Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பூரி ஜெகன்னாத் – Touring Talkies https://touringtalkies.co Sun, 03 Jul 2022 08:04:17 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பூரி ஜெகன்னாத் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா https://touringtalkies.co/vijay-devarakonda-make-anue-pose-for-liger-movie/ Sun, 03 Jul 2022 08:03:40 +0000 https://touringtalkies.co/?p=22993 விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படமான ‘LIGER’(Saala Crossbreed) படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டலான போஸ்டர் நேற்றைக்கு வெளியாகியுள்ளது..! Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions ஆகிய நிறுவனங்கள் இனைந்து இந்த ‘லைகர்’ படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், […]

The post ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.

]]>
விஜய் தேவரகொண்டாவின் புதிய திரைப்படமான LIGER’(Saala Crossbreed) படத்திலிருந்து  ஒரு அசத்தலான, மிரட்டலான போஸ்டர் நேற்றைக்கு வெளியாகியுள்ளது..!

Puri connects  மற்றும்  பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions ஆகிய நிறுவனங்கள் இனைந்து இந்த லைகர்’ படத்தை மிகப் பெரும் பொருட்செலவில் தயாரிக்கின்றனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி கவுர், இயக்குநர் கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர்.

படத்தின் நாயகனாக விஜய் தேவரகொண்டாவும், இவருக்கு ஜோடியாக நடிகை அனன்யா பாண்டேவும் நடிக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ்ரீனு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவினை விஷ்ணு சர்மா செய்கிறார். தாய்லாந்தை சேர்ந்த ஸ்டண்ட் கலைஞரான Kecha சண்டை காட்சிகளை வடிவமைத்துள்ளார். கலை இயக்கம் – ஜானி சையிக் பாட்ஷா, பட தொகுப்பு- ஜுனைத் சித்திக், எழுத்து, இயக்கம் – பூரி ஜெகன்நாத்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் சினிமா அனுபவத்தை அளிக்கும்விதமாக, ரத்தம், வியர்வை, இதயம் மற்றும் ஆன்மாவை உருக்கி,  இந்த மாஸ் ஆக்‌ஷன் எண்டெர்டெயினர் உருவாக்கப்பட்டுள்ளது.

துணிச்சலான கதை சொல்லலுக்காக இந்தப் படம் நீண்ட காலமாக ரசிகர்கள் நினைவில் இருக்கும். படத்தில் MMA ஃபைட்டராக நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டா உண்மையில் தன்னுடைய மிகப் பெரிய உழைப்பை தந்துள்ளார்.

உலகம் போற்றும் லெஜண்ட்டான மைக் டைசன் இத்திரைப்படத்தில் ஒரு வலிமையான பாத்திரத்தில் நடித்துள்ளார். சர்வதேச அடையாளமாக விளங்கும் மைக்  டைசனின் பிறந்த நாள் சிறப்பு வீடியோவில், அவரது பணிவான குணமும் மற்றும் அவர் படக் குழுவுடன்  நெருக்கமாக இருந்தவிதமும் பலரின் இதயங்களை வென்றது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இந்த லைகர்’ படம் கருதப்படுகிறது. மேலும், படத்தின் ஒவ்வொரு அறிவிப்பிலும் படக் குழுவினரின் எதிர்பார்ப்புகள் மேலும், மேலும் அதிகமாக்கி கொண்டே போகிறது.

நேற்றைக்கு வெளியான விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரத்தைக் குறிக்கும் சாலா கிராஸ்பிரீட் Saala Cross breed போஸ்டர் மிரட்டலாகவும் அசத்தலான தாக்கத்தையும் தருகிறது .

விஜய் தேவரகொண்டாவின் அனைத்து திறமைகளைும் ஒட்டு மொத்தமாக வெளிக்காட்டும்படி, தயாரிப்பாளர்கள் இந்தப் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், போஸ்டரில் விஜய் தேவரகொண்டா கிட்டத்தட்ட நிர்வாணமான தனது உடலமைப்பைக் காட்டியுள்ளார். இப்படி போஸ் கொடுக்க ஒருவருக்கு தைரியம் வேண்டும்தான்.

விஜய் தேவரகொண்டா மிகவும் துணிச்சலானவர். தான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், தனது படங்களுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை இந்தச் செயலின் மூலம் அவர் காட்டியுள்ளார்.

இந்தப் படக் குழு சமீபத்தில் மும்பையில் ஒரு பாடலை பதிவு செய்தது. படக் குழுவினர் படத்திற்கான விளம்பரங்களைத் விரைவில் தொடங்கவுள்ளனர். அடுத்தடுத்து தொடர் அப்டேட்களுடன் வர தயாராக இருக்கின்றனர்.

இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் பன் மொழி இந்திய திரைப்படமான இந்த லைகர்’ படம் வரும் ஆகஸ்ட் 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

The post ‘லைகர்’ படத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்த விஜய் தேவரகொண்டா appeared first on Touring Talkies.

]]>
விஜய் தேவரகொண்டா-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜே.ஜி.எம்.’ திரைப்படம்..! https://touringtalkies.co/jgm-movie-preview-news/ Sun, 05 Jun 2022 11:53:47 +0000 https://touringtalkies.co/?p=22451 இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவருடைய சொந்த பட நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஜே.ஜி.எம்.’ தயாரிப்பில் சார்மி கவுர், வம்சி பைடிபள்ளி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதன் முறையாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார்.   பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுது போக்கு திரைப்படமாக உருவாகும் இந்த ‘ஜே.ஜி.எம்.’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் […]

The post விஜய் தேவரகொண்டா-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜே.ஜி.எம்.’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பூரி ஜெகன்நாத் அவருடைய சொந்த பட நிறுவனமான பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ஜே.ஜி.எம்.’ தயாரிப்பில் சார்மி கவுர், வம்சி பைடிபள்ளி ஆகியோரும் இணைந்திருக்கிறார்கள்.

இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் முதன் முறையாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார்.  

பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்திய அளவிலான பொழுது போக்கு திரைப்படமாக உருவாகும் இந்த ‘ஜே.ஜி.எம்.’ படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் & இயக்கம் – பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர்கள் –  சார்மி கவுர் மற்றும் வம்சி பைடிபள்ளி, தயாரிப்பு நிறுவனம் – பூரி கனெக்ட்ஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ், பத்திரிகை தொடர்பு – யுவராஜ்.

இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஆக்சன் டிராமா ஜானரில் தயாராகிறது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்ட அட்டவணையுடன் தொடங்குகிறது. இதில் நடிகை பூஜா ஹெக்டே அதிரடி சண்டைக் காட்சிகளுடன் கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘ஜே.ஜி.எம்.’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கி பல சர்வதேச நாடுகளில் தொடர்கிறது. இதற்காக தயாரிப்பாளர்கள் பிரத்யேக காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் , நடிகர் விஜய் தேவரகொண்டாவை இதுவரை திரையில் கண்டிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார். அதே தருணத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திரையுலக பயணத்தில் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு ‘ஜே.ஜி.எம்.’ படத்தில் நடிக்கவிருக்கிறார்.


இத்திரைப்படம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3-ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

The post விஜய் தேவரகொண்டா-பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஜே.ஜி.எம்.’ திரைப்படம்..! appeared first on Touring Talkies.

]]>
குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்..! https://touringtalkies.co/boxing-champion-mike-tyson-introduce-in-telug-movie-liger/ Tue, 28 Sep 2021 06:26:12 +0000 https://touringtalkies.co/?p=18318 விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோரின் கூட்டணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘லிகர்’. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க,  ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ஶ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது […]

The post குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்..! appeared first on Touring Talkies.

]]>
விஜய் தேவரகொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர் ஆகியோரின் கூட்டணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘லிகர்’.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்க,  ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விஷ்ணு ரெட்டி, ஆலி மகரந்த் தேஷ் பாண்டே, கெட்டப் ்ரீனு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பூரி ஜெகன்நாத் இயக்குகிறார்.

இந்த படத்தில் உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார். இந்திய படம் ஒன்றில் இவர் நடிப்பது இதுவே முதல்முறையாகும்.

படத்தில் இவர் அயர்ன் மைக்’ என்ற வேடத்தில் நடிக்கிறார். தீவிரமான ஆக்ஷன் கதையாக உருவாகும் இப்படத்தில் இவரது வரவு இன்னும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என் பன்மொழி படமாக இந்த படம் உருவாகிறது.

இது குறித்து விஜய் தேவரகொண்டா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “நாங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்ற துவங்கியுள்ளோம். இந்தியத் திரையுலகில் முதன்முறையாக, லிகர்’ படத்தில் இணையும் முக்கிய பிரபலம் இந்தப் பிரபஞ்சத்தின் சக்தி மிக்க மனிதர், குத்து சண்டையின் கடவுள்.. லெஜண்ட்.. பீஸ்ட்.. காலத்தால் அழிக்கவியலா புகழ் கொண்ட நாயகன் மைக் டைசனை இந்திய திரையுலகிற்கு வரவேற்கிறோம்.

இன்னும் சில நாட்களுக்கு உங்கள் ஆர்வத்தை கட்டுபடுத்தி வைத்து கொள்ளுங்கள். இந்த படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி கொண்டிருக்கிறது. கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்…” என பதிவிட்டுள்ளார்.

The post குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார்..! appeared first on Touring Talkies.

]]>