Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
போனி கபூர் – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 Oct 2022 15:00:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png போனி கபூர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 போனி கபூர் தயாரிப்பில் ஜான்வி கபூர் நடித்திருக்கும் ‘மிலி’ திரைப்படம் https://touringtalkies.co/mili-movie-news/ Thu, 13 Oct 2022 15:00:00 +0000 https://touringtalkies.co/?p=25333 மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து  வெளியிட்டுள்ளனர்! ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடித்துள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் செய்திருக்காத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய […]

The post போனி கபூர் தயாரிப்பில் ஜான்வி கபூர் நடித்திருக்கும் ‘மிலி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து  வெளியிட்டுள்ளனர்!

‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடித்துள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் செய்திருக்காத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும்  ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.  

தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் முதல் முறையாக ஒரு படத்திற்காக இணைந்து வேலை பார்ப்பதுதான்.

ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் மதுகுட்டி சேவியர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘மிலி’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The post போனி கபூர் தயாரிப்பில் ஜான்வி கபூர் நடித்திருக்கும் ‘மிலி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இன்றைய IPL போட்டியில் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரெயிலர் வெளியாகிறது. https://touringtalkies.co/veetla-visheasham-movie-trailer-release-news/ Wed, 25 May 2022 02:36:36 +0000 https://touringtalkies.co/?p=22249 Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் R.J.பாலாஜி நடிக்கும், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது..! RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது. ‘பிளாக் பஸ்டர்’ இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா […]

The post இன்றைய IPL போட்டியில் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரெயிலர் வெளியாகிறது. appeared first on Touring Talkies.

]]>
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் R.J.பாலாஜி நடிக்கும், வீட்ல விசேஷம்’ டத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது..!

RJ.பாலாஜி-N J.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை, Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  இணைந்து Romeo Pictures தயாரித்துள்ளது.

பிளாக் பஸ்டர்’ இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் சில முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கார்த்திக் முத்துக்குமார், கலை இயக்கம் – விஜயகுமார், வசனம் – R.J..பாலாஜி, நந்தினி கார்க்கி, பாடல்கள் – பா.விஜய், படத் தொகுப்பு – செல்வா R.K. இசை – கிரிஷ் கோபாலகிருஷ்ணன், நடன இயக்கம் – தினேஷ், கதை – அக்சத் கில்டியல்-சாந்தனு ஸ்ரீவஸ்தவ், உடை வடிவமைப்பு – திவ்யா நாகராஜன், ஒலி வடிவமைப்பு – S.விஜய் ரத்தினம் MPSE, ஒலிக் கலவை – A.M.ரஹ்மத்துல்லா, விஷூவல் எபெக்ட்ஸ் – R. ஹரிஹர சுதன் (லார்வன் ஸ்டுடியோ), புகைப்படங்கள் – ராமமூர்த்தி, உடைகள் – M.செல்வராஜ், விளம்பர வடிவமைப்பு – கபிலன், தயாரிப்பு நிர்வாகம் – N.விக்கி,  சிகை அலங்காரம் – S.பாண்டியன், ஒப்பனை – N.சக்திவேல், தயாரிப்பு மேலாளர் – P.செல்வகுமார்-சிவகுமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா-ரேகா D’One.

இத்திரைப்படம் வரும் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை இன்று (மே 25, 2022) வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

படம் குறித்து RJ.பாலாஜி கூறுகையில், “Zee Studios & Romeo Pictures நிறுவனங்களுடன்  இணைந்து போனி கபூர் சாரின் BayView Projects போன்ற புகழ் பெற்ற தயாரிப்பு ஸ்டுடியோக்கள் தயாரிக்கும் இத்திரைப்படத்தின் ஒரு பகுதியாக நானும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

திரையரங்குகளில் பார்த்து ரசிக்க ஒரு நேர்த்தியான பொழுதுபோக்கிற்காக ஆவலுடன் காத்திருக்கும் குடும்பப் பார்வையாளர்களுக்காக, ஒரு அருமையான படைப்பாக இத்திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

இப்படத்தின் இறுதிப் பதிப்பை  பார்த்த தயாரிப்பாளர்கள் அசல் பதிப்பைவிட (பதாய் ஹோ) வீட்ல விசேஷம்’ படம் நன்றாக இருப்பதாக பாராட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாளை நடைபெறும் ஐ.பி.எல். ப்ளே ஆஃப் போட்டியின்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும்.  இந்த வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக சத்யராஜ் சார் மற்றும் அபர்ணா பாலமுரளி என்னுடன் மும்பையில் இருக்கிறார்கள்.

நாளை டிரெய்லரையும் ஜூன் 17, 2022 அன்று முழு நீள திரைப்படத்தையும் உங்களுக்கு வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்…” என்றார்.

The post இன்றைய IPL போட்டியில் ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரெயிலர் வெளியாகிறது. appeared first on Touring Talkies.

]]>
“மெட்ரோ’ படத்தின் காப்பியா ‘வலிமை’..?” – உயர்நீதிமன்றத்தில் வழக்கு..! https://touringtalkies.co/if-valimai-movie-copied-from-metro-movie-case-filed-on-high-court/ Sat, 12 Mar 2022 08:53:52 +0000 https://touringtalkies.co/?p=21213 நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வலிமை’. “இந்தப் படத்தின் கதையும், கதாபாத்திரங்களின் தன்மையும் தான் தயாரித்து 2016-ம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 1 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகத் தர வேண்டும்..” என்று கேட்டு ‘மெட்ரோ’ படத்தின் தயாரிப்பாளரான ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “நான் தயாரித்திருக்கும் ‘மெட்ரோ’ படத்தில் வசதியான வாழ்வுக்காக சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பி ஈடுபடுவதை […]

The post “மெட்ரோ’ படத்தின் காப்பியா ‘வலிமை’..?” – உயர்நீதிமன்றத்தில் வழக்கு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான திரைப்படம் வலிமை’.

“இந்தப் படத்தின் கதையும், கதாபாத்திரங்களின் தன்மையும் தான் தயாரித்து 2016-ம் ஆண்டு வெளியான ‘மெட்ரோ’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக 1 கோடி ரூபாயை நஷ்ட ஈடாகத் தர வேண்டும்..” என்று கேட்டு ‘மெட்ரோ’ படத்தின் தயாரிப்பாளரான ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “நான் தயாரித்திருக்கும் மெட்ரோ’ படத்தில் வசதியான வாழ்வுக்காக சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பி ஈடுபடுவதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போன்ற காட்சி உள்ளது.

தற்போது ‘மெட்ரோ’ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் வலிமை’ படம் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை’ படத்தை சாட்டிலைட் சேனல், ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் எனக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்…” என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வருகிற 17-ம் தேதிக்குள் இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி வலிமை’ படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

The post “மெட்ரோ’ படத்தின் காப்பியா ‘வலிமை’..?” – உயர்நீதிமன்றத்தில் வழக்கு..! appeared first on Touring Talkies.

]]>
‘வாலி’ பட ஹிந்தி ரீமேக்-போனி கபூருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா https://touringtalkies.co/director-s-j-surya-files-a-case-against-boney-kapoor-for-vaali-movie-hindi-remake/ Mon, 29 Nov 2021 07:02:24 +0000 https://touringtalkies.co/?p=19621 ‘வாலி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1999-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ‘வாலி’. இந்தப் படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படத்தின் […]

The post ‘வாலி’ பட ஹிந்தி ரீமேக்-போனி கபூருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா appeared first on Touring Talkies.

]]>
வாலி’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1999-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் வாலி’. இந்தப் படத்தில் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம்தான் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம். இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூர் பெற்றிருக்கிறார். அடுத்த ஆண்டு இந்தப் படத்தை ஹிந்தியில் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தார் போனி கபூர்.

இதை எதிர்த்து படத்தின் இயக்குநரான எஸ்.ஜே.சூர்யா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏனெனில் வாலி’ திரைப்படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு மிகவும் பிடித்த ஒரு படம். இது அவரது முதல் படம் மற்றும் அவருக்கு தமிழ்ச் சினிமாவில் பெரிய பிரேக்கை கொடுத்த படமும் இதுதான்.

இந்தப் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்வதிலும், அஜித் நடிக்க விரும்பாதபட்சத்தில் தான் அதில் நடிக்கவும் ஆர்வமாக இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் வாலி’ படத் தயாரிப்பாளர் படத்தின் ரீமேக் உரிமத்தை போனி கபூருக்கு விற்றுவிட்டதால் ஹிந்தியில் ரீமேக் செய்வதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார் எஸ்.ஜே.சூர்யா.

படத்தின் கதை, திரைக்கதை, வசனகர்த்தா என்ற முறையில் என் அனுமதியில்லாமல் இந்தப் படத்தை வேறு எந்த மொழியிலும் யாரும் ரீமேக் செய்ய முடியாது…” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார் எஸ்.ஜே.சூர்யா.

ஆனால் உச்சநீதிமன்றமோ வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும்போதே, ஹிந்தி ரீமேக் படத்திற்கான வேலையைத் தொடங்குவதற்கு போனி கபூருக்கு அனுமதியளித்து ஒரு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

இப்போது இந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உச்சநீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா அப்பீல் செய்யப் போவதாகத் தெரிகிறது.

இதற்காக ஆரண்ய காண்டம்’ படத்தின் ரீமேக் பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பினை மேற்கோள்காட்டி உச்சநீதிமன்றத்தில் வாதிட உள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

அந்தத் தீர்ப்பில், “படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், ரீமேக் உரிமை ஸ்கிரிப்ட் ரைட்டருக்கே உரியது என்றும், ஸ்க்ரிப்ட் ரைட்டர் தயாரிப்பாளருக்கு உரிமையை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத பட்சத்தில், ஸ்கிரிப்ட் ரைட்டருக்குதான் ரீமேக் உரிமை உள்ளது…” என்றும் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், படத்தின் ஸ்கிரிப்ட் உரிமையை தான் வைத்திருப்பதால் உச்சநீதிமன்றத்தில் தனக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன் உள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

The post ‘வாலி’ பட ஹிந்தி ரீமேக்-போனி கபூருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா appeared first on Touring Talkies.

]]>
“வலிமை இந்தியில் டப் செய்யப்படுமா..?” – தயாரிப்பாளரின் பதில்.. https://touringtalkies.co/valimai-movie-will-dubbing-in-hindi-producers-answer/ Sat, 10 Apr 2021 06:12:40 +0000 https://touringtalkies.co/?p=14266 அஜீத்தின் ரசிகர்கள் சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள்.. இவர்களையும் தாண்டி அரசியல்வாதிகளிடம்கூட கேட்டுத் தொலைத்துவிட்டார்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை..! அரசியல் கட்சிகளின் கூட்டணி முடிவுகளைவிடவும் பரம ரகசியமாக இருக்கிறது ‘வலிமை’ படத்தின் விஷயங்கள். இது குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் பேசுகையில், “தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ரசிகர்கள் மகிழ்ச்சியடைக் கூடிய வகையிலான செய்திகள் இனிமேல் அடுத்ததுட்டு நிச்சயமாக வரும். இந்தப் படம் தமிழ்ச் சினிமாவில் ஒரு சரித்திர வெற்றியை பெறும் என்பதை மட்டும் […]

The post “வலிமை இந்தியில் டப் செய்யப்படுமா..?” – தயாரிப்பாளரின் பதில்.. appeared first on Touring Talkies.

]]>
அஜீத்தின் ரசிகர்கள் சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள்.. இவர்களையும் தாண்டி அரசியல்வாதிகளிடம்கூட கேட்டுத் தொலைத்துவிட்டார்கள் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை..!

அரசியல் கட்சிகளின் கூட்டணி முடிவுகளைவிடவும் பரம ரகசியமாக இருக்கிறது ‘வலிமை’ படத்தின் விஷயங்கள். இது குறித்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் சமீபத்தில் பேசுகையில், “தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. ரசிகர்கள் மகிழ்ச்சியடைக் கூடிய வகையிலான செய்திகள் இனிமேல் அடுத்ததுட்டு நிச்சயமாக வரும்.

இந்தப் படம் தமிழ்ச் சினிமாவில் ஒரு சரித்திர வெற்றியை பெறும் என்பதை மட்டும் நான் உறுதியா சொல்றேன். பைக் சேஸிங், சண்டை காட்சிகளில் ‘தல’ அஜீத் டூப் இல்லாமல் அவரே ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கார். அவரது உழைப்புக்கு பலன் இல்லாமலா போகும்.. ?

இப்போது இந்தப் படத்தை இந்தியில் டப் செய்து வெளியிடலாமா என்பது பற்றியும் யோசித்து வருகிறோம்..” என்று சொல்லியிருக்கிறார்.

The post “வலிமை இந்தியில் டப் செய்யப்படுமா..?” – தயாரிப்பாளரின் பதில்.. appeared first on Touring Talkies.

]]>
‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! https://touringtalkies.co/valimai-movie-first-look-will-release-on-may-1/ Mon, 15 Mar 2021 10:08:26 +0000 https://touringtalkies.co/?p=13614 நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர். அவர் சற்று நேரத்திற்கு முன்பாக தனது டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் மே 1-ம் தேதியன்று அஜீத் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அன்றைக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்றிலிருந்தே ‘வலிமை’ படத்தின் பிரமோஷனும் துவக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டு […]

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜீத் தற்போது நடித்து வரும் ‘வலிமை’ படத்தின் அப்டேட் கேட்டு அவருடைய ரசிகர்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர்.

அவர் சற்று நேரத்திற்கு முன்பாக தனது டிவீட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் வரும் மே 1-ம் தேதியன்று அஜீத் தனது 50-வது பிறந்த நாளை கொண்டாடுவதையொட்டி அன்றைக்கு ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும், அன்றிலிருந்தே ‘வலிமை’ படத்தின் பிரமோஷனும் துவக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அஜீத்தின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

The post ‘வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் அஜீத் பிறந்த நாளன்று வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>