Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை ரேகா – Touring Talkies https://touringtalkies.co Sat, 25 Sep 2021 07:03:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை ரேகா – Touring Talkies https://touringtalkies.co 32 32 “நகைச்சுவை வேடத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘பேய் மாமா’ படம்” – நடிகை ரேகாவின் உற்சாகப் பேட்டி https://touringtalkies.co/actress-rekhas-thanks-note-for-her-acting-in-pei-mama-movie/ Sat, 25 Sep 2021 07:02:15 +0000 https://touringtalkies.co/?p=18249 இயக்குநர் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேய் மாமா.’ இந்தப் படத்தில், காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  மேலும் மாளவிகா மேனன், ‘மொட்டை’ ராஜேந்திரன், நடிகை ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கோவை சரளா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். திகில் மற்றும் காமெடி கலந்த கதைக் களத்துடன் நேற்று வெளியாகியுள்ள இந்தப் படத்தில், அனைவரது நடிப்புக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் […]

The post “நகைச்சுவை வேடத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘பேய் மாமா’ படம்” – நடிகை ரேகாவின் உற்சாகப் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
இயக்குர் சக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பேய் மாமா.’

இந்தப் படத்தில், காமெடி நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார்.  மேலும் மாளவிகா மேனன், மொட்டை’ ராஜேந்திரன், நடிகை ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, கோவை சரளா உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

திகில் மற்றும் காமெடி கலந்த கதைக் களத்துடன் நேற்று வெளியாகியுள்ள இந்தப் படத்தில், அனைவரது நடிப்புக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரேகா இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், படம் பார்த்தவர்களின் பாராட்டுக்கள் தனக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, “நான் ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானபோது எப்படி என்னை வரவேற்று உற்சாகப்படுத்தினீர்களோ… அதே போல என் திருமணத்திற்கு பிறகு நான் கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்தபோதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்று என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக இருந்து வருகிறீர்கள்.

எப்போதும்போல உங்களின் ஒத்துழைப்புக்கும், மரியாதைக்கும் என்றும் நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

இப்போது ‘பேய் மாமா’ படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நான் நடித்திருப்பதைக் கண்டு பல பத்திரிக்கை சொந்தங்கள் என்னை போனில் அழைத்து பாராட்டி தியேட்டரில் சிரித்து மகிழ்ந்த தகவலை பகிர்ந்து கொண்டபோது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியாக உள்ளது.

முதலில் அந்த கதாபாத்திரத்தில் என்னை நடிக்க அழைத்தபோது எனக்குக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. “இந்தப் படத்தில் நடிப்பதால் உனக்கு என்ன கௌரவ குறைச்சல் வந்துவிட போகிறது..? எல்லா வகையான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். அதுதான் நடிப்பு. இப்படித்தான் நடிப்பேன் என்று ஒரு வட்டத்துக்குள் நம்மை அடைத்துக் கொள்ள கூடாது” என்று என் உள் மனது சொன்னது.

என்னுடைய திரை வாழ்க்கையில் என் மீது நான் வைத்த நம்பிக்கையைவிட, மற்றவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைகள்தான் என்னை ஒவ்வொரு கட்டத்திலும் மாற்றியிருக்கிறது.

அந்த வரிசையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் என்னை நகைச்சுவை நடிகையாக பார்த்தார். எனக்குள் இருக்கும் அந்த திறமையை மக்களுக்கு அந்த பாத்திரம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினார்.

இதனாலேயே தைரியமாக மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன்தான் இந்தப் படத்தில் நடித்தேன். இப்போது நீங்கள் பாராட்டுவதை கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன். என்னால் நகைச்சுவை வேடத்திலும் நடிக்க முடியும் என்கிற நம்பிக்கை உங்கள் வாழ்த்துக்களின் மூலமாகக் கிடைத்திருக்கிறது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..” என்று கூறியுள்ளார் நடிகை ரேகா.

The post “நகைச்சுவை வேடத்திலும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்த ‘பேய் மாமா’ படம்” – நடிகை ரேகாவின் உற்சாகப் பேட்டி appeared first on Touring Talkies.

]]>
பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..? https://touringtalkies.co/bigboss-season-4-first-evicted-person-was-actress-rekha/ Sun, 18 Oct 2020 08:10:48 +0000 https://touringtalkies.co/?p=8970 விஜய் டிவியின் டாப் மோஸ்ட் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா, அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, சம்யுக்தா, அனிதா சம்பத், சுரேஷ், ரியோ, சோம்சேகர், ஆஜீத், வேல்முருகன், பாலா, நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 16 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி நபராக வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளினியுமான அர்ச்சனா உள்ளே வந்தார். ஒவ்வொரு வாரமும் […]

The post பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..? appeared first on Touring Talkies.

]]>

விஜய் டிவியின் டாப் மோஸ்ட் நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீஸன் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை ரேகா, அறந்தாங்கி நிஷா, சனம் ஷெட்டி, கேப்ரில்லா, சம்யுக்தா, அனிதா சம்பத், சுரேஷ், ரியோ, சோம்சேகர், ஆஜீத், வேல்முருகன், பாலா, நடிகர் ஆரி, நடிகர் ஜித்தன் ரமேஷ், ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 16 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி நபராக வைல்ட் கார்டு எண்ட்ரியில் நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளினியுமான அர்ச்சனா உள்ளே வந்தார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு உறுப்பினர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். மக்களால் அதிகமாக விரும்பப்படாத நபரை ஓட்டெடுப்பு நடத்தி வெளியேற்றுவார்கள்.

சென்ற வாரம்தான் நிகழ்ச்சியின் முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றவில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டாவது வாரம் என்பதால் நிச்சயமாக ஒருவர் வெளியேறுவார்.

சென்ற வாரமே எலிமினேஷன் டீமில் ரேகா, சனம் ஷெட்டி, ஷிவானி, ரம்யா பாண்டியன் என்று 4 பேர் நாமினேஷன் செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் வாக்கெடுப்பில் காப்பாற்றப்பட்டவர்கள் பட்டியல் நேற்றைக்கு வெளியிடப்பட்டது. அந்த லிஸ்ட்டில் ஷிவானியும், ரம்யாவும் இடம் பிடித்தார்கள்.

கடைசியாக இருக்கும் ரேகா மற்றும் சனம் ஷெட்டி இருவரில் ஒருவர் இன்றைக்கு வெளியேற்றப்படுகிறார். இதற்கான மூன்றாவது புரமோவும் தற்போது வெளியிடப்பட்டுவிட்டது.

நமக்குக் கிடைத்த உறுதியானத் தகவலின்படி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து
இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாதான் என்று தெரிகிறது..!

The post பிக்பாஸ் சீஸன் 4-ல் இன்றைக்கு வெளியேறுபவர் நடிகை ரேகாவா..? appeared first on Touring Talkies.

]]>