Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகை ரம்யா நம்பீசன் – Touring Talkies https://touringtalkies.co Thu, 20 May 2021 13:30:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகை ரம்யா நம்பீசன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஆளும் கட்சிக்கு எதிராகக் கொடி பிடித்த நடிகைகள்..! https://touringtalkies.co/some-movie-actress-flag-waving-against-the-state-ruling-party/ Thu, 20 May 2021 13:29:10 +0000 https://touringtalkies.co/?p=15188 நடந்து முடிந்த கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற சுகாதார அமைச்சரும், கேரளத்து மக்களிடையே பெரும் செல்வாக்கினைப் பெற்றிருக்கும் கே.கே.சைலஜா டீச்சருக்கு இம்முறை அமைச்சர் பொறுப்புத் தரப்படவில்லை. ஆனால், சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக் […]

The post ஆளும் கட்சிக்கு எதிராகக் கொடி பிடித்த நடிகைகள்..! appeared first on Touring Talkies.

]]>
நடந்து முடிந்த கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 2-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமையும் புதிய அரசில் அமைச்சர்களாகப் புதியவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் பாராட்டைப் பெற்ற சுகாதார அமைச்சரும், கேரளத்து மக்களிடையே பெரும் செல்வாக்கினைப் பெற்றிருக்கும் கே.கே.சைலஜா டீச்சருக்கு இம்முறை அமைச்சர் பொறுப்புத் தரப்படவில்லை. ஆனால், சட்டமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக் கூட்டணியின் கொறடா என்ற பொறுப்பை மட்டுமே வழங்கியிருக்கிறார்கள்.

புதிய சுகாதாரத் துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் என்ற பெண்மணி பொறுப்பேற்க இருக்கிறார்.

ஆனாலும், ஷைலஜா டீச்சருக்கு அமைச்சர் பொறுப்பு தராததற்காக மலையாள நடிகைகள் பலரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடும் கண்டனம் விடுத்துள்ளனர். இதற்காக #BringBackShailajaTeacher என்கிற ஹேஷ்டேகில் குறிப்பிட்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள்.

நடிகை பார்வதி திருவோத்து தனது டிவீட்டர் பக்கத்தில், “அமைச்சரவையில் சைலஜா டீச்சருக்கென ஓர் இடம் உள்ளது. நம் மாநில மக்கள் அவரது சிறந்த தலைமையின் கீழ் இருக்க உரியவர்கள். இதற்கு எந்த சப்பைக் கட்டும் கிடையாது. மக்கள் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை ஓரங்கட்டுவது கட்சியை ஒரு கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளுகிறது. உடனடியான, திறமையான ஆட்சியைத் தவிர இப்போதைய முக்கியத் தேவை என்ன…? எங்கள் டீச்சரை மீண்டும் கொண்டு வாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘‘இப்போது இல்லையென்றால் பின் எப்போது அவர் நம் மாநிலத்துக்குத் தேவைப்படுவார்?” என்று நடிகை ரம்யா நம்பீசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நமக்குக் கிடைத்த மிகச் சிறந்த சுகாதாரத்துறை அமைச்சர்களில் ஒருவர் சைலஜா. அவருக்கு இந்தத் தொற்றுக் காலத்தில் அமைச்சரவையில் இடமில்லையா…? என்னதான் நடக்கிறது பினராயி விஜயன்?” என்று நடிகை மாளவிகா மோகனன் ட்வீட் செய்துள்ளார்.

நடிகை ரீமா கல்லிங்கலும் மார்க்சிஸ்ட் கட்சியின் இந்த முடிவுக்கு எதிராகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றி முகநூலில் எழுதுகையில், “மிகப் பெரிய வெற்றியையும், 5 ஆண்டு காலம் உலகத் தரம் வாய்ந்த சேவையையும் வழங்கியவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க முடியாவில்லை என்றால் எப்படி..? இந்த கேள்வி உங்களுக்காக கே.கே.ஷைலஜா டீச்சர். ஒரு மனித அடையாளத்தின் முகமாக நீங்கள் அந்தக் கட்சியில் இருப்பதற்காகவும், உங்களது கடின உழைப்புக்காகவும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘கர்ணன்’ பட நாயகியான ரஜிஷா விஜயன் இது பற்றி முகநூலில் எழுதுகையில், “புதிய தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பது ஒரு நல்ல சிந்தனையாகும், ஆனால் நம் அரசு எதிர்கொண்டுள்ள மிகப் பெரிய பேரழிவுகளின்போது எங்களை நிர்வகிப்பதிலும் மீட்பதிலும் பெரும் பங்களிப்பைக் கொண்டவர். அவர் இன்னும் தகுதியானவர்தான்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருந்தாலும் தனக்குக் கிடைத்திருக்கும் ஆதரவு பற்றிப் பேசிய ஷைலஜா டீச்சர், “இது கட்சி எடுத்திருக்கும் முடிவு. அதற்குக் கட்டுப்பட வேண்டியது எனது கடமை. கட்சி என்ன சொல்கிறதோ.. அதைத்தான் என்னால் செய்ய முடியும். என் மீது அன்பு வைத்திருந்து பேசியவர்களுக்கு நன்றி..” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.

The post ஆளும் கட்சிக்கு எதிராகக் கொடி பிடித்த நடிகைகள்..! appeared first on Touring Talkies.

]]>
கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் https://touringtalkies.co/endraavathu-oru-naal-movie-news/ Fri, 20 Nov 2020 03:29:00 +0000 https://touringtalkies.co/?p=10194 சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன. நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும்விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகியிருக்கிறது ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம். ‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். […]

The post கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
சமீபமாக நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து வரும் கதைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற தொடங்கிவிட்டன.

நிஜத்தில் நடக்கும் சம்பவங்களை, திரைக்கதை என்னும் மாலையாக அழகாகக் கோர்த்துப் பல இயக்குநர்கள் கதைகளைச் சொல்லும்விதம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து உருவாகியிருக்கிறது என்றாவது ஒரு நாள்’ திரைப்படம்.

‘தி தியேட்டர் பீப்பிள்’ என்ற நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

வித்தியாசமான அதே சமயத்தில் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் படங்களைத் தயாரிப்பதே இந்த நிறுவனத்தின் நோக்கமாகும். அதில் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் தங்களுடைய முதல் படி என்று நம்புகிறார்கள்.

யதார்த்தமான படங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள விதார்த், இதில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வித்தியாசமான, தனக்கு முக்கியத்துவமுள்ள கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ரம்யா நம்பீசன் நாயகியாக புதிய பரிமாணத்தில் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளை கொண்ட ராகவன் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக என்.சண்முகசுந்தரம், இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன், படத் தொகுப்பாளராக காசி விஸ்வநாதனும் பணிபுரிந்துள்ளனர். அனைத்து பாடல்களையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இந்தப் படத்துக்கு திறம்பட கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

இயக்குநர் வெற்றி துரைசாமி, முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் யாரிடமும் இதுவரையிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. சில குறும் படங்களை இயக்கிய அனுபவம் மட்டுமே கொண்டவர்.

பல சம்பவங்கள் நாளிதழில் சிறு செய்தியாக வந்திருக்கும். அதை படித்துவிட்டு எளிதில் கடந்துவிடுவோம். அப்படி நாம் கடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

கிராமப்புற மக்களின் எளிய வாழ்க்கை முறைகளைப் பற்றியும், கால்நடைகளுடன் அவர்களது அழகான உறவைப் பற்றியும் பேசுகிறது இத்திரைப்படம்.

மனிதக் குலத்தின் இன்றியமையாத பகுதியான கால்நடை வளர்ப்பு, உலக மயமாக்கல் கொண்டு வந்த இடம் பெயர்வு பற்றிய கதை இது. தண்ணீர் பஞ்சம், குழந்தை தொழிலாளிகள், நல்ல எதிர்காலத்தை எதிர்நோக்கியிருக்கும் மக்களின் முன்னிருக்கும் சவால்களை எல்லாம் காட்சியாக அமைத்து மக்களை யோசிக்க வைக்கும் வகையில் இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் படத்தின் இயக்குநர்.

கொங்கு மண்டலத்தில் உள்ள எதார்த்தமான வாழ்வியலை அப்படியே இந்தப் படத்தில் காணலாம். அங்குள்ள வட்டார மொழியை அனைத்து நடிகர்களும் தப்பில்லாமல் பேசி நடித்துள்ளது இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ள ‘என்றாவது ஒரு நாள்’ ஃபர்ஸ்ட் லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால் படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

The post கொங்கு மண்டல மக்களின் வாழ்க்கைக் கதைதான் ‘என்றாவது ஒரு நாள்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>