Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
விஷ்ணு விஷால் – Touring Talkies https://touringtalkies.co Thu, 22 Dec 2022 18:48:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png விஷ்ணு விஷால் – Touring Talkies https://touringtalkies.co 32 32 என் வாழ்கையில் நடந்த சம்பவம்: விஷ்ணு விஷால் https://touringtalkies.co/incident-in-my-life-vishnu-vishal/ Wed, 21 Dec 2022 18:48:00 +0000 https://touringtalkies.co/?p=28880 சமீபத்தில் வெளியான கட்டா  குஸ்தி  திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி   நடிப்பில் பெண்களுக்கு பிடித்த ,குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது.  சமீபத்தில் நடந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால்   நான் கிரிகெட் பத்து ஆண்டுகளாக விளையாடியிருக்கிறேன். எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில்  கால் முறிவு ஏற்பட்டது. அதனால் விளையாட முடியாது என்பதால் கிரிக்கெட்  பார்ப்பதை  தவித்தேன். சினிமா முயற்சி ஆறு ஆண்டுகள் தொடர் தோல்வி,  நான் ஆசைப்பட்டது கிரிக்கெட்  […]

The post என் வாழ்கையில் நடந்த சம்பவம்: விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.

]]>

சமீபத்தில் வெளியான கட்டா  குஸ்தி  திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஷ்ணு விஷால்,ஐஸ்வர்யா லட்சுமி   நடிப்பில் பெண்களுக்கு பிடித்த ,குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது.

 சமீபத்தில் நடந்த படத்தின் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால்   நான் கிரிகெட் பத்து ஆண்டுகளாக விளையாடியிருக்கிறேன். எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில்  கால் முறிவு ஏற்பட்டது. அதனால் விளையாட முடியாது என்பதால் கிரிக்கெட்  பார்ப்பதை  தவித்தேன்.

சினிமா முயற்சி ஆறு ஆண்டுகள் தொடர் தோல்வி,  நான் ஆசைப்பட்டது கிரிக்கெட்  அதில்  தோல்வி அழுது விட்டேன்.

அப்பா சொன்னார் யார்  உனக்கு கை கொடுக்கிறார்களோ  அவர்களை மறக்காதே என்றார். ’லால்  சலாம்’ படத்தில் ரஜினி சாருடன்  ஒரு கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன்.  எனது ஆசை சினிமாவில் நிறைவேறிவிட்டது என்றார் விஷ்ணு விஷால்.

The post என் வாழ்கையில் நடந்த சம்பவம்: விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.

]]>
’இவன் என்ன பெரிய ஆளா’: விஷ்ணு விஷாலை திட்டிய ரசிகர்…! https://touringtalkies.co/fan-who-scolded-vishnu-vishal/ Wed, 21 Dec 2022 17:41:17 +0000 https://touringtalkies.co/?p=28861 விஷ்ணு விஷால் சினிமாவில் வித்தியாசமான கதைகளை  தேர்வு செய்து நடிப்பவர். அவர் நடித்த நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவை. தற்போது இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  யூடியூப் சேனலுக்கு  அவர் அளித்த பேட்டியில் ராட்சசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது எனது  சொந்த வாழ்க்கையில் பிரச்சனை நடந்து கொண்டிருந்தது. எனக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்கும். . ஷூட்டிங் […]

The post ’இவன் என்ன பெரிய ஆளா’: விஷ்ணு விஷாலை திட்டிய ரசிகர்…! appeared first on Touring Talkies.

]]>

விஷ்ணு விஷால் சினிமாவில் வித்தியாசமான கதைகளை  தேர்வு செய்து நடிப்பவர். அவர் நடித்த நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற திரைப்படங்களில் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவை.

தற்போது இவர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி திரைப்படமும்  நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 யூடியூப் சேனலுக்கு  அவர் அளித்த பேட்டியில் ராட்சசன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயம். அப்போது எனது  சொந்த வாழ்க்கையில் பிரச்சனை நடந்து கொண்டிருந்தது. எனக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருக்கும். . ஷூட்டிங் முடிந்து ஒரு பாலத்தில் நான் போனில் பேசி கொண்டிருந்தேன்.

ரசிகர் ஒருவர் என்னுடன்  செல்பி எடுக்க  கேட்டுக் கொண்டே  இருந்தார். பிரச்சனை பற்றி  போனில் பேசிக் கொண்டிருந்ததால் என்னால் முடியவில்லை.

கொஞ்ச நேரம் கழித்து  நான் போனில் பேசுவது போல் போட்டோ போட்டு அந்த ரசிகர்  இவன் என்ன பெரிய நடிகரா… ஒரு போட்டோ கேட்டேன் கொடுக்கலா’’ என்று ட்வீட் ஒன்று போட்டிருந்தார்.

எனக்கு அந்த ட்வீட் மனதை காயப்படுத்தியது. என் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்து விட்டாரே  என வருத்தப்பட்டேன் என்றார் விஷ்ணு விஷால்.

The post ’இவன் என்ன பெரிய ஆளா’: விஷ்ணு விஷாலை திட்டிய ரசிகர்…! appeared first on Touring Talkies.

]]>
கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/guttaa-kusthi-movie-review/ Fri, 02 Dec 2022 11:58:55 +0000 https://touringtalkies.co/?p=27955 இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷால் ஸ்டூயோஸ் நிறுவனத்தின் சார்பாகவும், தெலுங்கு நடிகரான ரவி தேஜா தனது RT TeamWorks நிறுவனத்தின் சார்பாகவும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், காளி வெங்கட், கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். பெயர் தெரியாத ஊரில் அம்மா, அப்பா இல்லாத நிலையில் மச்சு வீட்டுடன், 20 ஏக்கர் தென்னந்தோப்புடன் கல்யாணத்துக்குத் […]

The post கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் தனது விஷால் ஸ்டூயோஸ் நிறுவனத்தின் சார்பாகவும், தெலுங்கு நடிகரான ரவி தேஜா தனது RT TeamWorks நிறுவனத்தின் சார்பாகவும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாகவும், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், காளி வெங்கட், கஜராஜ், லிஸி ஆண்டனி, ஜா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பெயர் தெரியாத ஊரில் அம்மா, அப்பா இல்லாத நிலையில் மச்சு வீட்டுடன், 20 ஏக்கர் தென்னந்தோப்புடன் கல்யாணத்துக்குத் தயாரான நிலையில் ஹாயாக, கபடி வீரராக வாழ்கிறார் விஷ்ணு விஷால்.

இவரது மாமனும், உள்ளூர் ஊராட்சி மன்றத் தலைவருமான கருணாஸ் கடைந்தெடுத்த ஆணாதிக்க சிந்தனை கொண்டவர். இவருடைய இந்த சிந்தனையை தத்தெடுத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு விஷால், கல்யாணத்துக்குப் பெண் தேடிக் கொண்டிருக்கிறார்.

தனக்கு மனைவியாக வரப் போகும் மனைவிக்கு முடி நீளமாக இருக்க வேண்டும். தன்னைவிட குறைந்த படிப்பே படித்திருக்க வேண்டும் என்கிற ஆசையில் பெண் தேடும் படலத்தை நடத்தி வருகிறார் விஷ்ணு. பெண்தான் அமையவில்லை.

பாலக்காடு பக்கத்தில் வசித்து வரும் நாயகியான கீர்த்தி என்னும் ஐஸ்வர்யா லட்சுமி பி.எஸ்.சி. கணிதம் படித்தவர். குஸ்தி போட்டியில் மாநில அளவில் சாம்பியன் பட்டம் பெற்றவர். இவருடைய சித்தப்பாவான முனீஸ்காந்தும், கருணாஸும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.

இந்த நண்பர்கள் எதிர்பாராத சூழலில் சந்தித்துக் கொள்ள.. விஷ்ணு விஷால் முனீஸ்காந்துக்கு அறிமுகமாகிறார். அவருடைய நிபந்தனைகளைக் கேட்டாலும் குஸ்தி வீராங்கனை என்பதாலேயே இன்னும் திருமணமாகாமல் இருக்கும் தனது அண்ணன் மகளை விஷ்ணுவின் தலையில் கட்ட திட்டம் தீட்டி அதில் வெற்றியும் காண்கிறார் முனீஸ்காந்த்.

முனீஸ்காந்தின் சதி வேலையறியாமல் வாழத் துவங்கும் விஷ்ணு அவ்வப்போது தனது மாமாவான கருணாஸின் மந்திராலோசனையைக் கேட்டு மனைவியிடம் ஆணாதிக்கத்தனமாக நடந்து கொள்கிறார். இந்த நேரத்தில் ஊராட்சி மன்றப் பணத்தில் கை வைத்ததற்காக கருணாஸ் ஜெயிலுக்குப் போகிறார்.

இவர் உள்ளே போன நேரத்தில் விஷ்ணுவின் உள்ளூர் எதிரியான பேக்டரி அதிபர் விஷ்ணுவை கொல்ல ஆட்களை அனுப்ப தனது கணவரை காப்பாற்ற சண்டையில் களம் இறங்குகிறார் குஸ்தி நாயகியான ஐஸ்வர்யா. முடிவில் கணவர் காப்பாற்றப்பட்டாலும் அவருடைய நீளமான ஒட்டு முடியின் தரிசனம் விஷ்ணுவுக்குத் தெரிந்து விடுகிறது.

உண்மை தெரிந்த விஷ்ணு அப்போதைக்கு அமைதியாகிறார். ஆனால் அதன் பின்பு ஊரிலும், வெளியிலும் மனைவிக்கு மட்டுமே தனித்து கிடைக்கும் மரியாதை அவருடைய ஈகோவைத் தூண்டிவிட மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் சிறையில் இருந்து வெளியில் வரும் மாமன் கருணாஸ் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்து சண்டையிட இதில் ஐஸ்வர்யாவிடம் அடி வாங்கி அவமானப்படுகிறார் கருணாஸ்.

தகவல் விஷ்ணுவுக்குத் தெரிய வர.. மனைவியை பாலக்காட்டுக்கே திருப்பியனுப்புகிறார். இடையில் மாமன் கருணாஸ், விஷ்ணுவுக்கே தெரியாமல் ஐஸ்வர்யாவுக்கு டைவர்ஸ் நோட்டீஸும் அனுப்பி வைக்கிறார்.

ஆனாலும் மனைவி முன்னாள் தான் வெறும் பூஜ்யம் என்பதை சொல்லி சொல்லி ஊர்க்காரர்கள் வெறுப்பேற்ற பேசாமல் குஸ்தி மேடையில் மனைவியுடனேயே மோதி ஜெயித்தால் என்ன என்ற கிறுக்குத்தனமான ஐடியாவை உடன் இருக்கும் நபர்கள் ஊதிவிட.. பாலக்காட்டுக்கே போய் இதற்காக மோதி தேதியைக் குறித்து வாங்குகிறார்கள் விஷ்ணுவின் உறவுகள்.

இப்போது பிரிந்திருக்கும் கணவனும், மனைவியும் மோதும் குஸ்தி போட்டி என்ற விளம்பரத்துடன் பரபரப்பாகிறது குஸ்தி களம். குஸ்தி போட்டி நடந்ததா..? இல்லையா..? யார் ஜெயித்தார்கள்…? டைவர்ஸ் கேஸ் என்ன ஆனது..? என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

படத்தில் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லஷ்மி இருவரும் போட்டி போட்டி நடித்து கை தூக்கிவிட்டிருக்கிறார்கள்.

அப்பாவியான தோற்றத்தில் உள்ள விஷ்ணு விஷால் அதே மன நிலையையும் பிரதிபலித்திருக்கிறார். கருணாஸ் சொல்லும் ஆணாதிக்க சொல்லாடல்களை அப்படியே நம்பும் அவரது முகபாவனைகள்தான் தியேட்டரில் கை தட்ட வைத்திருக்கிறது. தனது மனைவி தன்னைப் பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்று நினைத்து அவர் செய்யும் சில தில்லாலங்கடி விஷயங்களில் மகளிரையே சிரிக்க வைத்திருக்கிறார் விஷ்ணு. தன் மனைவிக்குக் கிடைக்கும் பெருமையால் தான் அவமானப்படும் உணர்வையும் விஷ்ணு தனது நடிப்பில் உணர்த்தியிருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் விஷ்ணுவின் ஆதிக்கம்தான். ஹரீஸ் பெராடியிடம் அவருடைய மனைவியைப் பற்றிக் கேட்டு தான்தான் அவசரப்பட்டு விட்டோமோ என்றெண்ணி வருந்தும் காட்சியிலும் அந்த டோனை தனது நடிப்பிலேயே வரழைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் தனது கோபம், ஆத்திரம், இயலாமை, மனைவி மீதான பாசம் என்று அனைத்தையும் காட்டி சண்டையிட்டிருக்கிறார். இதுவே சிறப்புதான்.

நாயகன் விஷ்ணுவா.. அல்லது ஐஸ்வர்யா லக்ஷ்மியா என்ற சந்தேகமே வந்துவிட்டது. குஸ்தி வீராங்கனையாக அறிமுகமாகும் காட்சியில் அச்சு அசலாக நிஜ வீராங்கனையை ஜெராக்ஸ் எடுத்ததுபோலவே இருக்கிறார். அந்த ஆக்ரோஷமும், அவர் காட்டும் உடல் மொழியும் மிரள வைக்கிறது.

திருமணமானவுடன் அனைத்தையும் தூக்கிப் போட்டுவிட்டு கணவருக்காக அமைதியாக, அடக்கமான மனைவியாக வலம் வருபவர், கணவரைக் காப்பாற்ற சேலையைத் தூக்கிக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கும்போது சபாஷ் என்று கை தட்ட வைத்திருக்கிறார். தமிழுக்கு நல்ல ஆக்‌ஷன் ஹீரோயின் கிடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

ஆணாதிக்க மாமனான கருணாஸ் பேசும் பல வசனங்கள் அப்பாவி கணவன்மார்களை தியேட்டரில் கை தட்ட வைத்து வீட்டில் உதை வாங்க வைக்கிறது. அப்படியொரு ஆம்பள திமிரை வசனத்திலும், நடிப்பிலும் காண்பித்திருக்கிறார் கருணாஸ்.

சித்தப்பாவாக தொந்தியுடன் நடித்திருக்கும் முனீஸ்காந்த் ஆயிரம் பொய் சொல்லியும் ஒரு கல்யாணத்தை நடத்துவதில் தவறில்லை என்பதுபோல் கல்யாணத்தை செய்துவைத்துவிட்டு தவிப்பதும், அண்ணன் மகளுக்காகக் கடைசியில் இவர்களிடத்தில் கெஞ்சும்போதும் தனது தனித்துவத்தைக் காட்டியிருக்கிறார்.

மேலும் வக்கீல் நண்பனாக நடித்திருக்கும் காளி வெங்கட்டின் மேக்கப் பாக்ஸ் காமெடியும் அவ்வப்போது அடிக்கும் சிற்சில விட்டுகளும் கை தட்ட வைக்கிறது. கிங்க்ஸ்லீயின் சில காமெடி வசனங்களும் கை தட்டலுக்கு உதவியிருக்கிறது.

ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு முதல் காட்சியில் இருந்தே படத்தை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. பாலக்காட்டு காட்சிகளில் கேரளத்தின் அழகையும் கொடுத்திருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியின் அழகை பாடல் காட்சிகளில் இன்னும் கூட்டியிருக்கிறார்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ஆனால் அதைவிட பின்னணி இசை அபாரம். அதிலும் அந்தக் கோவில் சண்டை காட்சியில் ஐஸ்வர்யாவின் ருத்ர தாண்டவத்திற்கு லீட் கொடுக்கும் காட்சியில் அசத்தல் பி.ஜி.எம்.மை கொடுத்து கவர்ந்திழுக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் அன்பறிவ் சகோதரர்கள் பிரிந்து மேய்ந்திருக்கிறார்கள். குஸ்தி சண்டையைவிடவும் அந்தக் கோவில் சண்டை காட்சிதான் சூப்பர். ஐஸ்வர்யாவுக்கு ஏற்றபடி காட்சிகளை வடிவமைத்து தந்து படத்திற்கு மிகப் பெரிய ஏற்றத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.  

படத் தொகுப்பாளரான ஜி.கே.பிரசன்னாவின் படத் தொகுப்புப் பணியில் இயக்குநரின் பங்களிப்பும் மிகச் சரியாகவே அமைந்திருக்கிறது. அதனால்தான் கச்சிதமான நறுக்கலில் படத்தின் திரைக்கதை சரியாக விறுவிறுப்பு குறையாமல் கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

காட்சிக்கு காட்சி காமெடி தெறிக்க, திரையரங்கில் மக்களுக்கு நல்ல எண்டர்டெயின்மெண்டாக அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

மிக பிரமாதமான வசனங்களை எழுதியிருக்கிறார் இயக்குநர். காமெடி காட்சி, சீரியஸ் காட்சி, சென்டிமெண்ட் காட்சிகள் என்று அனைத்திலும் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப ஆண், பெண்களை ஒட்டு மொத்தமாய் உரித்திருக்கிறார் இயக்குநர்.

கருணாஸ் மனைவிகளைப் பற்றிப் பேசும் காட்சியில் மனைவிகளே சிரித்துவிடுவார்கள்.  அதேபோல் காளி வெங்கட் தன் மனைவி பற்றிப் பேசிவிட்டு நொடியில் மாறும் காட்சியில் ஆண்களும் சிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஆண்களைப் பற்றி பெண்களும், பெண்களைப் பற்றி ஆண்களும் மாறி, மாறிப் பேசும் அந்த நகைச்சுவைக் காட்சியில் மொத்தக் குடும்பமும் ஜோராக கை தட்டி ரசிக்கின்றனர். இந்தக் காட்சி இனிமேல் சமூக வலைத்தளங்களில் வைரலானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சவரி முடியைத் துவைக்கும் காட்சியிலும் மொத்தத் தியேட்டரும் அதிர்கிறது. அந்தக் காட்சியில் தன்னுடைய வலியை வெளிக்காட்ட முடியாமல் தவித்து ஐஸ்வர்யா தன் நடிப்பையும் தாண்டி ஒரு சோக உணர்வை நமக்குள் கடத்தியிருக்கிறார்.

“மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்டை போடணும். ஆனால் இந்தியால மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்டை போடணும்” போன்ற வசனங்கள் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் யதார்த்த வாழ்க்கையை சொல்கிறது.

படத்தின் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளிலும் சிற்சில இடங்களிலும் இயக்குநர் தனக்குத் தோதாக திரைக்கதையை நகர்த்தியிருப்பது தெரிகிறது. உதாரணமாக  கருணாஸ் ஜெயிலுக்குப் போயிருக்கும் நேரத்தில் இங்கே ஐஸ்வர்யா பற்றிய உண்மை தெரிய வருவது.. ஐஸ்வர்யாவின் மெடல்கள் விஷ்ணுவின் வீட்டில் இருப்பது.. விஷ்ணுவுக்குத் தெரியாமல் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்புவது.. கோச், விஷ்ணு-ஐஸ்வர்யா சந்திப்பை நடத்தவிடாமல் செய்வது.. கிளைமாக்ஸில் ஐஸ்வர்யா பற்றிய உண்மையை வெளியிடாமல் மறைப்பது.. என்று சில காட்சிகளை வழக்கான சினிமா பார்மெட்டில் கொடுத்திருந்தாலும் ரசிப்பதுபோலத்தான் வைத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் பாதியில் வெறுமனே சிரிக்க மட்டுமே வைத்து, இரண்டாம் பாதியில் சிரிப்புடன் சீரியஸாகவும் சில விஷயங்களை பேசியுள்ளது படம். தற்போதைய குடும்ப வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக் கொள்ளும் வகையில் இத்திரைப்படம் பேசியிருப்பதுதான் இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி..!

சொல்வதற்கு சிற்சில  குறைகள் இருந்தாலும், இப்போதைய காலக்கட்டத்திற்குத் தேவையான விஷயத்தை, ஏற்கத் தகுந்தவகையில் சொல்லி, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாகியிருக்கும் படம் என்பதால் இந்தப் படத்தை வாழ்த்தி வரவேற்போம்.

RATING : 4 / 5

The post கட்டா குஸ்தி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு https://touringtalkies.co/neerpparavai-2-nd-part-movie-news/ Fri, 02 Dec 2022 06:34:54 +0000 https://touringtalkies.co/?p=27940 தமிழில் தற்போது 2-ம் பாகம் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘எந்திரன்’, ‘விஸ்வரூபம்’, ‘பில்லா’, ‘சாமி’, ‘சண்டக்கோழி’, ‘வேலை இல்லா பட்டதாரி’, ‘கோலி சோடா’, ‘சென்னை 28’ உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. ‘பொன்னியின் செல்வன்-2’-ம் பாகம் தயாராகி உள்ளது. ‘இந்தியன் 2-ம் பாகம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்துள்ளார். ‘நீர்ப்பறவை’ […]

The post “நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
தமிழில் தற்போது 2-ம் பாகம் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘எந்திரன்’, ‘விஸ்வரூபம்’, ‘பில்லா’, ‘சாமி’, ‘சண்டக்கோழி’, ‘வேலை இல்லா பட்டதாரி’, ‘கோலி சோடா’, ‘சென்னை 28’ உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. ‘பொன்னியின் செல்வன்-2’-ம் பாகம் தயாராகி உள்ளது. ‘இந்தியன் 2-ம் பாகம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்து ‘நீர்ப்பறவை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்துள்ளார். ‘நீர்ப்பறவை’ படம் கடந்த 2012-ல் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இதில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். கடலோரத்தில் வாழும் ஒரு இளைஞனின் வாழ்வியல் இந்தப் படத்தில் கதையாக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ‘நீர்ப்பறவை’ படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதையடுத்து இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில், “நீர்ப்பறவை பாகம்-2′ தொடங்கப்படும். ‘நீர்ப்பறவை’ அதன் பத்தாண்டுகளில் தங்கள் இதயங்களில் கூடு கட்ட அனுமதித்த மக்களுக்கும், என் கலைபெருமக்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

The post “நீர்ப்பறவை-2-ம் பாகம் வருகிறது” – இயக்குநர் சீனு ராமசாமி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி https://touringtalkies.co/interview-with-vishnu-vishal-about-acting-with-rajinikanth/ Tue, 29 Nov 2022 17:36:58 +0000 https://touringtalkies.co/?p=27814 லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். “ஆனால் இப்படியொரு வாய்ப்பை தான் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்கிறார் விஷ்ணு விஷால். இது குறித்து விஷ்ணு விஷால் பேசும்போது, “ஒரு கனவு நனவாச்சுன்னு சில விஷயங்களை சொல்வோமே.. அதுமாதிரின்னுகூட இதைச் சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார் படத்துல நாம பக்கா ஹீரோவா நடிக்கப் போறோம்கிற விஷயம் என் கனவுலகூட நான் நினைச்சுப் […]

The post “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘லால் சலாம்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால். “ஆனால் இப்படியொரு வாய்ப்பை தான் கனவிலும் நினைத்துக்கூட பார்த்ததில்லை” என்கிறார் விஷ்ணு விஷால்.

இது குறித்து விஷ்ணு விஷால் பேசும்போது, “ஒரு கனவு நனவாச்சுன்னு சில விஷயங்களை சொல்வோமே.. அதுமாதிரின்னுகூட இதைச் சொல்ல முடியாது. சூப்பர் ஸ்டார் படத்துல நாம பக்கா ஹீரோவா நடிக்கப் போறோம்கிற விஷயம் என் கனவுலகூட நான் நினைச்சுப் பார்க்காத விஷயம். அதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை. லைகா புரொடெக்சன்ஸ் தயாரிப்பு. இதையெல்லாம் பார்க்கும்போது இதுவொரு மேஜிக் மாதிரிதான் இருக்கு. இது நடக்கப் போகுதுன்னு என்னால இப்போவரைக்கும் நம்பக்கூட முடியலை. ஷூட்டிங் போறதுக்காக ஆர்வமாக காத்திருக்கேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “கனவுலகூட நினைச்சதில்லை” – ரஜினியுடன் நடிப்பது பற்றி விஷ்ணு விஷாலின் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது https://touringtalkies.co/aishwarya-rajinis-laal-salaam-movie-begins-today/ Sat, 05 Nov 2022 17:58:43 +0000 https://touringtalkies.co/?p=26642 கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். […]

The post ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2012-ம் ஆண்டில் ‘3’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக 2015-ம் ஆண்டில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தையும் இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் கலை இயக்குநராக ராமு தங்கராஜ் மற்றும் படத் தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் இந்த படத்தில் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன், நிர்வாக தயாரிப்பாளர் N.சுப்ரமணியன், பத்திரிகை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் இதர தொழில் நுட்ப குழுவினர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்ச்சியில் லைகா  நிறுவனத்தின் தலைவரான சுபாஷ்கரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் லைகா நிர்வாகத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரான ஜி.கே.தமிழ் குமரன் தெரிவித்தார்.

The post ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்’ படம் துவங்கியது appeared first on Touring Talkies.

]]>
“தலைகீழ் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்”: செல்லா சொல்லும் சம்பவம் https://touringtalkies.co/the-reverse-producer-the-story-told-by-cella/ Thu, 03 Nov 2022 01:55:00 +0000 https://touringtalkies.co/?p=26506 தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் கட்டா குஸ்தி படத்தை இணைந்து தயாரிக்கிறார்   விஷ்ணு விஷால்;  நாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி தோன்றுகிறார். படத்தை இயககும், செல்லா அய்யாவு கூறிய ஒரு விசயம் சுவாரஸ்யமானது. அவர், “விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்பதோடு, நல்ல தயாரிப்பாளரும்கூட.  காட்சிக்குத் தேவையான செலவைச் செய்ய அவர் தயங்குவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், செலவைக் குறைக்கலாம் என கிளைமாக்ஸ் காட்சிக்கு, சிம்பிளான அரங்கம் அமைத்தால் போதும் என பட்ஜெட் கொடுத்தேன். […]

The post “தலைகீழ் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்”: செல்லா சொல்லும் சம்பவம் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகர் ரவி தேஜாவுடன் கட்டா குஸ்தி படத்தை இணைந்து தயாரிக்கிறார்   விஷ்ணு விஷால்;  நாயகனாகவும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி தோன்றுகிறார்.

படத்தை இயககும், செல்லா அய்யாவு கூறிய ஒரு விசயம் சுவாரஸ்யமானது.

அவர், “விஷ்ணு விஷால் நல்ல நடிகர் என்பதோடு, நல்ல தயாரிப்பாளரும்கூட.  காட்சிக்குத் தேவையான செலவைச் செய்ய அவர் தயங்குவதே இல்லை. இன்னும் சொல்லப்போனால், செலவைக் குறைக்கலாம் என கிளைமாக்ஸ் காட்சிக்கு, சிம்பிளான அரங்கம் அமைத்தால் போதும் என பட்ஜெட் கொடுத்தேன்.

அவரோ, ‘இந்த க்ளைமாக்ஸ் ரொம்ப வீரியமானது. அதற்கேற்ற மாதிரி,  பிரம்மாண்டமாக செட் போட்டால்தான் நன்றாக இருக்கும். பெரிய அளவிலேயே அரங்கம் அமைக்கலாம்’ என்றார்.

உண்மையிலேயே எனக்கு மன திருப்தியாக இருந்தது” என்றார்  இயக்குநர் செல்லா அய்யாவு.

ஆச்சரியம்தான்.. ‘பிற தயாரிப்பாளர் படங்களில் செலவு குறித்து நடிகர்கள் கவலைப்பட மாட்டார்கள்; ஆனால் தான் தயாரிக்கும் படத்தில் செலவைக் குறைப்பார்கள்’ என ஒரு விமர்சனம் உண்டு.

ஆனால் தலைகீழாக இருக்கிறார் விஷ்ணு விஷால். வித்தியாசமானவர்தான்!

The post “தலைகீழ் தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்”: செல்லா சொல்லும் சம்பவம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’..! https://touringtalkies.co/aaryan-movie-poojai-news/ Sun, 04 Sep 2022 07:21:19 +0000 https://touringtalkies.co/?p=24285 விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஆர்யன்’. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் இருவரும் நாயகிகளாக நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்), […]

The post நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’..! appeared first on Touring Talkies.

]]>
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷ்ணு விஷாலின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஆர்யன்’.

இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் இருவரும் நாயகிகளாக நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு – விஷ்ணு விஷால் (விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்), எழுத்து  இயக்கம் – பிரவீன்.K, ஒளிப்பதிவு – விஷ்ணு சுபாஷ், இசை – சாம் C.S., படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – சில்வா, இணை எழுத்து – மனு ஆனந்த், கலை இயக்கம் – இந்துலால் கவீத், ஆடை வடிவமைப்பு & ஒப்பனை – வினோத் சுந்தர், ஒலி வடிவமைப்பு – SYNC CINEMA, விஷுவல் எஃபெக்ட்ஸ் –   ஹரிஹரசுதன், பிரதூல் NT, தயாரிப்பு மேற்பார்வை – A.K.V.துரை, நிர்வாகத் தயாரிப்பாளர் – சீதாராம், கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஷ்ரவந்தி சாய்நாத், தயாரிப்பு ஒருங்கிணைப்பு  – A.R.சந்திரமோகன், பத்திரிகை தொடர்பு  – சதீஷ் (AIM).

தமிழ்த் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு இந்தப் படத்தில் மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

புதுமையான திரைக்கதையில், பரப்பரப்பான திருப்பங்களுடன் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த ‘ஆர்யன்’ படத்தின் பூஜை, படக் குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள எளிமையான முறையில் நேற்றைக்கு நடைபெற்றது.

The post நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘ஆர்யன்’..! appeared first on Touring Talkies.

]]>
“அப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் படத்தைத் தயாரித்தேன்” – நடிகர் விஷ்ணு விஷாலின் கண்ணீர் பேச்சு..! https://touringtalkies.co/i-made-the-film-with-my-fathers-pension-money-actor-vishnu-vishals-tearful-speech/ Sun, 20 Feb 2022 08:30:50 +0000 https://touringtalkies.co/?p=20860 விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் ‘எஃப்.ஐ.ஆர்.(FIR)’. ‘ராட்சசன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது, இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக் குழுவினர் பத்திரிக்கை ஊடக  நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த […]

The post “அப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் படத்தைத் தயாரித்தேன்” – நடிகர் விஷ்ணு விஷாலின் கண்ணீர் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் வெளியீட்டில் பிப்ரவரி 11-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர்.(FIR)’.

ராட்சசன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், இப்படமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரிடத்திலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது,

இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக் குழுவினர் பத்திரிக்கை ஊடக  நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இந்த விழாவில் படத்தின் நாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் பேசும்போது, “இந்த நாள் ரொம்பவும் சந்தோஷமான நாள். மீடியாக்கள் தரும் ஆதரவை நான் என்றும் மறக்கவே மாட்டேன். விஷ்ணு விஷால் அடுத்த லெவலுக்கு போய்விட்டார் என எல்லோரும் பாராட்டியிருந்தார்கள், அதற்கு காரணம் இந்தப் படத்தின் இயக்குநர் மனுதான். உங்களுக்கும், மனுவுக்கும் எனது நன்றி.

நான் மனுவிடம் இந்தப் படத்தின் கதை பற்றிக் கேட்டபோது அந்த நேரத்தில் ‘ஃபேமிலிமேன்’ சீரீஸ், ‘மாநாடு’ படமெல்லாம் வெளியாகியிருக்கவில்லை. அவைகள் வந்தபோதும் மனுவை அழைத்து பேசினேன்.

என்னிடம் அப்போது இரண்டு சாய்ஸ் இருந்தது. ஆனால், நான் துணிந்து தயாரித்தேன். ஏற்கனவே இப்படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரிக்க மறுத்து, மீண்டும் இப்படத்தை நிறுத்தினால் ஒரு டைரக்டருக்கு என்ன நடக்குமென எனக்கு தெரியும். அதனால் நான் இதை தயாரித்தே தீருவது என முடிவு செய்தேன்.

ராட்சசனு’க்கு பிறகு நடிகராக இது எனக்கு இராண்டாவது வாய்ப்பு. ஆனால்,  அதை வெற்றியாக சாதித்து காட்டிய மனுவுக்கு நன்றி.

உதயநிதி ஸ்டாலினுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.  ‘மைனா’ படத்தின் வெற்றி விழாவிற்கு போனபோது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ எனது படத்தை விநியோகம் பண்ணுவார்களா? என்ற ஆசை இருந்தது. ‘நீர்ப்பறவை’ முதல் இப்போதுவரை எனக்குப் பெரிய ஆதரவினை அந்த நிறுவனத்தினர் தந்துள்ளார்கள். அவர்கள் அளித்து வரும் ஆதரவிற்கு நன்றி.

என் படத்தில் மூன்று நாயகிகள் நடித்துள்ளார்கள். ஆனால், இந்தப் படம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குக்கூட மூன்று பேரையும் என்னால் ஒன்றாக இணைக்க முடியவில்லை. அது ஒரு சின்ன கவலையாக எனக்குள் இப்போதும் உள்ளது.

இங்கே பேசிய எல்லோரும் “நான் சரியான நேரத்தில் சம்பளத்தைக் கொடுத்தேன்” என்றார்கள். ஆனால், அதன் பின்னால் இருந்த கஷ்டம் எனக்கு மட்டும்தான் தெரியும், இந்தப் படம் ஒரு கட்டத்தில் பெரிய பட்ஜெட்டாக வந்து நின்ற நேரத்தில், கடுமையான சிக்கல் உண்டானது, அப்பா வந்து யாரிடமும் கடன் வாங்காதே’ என்று அறிவுறுத்தி அவரது பென்சன் பணத்தை தந்து உதவினார்.. அவருக்கு நன்றி…” என்றார்.

The post “அப்பாவின் பென்ஷன் பணத்தில்தான் படத்தைத் தயாரித்தேன்” – நடிகர் விஷ்ணு விஷாலின் கண்ணீர் பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
FIR – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/fir-movie-review/ Sun, 13 Feb 2022 09:05:00 +0000 https://touringtalkies.co/?p=21992 சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலிலும், சமூகச் சூழலிலும் இஸ்லாமியர்கள் என்றாலே ஒருவித மனப்பான்மையுடன் அணுகும் முறை அனைத்து மட்டங்களிலும் நடந்தேறி வருகிறது. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற அர்த்தத்தில் அவர்களுக்கெதிரான அரசியல் […]

The post FIR – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
சென்னையில் வசிக்கும் ஒரு சாதாரண இஸ்லாமிய இளைஞன், தெளிவாக அறுதியிட்டு கூற முடியாத ஒரு குழப்பமான சூழ்நிலையில் சிக்கி விடுகிறார். அந்த நிகழ்ச்சி அவரது வாழ்க்கையை முற்றிலும் தலைகீழாக புரட்டிப் போட்டு விடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழலிலும், சமூகச் சூழலிலும் இஸ்லாமியர்கள் என்றாலே ஒருவித மனப்பான்மையுடன் அணுகும் முறை அனைத்து மட்டங்களிலும் நடந்தேறி வருகிறது.

இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற அர்த்தத்தில் அவர்களுக்கெதிரான அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினரும் பேசி வருகிறார்கள். அப்படியொரு நெருக்கடியான சூழலை சந்திக்கும் ஒரு இஸ்லாமிய இளைஞனின் கதைதான் இந்தப் படம்.

‘இர்பான் அகமது’ என்ற விஷ்ணு விஷால், சென்னை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் என்ஜீனியரிங் பிரிவில் கோல்டு மெடல் வாங்கியவர். தனது தகுதிக்கேற்ற வேலை தேடி அலைகிறார். இஸ்லாமியராக இருப்பதால் பல இடங்களில் வேலை கிடைக்காமல் போகிறது.

இதனால் தற்போதைக்கு ஆர்.என்.ஆர்.மனோகர் நடத்தும் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையில் தரக் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி வருகிறார்.

உலகம் தழுவிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ‘அபுபக்கர் அப்துல்லா’ என்ற தீவிரவாதி இந்தியாவிற்குள் கால் வைத்திருப்பதாகவும். இந்தியாவில் ஏதோ சதி வேலைகளைச் செய்ய அவன் திட்டமிடுவதாகவும் மத்திய அரசுக்குத் தகவல் கிடைக்கிறது.

இதற்கான தேசிய புலனாய்வு முகமையின் தலைவரான கவுதம் வாசுதேவ் மேனனின் உத்தரவினால் நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் ஹைதராபாத்திற்கு வேலை விஷயமாக சென்று வரும் விஷ்ணு விஷாலின் செல்போன் விமான நிலையத்தில் காணாமல் போகிறது.

இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பித்து விஷ்ணு விஷால் சென்னைக்கு வந்து கொண்டிருக்கும்போது ஹைதராபாத் விமான நிலையத்தில் குண்டு வெடிக்கிறது. இந்த வழக்கில் விஷ்ணு விஷால் கைது செய்யப்பட்டு கொடூரமாக விசாரிக்கப்படுகிறார்.

தனது தாயின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக “நான்தான் அந்த அபுபக்கர் அப்துல்லா…” என்று பொய் சொல்கிறார் விஷ்ணு விஷால். அடுத்து அவர்களிடமிருந்து தப்பிக்கவும் செய்கிறார்.

மத்திய உளவு அமைப்புகள், மாநில போலீஸ் என்று அனைவருமே விஷ்ணு விஷாலைத் தேட துவங்குகிறார்கள். இறுதியில் விஷ்ணு விஷால் தான் அப்பாவி என்பதை நிரூபித்தாரா..? தனது தாயை சந்தித்தாரா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

விஷ்ணு விஷாலின் நடிப்புக்கு ஒரு உதாரணமாக இத்திரைப்படம் அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவுக்கு தன்னுடைய உடல் மொழியுடன் கூடிய பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

“மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவரா நீங்கள்..?” என்று நேர்முகத் தேர்வில் கேட்ட கேள்விக்கு பொங்கி வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு பதிலளிக்கும்போதும், என்.ஐ.ஏ. விசாரணையில் ரைசா வில்சனின் எடக்கு மடக்கு கேள்விகளைத் தாங்க முடியாமல் கோபப்படும்போதும் ‘இர்பான் அகமது’வே நமது கண்களுக்குத் தெரிகிறார்.

வெறுமனே தீவிரவாதம், இஸ்லாமியர்கள், குண்டு வெடிப்பு என்று மட்டுமே வைத்தால் மக்களை அது கவராது என்று நினைத்து இடையில் தாய் சென்டிமெண்ட்டையும் கொஞ்சம் தூவியிருக்கிறார்கள்.

அம்மா உயிருக்குப் போராடுவது தெரிந்தவுடன் உண்மையைச் சொல்லிவிடுவான் என்று அதிகாரிகள் நினைப்பதும், அதை வைத்தே தப்பிக்க விஷ்ணு விஷால் திட்டமிடுவதும் திரைக்கதையில் வலுக்கட்டாயமாக எழுதப்பட்ட கதையாகவே தெரிகிறது.

உலகம் தேடும் தீவிரவாதியை நீதிபதி முன் ஆஜர்படு்த்த அழைத்துப் போகும்போது இப்படித்தான் 4 பேர் பாதுகாவலுடன் அழைத்துச் செல்வார்களா என்ன.? இயக்குநர் தனது திரைக்கதைக்காக இந்த இடத்தில் சமரசம் செய்து கொண்டார் போலும்..!

சண்டை காட்சிகளிலும், தனது உடல் வலுவைக் காட்டி நடிக்கும் காட்சிகளிலும் தானும் ஒரு ஆக்சன் ஹீரோதான் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் விஷ்ணு விஷால்.

என்.ஐ.ஏ. தலைவரான கவுதம் வாசுதேவ் மேனன் அலட்டல் இல்லாமல் அதிகாரத் தோரணையுடன் பல ஆங்கில வார்த்தைகளுக்கு நடு, நடுவே சில சில தமிழ் வார்த்தைகளைப் பேசி நடித்திருக்கிறார். வெறும் வசனங்களும் காட்சியமைப்புகளுமே அவரை ஒரு தந்திரக்காரராகவே காட்டுகிறது. இறுதியில் “இவர் அபுபக்கர் அப்துல்லாவைவிட மிகப் பெரிய பயங்கரவாதி…” என்பதை இயக்குநர் சொல்லாமல் சொல்லிவிட்டார்.

ரைசா வில்சன் இஸ்லாமியராக இருந்தாலும் என்.ஐ.ஏ.வில் அதிகாரியாக இருந்து ஆக்சன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரெபா மோனிக்கா ஜான் இந்த அணியில் அதிகாரியாக வந்து துப்பாக்கிச் சூடெல்லாம் நடத்துகிறார்.

விஷ்ணு விஷாலால் காதலிக்கப்படுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் மஞ்சிமா மோகன் அந்தக் கதைக்குள்ளேயே போகாமல் ஒரு வழக்கறிஞராக விஷ்ணு விஷாலுக்கு உதவும் நோக்கிலேயே திரைக்கதையில் இருக்க வைக்கப்பட்டிருக்கிறார்.

“என் மூஞ்சில ஆசிட் அடிச்சாலும் நாளைக்கும் இதே இடத்துல வந்து உக்காந்திருப்பேன்…” என்று கோர்ட் வாசலில் தெம்பாக சவால் விடும் காட்சியில் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கிறார் மஞ்சிமா.

விஷ்ணு விஷாலின் அம்மாவான மாலா பார்வதியும் தனது மென்மையான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். மேலும் பல கதாபாத்திரங்கள் திடீர், திடீரென்று வந்து நடித்துவிட்டுப் போகிறார்கள். அனைவரையும் மனதுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் நம் நினைவகம் தடுமாறுகிறது. ஆனால், ‘அபுபக்கர் அப்துல்லா’ யார் என்பது தெரியும்வரையிலும் அந்த சஸ்பென்ஸை கச்சிதமாக கொண்டு வந்திருக்கிறார்கள்.

அருள் வின்சென்ட்டின் ஒளிப்பதிவில் படம் ஒரு தரமான ஒளிப்பதிவில் ஜொலித்திருக்கிறது. பின்னணி இசையில் அஸ்வத் ஒரு பரபரப்பைக் கூட்டியிருக்கிறார். சில தேவையற்ற காட்சிகளை நீக்கியிருந்தால் படம் நீட்டான ஒரு திரில்லர் கதையைப் படித்தது போல இருந்திருக்கும்.

உண்மையில் இயக்குநர் மனு ஆனந்த், “முஸ்லீம்களுக்கு நல்லது செய்கிறேன்..” என்ற நினைப்பில் கெடுதல்தான் செய்திருக்கிறார். ஒரு புதிய தலைமுறையினர் “நாம் அனைவரும் இந்தியர்கள்தான்…” என்ற மனநிலையில் வளர்ந்து வரும்போது இப்போது திடீரென்று புதிதாக இஸ்லாமியர்கள் மீதான ஒரு எண்ணவோட்டத்தை மாற்றும்படியான இந்தக் கதையை தேர்வு செய்தது சரியில்லை.

அதுவும் இயக்குநரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் ஒரு இந்துவாக இருந்து கொண்டு இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றிப் பேசியிருப்பது சரியானதல்ல. இந்து பயங்கரவாதத்தைப் பற்றித்தான் இவர்கள் முதலில் பேசியிருக்க வேண்டும். இதனால்தான் சில இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து இந்தப் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அந்த எதிர்ப்புகளில் தவறில்லை என்று நாமும் சொல்கிறோம்.

மேலும் விஷ்ணு விஷாலே ஒரு இ்ந்திய புலனாய்வு அமைப்பின் ஊழியர் என்று கடைசியாக வைக்கும் டிவிஸ்ட்டே அவரது இந்தக் கடின உழைப்பை கேலிக் கூத்தாக்கிவிட்டது. “வேணும்ன்னே மாட்டிக்கிட்டு அடி வாங்குறானா..?” என்பதில் என்ன பரிதாபத்தையும், அடடா என்ற உணர்ச்சிக் குவியலையும் ரசிகர்கள் கொடுத்துவிட முடியும்..?

இந்திய புலனாய்வு அமைப்பே ஒரு இஸ்லாமிய இளைஞனை பலியாடாகப் பயன்படுத்தி அபுபக்கரை பிடிக்க முயல்வதெல்லாம் சர்வாதிகாரமே தவிர வேறில்லை. “அவர்களே குண்டு வைப்பார்களாம்.. அவர்களே எடுப்பார்களாம்..” என்ற பாணியில் திட்டமிட்டு ஒரு குண்டு வெடிப்பை நிகழ்த்தி அதற்கு இஸ்லாமியர்கள் மீது பழியைச் சுமத்தி பிரச்சாரம் செய்வதெல்லாம் ஒரு நல்ல அரசு செய்யும் காரியம் இல்லை. இந்தத் திரைக்கதையிலேயே மத்திய அரசு, மத்திய புலனாய்வு அமைப்பு மீது நமக்கு கோபம்தான் வருகிறது. பிறகு எங்கேயிருந்து தேச பக்தி பிறக்கும்..?

தவறான கதையில், தவறான திரைக்கதையில் நடிகர், நடிகைகளின் நடிப்பும், இயக்குநரின் சிறப்பான இயக்கமும், தொழில் நுட்பக் கலைஞர்களின் தரமான பங்களிப்பும் இடம் பெற்றிருப்பது இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் பின்னடைவுதான்..!

RATING : 3 / 5

The post FIR – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>