Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Tue, 08 Nov 2022 10:38:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தினால் மணிரத்னம் சம்பாதித்தது எவ்வளவு..? https://touringtalkies.co/how-much-did-mani-ratnam-earn-from-ponniyien-selvan-1/ Tue, 08 Nov 2022 10:35:33 +0000 https://touringtalkies.co/?p=26772 ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் பெற்ற இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ படம், உலகம் முழுவதும் தமிழர்களையும் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது. 240 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் வசூல், தற்போது 500 கோடியையும் தாண்டிவிட்டது என்கிறார்கள் திரையுலகத்தினர். இந்தப் படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். […]

The post ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தினால் மணிரத்னம் சம்பாதித்தது எவ்வளவு..? appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலமாக இந்தியாவிலேயே அதிகச் சம்பளம் பெற்ற இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

கடந்த மாதம் வெளியான ‘பொன்னியின் செல்வன்-1’ படம், உலகம் முழுவதும் தமிழர்களையும் தாண்டி சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது.

240 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் வசூல், தற்போது 500 கோடியையும் தாண்டிவிட்டது என்கிறார்கள் திரையுலகத்தினர்.

இந்தப் படத்தை லைக்காவுடன் இணைந்து மணிரத்னம் தனது ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தில் ‘ஆதித்ய கரிகாலனாக’ நடித்த விக்ரம் 10 கோடி சம்பளம் பெற்றதாக அதிகாரப்பூர்வம் இல்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘வந்தியதேவனாக’ நடித்த கார்த்திக்கு 8 கோடியும், ‘அருள்மொழி வர்மனாக’ நடித்த ஜெயம் ரவிக்கு 8 கோடியும், ‘நந்தினி’யாக நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு 8 கோடியும், ‘குந்தவை’யாக நடித்த த்ரிஷாவுக்கு 1.5 கோடி சம்பளமும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு 4 கோடியும் சம்பளமாக கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர மற்றைய நடிகர், நடிகைகளுக்கும் சேர்த்து மேலும் 10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாம். இந்த வகையில் இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகையருக்கு சம்பளமாகவே 49 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 95 கோடி ரூபாயை வசூல் செய்திருந்தது. மேலும் ஆந்திராவில் 11 கோடி, கேரளாவில் 5.5 கோடி, கர்நாடகாவில் 3.5 கோடி மற்றும் ஹிந்தியில் 13 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இப்படி அனைத்து இந்திய மொழிகளிலும் ஒட்டு மொத்தமாக இந்தப் படம் 429 கோடியே 75 லட்சத்தை வசூல் பண்ணியுள்ளது. மேலும் படம் சம்பந்தமான மற்றைய உரிமங்களின் மூலமாகவும் இந்தப் படத்திற்கு கூடுதலாக 190 கோடி கிடைத்துள்ளது.

இப்படத்தை இயக்கியதற்கான சம்பளமாக 60 கோடி ரூபாயை மணிரத்தினம் பெற்றுள்ளதாக அதிர்ச்சித் தகவல் கோடம்பாக்கத்தில் வலம் வருகிறது.

மேலும் படத்தின் லாபத்திலும் பங்கு என்ற ஒப்பந்தத்தின்படி மேலும் 60 கோடி ரூபாய் மணிரத்னத்திற்குக் கிடைத்துள்ளதாம். மொத்தமாக இந்தப் பொன்னியின் செல்வன் படம் மூலமாக இயக்குநர் மணிரத்னத்திற்கு 120 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

அந்த வகையில் இந்திய சினிமாவில் எந்தவொரு இயக்குநரைவிடவும் உயர்ந்தபட்ச சம்பளத்தை மணிரத்னம் வாங்கியதோடு, நடிகர்களின் சம்பளத்தையும் தாண்டி சாதனை படைத்திருக்கிறாராம்.

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் ‘வாரிசு’ படத்திற்காக 118 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளாராம். இப்போது இயக்குநர் மணிரத்னம் இதைவிடவும் கொஞ்சம் கூடுதலாக 2 கோடியைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலமாக லைகா நிறுவனத்திற்கு 140 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இது முதல் பாகத்தின் வரவு-செலவுதான்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக ஆயிரம் கோடியை வசூல் செய்யும் என்று இப்போதே திரையுலகத்தில் பேச்சு எழுந்துள்ளது.

The post ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தினால் மணிரத்னம் சம்பாதித்தது எவ்வளவு..? appeared first on Touring Talkies.

]]>
“இப்போ இதெல்லாம் தேவைதானா?” – ராஜராஜசோழன் சர்ச்சை குறித்து சரத்குமார் கருத்து..! https://touringtalkies.co/is-all-this-necessary-now-sarathkumar-comments-on-the-rajarajacholan-controversy/ Sat, 08 Oct 2022 09:34:47 +0000 https://touringtalkies.co/?p=24986 சமூக வலைத்தளங்களில் தற்போது மிக முக்கிய பிரச்சினையாகப் பேசப்பட்டு வரும் ராஜராஜ சோழன் தமிழனா, இந்துவா என்ற சர்ச்சை தேவையில்லாதது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது : “மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புகழ் பரப்புவோம்! உலகறியச் செய்வோம்! மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது. சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், […]

The post “இப்போ இதெல்லாம் தேவைதானா?” – ராஜராஜசோழன் சர்ச்சை குறித்து சரத்குமார் கருத்து..! appeared first on Touring Talkies.

]]>
சமூக வலைத்தளங்களில் தற்போது மிக முக்கிய பிரச்சினையாகப் பேசப்பட்டு வரும் ராஜராஜ சோழன் தமிழனா, இந்துவா என்ற சர்ச்சை தேவையில்லாதது என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :

மாமன்னன் ராஜ ராஜ சோழனின் புகழ் பரப்புவோம்! உலகறியச் செய்வோம்!

மாமன்னன் ராஜ ராஜ சோழன் இந்துவா? சைவமா? வைணவமா? சைவம் இந்து மதமா? – பரபரப்பான சர்ச்சையாக தற்போது சென்று கொண்டிருக்கிறது.

சிவன், விஷ்ணு, சக்தி, முருகன், சூரியன், விநாயகர் ஆகிய கடவுள்களை வழிபடுபவர்களை கி.பி. 8 – ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், செளரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம் என ஆறு பிரிவுகளாக பிரித்தவற்றை, இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சைவம், வைணவம், சமணம், பெளத்தம், சீக்கியம் மற்றும் அனைத்து நாட்டுப்புற சமயங்களையும் உள்ளடக்கி பொதுவாக இந்து சமயம்’ என வரையறுத்துள்ளது.

1790-ம் ஆண்டுகளில் ஆங்கிலேயர்கள் சட்டங்களை தொகுத்தபோது, கிறிஸ்தவம், இஸ்லாமியத்தை தவிர்த்து இருந்த பெரும் பிரிவு சமயங்களை சேர்த்து, சிந்து நதியில் (Indus Valley) இருந்து மருவிய இந்து (Indus) என்ற பெயரிடப்பட்டது.

குரங்கிலிருந்து வந்தவன் மனிதன். அப்படியானால் ‘மனித குரங்கு’ எதிலிருந்து வந்தது..?

குரங்கு விலங்கு’ என்றால், அந்த விலங்கினத்திற்கு மனிதன்’ என பெயரிட்டது யார்?

இதனால் மனிதனை இப்போது குரங்கு’ என்று சொல்வோமா..? அல்லது குரங்கைத்தான் இப்போது மனிதன்’ என சொல்வோமா..? இந்த சர்ச்சைகள் எல்லாம் இப்போது நாட்டிற்கு தேவையான ஒன்றுதானா?

கிறிஸ்தவம் எப்போது உருவானது? கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எப்போது வந்தது? இஸ்லாம் எப்போது உருவானது? இஸ்லாமியர்கள் என்ற பெயர் எப்போது வந்தது?  தேசம் முதலில் வந்ததா? இங்கு வசிக்கும் மக்கள் முதலில் வந்தார்களா? தமிழ்நாடு முதலில் வந்ததா? தமிழர்கள் முதலில் இங்கு இருந்தார்களா?

சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றி விட்டோம். ஆனால், இது தமிழ்நாடு அல்ல என்பது என்ன வாதம்?

கோழி முதலில் வந்ததா? அல்லது முட்டை முதலில் வந்ததா? என்பது போல ஆராய்ச்சி செய்து நாம் என்ன சாதிக்க போகிறோம்?

யார் முதலில் வந்தார்கள்? எது முதலில் வந்தது? என்பதை வைத்து பின்னாளில் மாற்றியமைக்கப்பட்ட பெயரை விடுத்து ஆதிகால பெயரையே அழைக்க தீர்மானிப்பது அறிவார்ந்த செயலாக இருக்க முடியுமா?

காலத்திற்கேற்ற ஆட்சியமைப்பு – ஒருங்கிணைப்பு – வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது – அப்போது ஹோமோசேப்பியன்ஸ் என்றிருந்த மனித இனத்தை இன்றும் அவ்வாறு அழைக்கிறோமா?

சைவ சமயம் இருந்தது உண்மை. வைணவ சமயம் இருந்தது உண்மை. அந்த சமயங்களை இந்து சமயத்தில் இணைத்தது உண்மை என்னும்போது இதற்கு மேல் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?

இவை அனைத்துமே இறை கொள்கையை அடிப்படையாக கொண்டது. அவரவர் நம்பிக்கைக்கேற்ப இறைவனை வழிபட்டு மதச்சார்பின்மையுடன் செயல்படும் நாட்டில், தொடர்ந்து சர்ச்சைகள் எழுவது வேதனைக்குரியது.

மனித இனத்தின் அடிப்படை தேவைகளான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுவாசிக்க தூய்மையான காற்று, கல்வி, சுகாதாரம், பொருளாதார மேம்பாடு, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம், தனி மனித வாழ்க்கைத் தர உயர்வு அனைவருக்கும் சமமாக கிடைக்கப் பெறுவது எப்போது..?

புவி வெப்ப மயமாதல், காற்று மாசுபாடு, இயற்கை சீர்கேடு, நோய்த் தொற்று பரவல், புதுப்புது வைரஸ் தாக்கம், சமூக சீர்கேடுகள் என தேசத்தில் நடந்தேறும் நிலையை  தடுப்பது எப்படி..? மாற்றுவது எப்போது?

மக்கள் நலனுக்கான முற்போக்கு சிந்தனைகளில் நேரத்தை செலவிடாமல், பின்னோக்கி சென்று வரலாற்றில் சாதித்த மன்னர்களின் புகழை ஆராயாமல் சமயத்தை ஆராய்ந்து இது உண்மையா..? பொய்யா..? என மீண்டும், மீண்டும் பேசி  சர்ச்சைக்குரிய ஒன்றாக உருவாக்குவது நியாயமா?

விலங்கினமாக இருந்த இனம் இரு கற்களை உரசி தீப்பொறி உருவாகுவதை கண்டு பிடித்ததில் இருந்து, சக்கரங்கள், உலோகங்கள் என அன்றாட கண்டுபிடிப்புகளும், தொழில் நுட்ப வளர்ச்சிகளும் மிகவும் ஆச்சரியமூட்டும் வகையில் நீண்டு செல்கிறது. 

அபரிமிதமான அறிவியல் வளர்ச்சியால் ஆலிஸ் (Alice) என பெயரிடப்பட்ட உலகின் முதல் மின்சார பயணிகள் விமானம் வெற்றிகரமாக வானில் பறந்துள்ளது.

நாளைய மனிதன் விண்வெளிக்கு பாதை அமைக்க திட்டமிடும்போது, செவ்வாய் கோள்களில் குடியேற சிந்திக்கும் போது, ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று விவாதிக்காமல், உலக அதிசயங்களுள் ஒன்றாக வைத்து போற்றக் கூடிய மாபெரும் புகழ்மிக்க தஞ்சை பெரிய கோவிலை மக்களுக்கு அர்ப்பணித்த அந்த மாமன்னன், வீரத் தமிழன் ராஜராஜ சோழனின்  புகழை உலகின் எட்டுத் திக்கும் எடுத்துச் செல்வதில்  இந்த ஆர்வம் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி,

வணக்கம்.

உழைப்பவரே உயர்ந்தவர்

என்றும் அன்புடன்

ரா.சரத்குமார்

The post “இப்போ இதெல்லாம் தேவைதானா?” – ராஜராஜசோழன் சர்ச்சை குறித்து சரத்குமார் கருத்து..! appeared first on Touring Talkies.

]]>
‘பொன்னியின் செல்வனு’க்கு டிவிட்டரில் சுவாரஸ்யமாக பிரமோஷன் செய்யும் நடிகர், நடிகையர் https://touringtalkies.co/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9f/ Thu, 15 Sep 2022 09:34:53 +0000 https://touringtalkies.co/?p=24529 தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொருபுறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளே இறங்கியுள்ளனர். ‘ஆதித்த கரிகாலனாக’ நடித்துள்ள விக்ரம், ‘வந்திய தேவனாக’ நடித்திருக்கும் கார்த்தி, ‘குந்தவை’யாக நடித்துள்ள த்ரிஷா ஆகியோர் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை சமூக வலைத்தளங்கள் மூலமும் தீவிரமாக […]

The post ‘பொன்னியின் செல்வனு’க்கு டிவிட்டரில் சுவாரஸ்யமாக பிரமோஷன் செய்யும் நடிகர், நடிகையர் appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன்’ படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெறுகின்றன.

படத்தின் வேலைகள் ஒருபுறம் நடைபெறும் நிலையில், இன்னொருபுறம் படத்தை பிரபலப்படுத்தும் வேலைகளில் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளே இறங்கியுள்ளனர்.

ஆதித்த கரிகாலனாக’ நடித்துள்ள விக்ரம், ‘வந்திய தேவனாக’ நடித்திருக்கும் கார்த்தி, ‘குந்தவை’யாக நடித்துள்ள த்ரிஷா ஆகியோர் பொன்னியின் செல்வன்’ படத்தை சமூக வலைத்தளங்கள் மூலமும் தீவிரமாக பிரபலப்படுத்துகின்றனர்.

விக்ரம் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் இருந்த பெயரை ‘ஆதித்த கரிகாலன்’ என மாற்றியுள்ளார். அதேபோல் 55 லட்சம் Followers-களை கொண்ட த்ரிஷா தன்னுடைய பெயரை ‘குந்தவை’ என பதிவிட்டுள்ளார். மேலும் Profile புகைப்படங்களையும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வரும் தங்கள் கதாப்பாத்திரதின் புகைப்படங்களை வைத்துள்ளனர்.

இது தவிர டிவிட்டர் பதிவுகளை பொன்னியின் செல்வன்’ கதையோட்டத்துடன் கூடிய உரையாடல் பாணியில் நிகழ்த்துகின்றனர்.

இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் விக்ரமின் நண்பன் வந்திய தேவனாக கார்த்தி நடித்துள்ளார். அதேபோல் தங்கை குந்தவையாக த்ரிஷாவும், தம்பி அருண்மொழியாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனான நடிகர் விக்ரம், “சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டத் திக்கும் புலிக் கொடி திரைப் பயணம் தொடங்கும் முன், பெருவுடையார் ஆசி வேண்டுமல்லவா? குந்தவை உடன் வருகிறாயா? வந்திய தேவன் வருவான். என்ன நண்பா,  வருவாய்தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

ஆதித்த கரிகாலனான விக்ரமின் பதிவுக்கு பதிலளித்து ‘வந்தியத் தேவன்’ கார்த்தி பதிவிட்டுள்ளார். அதில், “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கைவரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever. I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me” என கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து விக்ரம் தன் பதிவில் “சில போர்களை தனியாகத்தான் வெல்ல வேண்டும்” என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களின் பதிவுகள் அடுத்தடுத்து சுவாரஸ்யமாக வருகிறது.

இவர்களின் உரையாடல்களால்  அடித்து அடுத்து என்ன என்று ரசிகர்கள் குஷியாகிவிட்டனர் . இவை அனைத்தும், டிவிட்டர் உரையாடலாக இருந்தாலும், படத்தின் கதை தன்மையிலும், கதாபாத்திரங்களின் பின்னோட்டத்துடனுமே இருக்கிறது.

இந்த வகையிலான புரமோஷனுக்கு முதல் அடித்தளமிட்டவர் கார்த்தி. குந்தவை கதாபாத்திரத்தை அறிமுகம் செய்த அன்று, நடிகர் கார்த்தி “இளவரசி.. Please send me live location. உங்கள் அண்ணனின் ஓலையை drop off பண்ணனும்!” என பதிவிட்டார். அதற்கு த்ரிஷா, “Sorry அரண்மனையில் smart phones and smart people not allowed” என பதிலளித்தார்.

இவர்களின் இந்த இரண்டு பதிவுகளும் பொன்னியின் செல்வன்’ படத்தை சமூக வலைதளங்களில் பிரபலப்படுத்த அடித்தளமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தள புரமோஷன் தவிர, சென்னை, கேரளா, கர்நாடகா, ஐதராபாத், கொல்கத்தா, மும்பை, டெல்லி, துபாய் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்குகின்றனர்.

“எங்கு சென்றாலும் படம் வெளியாகும் செப் 30-ம் தேதியன்று சென்னையில்தான் இருப்போம்” என்று அனைவரும் கூறியுள்ளனர்.

The post ‘பொன்னியின் செல்வனு’க்கு டிவிட்டரில் சுவாரஸ்யமாக பிரமோஷன் செய்யும் நடிகர், நடிகையர் appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் https://touringtalkies.co/ponniyien-selvan-1-movie-trailer/ Tue, 06 Sep 2022 19:47:22 +0000 https://touringtalkies.co/?p=24361 Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part – 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban. DoP: Ravi Varman Editor: Sreekar Prasad Production Designer: Thota Tharrani Choreography: Brinda Costume Designer: Eka Lakhani Additional […]

The post பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>

Banner: Lyca Productions & Madras Talkies Movie Name: Ponniyin Selvan Part – 1 Cast: Vikram, Aishwarya Rai Bachchan, Jayam Ravi, Karthi, Trisha, Aishwarya Lekshmi, Sobhita Dhulipala, Prabhu, R Sarathkumar, Vikram Prabhu, Jayaram, Prakash Raj, Rahman and Radhakrishnan Parthiban. DoP: Ravi Varman Editor: Sreekar Prasad Production Designer: Thota Tharrani Choreography: Brinda Costume Designer: Eka Lakhani Additional Costume Designer: Chandrakant Sonawane Jewellery: Kishandas & Co Hair & Make Up: Vikram Gaikwad Action: Kecha Khamphakdee & Sham Kaushal VFX: NYVFXWaala VFX Supervisor: Sanjiv Anand Naik DI: Red Chillies Color Colorist: Ken Metzker Re-Recording Mixer: Craig Mann Additional Re-Recording Mixer: S Sivakumar Sound Designer: Anand Krishnamoorthi Background Score Supervisor: Tuomas Kantilenian Music Supervisor: Nakul Abhyankar Panchatan Sound Engineers: Suresh Permal, Karthik Sekharan & Aravid Cresendo Stills: CH Balu Publicity Designs: Gopi Prasanna Digital Streaming Partner: Amazon Prime Video Music Lablel: Tips Industries Ltd. (Tips Tamil) Lyca Productions: Head- G.K.M. Tamil Kumaran CEO- Aashish Singh Lyrics: Ilango Krishnan, Kabilan, Siva Ananth & Krithika Nelson Dialogues: Jeyamohan Screenplay: Mani Ratnam, Jeyamohan & Kumaravel Executive Producer: Siva Ananth Produced By: Mani Ratnam & Subaskaran Directed By: Mani Ratnam

The post பொன்னியின் செல்வன்-1 – டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
“மணிரத்னத்தால் மட்டுமே முடியும்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு https://touringtalkies.co/only-mani-ratnam-can-do-it-actor-karthis-praise/ Mon, 01 Aug 2022 06:22:09 +0000 https://touringtalkies.co/?p=23519 மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் -1’ இந்தப் படத்தில் இடம் பெற்றும் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடல் இன்று மாலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியானது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நடிகர் கார்த்தி பேசும்போது, “உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை […]

The post “மணிரத்னத்தால் மட்டுமே முடியும்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு appeared first on Touring Talkies.

]]>
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் -1’

இந்தப் படத்தில் இடம் பெற்றும் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடல் இன்று மாலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியானது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

நடிகர் கார்த்தி பேசும்போது, “உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம்.

ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது.

இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார்தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம்.ஜெயராம் சாருடன் பணியாற்றுவது பாக்கியம். “அவர் மட்டும்தான் நடிகன். நாம் வெறும் ‘ந’ மட்டும்தான்” என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோம். அந்தளவுக்கு திறமையான நடிகர் அவர்.

ஆழ்வார்க்கடியார் நம்பி 5-1/2 அடி உயரம். ஆனால், ஜெயராம் சார் 6-1/2 அடி. 5-1/2 அடியாக மாறுவதற்கு ஒரு விஷயம் செய்திருக்கிறார். அந்த ரகசியத்தை நான் இப்போது கூற மாட்டேன். ஆனால், அது கற்பனையிலும் நினைக்க முடியாதது. அவருடன் நாங்கள் நடித்தது எங்களுக்குக் கிடைத்த ஆசிர்வாதம்தான்.

நதிகளால்தான் நாகரிகம் பிறந்தது. நாம் பரிணாம வளர்ச்சியடைந்ததும் நதியில்தான். அந்தக் காலத்தில் பொன்னி நதி’ என்று அழைக்கப்பட்டது. இன்று காவிரி’ என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நதிக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும் என்று கூறுவார்கள்.

ஒரு நதி இறுக்கமாகவும், வேகமாகவும் இருக்கும். இன்னொன்று மேலே மெதுவாக செல்லும். ஆனால் கீழே வீரியம் அதிகமாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நதிக்கும் ஒரு குணங்கள் இருக்கின்றது. நதிகள் கவிஞர்களை ஊக்குவித்தும், நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு உந்து சக்தியாகவும் இருந்திருக்கின்றது.

பொதுவாக இந்தப் படத்தை எவ்வளவு போராடினாலும் எடுத்து முடிக்க முடியாது என்ற பல பேர் கூறினார்கள். நாங்கள் படத்தை ஆரம்பித்த பிறகு, கோவிட் வந்தது.

ஆனால், ஒரு நதிக்கு கடல் எங்கு இருக்கிறது என்று எப்படி தெரியுமோ, அதுபோல மணி சாருக்கு இந்த படத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது தெரியும் என்கிற நம்பிக்கை இருந்தது. நாங்கள் எல்லோரும் மணி சாருடன் இருந்து பணியாற்றினோம். 120 நாட்களிலேயே பொன்னியின் செல்வன்–1’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்–2’ இரண்டையும் முடித்துவிட்டார்.

120 நாட்களில் 2 படங்களை எடுத்து முடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. யாரும் நம்ப மாட்டார்கள். ஜெயராம் சார் கூறியது போல விடியற்காலை 2.30 மணிக்கு மேக்கப் அப் போடுவதற்கு தயாராக இருப்போம். ஆனால், அதற்கு முன் எங்களுக்கு மேக்கப் போடுவதற்கு 30 பேர் தயாராக இருப்பார்கள். யாரும் அதிகளவில் தூங்கியதில்லை.

புத்தகம் படித்துவிட்டு அதை நினைத்துக் கொண்டு படப்பிடிப்பிற்குச் சென்றால், அதைவிட அழகாக மணி சார் அதை உருவாக்கி வைத்திருப்பார். இப்படத்தில் பணியாற்றியது கனவு போல இருந்தது.

இது போன்று ஒரு படத்தை எடுப்பதற்கு புதிதாக ஒரு மனிதன் பிறந்து 30 வருடங்கள் வளர்ந்து வர வேண்டும். இதுபோன்ற படத்தை எடுக்க வேண்டும் என்று கற்பனை செய்வதற்கே 10 வருடங்கள் ஆகும். ஆனால், மணி சாரால் மட்டுமே அதை செய்ய முடியும்.

பாடல்களுக்கு இளங்கோ கிருஷ்ணா என்ற புதியவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பாடல் வரிகளைக் கேட்கும்போது சோழ நாட்டிற்குள் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. ஏ.ஆர்.ரகுமான் சார் இப்பாடலைப் பாடியிருக்கிறார்.

பாடல் மிக சிறப்பாக உள்ளது. முற்றிலும் மாயமாக உள்ளது. நாங்கள் எடுத்ததைவிட இப்போது பார்க்கும்போது சிறப்பாக உள்ளது. அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் இசைதான் காரணம். இப்போது நீங்கள் கூச்சலிடும்போதும் மெய்சிலிர்க்கிறது.

இவ்வளவு பெரிய படத்தை எடுத்து சாதித்திருக்கிறோம் என்றால் அதற்கு லைகா புரடக்ஷன்ஸ் சுபாஸ்கரனுக்குப் பெரிய நன்றி. சுபாஸ்கரன் சார் ஒரு சுவாரசியமான மனிதர். தமிழ் சினிமாவை வேறொரு இடத்திற்கு கொண்டு செல்ல எல்லோரும் முயற்சி செய்வார்கள். ஆனால், இவர் பணத்தையும் சேர்த்து செலவழிப்பார். மிகப் பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் இது. மலேசியாவில் நடந்த ஒரு விழாவில் முதல்முறையாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இரவு 10 மணிக்கு நாங்கள் விமானம் ஏற வேண்டும் என்று கேட்டபோது, மலேசிய விமான நிலையத்தில் வெறும் அரைமணி நேரத்தில் தொலைபேசி வாயிலாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். எங்களுக்காக 15 நிமிடம் விமானம் தாமதம் ஆகும் அளவிற்கு புதிய விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். சுபாஷ்கரன் சார் மிகவும் அன்பான மனிதரும்கூட.

அந்த அன்பு சினிமா மீது மட்டுமல்லாமல் அவருடன் பழகும் அத்தனை பேரிடமும் அந்த அன்பை வெளிப்படுத்துவார். இந்த படத்தை பேரார்வத்துடன் தயாரித்தார். இப்படத்தை அவருடன் அமர்ந்து பார்க்கவேண்டுமென ஆசைப்படுகிறேன். இந்தப் படம் அவருடைய கனவு. மேலும், பல விஷயங்கள் பேசவேண்டும். ட்ரைலர் வெளியீட்டின் போது நான் அதை பேசுகிறேன். இவ்வளவு ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் இருப்பது மிக சிறந்த அனுபவமாக உள்ளது…” என்றார்.

The post “மணிரத்னத்தால் மட்டுமே முடியும்” – நடிகர் கார்த்தியின் பாராட்டு appeared first on Touring Talkies.

]]>