Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
பாம்பாட்டம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 28 Nov 2022 15:24:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png பாம்பாட்டம் திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..! https://touringtalkies.co/the-actress-fought-with-the-director-on-the-festival-stage/ Mon, 28 Nov 2022 15:24:18 +0000 https://touringtalkies.co/?p=27771 இயக்குநர் வி.சி.வடிவுடையன் இயக்கத்தில் நடிகர் ஜீவன், நடிகை மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாம்பாட்டம்’. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது “தன்னை மதிக்காமல் கதாநாயகி என்று அங்கீகாரம் கொடுக்கவில்லை” என்று நடிகை சாய் பிரியா மேடையில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது. சாய் பிரியா மேடையில் பேசும்போது இயக்குநரைப் பார்த்து, “இந்தப் படத்தில் என்னை ஹீரோயின்னு சொல்லித்தான ஸார் என்னை கமிட் செய்தீர்கள். […]

The post விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வி.சி.வடிவுடையன் இயக்கத்தில் நடிகர் ஜீவன், நடிகை மல்லிகா ஷெராவத், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாம்பாட்டம்’.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது “தன்னை மதிக்காமல் கதாநாயகி என்று அங்கீகாரம் கொடுக்கவில்லை” என்று நடிகை சாய் பிரியா மேடையில் பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

சாய் பிரியா மேடையில் பேசும்போது இயக்குநரைப் பார்த்து, “இந்தப் படத்தில் என்னை ஹீரோயின்னு சொல்லித்தான ஸார் என்னை கமிட் செய்தீர்கள். மல்லிகா மேடம் அரசியா நடிச்சாங்க. நான் இளவரசியா நடிச்சிருக்கேன். ஆனாலும் என்னை நீங்க ஏன் கார்னர் செய்றீங்கன்னு எனக்குத் தெரியவில்லை. பெயர் போடும் இடத்தில் என் பெயர் காணாமல் போயுள்ளது. இதை நான் யாரிடம் போய் சொல்றது..?” என்று பேசினார்.

இதன் பின்னர் நடிகை சாய் பிரியா செய்தியாளர்களிடம் பேசியபோது, “நான் இந்தப் படத்தில் இளவரசியா நடிச்சிருக்கேன். ஆனாலும் என் பெயரை பிரிண்ட் செய்ய மறந்துட்டேன்னு சொல்றாங்க.. இதைத்தான் நான் இயக்குநரிடம் கேள்வியாகக் கேட்டேன்…” என்றார்.

The post விழா மேடையில் இயக்குநருடன் சண்டையிட்ட நடிகை..! appeared first on Touring Talkies.

]]>
“100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது” – ‘பாம்பாட்டம்’ விழாவில் பொங்கிய கே.ராஜன் https://touringtalkies.co/a-movie-wont-be-good-with-an-actor-who-gets-100-crore-salary-k-rajan-who-was-furious-at-the-paambattam-festival/ Mon, 28 Nov 2022 14:04:44 +0000 https://touringtalkies.co/?p=27754 ‘ஓரம்போ’, ‘வாத்தியார்’,  ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள  ‘பாம்பாட்டம்.’ வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, ‘பருத்தி வீரன்’ சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா […]

The post “100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது” – ‘பாம்பாட்டம்’ விழாவில் பொங்கிய கே.ராஜன் appeared first on Touring Talkies.

]]>
‘ஓரம்போ’, ‘வாத்தியார்’,  ‘6.2’ போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள  ‘பாம்பாட்டம்.’

வி.சி.வடிவுடையான் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஜீவன், கதாநாயகிகளாக மல்லிகா ஷெராவத், சாய் ப்ரியா, ரித்திகா சென் மற்றும் சுமன், சலீல் அங்கோலா, பருத்தி வீரன்’ சரவணன், ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  இனியன் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் ஆர்யா டிரைலரை வெளியிட்டார்.

விழாவில் இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசியபோது, “இந்த படத்தின் இயக்குநர் வடிவுடையானுடன் ‘பொட்டு’ படத்திலிருந்து தொடர்பு ஏற்பட்டது. இந்தப் படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பெரிய அனிமேஷன் பாம்பு வருகிறது. பாம்பு வரும் காட்சிக்கான பின்னணி இசையை அமைத்தபோது அந்த சத்தத்தை கேட்டுவிட்டு என ஸ்டுடியோவுக்குள் நிஜமான பாம்பே வந்துவிட்டது. நடிகர் ஜீவன் அடுத்த கட்டத்துக்கு போகிற மாதிரியான நடிப்பை கொடுத்திருக்கிறார். எனக்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரவணன் பேசியபோது, “பாம்பாட்டம்’ படம் பார்த்துட்டு நான் மிரண்டுவிட்டேன். பெரிய டைரக்டர் ஆகவேண்டும் என்ற வடிவுடயானின் கனவு, இந்தப்படத்தில் நனவாகும். பான் இந்தியா படமான இதில் நானும் ஒருவனாக நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் பேசியபோது, “இந்தப் படத்தின் டிரைலரும், பின்னணி இசையும் நல்லா வந்திருக்கு. பழனிவேல் சார் தயாரிப்பில் அடுத்ததாக நான், ‘ரஜினி’ என்ற படத்தை இயக்கி வருகிறேன். பாம்பை வைத்து எடுத்தப் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அந்த வரிசையில் இந்தப் படமும் பெரிய வெற்றியை அடையும்” என்றார்.

படத்தின் நாயகன் ஜீவன் பேசியபோது, “படம் வருவதற்கு முன்பே டிரைலர் பேசப்படுகிறது. இந்த கதை புதிய கோணத்தில் இருக்கும். இது நான் நடிக்கும் முதல் பீரியட் படம். இயக்குநர் வடிவுடையானின் உருவத்துக்கும் அவருடைய நடவடிக்கைக்கும் சம்பந்தமே இருக்காது. ’பாம்பாட்டம்’ யாராலும் தீர்மானிக்க முடியாத படமாக வெளிவரும்” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசியபோது, “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பழனிவேல் முன்பின் தெரியாதவர்களுக்குகூட உதவி செய்யும் நல்ல மனசுக்காரர். ”தர்மம் தலை காக்கும்..” என்று புரட்சி தலைவர் பாடியதை போல மனிதன் செய்யும் பாவ அழுக்குகள் போக வேண்டுமென்றால் தர்மம் செய்ய வேண்டும்.

இந்த ‘பாம்பாட்டம்’ படத்தை அற்புதமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குநர் வடிவுடையான் பெரிய அறிவுடையான்; மிகச் சிறந்த ஆற்றல் உடையான்; அந்த வடிவுடை அம்மனின் அருள் உடையான். இப்படிப்பட்ட படங்களை இறைவன் அருள் இல்லாமல் எடுக்க முடியாது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ் திறமைசாலி, எதிர்காலத்தில் நம்பர் ஒன் இசையமைப்பாளராக உயர்வார்.

இயக்குநர்கள்தான் நடிகர்களை உருவாக்குகிறார்கள். இன்றைக்கு பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களை; களிமன்னாக இருந்தவர்களை செதுக்கி நடிகனாக உருவாக்கியது இயக்குநர்கள்தான். நடிகர், நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கு வர வேண்டும். 50 கோடி, 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களால் சினிமா நல்லா இருக்கும் என்று அர்த்தம் இல்லை. தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்தால்தான் சினிமா நல்லா இருக்கும்.” என்றார்.

நிறைவாக இயக்குநர் வி.சி.வடிவுடையான் பேசியபோது, “ஒரு தரமான படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கு எனது நன்றி. இந்த படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறோம்.

நான் கடுமையாக உழைப்பதாக சொல்கிறார்கள். ஒரு இயக்குநர் கடினமாக உழைத்துதான் ஆகவேண்டும். நான் எப்போதும் தயாரிப்பாளர் பக்கம்தான் நிற்பேன். தயாரிப்பாளருடன் இணைந்து நிற்கும்போதுதான் அவருடைய பிரச்சனைகள் தெரியும்.

இந்தப் படத்தின் கதைக்காக மூன்று வருடங்கள் உழைத்தேன். பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பெரிய படமாக ‘பாம்பாட்டம்’ இருக்கும். அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை சுவாரஷ்யமாக இருக்கும்…” என்றார்.

நிகழ்ச்சியில் நடிகைகள் சாய் ப்ரியா, ரித்திகா சென், கூல் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

The post “100 கோடி சம்பளம் வாங்கும் நடிகரால் சினிமா நல்லா இருக்காது” – ‘பாம்பாட்டம்’ விழாவில் பொங்கிய கே.ராஜன் appeared first on Touring Talkies.

]]>
‘பாம்பாட்டம்’ படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் https://touringtalkies.co/a-120-feet-long-giant-snake-in-the-movie-bombottom/ Mon, 28 Nov 2022 13:16:17 +0000 https://touringtalkies.co/?p=27737 “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது. “கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் […]

The post ‘பாம்பாட்டம்’ படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் appeared first on Touring Talkies.

]]>
“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதுபோல படம் வருவதற்கு முன்பே ‘பாம்பாட்டம்’ படத்தின் டிரைலர் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது.
“கதை, களம், காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில் நுட்பம் என ‘பாம்பாட்டம்’ படத்தில் பரவச அனுபவத்திற்கு பஞ்சமிருக்காது” என்று நம்பிக்கை மிளிர பேசும் இயக்குனர் வி.சி.வடிவுடையான், இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். ‘திருட்டு பயலே’, ‘நான் அவனில்லை’ புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக கலக்குகிறார்.

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தமிழ்,தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரமாண்டமாக தயாரித்துள்ள ’பாம்பாட்டம்’ ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ளது. படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம், இந்திய சினிமாவில் இதுவரை பார்க்காத ஆச்சரியம்.

“படத்தில் இன்னும் என்ன சுவாரஷ்யங்கள்?” என்று இயக்குனர் வி.சி.வடிவுடையானிடம் கேட்டோம். “பொதுவா எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் ‘பாம்பாட்டம்’. அந்த சாம்ராஜ்யம் சந்திக்கும் ஏற்ற, இறக்கங்கள்தான் படத்தின் கதை, கி.பி.1000, 1500, 1980 என மூன்று காலகட்டங்களில் கதை டிராவல் ஆகும். இதற்கான செட், உடைகள், அந்தந்த காலக்கட்டத்தை கண்முன் நிறுத்தும் சூழ்நிலை என நிறைய மெனக்கெடல் இருந்தது. மும்பையில் பலகோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படமாக்கினோம். படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். குடும்பமாக வந்து ரசிக்கும் அளவுக்கு படத்தில் சுடச்சுட சுவாரஷ்யங்கள் இருக்கும். போர்க் காட்சிகளுக்காக பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கான குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. மும்பை தவிர,சென்னை, மைசூர் அரண்மனை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்.”என்ற இயக்குநர் படத்தின் டிரைலரை நடிகர் ஆர்யா பார்த்துவிட்டு பாராட்டியதாக சொன்னார்.

இப்படத்தில் மேலும் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இனியன் J ஹாரீஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – C.E.சண்முகம், ஸ்டன்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, பத்திரிகை தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு – பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு – V.பழனிவேல்.

விரைவில் இந்த பாம்பட்டத்தை திரையரங்கில் காணலாம்.

The post ‘பாம்பாட்டம்’ படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் appeared first on Touring Talkies.

]]>