Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நீலம் புரொடெக்சன்ஸ் – Touring Talkies https://touringtalkies.co Sun, 15 May 2022 07:44:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நீலம் புரொடெக்சன்ஸ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 பா.ரஞ்சித்தின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியாகிறது https://touringtalkies.co/pa-ranjith-new-movies-first-look-poster-will-release-on-cannes-film-festival-2022/ Sun, 15 May 2022 07:44:05 +0000 https://touringtalkies.co/?p=22067 கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்படுகிறது. கலைத் துறையில் குறிப்பாக சினிமாத் துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேச வேண்டிய, காட்சிப்படுத்த வேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம் பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக ‘நீலம் புரொடக்சன்ஸ்’ இயக்குநர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது. ‘பரியேறும் பெருமாள்’ படத்திலிருந்து துவங்கப்பட்ட […]

The post பா.ரஞ்சித்தின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்படுகிறது.

கலைத் துறையில் குறிப்பாக சினிமாத் துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேச வேண்டிய, காட்சிப்படுத்த வேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித வாழ்வின் பக்கங்களை படம் பிடித்து காட்டும் ஒரு நிறுவனமாக நீலம் புரொடக்சன்ஸ்’ இயக்குர் பா.இரஞ்சித்தால் ஆரம்பிக்கப்பட்டது.

‘பரியேறும் பெருமாள்’ படத்திலிருந்து துவங்கப்பட்ட இந்தப் பயணம், ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரை வால்’,  ‘சார்பட்டா பரம்பரை’ என தனித்துவமிக்க படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறது.

அடுத்து சேத்துமான்’, ‘ஜெ.பேபி’, ‘பொம்மை நாயகி’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ என அடுத்தடுத்த படங்கள் வெளியீட்டிற்கு தயாராக இருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தமிழ் சினிமாவைத் தாண்டி தனது பயணத்தை துவங்க தனது சிறகை இன்னும் விரித்து பறக்க  நீலம் ஸ்டுடியோஸ் துவங்கியிருக்கிறது. 

நீலம் ஸ்டுடியோவோடு, கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து  உருவாகும் முதல் தயாரிப்பாக  இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம்’ என்னும் திரைப்படம் & தொலைக்காட்சி தொடர் உருவாகிறது. இதனை பா.இரஞ்சித் எழுதி இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  கேன்ஸ் பட விழாவில் வெளியிடப்படுகிறது. இந்த விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் கலந்து கொள்கிறார்.

இத்திரைப்படம் மற்றும் தொலைக் காட்சித் தொடரை இயக்குநர் பா.இரஞ்சித், அபயானந்த் சிங், பியுஷ் சிங், சவுரப் குப்தா, மற்றும் அதிதி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். அஸ்வினி சவுத்ரி மற்றும் பரூல் சிங் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படத்தில் பணிபுரியும் நடிகர், நடிகையர் மற்றும் தொழிற் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

The post பா.ரஞ்சித்தின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவில் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
பா.இரஞ்சித்தின் இணை இயக்குநர் இயக்கும் நகைச்சுவை கலந்த திரைப்படம் https://touringtalkies.co/pa-ranjith-assistant-dinakaran-sivalingam-directs-a-new-movie/ Sat, 18 Sep 2021 07:40:35 +0000 https://touringtalkies.co/?p=18052 இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக ‘கபாலி’, ‘காலா’ போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம். இவர் தற்போது சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகனும் ‘பலூன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான T.N.அருண் பாலாஜி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்தப் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய […]

The post பா.இரஞ்சித்தின் இணை இயக்குநர் இயக்கும் நகைச்சுவை கலந்த திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் இணை இயக்குநராக ‘கபாலி’, ‘காலா’ போன்ற படங்களில் பணியாற்றியவர் தினகரன் சிவலிங்கம்.

இவர் தற்போது சமகால தமிழக சூழலில் இருக்கும் முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு நகைச்சுவையாகவும், உணர்வுப்பூர்வமாகவும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தை பா.இரஞ்சித், மற்றும் மெட்ராஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறியப்பட்ட போஸ்டர் நந்தகுமார் அவர்களின் மகனும் பலூன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளருமான T.N.அருண் பாலாஜி இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இந்தப் படத்தில் முன்ணணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், சமீபத்தில் வெளிவந்த சார்பட்டா பரம்பரை’ பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்தது.

அந்த வகையில் முழுக்க நகைச்சுவையையும்,உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்த படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு துவங்கியுள்ளது.

The post பா.இரஞ்சித்தின் இணை இயக்குநர் இயக்கும் நகைச்சுவை கலந்த திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் துருவ் விக்ரம்..! https://touringtalkies.co/dhuruv-vikram-will-act-in-mari-selvaraj-direction/ Fri, 29 Jan 2021 09:33:58 +0000 https://touringtalkies.co/?p=12560 இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தன. இந்த வெற்றியைத் தொடர்ந்து […]

The post பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் துருவ் விக்ரம்..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் படங்களையும் வழங்கியுள்ளார்.

அந்த வகையில் அவரது தயாரிப்பில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்கள் விமர்சனம் மற்றும் வணிக ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தன.

இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து புதிதாக 5 திரைப்படங்களை தயாரிக்க உள்ளதாக, கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அறிவித்திருந்தார்.

இதில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் இயக்குநரான மாரி செல்வராஜ், ‘மேற்கு தொடர்ச்சி மலை’ திரைப்படத்தின் இயக்குநரான லெனின் பாரதி, மற்றும் அறிமுக இயக்குநர்களான சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகிய ஐந்து இயக்குநர்களும் புதிதாக தயாரிக்க உள்ள அந்த 5 திரைப்படங்களையும் இயக்க உள்ளதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்திருந்தார்.  

இதில் இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகும் ’ரைட்டர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு, நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீலம் புரொடக்‌சன்ஸ் நிறுவனம், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் மற்றும் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

The post பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் துருவ் விக்ரம்..! appeared first on Touring Talkies.

]]>
கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/kuthirai-vaal-movie-teaser/ Fri, 23 Oct 2020 10:46:51 +0000 https://touringtalkies.co/?p=9161 The post கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>

The post கலையரசன் நடிக்கும் ‘குதிரைவால்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>