Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் விஷ்ணு விஷால் – Touring Talkies https://touringtalkies.co Sun, 28 Mar 2021 09:53:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் விஷ்ணு விஷால் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘காடன்’ – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/gaadan-movie-review/ Sun, 28 Mar 2021 09:53:05 +0000 https://touringtalkies.co/?p=13948 இயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ள படம் இது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.  ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா இந்தப் படத்திற்காக மட்டும் 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக தன் உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா. விஷ்ணு விஷால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகிகளாக ஜோயா […]

The post ‘காடன்’ – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாக்கியுள்ள படம் இது. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

 ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா இந்தப் படத்திற்காக மட்டும் 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். இந்தப் படத்தின் கதாபாத்திரத்துக்காக தன் உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா.

விஷ்ணு விஷால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகிகளாக ஜோயா ஹூசைன் மற்றும் ஷிரியா பில்கவுன்கர் இருவரும் நடித்துள்ளனர், மத்திய மந்திரியாக ஆனந்த் மகாதேவன், ரகு பாபு, ரவி காலே, ஸ்ரீநாத், ஆகாஷ், சம்பத் ராம்,போஸ் வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – ஈராஸ் நிறுவனம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன், ஒளிப்பதிவு – அசோக் குமார், படத் தொகுப்பு – புவன், சண்டை இயக்கம் – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா, கலை இயக்கம் – மயூர், இசை – சாந்தனு மொய்த்ரா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தில் காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி இந்தக் ‘காடன்’ படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார்.

மூன்று தலைமுறைகளுக்கு முந்தைய தாத்தா ஒருவர் கோவை அருகேயிருக்கும் வனப் பகுதியில் பெரும்பாலானவற்றை மக்களுக்குப் பயன்படும் வகையில் எழுதி வைத்தாலும், இன்னும் சில பகுதிகளை விலங்குகளின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அவருடைய பேரன்களில் ஒருவரான ராணா அந்தக் காட்டுப் பகுதியிலேயே இப்போதும் வசித்து வருகிறார். இவருடைய குடும்பத்தினர் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாகிவிட்டார்கள்.

அந்தக் காட்டுப் பகுதியில் ஒரு ரிசார்ட்டை அமைப்பதற்காக இந்தியாவின் நிதியமைச்சர் திட்டமிடுகிறார். இதற்காக ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆக்கிரமிக்கிறார் அமைச்சர். இதை எதிர்த்துப் போராடுகிறார் ராணா. அவரைப் பொய் வழக்கில் கைது செய்து அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்துகிறார்கள்.

இந்த நேரத்தில் ஆக்கிரமிப்பு பகுதியைச் சுற்றி கோட்டைச் சுவர் கட்ட எத்தனிக்கும் அமைச்சரின் ஆட்கள், மற்ற காட்டு யானைகளிடமிருந்து தப்பிப்பதற்காக ‘கும்கி’ யானையை வரவழைக்கிறார்கள்.

கும்கி யானப் பாகனான விஷ்ணு விஷாலும், அவரது மாமாவும் அமைச்சரின் ஆட்கள் செய்யும் அடாவடியை உணராமலேயே அவர்களுக்கு உதவுவதற்காக முன் வருகிறார்கள்.

அதே காட்டுக்குள் நக்ஸலைட்டாக மாறி வாழ்ந்து கொண்டிருக்கும் ஜோயா மீது விஷ்ணு விஷால் மையல் கொள்கிறார். இதனால், அங்கேயிருந்து வெளியேறும் சூழல் வரும்போதெல்லாம் அதைத் தடுத்து அங்கேயே தான் இருப்பதற்கு வழி வகை செய்து கொள்கிறார் விஷ்ணு விஷால்.

ராணா சிறையில் இருக்கும் நேரத்தில் அந்த வனப்பகுதியை ஆக்கிரமிக்கும் அமைச்சர் தரப்பு, அதைச் சுற்றிலும் மிகப் பெரிய கோட்டைச் சுவரை எழுப்பி பாதையை மறைக்கிறார்கள். அது யானைகள் தண்ணீர் குடிப்பதற்காக பல்லாண்டுகளாக சென்று வந்த பாதை என்பதால் யானைகள் தண்ணீர் தேடு மலைவாழ் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்குள் நுழைகின்றன.

சிறையில் இருந்து வெளியில் வரும் ராணா தண்ணீர் இல்லாமல் தவிக்கும் யானைகளுக்காக அமைச்சர் தரப்பினருடன் கடுமையாக மோதுகிறார். இறுதியில் என்னாகிறது..? யானைகளுக்கு அந்தப் பாதை கிடைத்ததா..? விஷ்ணு விஷாலின் காதல் என்னாகிறது..? ராணா தனது போராட்டத்தில் ஜெயித்தாரா இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்திலேயே சிறப்பாக இருந்தது ராணாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். ஆனால், அதைக் கொஞ்சம் குழப்பமாக அமைத்திருப்பதுதான் ஏற்க முடியவில்லை. அவர் எப்போதிருந்து காட்டுக்குள்ளேயே குடியிருந்து வருகிறார். அவருடைய மேனரிசம் ஏன் ஒரு மனப் பிறழ்வு கொண்டவரைப் போல இருக்கிறது என்பதற்கு இயக்குநர் தரப்பில் இருந்து பதில் இல்லை. ஆனால், அதுதான் வித்தியாசமானதாகவும், ராணாவின் நடிப்புத் திறமையை வெளிக்காட்டும்விதமாகவும் அமைந்திருக்கிறது.

தலையைச் சொடக்கு போடுவதுபோல் திருப்புவதும், பறவைகளின் கீச்சுக் குரலை அப்படியே திருப்பிச் செய்வதும்.. விலங்குகளின் பாஷையிலேயே பதில் சொல்வதுமாக அவரது பல மேனரிசங்கள் கவர்ந்திழுக்கிறது.

அவருடைய முரட்டுத்தனமான சுபாவத்துடன் அனாயசமாக சண்டை காட்சிகள் அவர் காட்டியிருக்கும் ஆக்ஷன்கள் அனைத்தும் ஆக்சன் பிரியர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும். அதிலும் டெல்லியில் அவருடைய பையை பிடுங்கிக் கொண்டு ஓடுபவர்களிடமிருந்து அவர் அதைக் கைப்பற்றும் சண்டை காட்சி அபாரம். எப்படித்தான் படமாக்கினார்களோ தெரியவில்லை. சூப்பர்ப்.. படக் குழுவினருக்கு ஒரு ஹாட்ஸ் அப்.

தன்னுடைய பிள்ளைகள் போன்ற அன்பான யானைகளுக்காக அவர் பதறுவதும்.. மக்களிடம் அவர்களுக்காகப் பேசுவதும், அதே யானைகள் அவரைத் தவறாக நினைப்பதை எண்ணி மருகுவதுாய்.. ஒரு தூய அன்பின் வெளிப்பாடான பரிசுத்தமான மனிதராகக் காட்சியளிக்கிறார் ராணா. சண்டைக் காட்சிகளில் மிகுந்த பிரயத்தனப்பட்டு நடித்திருக்கிறார். கடின உழைப்பைக் கொட்டியிருக்கிறார். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இவருக்கு நேரெதிராக கொஞ்சமும் கஷ்டப்படாமல், அலட்டிக் கொள்ளாமல் தனது கேரக்டரை அசால்ட்டாக செய்திருக்கிறார் விஷ்ணு விஷால். பார்த்தவுடன் காதல் என்பதாக நக்ஸலைட் தீவிரவாதியைப் பார்த்து உருகுவது ஒன்றுதான் ஏற்க முடியாததாக இருக்கிறது.

இதனாலேயே இவருடைய கதாபாத்திரத்தின் மீது பார்வையாளர்களுக்கு ஒரு நம்பகத் தன்மை கிடைக்கவில்லை. ஈர்ப்பும் இல்லை. அங்கே என்ன நடக்கிறது என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர் காதலித்தால் என்ன.. காதலிக்காமல் போனால்தான் என்ன என்னும் அளவுக்கு ரசிகர்கள் போய்விட்டார்கள்.

அதிலும் விஷ்ணு விஷாலுக்கு நேரும் அந்தச் சோகத்திற்குப் பின்னால் இருந்த திரைக்கதையின் பல காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதால் அவருடைய போர்ஷன் அம்போ என்று பாதியிலேயே முடிக்கப்பட்டுவிட்டதைப் போல காட்சியளிக்கிறது.

உண்மையில் விஷ்ணு விஷால் தனது கும்கி யானை இறந்தவுடன் அதுவரையிலும் துணை நின்ற அமைச்சர் தரப்பினரை எதிர்த்து ராணாவுடன் சேர்ந்து போராட்டத்தில் குதிக்கிறார். இதுதான் திரைக்கதையாம். ஆனால் இதனை படமாக்கி வைத்தும், படத்தின் நீளம் கருதி குறைத்துவிட்டார்களாம். இதனால் விஷ்ணு விஷாலின் பங்களிப்பு இந்தப் படத்திற்கு எந்தப் பலனையும் கொடுக்கவில்லை.

அவருடைய காதலியாக தீவிரவாதப் பெண்ணாக நடித்திருக்கும் ஜோயாவுக்கும், இன்னொரு நாயகியான ஷிரியாவுக்கும் நடிப்பிற்கான பெரிய வாய்ப்புகள் இல்லை. ஆனால், திரைக்கதையை நகர்த்துவதற்காக இருவரும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரான ஆனந்த் மகாதேவனின் திமிர்த்தனமான அமைச்சருக்கான நடிப்பும், ரவி காலேயின் எதார்த்த மனிதரின் நடிப்பும் பாராட்டத்தக்கது.

மேலும் உடன் நடித்திருக்கும் ஆகாஷ், போஸ் வெங்கட், சம்பத் இன்னும் பலரும் சொல்லிக் கொடுத்ததுபோல சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவுதான் படத்தின் மிகப் பெரிய பலம். அந்த அடர்ந்த காட்டின் தன்மையையும், மரங்களின் அடர்த்தியையும், காடுகளின் வனப்பையும், செழிப்பையும், விலங்குகளின் நடமாட்டத்தையும், மழைவாழ் மக்களின் வாழ்வியலையும் படமாக்கியிருப்பதில் நமக்கு ஒரு மயக்கமே வருகிறது.

சண்டை காட்சிகளை படமாக்கித் தந்திருக்கும் இரண்டு சண்டை இயக்குநர்களும் பாராட்டுக்குரியவர்கள். இரண்டு கதைகளை ஒன்றாக இணைக்க முடியாமல் படத்தின் நீளம் கருதி நீக்கப்பட்ட 45 நிமிட காட்சிகளால் படம் என்ன சொல்ல வந்தார்கள்.. எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்கிற சர்ச்சைக்குள் நம்மைத்  தள்ளிவிட்டார் படத் தொகுப்பாளர் புவன்.

ஒரு மத்திய அமைச்சர் இப்படியொரு ரிசார்ட் கட்டுவது பிரதம மந்திரிக்கு அதுவரையிலும் தெரியாதா..? அதான் எல்லா மீடியாக்களிலும் வந்துவிட்டதே. பிரதமரிடம் யாரும் சொல்லியிருக்க மாட்டார்களா என்ன..?

அதோடு கடைசி நேரத்தில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்த பின்பு தன் வருகையை ரத்து செய்வதோடு ரிசார்ட்டையும் இடித்துத் தள்ள உத்தரவிடும் அளவுக்கான ‘நல்ல’ பிரதமர் நம் நாட்டில் எங்கே இருந்தார்கள் என்பதும் கேள்விக்குரிய விஷயம்தான். இதனாலேயே படத்தின் முடிவில் நம்மால் ஒன்ற முடியவில்லை.

படத்திற்காக நாம் அதிகம் வெளியில் பேச வேண்டியது இயக்குநர் பிரபு சாலமனின் கடும் உழைப்பு. அப்படியொரு உழைப்பைக் கொட்டியிருந்தும் படத்தின் கதை, திரைக்கதையில் இருக்கும் ஆயிரம் லாஜிக் ஓட்டைகளால் அவைகளை பாராட்ட முடியவில்லையே என்கிற வருத்தம்தான் நமக்கு மிஞ்சுகிறது.

காடுகள், வனங்கள், யானைகள்.. இவைகளையெல்லாம் விட்டுவிட்டு அடுத்தப் படத்தை பிரபு சாலமன் கொடுக்கட்டும். காத்திருப்போம்..!

The post ‘காடன்’ – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“சூரியை ஏமாற்றித்தான் நான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” – கொதிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால் https://touringtalkies.co/i-do-not-need-to-eat-to-deceive-the-actor-soori-actor-vishnu-vishal-speak/ Mon, 22 Mar 2021 13:43:59 +0000 https://touringtalkies.co/?p=13823 நடிகர் சூரியுடன் பணப் பிரச்சினை, கோர்ட்.. வழக்கு.. சொந்த வாழ்க்கையில் விவகாரத்து… ஆந்திர பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடன் காதல்.. வீடு இருக்கும் குடியிருப்பில் அக்கம், பக்கத்தினருடன் மோதல்.. என்ற பலவித சர்ச்சைகள் நடிகர் விஷ்ணு விஷாலை சூழ்ந்திருக்கும் நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் ‘காடன்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி நடிகர் விஷ்ணு விஷால் இன்று மதியம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தன்னைச் சுற்றியிருக்கும் […]

The post “சூரியை ஏமாற்றித்தான் நான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” – கொதிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூரியுடன் பணப் பிரச்சினை, கோர்ட்.. வழக்கு.. சொந்த வாழ்க்கையில் விவகாரத்து… ஆந்திர பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா கட்டாவுடன் காதல்.. வீடு இருக்கும் குடியிருப்பில் அக்கம், பக்கத்தினருடன் மோதல்.. என்ற பலவித சர்ச்சைகள் நடிகர் விஷ்ணு விஷாலை சூழ்ந்திருக்கும் நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகியிருக்கும் காடன்’ திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வருகிறது.

இதையொட்டி நடிகர் விஷ்ணு விஷால் இன்று மதியம் சென்னையில் உள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது தன்னைச் சுற்றியிருக்கும் பல விஷயங்களைக் குறித்து விஷ்ணு விஷால் மனம் திறந்து பேசினார்.

“சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன.

826 நாட்களுக்குப் பிறகு நான் நடித்த காடன் திரைப்படம் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து என்னுடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘எஃப்.ஐ.ஆர்.’ படம் வெளியாகவிருக்கிறது.

தற்போது நான் நடித்து வரும் படங்களில் ‘மோகன்தாஸ்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறேன். ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறேன். ‘ஜீவி’ படத்தை இயக்கிய இயக்குநர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். வேறு சில படங்களின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

திறமைசாலி என்பதை நிரூபிப்பதற்காகவே திரைத்துறையில் நீடித்திருக்கிறேன். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’, ‘கதாநாயகன்’, ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ என்று தொடர்ச்சியாக சில கமர்சியல் படங்களை தயாரித்தேன். இதில் வெற்றியும் கிடைத்தது. தோல்வியும் கிடைத்தது.

அதன் பிறகு வெளியான ‘ராட்சசன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அது போன்ற உள்ளடக்கத்துடன் கூடிய திரைக்கதையை நாமே தயாரிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் தற்போது ‘எஃப்.ஐ.ஆர்.’, ‘மோகன்தாஸ்’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறேன்.

அதற்கடுத்து மீண்டும் சொந்த பட நிறுவனம் சார்பாக புதிய படம் தயாரிப்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் தன்னம்பிக்கையுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்…” என்றார் விஷ்ணு விஷால்.

தொடர்ந்து சூரி தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் குறித்துப் பேசும்போது, “இந்த விவகாரம் தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் இருப்பதால் இது குறித்து விரிவாக பதிலளிக்க இயலாது. இருப்பினும் எனக்கோ என்னுடைய தந்தைக்கோ சூரியின் நிலம் தொடர்பான பண பரிவர்த்தனை விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்த விவகாரத்தில் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன். இது தொடர்பாக என்னால் அதிகமான விவரங்களை தெளிவாக தர இயலும். சூரி கொடுத்த புகாரில் உள்ள ஒவ்வொரு விஷயங்களுக்கும் என்னால் விளக்கம் கொடுக்க இயலும். அதன் பிறகு அவருடைய இருண்ட பக்கங்களை விளக்க வேண்டியதாக இருக்கும். இதன் காரணமாக அவருக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தந்தையின் காலில் விழுந்து வணங்கி, ‘நீங்கள்தான் என்னுடைய கடவுள்’ என்று சொன்ன ஒருவர், தற்போது என் மீதும், என்னுடைய தந்தை மீதும் புகார் அளித்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் என்னுடைய தந்தையை வெளியே அனுப்பாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் சூரியின் புகாரின் காரணமாக அவர் வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும், நீதிமன்றத்திற்கும் அலைய வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விட்டார். இதை ஒரு மகனாக பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இருப்பினும் இறுதியில் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்.

ஒன்று மட்டும் உறுதியாக கூறுகிறேன். சூரி மூலமாகத்தான் நான் சம்பாதித்து சாப்பிட வேண்டும் என்ற நிலை எனக்கில்லை.  என்னுடைய தந்தை கூலி வேலை செய்து, மாடு மேய்த்து, கடினமாக உழைத்து, படித்து அதன் பிறகு போலீஸ் அதிகாரியாக உயர்ந்திருக்கிறார்.

சூரி விவகாரத்தால் அப்பா சம்பாதித்து வைத்த நற்பெயருக்கு நான்தான் களங்கம் கற்பிக்கிறோனோ என்ற ஒரு சங்கடமான எண்ணம் எனக்குள் இருக்கிறது.

இருந்தாலும் அப்பா சட்டம் ஒழுங்கு பிரிவில் 27 ஆண்டு காலம் போலீஸ் அதிகாரியாக பல இடங்களில் பணியாற்றியுள்ளார். அவரின் நேர்மையான பணிக்கு கிடைத்த மரியாதையை நினைத்து நான் தற்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

சூரியை யாரோ தவறாக வழி நடத்துகிறார்கள். அதனை முழுமையாக நம்பி எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். உண்மை ஒரு நாள் தெரிய வரும்பொழுது அவர் எங்களை பற்றி உணர்ந்து கொள்வார்…” என்று சொல்லி முடித்தார் நடிகர் விஷ்ணு விஷால்.

The post “சூரியை ஏமாற்றித்தான் நான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” – கொதிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால் appeared first on Touring Talkies.

]]>
‘இன்று நேற்று நாளை-2’-ம் பாகம் இன்று துவங்கியது..! https://touringtalkies.co/indru-netru-naalai-2-movie-starts-today/ Mon, 18 Jan 2021 06:27:30 +0000 https://touringtalkies.co/?p=12232 தமிழில் டைம் மிஷின் பற்றி வெளியான முதல் திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்கியிருக்கிறார்கள். திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்தத் திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியாகியிருந்தது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் மிஷின் பற்றிய புத்தம் புதிய அறிவியல் சம்பந்தமான கதையில் இப்படம் உருவாகியிருந்ததால் படம் குறிப்பிடத்தக்க […]

The post ‘இன்று நேற்று நாளை-2’-ம் பாகம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் டைம் மிஷின் பற்றி வெளியான முதல் திரைப்படமான ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்கியிருக்கிறார்கள்.

திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும், ஸ்டூடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்தத் திரைப்படம் ‘இன்று நேற்று நாளை’. இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி வெளியாகியிருந்தது.

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். டைம் மிஷின் பற்றிய புத்தம் புதிய அறிவியல் சம்பந்தமான கதையில் இப்படம் உருவாகியிருந்ததால் படம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியைப் பெற்றது.

இத்திரைப்படத்தின் இயக்குநரான ரவிக்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘அயலான்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நேரத்தில் கடந்த ஐந்தாண்டுக்கு முன்பு வெளியான இந்த ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இரண்டாம் பாகத்தைத் துவக்கியிருக்கிறார் திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமார்.

படத்தில் விஷ்ணு விஷால், கருணாகரன் இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதையை இயக்குநர் ரவிக்குமாரே எழுதுகிறார். கார்த்திக் பொன்ராஜ் படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ராஜேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் புதிய படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

The post ‘இன்று நேற்று நாளை-2’-ம் பாகம் இன்று துவங்கியது..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி பரபரப்பு புகார்..! https://touringtalkies.co/actor-soori-lodge-a-complaint-to-police-against-actor-vishnu-vishals-father/ Fri, 09 Oct 2020 08:39:34 +0000 https://touringtalkies.co/?p=8521 பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்த தமிழ்த் திரையுலகத்தில் திடீரென்று இன்றைக்கு ஒரு அணுகுண்டை வீசி பரபரப்பாக்கியிருக்கிறார் நகைச்சுவை நடிகரான சூரி. தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளதுதான் ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி கலந்த நியூஸ். ஏனெனில் சூரி புகார் செய்திருக்கும் 2 பேர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவும் […]

The post நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி பரபரப்பு புகார்..! appeared first on Touring Talkies.

]]>

பரபரப்பில்லாமல் அமைதியாக இருந்த தமிழ்த் திரையுலகத்தில் திடீரென்று இன்றைக்கு ஒரு அணுகுண்டை வீசி பரபரப்பாக்கியிருக்கிறார் நகைச்சுவை நடிகரான சூரி.

தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.2.70 கோடி மோசடி செய்ததாக 2 பேர் மீது அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கும் பதிவு செய்துள்ளதுதான் ஆச்சரியம் ப்ளஸ் அதிர்ச்சி கலந்த நியூஸ்.

ஏனெனில் சூரி புகார் செய்திருக்கும் 2 பேர்களில் ஒருவர் நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவும் முன்னாள் காவல்துறை உயரதிகாரியான ரமேஷ் குடவாலா என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

சூரி தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமான ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் விஷ்ணு விஷாலும் ஒரு நாயகனாக நடித்திருந்தார். அப்போதிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவரும்… எப்படி போலீஸில் புகார் கொடுக்கும் அளவுக்கு விரோதிகளானார்கள் என்பது தெரியாமல் திரையுலகத்தினர் முழிக்கிறார்கள்.

நடிகர் சூரி போலீஸில் அளித்திருந்த புகாரில், “நான் ‘வீரதீர சூரன்’ என்ற படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் எனக்கு 40 லட்சம் ரூபாய் சம்பள பாக்கியிருந்தது. அதைக் கேட்டபோது அந்தப் படத்தின் தயாரிப்பாளரான அன்புவேல் ராஜன் ‘தன்னிடம் இப்போது அவ்வளவு பணம் கையில் இல்லை. ஆனால் 3 கோடி ரூபாய் அளவு மதிப்புள்ள ஒரு நிலம் இருக்கிறது. நீங்கள் மீதப் பணத்தைக் கொடுத்தால் உங்களுக்கே அந்த நிலத்தை வாங்கித் தருவதாகக்’ கூறினார்.

நானும் இதனை நம்பி என்னுடைய சொந்தப் பணத்தில் இருந்து 2 கோடியே 70 லட்சம் ரூபாயை அவர்களிடத்தில் நிலம் வாங்குவதற்காகக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் நிலத்தை வாங்கித் தரவில்லை. என்னிடமிருந்து வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதற்கு நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பாவான முன்னாள் போலீஸ் உயரதிகாரி ரமேஷ் குடவாலாவும் உடந்தையாக இருந்தார். எனவே, அவர்கள் இருவருடமிருந்தும் என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீது போலீஸில் நடவடிக்கை எடுக்காததால் இது குறித்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் நடிகர் சூரி. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரியான ரமேஷ் குடவாலா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சென்னை போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் அடையாறு போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தச் செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாக நடிகர் விஷ்ணு விஷால் தரப்பிலிருந்து இதற்கு மறுப்புச் செய்தியும் வந்துவிட்டது.

விஷ்ணு விஷால் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் மீதும் என் தந்தை மீதும் வைக்கப்பட்டிருக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளைப் பற்றிப் படித்தது மிகுந்த அதிர்ச்சிகரமாகவும், வருத்தமாகவும் இருந்தது. சிலர் உள்நோக்கத்துடன் செயல்படுவது கண்கூடாகத் தெரிகிறது.

உண்மையில் திரு. சூரி, விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸுக்கு ஒரு அட்வான்ஸ் பணத்தைத் திரும்பத் தர வேண்டும். ‘கவரிமான் பரம்பரை’ என்ற படத்துக்காக 2017-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட பணம் அது, சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

சட்டத்தின் மீதும் நீதித் துறையின் மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த நேரத்தில் இது பற்றி இன்னும் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது. நாங்கள் சட்டம் அனுமதிக்கும் பாதையில் செல்வோம்…” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருவருமே முழுமையான தகவல்களை வெளியிடாமல் இருப்பதால் இரு தரப்பினருக்குமே வெளியில் சொல்ல முடியாத ஏதோவொரு சிக்கல் இருப்பதை உணர முடிகிறது.

விசாரணையில் தெரிய வரட்டும்..!

The post நடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி பரபரப்பு புகார்..! appeared first on Touring Talkies.

]]>