரைப்படம். கதைப்படி ஒரு விதவை பெண், தனது கணவரின் மரணத்திற்குப் பிறகு அவருடைய சாம்பலை கரைப்பதற்காக கிரேக்க தீவுக்கு பயணிக்கிறார். அதன் போது ஏற்படும் உளவியல் சார்ந்த திகில் திருப்பங்களும், சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகியான ஸ்ருதிஹாசனுடன் ‘தி லாஸ்ட் கிங்டம்’ மற்றும் ‘ஒன் டே’ ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மார்க் ரௌலி, ‘ட்ரூ ஹாரர்’ படப் புகழ் நடிகை அன்னா சவ்வா, ‘தி டச்சஸ்’ பட புகழ் நடிகை லிண்டா மார்லோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மெலனி டிக்ஸ் பேசுகையில், ” இயக்குநர் டாப்னே ஷ்மோன் மற்றும் திரைக்கதை ஆசிரியர் எமிலி கார்ல்டன் ஆகியோரின் கூட்டணியில் அற்புதமான படைப்பை உருவாக்குகிறோம். ‘தி ஐ’ நான்காண்டு கால உழைப்பில் உருவானது. எங்களுடைய குழுவில் திறமைசாலிகள் அதிகம் உள்ளனர். மேலும் முழுமையான ஒத்துழைப்பை அளிக்கும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவும் உள்ளது. எங்களுடைய இந்த படைப்பு அசாதாரணமானது. அத்துடன் எங்களின் இலட்சியத்தை எட்டும் உற்சாகத்தையும் பெற்றிருக்கிறோம்.” என்றார்.
நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், ” இசையாலும், சினிமா எனும் காட்சி ஊடகத்தின் மூலமாகவும் கதைகளை பகிர்ந்து கொள்வது என்பது என்னுடைய கனவு. இந்த கனவினை தற்போது சர்வதேச அளவில் விரிவுப்படுத்தி இருக்கிறேன். ‘தி ஐ’ போன்ற அற்புதமான படைப்பில் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான பெண்மணிகளால் வழி நடத்தப்படும் அணி என்பது இதன் கூடுதல் சிறப்பு. ‘தி ஐ’ ஒரு அழகான கதை. இதனை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.” என்றார்.
The post ஸ்ருதிஹாசன் நடிக்கும் புதிய ஹாலிவுட் படம் ‘தி ஐ’ appeared first on Touring Talkies.
]]>The post நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ appeared first on Touring Talkies.
]]>நடசிம்ஹா நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தயாராகும் புதிய படத்திற்கு ‘NBK 107’ என பெயரிடப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படத்திற்கு தற்போது ‘வீர சிம்ஹா ரெட்டி’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கென பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக தொன்மை வாய்ந்த கர்னூல் கோட்டையின் வெளிப்புறத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கில் முப்பரிமாண தொழில் நுட்பத்தில் தலைப்பிற்கான போஸ்டரை தயாரிப்பாளர்கள் மற்றும் பட குழுவினர் வெளியிட்டனர்.
‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் தலைப்பு ஆக்க்ஷன் என்டர்டெய்னர் ஜானருக்கு பொருத்தமானது. பாலகிருஷ்ணாவின் பெரும்பாலான படங்கள் ‘சிம்ஹா’ என இருந்தால், அந்தத் திரைப்படங்கள் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் இடம் பெற்றிருக்கும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ எனும் படத்தின் தலைப்பும், போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த போஸ்டரில் பாலகிருஷ்ணா, உக்ரமான அவதாரத்தில் தோன்றுவது அவரது கதாபாத்திரத்தை சித்தரிக்கிறது. அதிலும் வேட்டி அணிந்த அவரது தோற்றமும், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்துடன் மிகப்பெரிய வேட்டைக்காக காத்திருப்பது போல் உணர்த்துவதால், ரசிகர்களை பெரிதும் ஈர்த்திருக்கிறது. அதிலும் ‘புலிசேர்லா’ நாலு கிலோ மீட்டர் என்ற மைல் கல் மீது அவர் கால் வைத்து நின்றிருக்கும் தோற்றம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டருக்கும் அவரது ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்து வருகிறது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் துனியா விஜய் மற்றும் நடிகை வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுத, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்ய, எஸ்.தமன் இசை அமைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற நவீன் நூலி படத் தொகுப்பு பணிகளை கவனிக்க, தயாரிப்பு வடிவமைப்பாளராக ஏ. எஸ். பிரகாஷ் பணியாற்றுகிறார். ராம் – லக்ஷ்மன் சண்டைக் காட்சிகளை அமைக்க, சந்து ரவிபதி தயாரிப்பு நிர்வாகத்தை மேற்கொள்கிறார்.
நந்தமுரி பாலகிருஷ்ணா – இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணியில் தயாராகி வரும் ‘வீர சிம்ஹா ரெட்டி’ 2023-ம் ஆண்டு சங்கராந்திக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது.
The post நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ appeared first on Touring Talkies.
]]>The post பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கும் ஸ்ருதிஹாசன் appeared first on Touring Talkies.
]]>நடிகை ஸ்ருதிஹாசன் முதன்முதலாக நடிக்க வந்தபோது அவரது மூக்கு வேறு மாதிரி இருந்தது. அதன் பின்பு வந்த படங்களில் அவரது மூக்கு வேறு தோற்றத்தில் இருந்தது. அது அவரது அழகைக் கூட்டியது.
இதனாலேயே ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தன் மூக்கை அழகாக்கியிருக்கிறார் என்று சில ஆண்டுகளாகவே திரையுலகத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது இந்த விஷயத்தை உண்மை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.
“ஆமாம். என் மூக்கை நான் அறுவை சிகிச்சை மூலமாக சரி செய்தேன். என் மூக்கு உடைந்துவிட்டது. அந்த மூக்குடன்தான் முதல் படத்தில் நடித்தேன். அதன் பிறகுதான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மூக்கை சரி செய்தேன். என் முகம், நான் ஏன் செய்யக் கூடாது.
நான் ஏன் அப்படி செய்தேன் என்று யாருக்கும் விளக்கம் அளிக்கத் தோன்றவில்லை. செயற்கை முறையில் எதையும் செய்வதை நான் ஊக்குவிப்பது இல்லை. இன்று ஒரு கேள்வி கேட்பார்கள். நாளை வேறு கேள்வி கேட்பார்கள். இதனாலேயே நான் இதுவரையிலும் இதை வெளியில் சொல்லவில்லை…” என்று சொல்லியிருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன்.
“பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதை பெரும்பாலும் பல நடிகைகள் ஒப்புக் கொள்வது இல்லை. இந்நிலையில் நீங்கள் தைரியமாக பேசியதை பாராட்டியே ஆக வேண்டும். யார் என்ன சொன்னால் என்ன.. உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம் ஸ்ருதி” என்று ஸ்ருதியின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
The post பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கும் ஸ்ருதிஹாசன் appeared first on Touring Talkies.
]]>The post தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன்..! appeared first on Touring Talkies.
]]>அழகு, நடிப்பு, நடனம், பாடல் என அனைத்திலும் சிறந்த திறமை கொண்டவர் ஸ்ருதிஹாசன். மிகவும் தேர்ந்தெடுத்து சிறந்த படங்களில் நடித்து ரசிகர் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார். குறிப்பாக ஆந்திராவில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
சமீபத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012ல் வெளியான 3 திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு ஆந்திராவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் குறிப்பாக நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்பை விமர்சகர்களும் பொதுப்பார்வையாளர்களும் பாராட்டி வருகிறார்கள். இதனால் உற்சாகமடைந்த ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் இதனை இணையத்தில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.
தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் கே.ஜி.எப். புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்திலும், என்.டி.ஆர்.பாலகிருஷ்ணாவின் புதிய படத்திலும் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்திழுத்த ஸ்ருதிஹாசன்..! appeared first on Touring Talkies.
]]>The post பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய படைப்பு ‘சலார்’.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ‘கே ஜி எஃப்’ பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது.
இந்த ‘சலார்’ திரைப்படம் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகி வருகிறது. பான் இந்திய அளவிலான எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்றாக இந்த ‘சலாரும்’ இடம் பெற்றிருக்கிறது.
இந்தப் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் சுகுமாரன், ஜெகபதிபாபு, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்தியா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அதிரடி ஆக்சன் மற்றும் சாகசங்கள் நிறைந்த காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் என்பதால், தயாரிப்பாளர்கள் இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களை வாடகைக்கு அமர்த்தியுள்ளனர். இதன் காரணமாக தற்போது ‘சலார்’ படத்தினை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
இந்த ‘சலார்’ படத்தில் பிரபாஸின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தார்கள்.
ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்றைக்கு பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, படத்தின் வெளியீட்டு தேதியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
முழு நீள ஆக்சன் படமான இந்த ‘சலார்’ திரைப்படம் அடுத்தாண்டு செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று இன்றைக்கு படக் குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் முதற் கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் இப்படத்திற்கான இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்தக் குழுவும் திட்டமிட்டபடி இயங்கி வருகிறது.
The post பிரபாஸின் ‘சலார்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு appeared first on Touring Talkies.
]]>