Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
வலிமை திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 12 May 2022 11:29:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png வலிமை திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 10,000 சதுர அடியில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் வெளியானது..! https://touringtalkies.co/valimai-movie-poster-crate-in-10000-square-feet-for-ott-release-promotion/ Tue, 22 Mar 2022 12:07:49 +0000 https://touringtalkies.co/?p=21355 அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10,000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உச்சபட்ச சாதனையாகும். தமிழ் ஓடிடி இயங்கு தளங்களில் வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ-5 ஓடிடி நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது. இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் […]

The post 10,000 சதுர அடியில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
அஜித்குமாரின் ‘வலிமை’ படத்திற்காக ஜீ5 நிறுவனம் 10,000 சதுர அடியில் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வெளியான போஸ்டர்களில் இது உச்சபட்ச சாதனையாகும்.

தமிழ் ஓடிடி இயங்கு தளங்களில் வெற்றியாளராக, தன்னை நிரூபித்துள்ள ஜீ-5 ஓடிடி நிறுவனம், தொடர்ந்து பல மொழிகளில் அருமையான திரைப்படங்களையும் அசல் தொடர்களையும் வழங்கி வருகிறது.

இதன் சந்தாதாரர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு மாதமும் புதிய உள்ளடக்கத்துடன் கூடிய சிறப்பு மிகு படைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இப்போது, அஜித் குமாரின் சமீபத்திய ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமான ‘வலிமை’ படத்தின் உலகளாவிய டிஜிட்டல் பிளாக் பஸ்டர் பிரீமியர் காட்சியைக் காணும் நேரம் வந்துவிட்டது.

உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றியை பெற்ற பிறகு, ‘வலிமை’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி முதல் உலகம் முழுவதும் ஜீ-5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

‘வலிமை’ படம் ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாவதை தொடர்ந்து, நடிகர் அஜித்குமாருக்கு சிறப்பு செய்யும் வகையில் வலிமை படத்திற்காக 10,000 சதுர அடியில் மிகப் பெரிய போஸ்டரை ஜீ-5 ஓடிடி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக கருதப்படும் வலிமை படத்தில் அஜித் குமார் ஐபிஎஸ் அதிகாரி அர்ஜூனாகவும், ஹுமா குரேஷி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

H.வினோத் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து பேவியூ ப்ராஜெக்ட் எல் எல் பி சார்பில் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரு அருமையான போலீஸ் கதையோடு, வலுவான ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகள் இந்தப் படத்தை ஒரு முழுமையான குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக மாற்றியுள்ளது.

இப்படத்தில் நடிகர் அஜீத் குமாரின் அசத்தலான திரை ஆளுமை மற்றும் நடிகர் கார்த்திகேயாவின் சாத்தானிய அவதாரம்.. இவையிரண்டும் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களையும் திரையரங்குகளுக்கு வரவழைத்தது.

12 மொழிகளில் 3,500 திரைப்படங்கள், 500+ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், 4,000+ இசை வீடியோக்கள், 35+ மேடை நாடகங்கள் மற்றும் 90+ லைவ் டிவி சேனல்கள், உடன் ஜீ5 தளமானது உலகம் முழுவதும் உள்ள அதன் பார்வையாளர்களுக்கு நிகரற்ற உள்ளடக்கத்தை வழங்குகிறது. இப்போது, ஜீ-5 ஓடிடி தளத்தின் ஆண்டு சந்தா ரூ. 599  மட்டுமே!

The post 10,000 சதுர அடியில் அஜீத்தின் ‘வலிமை’ படத்தின் போஸ்டர் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
பாப்கார்னுடன் ‘வலிமை’ டிக்கெட் இலவசம் – கூட்டுறவு அங்காடியின் அதிரடி ஆஃபர்..! https://touringtalkies.co/simco-co-operative-society-give-valimai-movie-ticket-for-rupees-3000-purchases/ Tue, 22 Feb 2022 05:28:51 +0000 https://touringtalkies.co/?p=20903 2,999 ரூபாய்க்கு மேல் மளிகை பொருள்களை வாங்கினால் அஜித்குமாரின் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம் அறிவித்துள்ளது. வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காகிதப் பட்டறை பகுதியில் SIMCO எனும் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்குவோருக்கு அஜித்குமார் நடிப்பில் உருவாகி தற்போது வெளியாக இருக்கும் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் […]

The post பாப்கார்னுடன் ‘வலிமை’ டிக்கெட் இலவசம் – கூட்டுறவு அங்காடியின் அதிரடி ஆஃபர்..! appeared first on Touring Talkies.

]]>
2,999 ரூபாய்க்கு மேல் மளிகை பொருள்களை வாங்கினால் அஜித்குமாரின் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு அங்காடி மையம் அறிவித்துள்ளது.

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட காகிதப் பட்டறை பகுதியில் SIMCO எனும் மத்திய அரசின் தென்னிந்திய பன்மாநில கூட்டுறவு பல்பொருள் அங்காடி செயல்பட்டு வருகிறது.

தற்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த பல்பொருள் அங்காடியில் பொருள் வாங்குவோருக்கு அஜித்குமார் நடிப்பில் உருவாகி தற்போது வெளியாக இருக்கும் ‘வலிமை’ படத்துக்கான டிக்கெட் இலவசம் என அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில், 2,999 ரூபாய்க்கு மேல் மளிகைப் பொருள் வாங்குவோருக்கு காட்பாடி சில்க் மில்லில் உள்ள தனியார் திரையரங்கில் வெளியாகும் வலிமை’ படத்துக்கான இலவச டிக்கெட் மற்றும் பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் அடங்கிய 500 ரூபாய் தொகுப்பு இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பாப்கார்னுடன் ‘வலிமை’ டிக்கெட் இலவசம் – கூட்டுறவு அங்காடியின் அதிரடி ஆஃபர்..! appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’-‘பீஸ்ட்’ மோதல் நடக்குமா..? https://touringtalkies.co/valimai-beast-movies-will-released-on-same-day/ Wed, 22 Sep 2021 16:48:58 +0000 https://touringtalkies.co/?p=18191 தல அஜீத் நடித்திருக்கும் ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அஜீத்-ஹூமா குரேஷி நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இப்போதுவரையிலான அஜீத்தின் திரைப்படங்களில் அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படமும் இதுவேயாகும். தற்போது இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்றைக்குத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அதே பொங்கல் தினத்தன்றுதான் […]

The post ‘வலிமை’-‘பீஸ்ட்’ மோதல் நடக்குமா..? appeared first on Touring Talkies.

]]>
தல அஜீத் நடித்திருக்கும் ‘வலிமை’ படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

அஜீத்-ஹூமா குரேஷி நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’.

இப்போதுவரையிலான அஜீத்தின் திரைப்படங்களில் அதிக பொருட் செலவில் தயாரிக்கப்பட்டு வரும் படமும் இதுவேயாகும்.

தற்போது இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்றைக்குத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அதே பொங்கல் தினத்தன்றுதான் விஜய்யின் ‘பீஸ்ட்’ படமும் வெளியாகவுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் இந்த பொங்கல் ரிலீஸீல் அஜீத்தின் ‘வலிமை’யும் சேர்ந்திருப்பது திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட விநியோகஸ்தர்களையும் ஒரு சேர அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஏனெனில் தமிழ்ச் சினிமாவின் இன்றைய நிலைமைக்கு உச்ச நட்சத்திரங்கள் அஜீத்தும், விஜய்யும்தான். அவர்கள் இருவரின் படங்கள் தனியே வந்தாலே வசூல் 100 கோடிகளைத் தொட்டுவிடும். ஆனால் அதே நேரம் ஒரே நாளில் வெளியானால் இரண்டு படங்களும் 100 கோடியைத் தாண்டுவது சாத்தியமல்ல. ஏனெனில் தனிப்பட்ட குடும்பத்தினர் ஏதாவது ஒரு படம் பார்த்தால் போதும் என்று முடிவெடுத்து அடுத்த படத்திற்கு வராமல் போனால், அதனால் இரண்டு படத் தயாரிப்பாளர்களும்தான் நஷ்டமடைவார்கள். படத்தினை வாங்கி வெளியிட போகும் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் சேர்ந்தே நஷ்டமடைவார்கள்.

அதனால் இந்த இரண்டு படங்களில் ஏதாவது ஒரு படத்தை பொங்கலுக்குக் கொணர்ந்துவிட்டு அடுத்த படத்தை ஜனவரி 26-க்கு கொண்டு வரலாம் என்று திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தங்களது வாட்ஸ் அப் குழுக்களில் பேசி வருகிறார்கள்.

The post ‘வலிமை’-‘பீஸ்ட்’ மோதல் நடக்குமா..? appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்தி வைப்பு https://touringtalkies.co/valimai-movie-first-look-poster-release-news/ Fri, 23 Apr 2021 16:28:48 +0000 https://touringtalkies.co/?p=14632 அஜீத் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை அஜீத்தின் 50-வது பிறந்த நாளான வரும் மே 1-ம் தேதி வெளியிடுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியாகும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீ்ட்டர் செய்தி இதுதான் :

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்தி வைப்பு appeared first on Touring Talkies.

]]>
அஜீத் நடிப்பில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை அஜீத்தின் 50-வது பிறந்த நாளான வரும் மே 1-ம் தேதி வெளியிடுவதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியாகும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் இன்று தனது டிவீட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீ்ட்டர் செய்தி இதுதான் :

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு ஒத்தி வைப்பு appeared first on Touring Talkies.

]]>
அஜித் பட வில்லன் நடிகர் ரசிகர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்..! https://touringtalkies.co/telugu-actor-karthikeya-appeals-to-his-fans/ Tue, 30 Mar 2021 06:25:00 +0000 https://touringtalkies.co/?p=13993 தெலுங்கு நடிகரான கார்த்திகேயா, “தனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் வெற்றிக் கொடி நாட்டுவேன்…” என்று பகிரங்கமாகவே தனது ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2018-ம் ஆண்டு தெலுங்கில் ‘ஆர்.எக்ஸ்.100’ என்ற படத்தில் ‘சிவா’ என்ற நாயக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கார்த்திகேயா. அந்த ஒரே படத்தின் வெற்றியின் மூலம் ஒரே நாள் இரவில் புகழ் பெற்றார் கார்த்திகேயா. ஆனால் அதையடுத்து அவர் நடித்த ‘ஹிப்பி’, ‘குணா 360’, ‘கேங் லீடர்’, ‘90 ML’ ஆகிய  படங்கள் தோல்வியடைந்தன. இருப்பினும் […]

The post அஜித் பட வில்லன் நடிகர் ரசிகர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு நடிகரான கார்த்திகேயா, “தனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தால் வெற்றிக் கொடி நாட்டுவேன்…” என்று பகிரங்கமாகவே தனது ரசிகர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2018-ம் ஆண்டு தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100’ என்ற படத்தில் சிவா’ என்ற நாயக கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கார்த்திகேயா. அந்த ஒரே படத்தின் வெற்றியின் மூலம் ஒரே நாள் இரவில் புகழ் பெற்றார் கார்த்திகேயா.

ஆனால் அதையடுத்து அவர் நடித்த ‘ஹிப்பி’, ‘குணா 360’, ‘கேங் லீடர்’, ‘90 ML’ ஆகிய  படங்கள் தோல்வியடைந்தன. இருப்பினும் கார்த்திகேயாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் இந்தப் படங்கள் வெற்றி பெறாதது கார்த்திகேயாவுக்கு மிகுந்த சங்கடத்தைக் கொடுத்திருக்கிறது.

இதனாலேயே திடீரென்று தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகர் கார்த்திகேயா. அந்த வேண்டுகோளில், “என் படங்களைப் பிடிக்காதவர்கள் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். அடுத்தபடியாக நல்லக் கதைகளைத் தேர்வு செய்து நடித்து மீண்டும் உங்கள் முன்பு தோன்றுவேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள்…” என்று தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார் கார்த்திகேயா.

“தெலுங்கு நடிகரின் கதை நமக்கெதுக்கு?” என்கிறார்களா.. அதில்தான் ஒரு டிவிஸ்ட் உள்ளது. தமிழகத்தில் ‘தல’யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் இந்தக் கார்த்திகேயாதான் வில்லனாக நடித்திருக்கிறார்.

ஸோ.. இந்த வலிமை’ திரைப்படமும் இவரது கேரியரை உயர்த்திவிட்டால் அதுவும் நல்லதுதானே..?!

The post அஜித் பட வில்லன் நடிகர் ரசிகர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! https://touringtalkies.co/valimai-movie-first-look-will-release-on-may-1/ Mon, 15 Mar 2021 10:08:26 +0000 https://touringtalkies.co/?p=13614 நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். அவர் சற்று நேரத்திற்கு முன்பாக தனது டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் மே 1-ம் தேதியன்று அஜீத் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அன்றைக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்றிலிருந்தே ‘வலிமை’ படத்தின் பிரமோஷனும் துவக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு […]

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.

அவர் சற்று நேரத்திற்கு முன்பாக தனது டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் மே 1-ம் தேதியன்று அஜீத் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அன்றைக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்றிலிருந்தே ‘வலிமை’ படத்தின் பிரமோஷனும் துவக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அஜீத்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டார்..! https://touringtalkies.co/valimai-movies-editor-changed/ Thu, 25 Feb 2021 05:32:33 +0000 https://touringtalkies.co/?p=13327 தற்போது ‘வலிமை’ படத்தின் அனைத்து டாக்கி போர்ஷன்களும் படமாக்கப்பட்டுவிட்டன. இவற்றை படத் தொகுப்பு செய்யும் வேலைகள் துவங்கிவிட்டதாம். இந்தப் படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டிருப்பதகாகத் தெரிகிறது. முன்பு கதிர் படத் தொகுப்பு செய்வதாக இருந்தது. ஆனால் இப்போது ‘ஜாக்பாட்’ மற்றும் ‘சங்கு சக்கரம்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பு செய்திருக்கும் விஜய் வேலுக்குட்டி என்பவர்தான் ‘வலிமை’ படத்தின் புதிய படத் தொகுப்பாளராம். தற்போது எடுக்கப்பட்டவரையிலான படத்திற்கான படத் தொகுப்பு வேலைகள் மும்முரமாக நடந்து […]

The post ‘வலிமை’ படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.

]]>
தற்போது வலிமை’ படத்தின் அனைத்து டாக்கி போர்ஷன்களும் படமாக்கப்பட்டுவிட்டன. இவற்றை படத் தொகுப்பு செய்யும் வேலைகள் துவங்கிவிட்டதாம்.

இந்தப் படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டிருப்பதகாகத் தெரிகிறது. முன்பு கதிர் படத் தொகுப்பு செய்வதாக இருந்தது. ஆனால் இப்போது ‘ஜாக்பாட்’ மற்றும் ‘சங்கு சக்கரம்’ ஆகிய படங்களுக்கு படத் தொகுப்பு செய்திருக்கும் விஜய் வேலுக்குட்டி என்பவர்தான் ‘வலிமை’ படத்தின் புதிய படத் தொகுப்பாளராம்.

தற்போது எடுக்கப்பட்டவரையிலான படத்திற்கான படத் தொகுப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகள் ஏப்ரலுக்குள் முடிந்துவிடும். அதன் பிறகு எடுக்கப்பட்ட சில சண்டை காட்சிகளை மட்டும் ஸ்பெயின் அல்லது மொராக்கோ நாட்டிற்குச் சென்று படமாக்கப்படவுள்ளார்கள். இது ஏப்ரலில் நடக்க வாய்ப்புண்டு என்கிறது ‘வலிமை’ படக் குழு.

The post ‘வலிமை’ படத்தின் படத் தொகுப்பாளர் மாற்றப்பட்டார்..! appeared first on Touring Talkies.

]]>
“வலிமை வரும். பொறுமையா இருங்க…” – நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள்..! https://touringtalkies.co/actor-ajithkumar-appeals-to-his-fans/ Mon, 15 Feb 2021 18:01:37 +0000 https://touringtalkies.co/?p=13068 நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர்களை பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். நடிகர் அஜீத்குமாரின் ரசிகர்கள் அவரை ‘தல’ என்று பாசத்துடன் அழைப்பதோடு, அவருடைய படங்களின் மீது தீராத காதல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெறி பிடித்த ரசிகர்களாக இருப்பதால் அவர்களால் அஜீத்திற்கு பல பிரச்சினைகள் வந்தன. இதையொட்டித்தான் தனது ரசிகர் மன்றங்களை ஒரே நாளில் கலைத்தார் அஜீத். ஆனாலும், இப்போதும் சமூக வலைத்தளங்களில் அஜீத் மீது யாராவது ஒருவர் தவறு சொன்னால்கூட வறுத்து எடுத்து விடுவார்கள் […]

The post “வலிமை வரும். பொறுமையா இருங்க…” – நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர்களை பொறுமை காக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

நடிகர் அஜீத்குமாரின் ரசிகர்கள் அவரை ‘தல’ என்று பாசத்துடன் அழைப்பதோடு, அவருடைய படங்களின் மீது தீராத காதல் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இவர்களில் சிலர் வெறி பிடித்த ரசிகர்களாக இருப்பதால் அவர்களால் அஜீத்திற்கு பல பிரச்சினைகள் வந்தன. இதையொட்டித்தான் தனது ரசிகர் மன்றங்களை ஒரே நாளில் கலைத்தார் அஜீத்.

ஆனாலும், இப்போதும் சமூக வலைத்தளங்களில் அஜீத் மீது யாராவது ஒருவர் தவறு சொன்னால்கூட வறுத்து எடுத்து விடுவார்கள் அஜீத்தின் ரசிகர்கள்.

தற்போது அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படம் பற்றிய தகவல்கள் எதுவும் சமீப நாட்களில் வெளியாகவில்லை. படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் பாலிவுட்காரர். பெரும்பாலும் மும்பையில் குடியிருப்பதால் இங்கே என்ன நடக்கிறது என்று அவருக்கும் தெரிவதில்லை. ஆனால் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அவ்வப்போது படத்தின் புகைப்படங்கள் வெளியானால்தான் அஜீத்தை பார்க்க முடியும் என்கிற ஆதங்கத்தில் அவரது ரசிகர்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், அந்த அப்டேட்டை கொடுக்கத்தான் ஆளில்லை.

இதனால் பொறுமையிழந்த அவரது ரசிகர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் சேலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது “வலிமை’ அப்டேட் எப்போ ஸார் வரும்..?” என்று அவர் காதில் விழுகும் அளவுக்குக் கத்திவிட்டார்கள்.

பின்பு பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்தில் இடையில் புகுந்து ‘வலிமை’ படத்தின் அப்டேட் பற்றிச் சங்கடத்தை ஏற்படுத்துகிறார்கள். கடைசியாக பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் பக்கத்திற்கே டேக் செய்து ‘வலிமை’ அப்டேட் பற்றிக் கேட்டுவிட்டார்கள்.

போதாக்குறைக்கு சென்னையில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான போட்டியின் நடுவே “வலிமை’ படத்தின் அப்டேட் என்ன…?” என்று கேட்டு போஸ்டர்களைக் காட்டி போட்டியைப் பார்க்க வந்த கிரிக்கெட் ரசிகர்களையே எரிச்சலாக்கிவிட்டார்கள்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த அஜீத்குமார் இது பற்றி தனது ரசிகர்களுக்கு புத்தி சொல்லி ஒரு அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கை இதுதான் :

The post “வலிமை வரும். பொறுமையா இருங்க…” – நடிகர் அஜீத்குமார் ரசிகர்களுக்கு வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்.. https://touringtalkies.co/valimai-movie-update-news/ Thu, 26 Nov 2020 06:55:06 +0000 https://touringtalkies.co/?p=10383 ‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போதே முழுமையாக எடுத்து முடித்துவிட்டாராம் இயக்குநர் வினோத். அடுத்து ஒரேயொரு ஷெட்யூலில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அதுவும் இந்த டிசம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும். அதன் பின்பு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மற்ற பின் பணி வேலைகளும் முடிந்து படம் […]

The post ‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்.. appeared first on Touring Talkies.

]]>
‘தல’ அஜீத்தின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

அஜீத் நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் 80 சதவிகித படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்தியாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் அனைத்தையும் சமீபத்தில் ஹைதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவில் நடைபெற்ற இரண்டாம் கட்ட படப்பிடிப்பின்போதே முழுமையாக எடுத்து முடித்துவிட்டாராம் இயக்குநர் வினோத்.

அடுத்து ஒரேயொரு ஷெட்யூலில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. அதுவும் இந்த டிசம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும்.

அதன் பின்பு போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகள் மற்ற பின் பணி வேலைகளும் முடிந்து படம் ஏப்ரல் 14 அல்லது மே 1-ம் தேதியன்று கண்டிப்பாக திரைக்கு வரும் என்று அந்தப் படத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியுடன் சொல்கிறார்கள்.

ஏப்ரல் 14-ல் ‘அண்ணாத்தே’ வெளியானால், ‘வலிமை’ மே 1-க்குத் தள்ளிப் போகும். அன்றைக்குத்தான் ‘தல’யின் பிறந்த நாள் என்பதால், அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கும்..!

The post ‘வலிமை’ படத்தின் முக்கியமான அப்டேட்.. appeared first on Touring Talkies.

]]>
அஜீத்தின் ‘வலிமை’ படத்துக்கு புதிய சிக்கல்… https://touringtalkies.co/valimai-movie-shooting-news/ Sun, 04 Oct 2020 15:15:10 +0000 https://touringtalkies.co/?p=8355 கொரோனா லாக் டவுனில் சிக்கிக் கொண்ட படங்களில் ‘வலிமை’யும் ஒன்று. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அஜீத் வர மாட்டார் என்பதை உணர்ந்து அஜித் இல்லாத காட்சிகளை சென்னையிலேயே படமாக்கினார் அந்தப் படத்தின் இயக்குநரான வினோத். இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க இருந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொள்வதாக இருந்தார். ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிக்கின்ற பல நடிகர்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். மும்பை […]

The post அஜீத்தின் ‘வலிமை’ படத்துக்கு புதிய சிக்கல்… appeared first on Touring Talkies.

]]>

கொரோனா லாக் டவுனில் சிக்கிக் கொண்ட படங்களில் ‘வலிமை’யும் ஒன்று. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் அஜீத் வர மாட்டார் என்பதை உணர்ந்து அஜித் இல்லாத காட்சிகளை சென்னையிலேயே படமாக்கினார் அந்தப் படத்தின் இயக்குநரான வினோத்.

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இரண்டாம் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்க இருந்தது. இந்தப் படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொள்வதாக இருந்தார்.

‘வலிமை’ படத்தில் அஜித்துடன் நடிக்கின்ற பல நடிகர்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். மும்பை மற்றும் ஹைதராபாத்தில் திடீரென்று வைரஸ் தாக்குதல் அதிகமானதால் அவர்களில் யாருமே இப்போது படப்பிடிப்புக்கு வரத் தயாராக இல்லை. ஆகவே ‘வலிமை’யும் தள்ளிப்  போகிறதாம்.

The post அஜீத்தின் ‘வலிமை’ படத்துக்கு புதிய சிக்கல்… appeared first on Touring Talkies.

]]>