Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
மீண்டும் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sat, 18 Dec 2021 09:51:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png மீண்டும் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சினிமாவைக் காதலிப்பவனை சினிமா எப்போதும் கை விடாது” – எஸ்.ஏ.சந்திரசேகரின் உற்சாகப் பேச்சு https://touringtalkies.co/sac-speech-in-meendum-movie-audio-function/ Sat, 18 Dec 2021 09:50:32 +0000 https://touringtalkies.co/?p=19905 ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மீண்டும்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா. இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப் படமான ‘சிட்டிசன்’ மற்றும் ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர். இந்த ‘மீண்டும்’ படத்தில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர். மேலும்,  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா […]

The post “சினிமாவைக் காதலிப்பவனை சினிமா எப்போதும் கை விடாது” – எஸ்.ஏ.சந்திரசேகரின் உற்சாகப் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும்’.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா. இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப் படமான சிட்டிசன்’ மற்றும் ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த மீண்டும்’ படத்தில் கதிரவனுக்கு ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

மேலும்,  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.  நடன இயக்கத்தை ராதிகா அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு.

விஜய் நடித்த புலி’ படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் இந்த மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார். தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார். 

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர்.

இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியாந தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர். 

கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து  நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு ஆகியோர் முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். 

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, “சிட்டிசன்’ படத்தில் தனது திறமையை நிரூபித்தவர் இயக்குநர் சரவண  சுப்பையா. சிட்டிசன்’ படம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை பேசியது.

திறமையுள்ளவர்கள் எல்லாம் ஏன் நடுவில் கொஞ்சம் சினிமாவைவிட்டு ஒதுங்கிட்டீங்களா? அல்லது அவர்களை சினிமா ஒதுக்கிவிட்டதா என்று தெரியவில்லை.

பொழுது போக்குக்காகத்தான் சினிமாவை எடுக்கிறோம். ஆனாலும், அதில் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு சிலர்தான்.  70- 80-களில் இருந்த இயக்குநர்கள் வெற்றியையும் கொடுப்போம், தோல்வியையும் கொடுப்போம். ஆனால் வெற்றியை மட்டும் மனதில் வைத்துக் கொள்வோம். வாய்ப்புகள் தொடர்ந்து வரும்.

இப்போது ஒவ்வொரு படமும் சோதனையாகிறது. ஒரு படம் சறுக்கினால் அவ்வளவுதான்  நம்மை மறந்துவிடுவார்கள். சரவணன் சுப்பையா மீண்டும் இந்த மீண்டும்’ படம் மூலம் மீண்டு வந்திருக்கிறார்.  சிட்டிசன்’ இயக்குநராக மீண்டும் இந்தப் படம் உங்களை கொண்டு வந்து நிறுத்தும். 

படத்தின் டிரைலர் ரொம்ப நன்றாக இருந்தது. படத்தில் ஹீரோவை கொடுமைப்படுத்தும் காட்சியும் இருக்கிறது, ஒரு குழந்தையை வைத்து சென்டிமென்ட் காட்சியும் இருக்கிறது.  ஹீரோ கதிரவன் மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். நன்றாக உழைப்பவனை சினிமா எப்போதும் கை விடாது. சினிமாவை காதலித்தால் உண்மையான காதலிபோல் அது நம்மை கை விடாது. ஏதாவது ஒருவிதத்தில் நம்மை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும்.

இங்கு லியோனி வந்திருக்கிறார். முதன்முறையாக அவரை நான் சினிமாவுக்கு அழைத்து வந்தேன். செந்தூரப் பாண்டி’ படத்தின் நூறாவது நாள் விழாவுக்கு ‘காதலா வீரமா’ என்ற தலைப்பை வைத்து பட்டிமன்றம் நடத்திக் கொடுத்தார். அதேபோல் நாஞ்சில் சம்பத்  இங்கு வந்திருக்கிறார். “அவர் இருக்கும் மேடையில் நீ எப்படி தைரியமா பேசற..?” என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டி உள்ளது.

அடுத்து பாண்டே வந்திருக்கிறார். திறமையானவர். ஆனால், வழி தவறி எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாரோ என்று நினைக்கிறேன். இவர் தமிழகத்துக்கு தமிழர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நல்லது…” என்றார். 

The post “சினிமாவைக் காதலிப்பவனை சினிமா எப்போதும் கை விடாது” – எஸ்.ஏ.சந்திரசேகரின் உற்சாகப் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு https://touringtalkies.co/such-a-scene-has-never-been-seen-in-any-other-film-the-highlight-of-the-film-meendum/ Sun, 30 May 2021 09:14:35 +0000 https://touringtalkies.co/?p=15324 அஜித்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற  ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. ‘கந்தர்வன்’, ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ‘ஹீரோ சினிமாஸ்’. மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ‘மீண்டும்.’ தயாரிப்பாளர் மணிகண்டன் இந்த ‘மீண்டும்’ படத்தில் ‘கதிரவன்’ என பெயர் மாற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார். மேலும், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, ‘யார்’ […]

The post “இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு appeared first on Touring Talkies.

]]>
அஜித்குமார் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற  ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா.

‘கந்தர்வன்’, ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிகண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ‘ஹீரோ சினிமாஸ்’.

மணிகண்டன் மிகுந்த பொருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ‘மீண்டும்.’

தயாரிப்பாளர் மணிகண்டன் இந்த ‘மீண்டும்’ படத்தில் ‘கதிரவன்’ என பெயர் மாற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார்.

மேலும், எஸ்.எஸ்.ஸ்டேன்லி, யார்’ கண்ணன், ‘கேபிள்’ சங்கர், சுப்ரமணிய சிவா, பிரணவ் ராயன், களவாணி’ புகழ் துரை சுதாகர், சுபா பாண்டியன், இந்துமதி மணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், ராதிகா நடனப் பயிற்சியையும் அளித்துள்ளனர். தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பையும், ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவையும், நாகராஜ் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை. வசனம், எழுதி இயக்கி உள்ளார் சரவணன்சுப்பையா. ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.

தாய் நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப் புலனாய்வு துறை அதிகாரியான கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது. தாய் நாட்டுப் பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார்.  கடமையை செய்ய செல்கிறார்.

இவர் வருகையை கண்டுபிடித்துவிட்ட எதிரிகள் அவரை பிடித்து தனிமைச் சிறையில் அடைத்து மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்றனர். சித்திரவதையின் உச்சகட்டமாக நடைபெறும் அந்த கொடூர சம்பவங்கள் அதிர்ச்சியின் உச்சம்.

அந்த காட்சி இதுவரை ஆசிய திரைப்படங்களிலேயே வந்திராத காட்சி என்றால் அது மிகையாகாது. அந்தக் காட்சியில் நாயகனான கதிரவன் துணிச்சலுடன் நடித்ததை இயக்குநர் உட்பட படக் குழுவினர் அனைவரும் கை தட்டி பாராட்டி வாழ்த்தினார்கள்.

தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள மீண்டும்’ திரைப்படம் ஊரடங்கு முடிந்தவுடன் திரையரங்குகளில் வருகிறதா..? ஊரடங்கின்போதே ஓ.டி.டி. தளத்தில் வரப் போகிறதா…? என்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post “இப்படியொரு காட்சி வேறு எந்தப் படத்திலும் வந்ததில்லை” – ‘மீண்டும்’ படத்தின் சிறப்பு appeared first on Touring Talkies.

]]>
“தமிழை கொலை செய்யாதீர்கள்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்..! https://touringtalkies.co/do-not-kill-tamil-language-director-r-v-udhayakumars-angry-speech/ Tue, 16 Feb 2021 09:34:17 +0000 https://touringtalkies.co/?p=13094 “தமிழும், ஆங்கிலமுமாக கலந்து பேசி தமிழைத் தயவு செய்து கொலை செய்யாதீர்கள்” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். சமீபத்தில் நடைபெற்ற ‘மீண்டும்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்துக் கொண்டிருந்த ஒரு தொகுப்பாளர் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கலந்து பேசிக் கொண்டிருந்தார். இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இந்த விழாவில் பேசும்போது, “இந்தத் தம்பி தமிழ்லேயும் பேசுறார். ஆங்கிலத்திலேயும் பேசுறார். இப்படி தட்கல் முறைல தமிழ்ல பேசினால் எப்படி..? அதுவும் […]

The post “தமிழை கொலை செய்யாதீர்கள்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>
“தமிழும், ஆங்கிலமுமாக கலந்து பேசி தமிழைத் தயவு செய்து கொலை செய்யாதீர்கள்” என்று நிகழ்ச்சி தொகுப்பாளர்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘மீண்டும்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்துக் கொண்டிருந்த ஒரு தொகுப்பாளர் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இந்த விழாவில் பேசும்போது, “இந்தத் தம்பி தமிழ்லேயும் பேசுறார். ஆங்கிலத்திலேயும் பேசுறார். இப்படி தட்கல் முறைல தமிழ்ல பேசினால் எப்படி..?

அதுவும் கவிஞர் வைரமுத்து போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகள் இருக்கும் மேடைகளிலேயே இப்படி தொகுத்து வழங்கினால் எப்படி..? எனக்கெல்லாம் தமிழ் சரளமாகப் பேச வராது. ஆனால் எழுத வரும். இப்போதுதான் தொடர்ச்சியாக தமிழில் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

இப்படி தமிழ்ல கொஞ்சம்.. ஆங்கிலத்தில் கொஞ்சம்ன்னு கலந்து பேசும்போது கேட்பதற்கு எரிச்சல்தான் வருது.. அதுவும் காலங்கார்த்தால இதைக் கேட்குறது மிகப் பெரிய கொடுமை. ஏதாவது ஒரு மொழியில் பேசிட்டுப் போங்க..” என்று கோபத்துடன் பேசினார் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்.

The post “தமிழை கொலை செய்யாதீர்கள்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வேண்டுகோள்..! appeared first on Touring Talkies.

]]>