Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வைகைப் புயல் வடிவேலு – Touring Talkies https://touringtalkies.co Sat, 15 Oct 2022 15:16:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வைகைப் புயல் வடிவேலு – Touring Talkies https://touringtalkies.co 32 32 புதிய தொலைக்காட்சியின் பிராண்ட் அம்பாசிடரான வடிவேலு https://touringtalkies.co/vadivelu-is-the-brand-ambassador-of-the-new-television/ Sat, 15 Oct 2022 15:15:39 +0000 https://touringtalkies.co/?p=25469 Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம் வரும் நவம்பர் 6-ல் தனது ஒளிபரப்பைத் துவக்கவிருக்கும் புதிய தொலைக்காட்சியின் தூதராக ‘வைகைப் புயல்’ வடிவேலுவை இணைத்துள்ளது. பரந்த மனம் படைத்த பார்வையாளர்களினாலும், ரசனை நிறைந்த பொழுதுபோக்கு தொகுப்புகளினாலும் பல வருடங்களாக வளர்ந்து வந்த  Youtube Blacksheep, தற்போது தங்களது சொந்த தொலைக்காட்சி ஒளியலையான ‘BLACKSHEEP TV’-யை  நவம்பர் 6-ம் தேதி ஒளிபரப்பவுள்ளது. Fiction மற்றும் Non fiction என பல பொழுது போக்கு […]

The post புதிய தொலைக்காட்சியின் பிராண்ட் அம்பாசிடரான வடிவேலு appeared first on Touring Talkies.

]]>
Youtube சேனல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் முன்னணியில் இருக்கும் Blacksheep நிறுவனம் வரும் நவம்பர் 6-ல் தனது ஒளிபரப்பைத் துவக்கவிருக்கும் புதிய தொலைக்காட்சியின் தூதராக வைகைப் புயல்’ வடிவேலுவை இணைத்துள்ளது.

பரந்த மனம் படைத்த பார்வையாளர்களினாலும், ரசனை நிறைந்த பொழுதுபோக்கு தொகுப்புகளினாலும் பல வருடங்களாக வளர்ந்து வந்த  Youtube Blacksheep, தற்போது தங்களது சொந்த தொலைக்காட்சி ஒளியலையான ‘BLACKSHEEP TV’-யை  நவம்பர் 6-ம் தேதி ஒளிபரப்பவுள்ளது.

Fiction மற்றும் Non fiction என பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளின் கூட்டாக இந்த தொலைக்காட்சியானது பலதரப்பட்ட இளம் சமூகத்தினருக்கும் குடும்பத்தினருக்கும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனரான விக்னேஷ் காந்த், தனது BLACLSHEEP தொலைக்காட்சி குறித்து பேசும்போது, “தொலைக்காட்சி உலகில் எங்கள் புது வரவை உலகிற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி. எங்கள் youtube  நிகழ்ச்சிகளுக்கு கிடைத்த வரவேற்புகளுக்காக நாங்கள் பெற்ற மகிழ்ச்சி சொல்லிலடங்காதது.  

இறுதியாக, எங்களின் வளர்ச்சிக்கு காரணம், இளைஞர்களின் பெரும் பங்களிப்பு என்பதை அறிந்தோம். அவர்களின் தீவிரமான ஆதரவும் பாராட்டுமே எங்களைப் பல்வேறு உள்ளடக்கங்களையும் படைப்புகளையும் உருவாக்கத் தூண்டியது. இதுவே தொலைக்காட்சியை தொடங்கும் சிந்தனைக்கு வழிவகுத்தது.

அது பயனுள்ள பொழுது போக்கு நிகழ்ச்சிகளை படைக்கவும், அவை இளம் தலைமுறையினருக்கு மட்டும் பயன்படும் வழியில் அல்லாமல், அவர்களுது குடும்பத்தினர் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் அமையும் வண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  

பல்வேறு புனைவு மற்றும் அபுனைவு அல்லாத நிகழ்ச்சிகள், வெவ்வேறு பிரிவுகள் மற்றும் கருத்துகளை சார்ந்த படைப்புகளையும் உருவாக்க உள்ளோம்.

அதுமட்டுமின்றி, சிறந்த சாதனையாளர்கள், வெற்றித் தொழில் முனைவர்கள் மற்றும் வெவ்வேறு தளங்களின் குறிப்பிடத்தக்க ஆளுமைகள் ஆகியோரை இளைஞர்களை ஈர்க்கும் வகையிலும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் வழங்க உள்ளோம்.

எங்களது நிறுவனத்தின் தூதராக வைகைப் புயல்’ வடிவேலு எங்களுடன் இணைந்திருப்பதில் எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி. வைகைப் புயல்’ வடிவேலு ஒரு பல்திறன் வாய்ந்த மனிதர். நமது எலும்புகளையும் தன் கலைத்திறனாலும் நகைச்சுவையாலும் சிரித்துணர செய்து, மீம்ஸ் படைப்பாளர்களின் அமிர்தமாக மிளிர்ந்து, பொழுதுபோக்கு உலகையே ஆள்பவறாக திகழ்கிறார்.

அவரது பல்வகை நகைச்சுவை திறன்களால் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே வருகிறார். நாமும் நமது BLACKSHEEP தொலைக்காட்சியை அதே வடிவமைப்பில் வளர்த்து வருவதனால், அவர் மட்டுமே நமது தொலைகாட்சியின் மிகப் பொருத்தமான சின்னமாக இருக்க முடியும் என உணர்ந்துதான் அவருடன் நாங்கள் இணைந்துள்ளோம்…” என்றார்.

The post புதிய தொலைக்காட்சியின் பிராண்ட் அம்பாசிடரான வடிவேலு appeared first on Touring Talkies.

]]>
பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம்…! https://touringtalkies.co/naai-sekhar-returns-movie-shooting-news/ Tue, 19 Apr 2022 07:17:14 +0000 https://touringtalkies.co/?p=21834 தமிழில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப் புயல்’ வடிவேலு நாயகனாக நடித்து வரும், திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத் தொகுப்பு- செல்வா R.K., கலை இயக்கம் –   உமேஷ் J.குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – சுபாஷ்கரன், […]

The post பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம்…! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் மிகப் பிரம்மாண்டமான படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘வைகைப் புயல்’ வடிவேலு நாயகனாக நடித்து வரும், திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’.

இசை – சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத் தொகுப்பு- செல்வா R.K., கலை இயக்கம் –   உமேஷ் J.குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ், தயாரிப்பாளர் – சுபாஷ்கரன், எழுத்து, இயக்கம் – சுராஜ்.

இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ்’  படத்தின் அறிவிப்பு வெளியானபோதே படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வடிவேலுவின் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் மிக அட்டகாசமான செய்தி ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.  

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகரும், இயக்குநருமான பிரபுதேவாவும், வைகைப் புயல்’ வடிவேலுவும் இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் அந்தச் செய்தி.

இதற்காக சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக அந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் நடன  மேதைகளில் ஒருவரான பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைத்து வருகிறார்.

வில்லு’ படத்தைத் தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.  

இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள்  லைகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான G.K.M.தமிழ்க்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது.

விரைவில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இசை, டிரெயிலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

The post பிரபுதேவா-வடிவேலு கூட்டணியில் உருவாகும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படம்…! appeared first on Touring Talkies.

]]>