Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நிதி அகர்வால் – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Nov 2022 18:23:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நிதி அகர்வால் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review-2/ Tue, 22 Nov 2022 18:21:45 +0000 https://touringtalkies.co/?p=27455 இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார். இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை […]

The post கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் நாயகன் உதயநிதி ஸ்டாலினே தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க நிதி  அகர்வால் நாயகியாக நடித்துள்ளார். மேலும் கலையரசன், ஆரவ், அங்கனா ராய், அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அரோல் கரோலி பாடல்களுக்கு இசையமைத்திருக்க, ஶ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்திருக்கிறார். K.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்குநர் மகிழ் திருமேனி எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் ரகசியங்களை அம்பலப்படுத்தும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படத்தின் கதை.

டிரக் தயாரிப்பு நிறுவனமான ‘வஜ்ரா’ இந்தியாவிலேயே மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமாகும். அந்நிறுவனம் தற்போது புதிய மாடல் டிரக் ஒன்றைத் தயாரித்துள்ளதாக சொல்லி அந்த வண்டியை அறிமுகப்படுத்துகிறது.

இப்போதுவரையிலும் மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான டிரெக்குகளைவிடவும் இந்தப் புதிய டிரெக் அதிக மைலேஜ் பிடிக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த டிரெக்கில் இருந்து வெளியாகும் புகை, சுற்றுச் சூழல் துறை அனுமதித்துள்ள அளவைக் காட்டியும் கூடுதலாக இருப்பதைத் தந்திரமாக மறைக்கிறது வஜ்ரா நிறுவனம். ஆனால் இந்த ரகசியத்தை சிலர் வெளியில் அம்பலப்படுத்தி விடுகின்றனர். இதனால் ஷேர் மார்க்கெட்டில் இந்நிறுவனத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்திக்கிறது.

3 பேருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் கசிந்தது எப்படி என்பதைக் கண்டறிய வஜ்ரா நிறுவனத்தின் முதலாளி, மிகப் பெரிய மாபியா கும்பலின் தலைவான ஆரவ்வை வேலைக்கு அமர்த்துகிறார். ஆரவ்வும் இந்த ரகசியம் தெரிந்தவர்களை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்து யாரிடமிருந்து விஷயம் லீக்கானது என்பது பற்றி விசாரிக்கத் துவங்குகிறார்.

இந்த விசாரணை என்ன ஆனது..? எதற்காக இந்த வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்கள் வெளியில் கசிந்தன..? உண்மையில் இதன் பின்னணியில் இருந்தது யார்..? என்பதெல்லாம்தான் இந்தக் கலகத் தலைவன்’ படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை..!

படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களிடமும் சிறப்பான நடிப்பினை வரவழைத்துள்ளார், இயக்குநர் மகிழ் திருமேனி. உதயநிதி ஸ்டாலின் இதுவரையிலும் தான் நடித்த படங்களில் இருந்து வித்தியாசமான ஒரு நடிப்பினை இந்தப் படத்தில் காண்பித்திருக்கிறார். அலட்டிக் கொள்ளாத தன்மையுடன், அமைதியின் திருவுருமாய் காட்சியளித்தபடியே.. கார்பரேட் நிறுவனங்களை தலைகீழாகப் புரட்டிப் போடும் தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை மென்மையாகக் காண்பித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்திருக்கிறார்.

இப்படத்தில் பெரிதும் ஆச்சர்யப்படுத்துவது நடிகர் ஆரவ்வின் வில்லத்தனமான நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முக பாவங்களும், உடல் மொழியும் தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு திறமையான வில்லன் என்றே காட்டுகிறது.

நாயகி நிதி அகர்வால் ச்சும்மா ஸ்கிரீனில் வந்து நின்றாலே அது கவிதையாகும். அந்த அளவுக்கு இயற்கையான அழகைத் தன் வசப்படுத்தியுள்ளார். காதல் காட்சிகளிலும், எமோஷ்னல் காட்சிகளிலும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். இவருக்கு இருக்கும் அழகுக்கு இந்நேரம் தொடர்ந்து 5 படங்களிலாவது நடித்திருக்க வேண்டும். நடிக்காதது ஏன் என்று தெரியவில்லை.

கலையரசனுக்கு நடிப்பினைக் காட்ட பெரிய ஸ்கோப் இல்லையென்றாலும் கதையின் சஸ்பென்ஸையும், படத்தின் தன்மையையும் புரிந்து கொள்ள கலையின் கர்ப்பிணி மனைவியாக நடித்தவர் பெரிதும் உதவியிருக்கிறார். மேலும் அனுபமா குமார், ஜீவா ரவி, விக்னேஷ் காந்த், மற்றும் அங்கனா ராயின் வில்லித்தன நடிப்பு என்று பலரும் இந்தப் படத்தில் உணர்ந்து நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, படத் தொகுப்பு உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ஒளிப்பதிவு முதல் ஷாட்டில் இருந்து கடைசிவரையிலும் ஒன்று போலவே இருப்பது இந்தப் படத்தின் ஸ்பெஷலாட்டி என்றே சொல்லலாம். திருச்சி ரெயில் நிலையத்தில் நடைபெறும் காட்சிகளை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் கேமராமேன். அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸில் இருக்கும் சஸ்பென்ஸ், திரில்லர் பீலிங்கை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதேபோல் கிளைமாக்ஸ் சண்டை காட்சியையும் ஒரு பேய்ப் படத்திற்குண்டான திகில் உணர்வோடு படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பின்னணி இசையில் ஒரு ராஜாங்கமே அமைத்திருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. பதற்றத்தை ஏற்படுத்தும்வகையிலும் படம் நெடுகிலும் ரசிகனை ஒரு டென்ஷன் மோடிலேயே வைத்திருக்கிறார் இசையமைப்பாளர். அடிப்படையில் கெமிக்கல் எஞ்சினியரான நாயகன் உதயநிதி, க்ளைமாக்ஸ் ஃபைட்டில் தனது புத்தி சாதூர்யத்தால் கெமிக்கல் ரியாக்சன்களை வைத்து வில்லன் கோஷ்டியை வீழ்த்துவது எதிர்பாராதது. அதே சமயம் ரசனைக்குரியது. அனைத்து சண்டைக் காட்சிகளையுமே சிறப்பாக வடிவமைத்த சண்டைப் பயிற்சியாளருக்கு  நமது பாராட்டுக்கள்.

எத்தகைய கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான விதத்தில் திரைக்கதையாக்கினால் படம் மாஸாகிவிடும். இந்தத் திரைக்கதையைக் கட்டும் வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாகவே தெரியும் போலிருக்கிறது. இந்தப் படத்திலும் திரைக்கதையிலும், இயக்கத்திலும் ஜெயித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் மெதுவாக நகரத் துவங்கும் படம், பின்னர் நேரம் செல்லச் செல்ல வேகமெடுத்து ரன் பாஸ்ட்டில் செல்கிறது. மூலக் கதையை விட்டு சிறிதும் விலகிச் செல்லாத நேர்த்தியான திரைக்கதை, படத்திற்கு மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவதால் நிகழும் பொருளாதார சீர்கேடுகளை இந்தப் படத்தில் வெளிச்சம்போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர். அதோடு அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் டொனேஷன். அதன் மூலம் அரசை  அவர்கள் எப்படி கட்டுப்படுத்துகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லியிருக்கிறார்.

படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் முடிந்தவரையிலும் லாஜிக் பார்க்க முடியாமல் வைத்திருப்பதால் காட்சிகளை ரசிக்க முடிந்திருக்கிறது. ஆனாலும் தமிழ்நாட்டில் போலீஸே இல்லாத சூழலை காண்பித்திருப்பது படம் முடிந்த பின்புதான் நமக்கே உரைக்கிறது. மிகக் குறைவான குறைகள் மட்டுமே படத்தில் இருப்பதால், நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

RATING : 4.5 / 5

The post கலகத் தலைவன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kalaga-thalaivan-movie-review/ Sat, 19 Nov 2022 01:05:35 +0000 https://touringtalkies.co/?p=27265 கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம். ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?.. வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது. இன்னொரு புறம் […]

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
கார்ப்பரேட் ரகசியங்களை வெளியில் விற்கும் ஒரு கலகக்காரனின் கதையே இந்தக் ‘கலகத் தலைவன்’ படம்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிப்பில் மகிழ்திருமேனி திரைக்கதை இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த ‘கலகத் தலைவன்’ படம் எப்படி இருக்கிறது?..

வஜ்ரா என்றொரு லாரி உற்பத்தி செய்யும் கம்பெனியின் சென்னை ப்ராஞ்சில் வேலை செய்கிறார் உதய்நிதி. மற்றவர்களுக்கு உதவும் சுபாவம் கொண்ட உதயநிதிக்கு, நிதி அகர்வாலின் நட்பு கிடைக்கிறது. அந்த நட்பு காதலாக மாறும் தருணம்வரை செல்கிறது.

இன்னொரு புறம் வஜ்ரா கம்பெனியின் பல சீக்ரெட் விசயங்களை சிலர் வெளியில் போட்டி கம்பெனிக்கு விற்கிறார்கள் என்ற விசயம் வஜ்ரா மேனேஜ்மெண்ட்க்கு தெரிய வருகிறது. அவர்கள் மெகா வில்லன் ஆரவ்விடம் கம்பெனி ரகசியங்களை திருடுபவர்களைப் பிடிக்கச் சொல்கிறார்கள்.

ஆரவ் தனது கொடூரமான விசாரணைகளை நடத்துகிறார். அந்தக் கம்பெனியில் வேலை செய்யும் பலரையும் ரத்தம் தெறிக்க தெறிக்க விசாரிக்கிறார். அவரின் விசாரணை வளையத்திற்குள் கலையரசன் மாட்டுகிறார். அடுத்ததாக அதில் மாட்ட இருப்பவர் உதய்நிதி ஸ்டாலின் என்ற சூழல் வருகிறது. அச்சூழலை உதய்ணா எப்படிச் சமாளித்தார்? வஜ்ரா கம்பெனியின் ரகசியங்கள் யாவை? அதை வெளி கம்பெனிக்கு விற்க வேண்டிய காரணம் என்ன? என பல கேள்விகளுக்குப் படம் பதிலளிக்கிறது

அலட்டிக் கொள்ளாத அமைதியான நடிப்பால் உதயநிதி ஸ்டாலின் ஈர்க்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில்கூட சைலண்ட் காட்டியே ஸ்கோர் செய்கிறார். இப்படத்தில் ஆச்சர்யப்படுத்தியது நடிகர் ஆரவ்வின் நடிப்புதான். வில்லன் அவதாரத்தில் மிரட்டியிருக்கிறார். அவரது முகபாவங்களும் உடல்மொழியும் நல்ல வில்லனுக்கான சமிக்‌ஞயை காட்டுகிறது. வாழ்த்துகள் ராசா. அடுத்ததாக நிதி அகர்வால். காதல் காட்சிகள், எமோஷ்னல் காட்சிகள் இரண்டிலுமே நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். கலையரசனுக்கு பெரிதாக வெளி இல்லாவிட்டாலும் கிடைத்திருக்கும் சிறு வாய்ப்பையும் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்

இப்படத்திற்கு இசை அமைத்து ஒரு ரீ.என்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பாடல்களும் கேட்கும் வகையில் இருக்கிறது. முதலில் ஒரு ரீலுக்கு மட்டும் நிறைய வாசித்துத் தள்ளிவிட்டார். காதெங்கும் ஒரே சவுண்ட்ஸ். ஒளிப்பதிவில் இப்படம் கூடுதல் அழகோடு மிளிர்கிறது. திருச்சி ரெயில்நிலைய காட்சிகளை மிக அழகாக எடுத்திருக்கிறார் கேமராமேன். படத்தில் அந்த ரயில்வே ஸ்டேசன் சீக்வென்ஸ் தீப்பொறி பறக்கும் திக் திக் நிமிடங்கள். அந்த சீக்வென்ஸ் மற்ற எல்லாவற்றையும் விட நன்றாக வொர்க்காகியுள்ளது. எடிட்டர் பின் பாதியில் கொஞ்சம் கத்தரியைப் போட்டிருக்கலாம்

வந்த கதையோ,நொந்த கதையோ எந்த கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியான திரைக்கதையாக்கினால் படம் பக்கா மெட்டிரியல் ஆகிவிடும். அந்தத் திரைக்கதை வித்தை இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நன்றாக கைவந்துள்ளது. காதல் காட்சிகள் மட்டும் படத்தின் வேகத்திற்கு கொஞ்சம் தடை போடுகிறது. அவற்றை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாம்.

ஆனாலும் இந்த ‘கலகத் தலைவன்’ உலகப் லிட்டிக்ஸ் பேசி அழகுத் தலைவனாக மிளிர்கிறான். மிகக் குறைவான குறைகளே படத்தில் இருப்பதால் நிச்சயமாக இந்தப் படம் உங்களை ஏமாற்றாது.

RATING : 4 / 5

The post கலகத் தலைவன்- சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் https://touringtalkies.co/udhayanidhi-said-he-didnt-like-heroines-or-whoever-they-were-shown-director-mizhy-thirumeni-broke-the-secret/ Thu, 10 Nov 2022 17:56:04 +0000 https://touringtalkies.co/?p=26933 இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என்றார் […]

The post “ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உதயநிதியும், நிதி அகர்வாலும் ஜோடியாக நடித்துள்ள படம் ‘கலகத் தலைவன்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ”2019-ம் ஆண்டே இந்த ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்க ஒப்பு கொண்டுவிட்டேன். ஆனால் கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக படத்தை எடுத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி கொண்டே இருக்கிறார்” என்றார் உதயநிதி.

அப்போது இடைமறித்த இயக்குநர் மகிழ் திருமேனி.. “இந்தப் படம் ஆரம்பித்த உடனேயே இரண்டு முறை கொரோனா லாக் டவுன் வந்துவிட்டது. அதன் பின்னர் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றுவிட்டார். அதன் பிறகு எனக்கு இரண்டு முறை கொரோனா வந்தது. மேலும் எந்த ஹீரோயினையும் பிடிக்கவில்லை என்றார் உதயநிதி. அதனால் ஹீரோயினியைும் இன்னொரு பக்கம் தேடிக் கொண்டே இருந்தேன். இது போன்ற காரணங்களால் இந்தப் படம் தள்ளிக் கொண்டு போனது.” என்றார்.

அதன் பின்னர் மீண்டும் உதயநிதி பேசும்போது, இயக்குநர் மகிழ் திருமேனி 90 நாட்கள் படத்தை எடுத்தார் என்றால்.. மாரி செல்வராஜ் 120 நாட்கள் மேலாக ‘மாமன்னன்’ படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். இருவரும் என்னை வச்சி செய்கின்றனர்.

மகிழ் இயக்கிய ‘தடம்’ படத்திலேயே முதலில் நான்தான் நடிக்க இருந்தேன். எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனாலும் ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி நடிக்க விடவில்லை. இங்கு வருவோர் எல்லாரும் அவரைப் பார்த்துதான் வணக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் அவர்தான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயம் செய்கிறார். அந்தப் பாசம்தான் எல்லாருக்கும்…” என்றார் உதயநிதி.

The post “ஹீரோயினா யாரைக் காட்டினாலும் ‘பிடிக்கவில்லை’ என்றார் உதயநிதி” – இயக்குநர் மகிழ் திருமேனி உடைத்த ரகசியம் appeared first on Touring Talkies.

]]>
‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் https://touringtalkies.co/eeswaran-movie-stills/ Wed, 13 Jan 2021 08:11:04 +0000 https://touringtalkies.co/?p=12109 The post ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>

The post ‘ஈஸ்வரன்’ படத்தின் ஸ்டில்ஸ் appeared first on Touring Talkies.

]]>
“பூமி’ படத்தில் என் நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறேன்” – சொல்கிறார் நாயகி நிதி அகர்வால் https://touringtalkies.co/actress-nidhi-agarwal-speech-about-her-acting-in-bhoomi-movie/ Tue, 12 Jan 2021 09:26:54 +0000 https://touringtalkies.co/?p=12070 நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்திருக்கும் ‘பூமி’ திரைப்படத்தில் தனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் நடிகை நிதி அகர்வால். இது குறித்து நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டியில், “வழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக  போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் அத்தனை கவனிக்கும்படியானதாக இருக்காது. ஆனால் நான் நடித்துள்ள இந்த ‘பூமி’ திரைப்படம் அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இப்படத்தில் என் நடிப்பு திறமையை காட்டுமளவிலான ஒரு கதாப்பாத்திரம் […]

The post “பூமி’ படத்தில் என் நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறேன்” – சொல்கிறார் நாயகி நிதி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்திருக்கும் ‘பூமி’ திரைப்படத்தில் தனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் நடிகை நிதி அகர்வால்.

இது குறித்து நடிகை நிதி அகர்வால் அளித்த பேட்டியில், “வழக்கமாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக  போராடும் நாயகனின் கதைகள் மற்றும் நாயகி பாத்திரம் அத்தனை கவனிக்கும்படியானதாக இருக்காது. ஆனால் நான் நடித்துள்ள இந்த பூமி’ திரைப்படம் அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது.

இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் முக்கியத்துவம் கொண்டது. இப்படத்தில் என் நடிப்பு திறமையை காட்டுமளவிலான ஒரு கதாப்பாத்திரம் கிடைத்ததை நான் பெருமையாகவே நினைக்கிறேன்.

ஜெயம் ரவி மிகவும் அன்பானவர். அவருடன் சேர்ந்து நடிக்கும்போது எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். அவரது அர்ப்பணிப்பும், சினிமா மீது அவருக்கு இருக்கும் அபரிமிதமான காதலும்தான் அவருக்கு இத்தனை ரசிகர்களைப் பெற்று தந்துள்ளது.

அவரது 25-வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாகவே கருதுகிறேன். அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்‌ஷ்மன். இது 100 % குடும்பங்கள் கொண்டாடும் படம்…” என்கிறார் நிதி அகர்வால்.  

இந்தப் படம் பொங்கல் திருநாளில் 14 ஜனவரி 2021 அன்று Disney + Hotstar VIP ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

The post “பூமி’ படத்தில் என் நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறேன்” – சொல்கிறார் நாயகி நிதி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
ஈஸ்வரன் படத்தின் டிரெயிலர் https://touringtalkies.co/eeswaran-movie-trailer/ Sat, 09 Jan 2021 06:35:14 +0000 https://touringtalkies.co/?p=11935 Madhav Media – Balaji Kapa Presents D Company Production Silambarasan TR in & as “Eeswaran” A Susienthiran Film Starring Silambarasan TR, Bharathiraja, Nidhhi Agerwal, Nandita Swetha, Bala Saravanan, Munishkanth, Kali Venkat, Manoj Bharathiraaja, Harish Uthaman, Stunt Siva & Others Music by Thaman S DOP – Thirunavukkarasu Editor – Anthony Art – Rajeevan Balaji Kesavan | […]

The post ஈஸ்வரன் படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
Madhav Media – Balaji Kapa Presents D Company Production Silambarasan TR in & as “Eeswaran” A Susienthiran Film Starring Silambarasan TR, Bharathiraja, Nidhhi Agerwal, Nandita Swetha, Bala Saravanan, Munishkanth, Kali Venkat, Manoj Bharathiraaja, Harish Uthaman, Stunt Siva & Others Music by Thaman S DOP – Thirunavukkarasu Editor – Anthony Art – Rajeevan Balaji Kesavan | Sekar B | Yugabharathi | Dinesh Kasi | Shobi | Uthra Menon | Antony Xavier | Sarath Nivash | K V Mothi | Hariharasuthan | Aakash Balaji | BeatRoute | Daboo Ratnani | Tuney John, 24 AM | AKV Durai | MDM Sharfudden | Arun Arunachalam Produced by Balaji Kapa Vaaimaye Vaagai Soodum Music on Think Music In Theaters Pongal 2021

The post ஈஸ்வரன் படத்தின் டிரெயிலர் appeared first on Touring Talkies.

]]>
“இனிமேல் செயலில் காட்டுவோம்..” – ரசிகர்களிடத்தில் சிம்பு பேச்சு..! https://touringtalkies.co/actor-simbu-speech-in-eeswaran-movie-audio-function/ Sat, 02 Jan 2021 16:05:49 +0000 https://touringtalkies.co/?p=11728 நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழா இன்று மாலை சென்னையில் எழும்பூர் ‘ஆல்பர்ட்’ தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் நாயகன் சிம்பு, நாயகிகள் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், இயக்குநர் இமயம் பாரதிராஜா, படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். சிம்புவின் ரசிகர்கள் ‘ஆல்பர்ட்’ தியேட்டரைச் சுற்றிலும் போஸ்டர்களையும், பேனர்களையும் வைத்து சிம்புவுக்கு வரவேற்பளித்தனர். நூற்றுக்கணக்கனக்கான சிம்பு ரசிகர்களால் […]

The post “இனிமேல் செயலில் காட்டுவோம்..” – ரசிகர்களிடத்தில் சிம்பு பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீ்ட்டு விழா இன்று மாலை சென்னையில் எழும்பூர் ‘ஆல்பர்ட்’ தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் நாயகன் சிம்பு, நாயகிகள் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, பால சரவணன், இயக்குநர் இமயம் பாரதிராஜா, படத்தின் இயக்குநர் சுசீந்திரன் மற்றும் படத்தில் பங்கு கொண்ட தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

சிம்புவின் ரசிகர்கள் ‘ஆல்பர்ட்’ தியேட்டரைச் சுற்றிலும் போஸ்டர்களையும், பேனர்களையும் வைத்து சிம்புவுக்கு வரவேற்பளித்தனர். நூற்றுக்கணக்கனக்கான சிம்பு ரசிகர்களால் ஆல்பர்ட் திரையரங்கம் நிரம்பி வழிந்தது.

இந்த விழாவில் படத்தின் நாயகனான சிம்பு பேசும்போது, “நான் நடிச்சிட்டிருந்த ‘மாநாடு’ படம் நிறைய இடங்கள்ல, தள்ளித் தள்ளி நடக்க வேண்டியிருந்தது. அதுக்கு இடையில் சீக்கிரமா வெளியாகுற மாதிரி ஒரு படத்தைப் பண்ணலாமேன்னு எனக்குத் தோணுச்சு.

அப்பத்தான் இயக்குநர் சுசீந்திரன்கிட்ட நான் பேசினேன். ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’னேன். இதுக்கு முன்னாடியே நாங்க இது மாதிரி பேசியிருக்கோம். அப்போ ‘ஒரு நல்ல கதை கிடைச்சால் உடனே செய்யலாம்’ என்றார் சுசீந்திரன் ஸார்.

அதே மாதிரி இப்போ கேட்டவுடனேயே இந்த ‘ஈஸ்வரன்’ படத்தோட கதையைச் சொன்னார். இந்தக் கதையைக் கேட்ட பொழுது எனக்கு ரொம்ப தன்னம்பிக்கை வந்துச்சு. நாட்டுல இப்ப எல்லாருமே ஒரு மாதிரி மன உளைச்சல்ல இருக்காங்க. பிரச்சினைல மாட்டிருக்காங்க. இந்த நேரத்துல இந்தப் படத்தோட கதையைக் கேட்டவுடன் எனக்கே ஒரு ரிலீப் கிடைச்சது.

இந்தப் படத்தைப் பார்க்குற எல்லாருக்குமே நெகட்டிவ் சிந்தனைகள் போய் பாஸிட்டிவ் சிந்தனைகள் மட்டும்தான் வரும். அதுதான் இந்த ‘ஈஸ்வரன்’ படம்.

ஏன்னா இப்போ எங்க பார்த்தாலும் நெகட்டிவிட்டி.. யாருக்கும் யாரையும் பிடிக்கலை. எதைப் பார்த்தாலும் பிடிக்கலை.. எங்க பார்த்தாலும் பொறாமை.. சமூக வலைத்தளங்கள்ல யாராச்சும், யாரையாவது திட்டிக்கிட்டேயிருக்காங்க. மொதல்ல இதை நிறுத்துங்க. நம்ம மனசை முதல்ல மாத்தணும். அப்புறம் எல்லாமே சரியாகும்.

என் வாழ்க்கைல எனக்கும் இது மாதிரிதான் இருந்துச்சு. அதுனால நிறைய இழந்துட்டேன். நிறைய பிரச்சினைகளை சந்திச்சேன். இதெல்லாம் எதனால்ன்னு யோசிச்சுப் பார்த்தேன். எல்லாமே வெளில இருந்து இல்ல.. எல்லாத்துக்கும் காரணம் நமக்கு உள்ளதான் இருக்கு. அதை சரி செய்தாலே போதும்.. நாம் நாமளா இருக்கலாம்ன்ற உண்மை எனக்குத் தெரிஞ்சது. அப்படியே என்னையும் மாத்திக்கிட்டேன். அதன் தொடக்கம்தான் இது.

ஒவ்வொருத்தனுக்கும் ஒரு பெர்ஸனல் லைப் இருக்கும். அதை நாம தொடவே கூடாது. அது அவனோடது.. அதை அவனை பார்த்துக்குவான். சரி செய்துக்குவான். நீங்களும் மாறிருங்க. யாரைப் பார்த்தும் பொறாமைப்படாதீங்க. திட்டாதீங்க. வாழ்த்துங்க.. அவனும் நல்லாயிருக்கணும்.. நாமளும் நல்லாயிருக்கணும்ன்னு நினைங்க. அதுதான் நமக்கும் நல்லது.. நம்ம உடம்புக்கும் நல்லது.

இந்தப் படத்துல என்கூட நிதி அகர்வால் நடிச்சிருக்காங்க. அவங்க ஏற்கெனவே ‘பூமி’ படத்துல நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு எனது வாழ்த்துகள். நந்திதாவை கடைசி நிமிஷத்துலதான் கூப்பிட்டோம். சில காட்சிகள் என்றாலும் வந்து நடிச்சுக் கொடுத்தாங்க. அவங்களுக்கும் எனது நன்றிகள்.

பாரதிராஜா அப்பாவை பத்தி நான் பேசியே ஆகணும். அவர்கூட ச்சும்மா நின்னுட்டிருந்தாலே போதும்.. அவரோட எனர்ஜி நமக்கும் பரவும். அந்த அளவுக்கு பவர்புல்லான மனிதர் அவர். அழகான கேரக்டரை இதுல செஞ்சிருக்காரு. அவருக்கும் எனது நன்றி.

மேலும் பால சரவணன் என்கூடவே வர்ற ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்காரு. எங்க ரெண்டு பேரோட காம்பினேஷன் ரசிகர்களுக்குப் புதுசா இருக்கும்ன்னு நினைக்கிறேன். முனீஸ்காந்த் அண்ணனும் நடிச்சிருக்கார். அப்புறம் சின்னப் பிள்ளைகள் நிறைய பேர் நடிச்சிருக்காங்க. எல்லாருக்கும் எனது நன்றிகள்.

இயக்குநர் சுசீந்திரன் ஸார் வெரி பாஸ்ட் ஒர்க்கர். ஒரு ஷாட் முடிஞ்சு நான் திரும்பிப் பார்க்குறதுக்குள்ள அடுத்த ஷாட்டுக்குப் போயிருவாரு.. ஓகேவா.. இல்லையான்னாச்சும் சொல்லிட்டுப் போங்க ஸார்ன்னு சொல்லுவேன். ஷூட்டிங் ஸ்பாட் ரொம்பக் கலகலப்பா இருந்துச்சு. படம் முழுக்க நாங்களே ஹேப்பியாத்தான் படப்பிடிப்பை நடத்தினோம்.

இந்தப் படம் தியேட்டருக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. தியேட்டரில் மட்டும்தான் வெளியாகும். வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. அன்றைக்கு தியேட்டர்களில் 100 சதவிகித டிக்கெட்டுகளை கொடு்க்க தமிழக அரசும் ஒத்துக் கொண்டுள்ளது. இதற்காக தமிழக முதலமைச்சருக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்தப் படத்துக்கு அப்புறம் ‘மாநாடு’ படத்துல நடிக்கிறேன். அப்புறம் ‘பத்து தல’ இருக்கு. அதுக்கப்புறம் ஒரு படம் இருக்கு. நாலாவதா சுசீந்திரனே இயக்கப் போற ஒரு படத்துலேயும் நடிக்கப் போறேன். அந்தப் படம் வரும் இந்த வருடத் தீபாவளிக்கு நிச்சயமாக வெளியாகும். இனிமேல் வரிசையாக என் படங்கள் வரும்.

‘அவன் வாழ்க்கையை அழிக்கணும்; இவன் வாழ்க்கையை அழிக்கணும்’னு பிளான் பண்ணாதீங்க. மேல இருக்கிறவன் வேற பிளான் வச்சிருக்கான். அவன் சிரிச்சிடுவான். இந்த நேரத்தில் நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். இனிமேல் செயல் மட்டும்தான். செயலில் மட்டும்தான் பேசுவோம்.. அவ்வளவுதான்.. வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி..” என்று கூறினார்.

The post “இனிமேல் செயலில் காட்டுவோம்..” – ரசிகர்களிடத்தில் சிம்பு பேச்சு..! appeared first on Touring Talkies.

]]>