Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் சூர்யா – Touring Talkies https://touringtalkies.co Mon, 05 Dec 2022 04:00:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் சூர்யா – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! https://touringtalkies.co/actor-suriya-left-balas-vanangaan-movie/ Sun, 04 Dec 2022 15:49:12 +0000 https://touringtalkies.co/?p=28026 தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் இயக்குநர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த பாலா தன் முதல் படத்திலேயே ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க செய்தார். மேலும் இப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டி சென்றார் பாலா. இதற்குப் பின்பு ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சூர்யாவை வைத்து இயக்கி பெரும் வெற்றியடைந்தார் பாலா. அதோடு சூர்யாவின் அப்பா சிவக்குமாருடன் பாலாவுடனான நட்பு […]

The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தரமான படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்களை கொண்டிருப்பவர் இயக்குநர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த பாலா தன் முதல் படத்திலேயே ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க செய்தார். மேலும் இப்படத்திற்காக தேசிய விருதையும் தட்டி சென்றார் பாலா.

இதற்குப் பின்பு ‘நந்தா’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களில் சூர்யாவை வைத்து இயக்கி பெரும் வெற்றியடைந்தார் பாலா. அதோடு சூர்யாவின் அப்பா சிவக்குமாருடன் பாலாவுடனான நட்பு தனித்துவம் வாய்ந்தது. பாலாவுக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்ததே சிவக்குமார்தான். அந்த அளவுக்கு பாலா சிவக்குமார் குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் ‘2-டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ என்ற படத்தை துவங்கினார் பாலா. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு சூர்யா மற்றும் பாலா இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என பேசப்பட்டது. ஆனால் இந்த வதந்தியை சூர்யா தரப்பு மறுத்தது. இதையடுத்து இப்படத்தின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது ‘வணங்கான்’ படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகுவதாக இயக்குநர் பாலாவே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று இரவு இயக்குநர் பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இதுதான் :

என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான் திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

‘நந்தா’வில் நான் பார்த்த சூர்யா, ‘பிதாமகன்’-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம்.

மற்றபடி ‘வணங்கான்’ படப் பணிகள் தொடரும்…

இவ்வாறு அந்த அறிக்கையில் இயக்குநர் பாலா தெரிவித்துள்ளார்.

The post ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகினார்..! appeared first on Touring Talkies.

]]>
“விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி https://touringtalkies.co/if-vikram-2-is-made-rolex-will-surely-come-actor-suriya-promises/ Tue, 11 Oct 2022 08:08:19 +0000 https://touringtalkies.co/?p=25189 கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் […]

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி நடித்து சூப்பர் ஹிட்டான படம் ‘விக்ரம்’.  இந்தப் படத்தில் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் அவர் தோன்றும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் நடந்த ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த நடிகர் சூர்யாவிடம், இந்த ரோலக்ஸ்’ கேரக்டர் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “நான் இன்று என்னவாக இருந்தாலும் அதற்கு ஊக்கமாக இருந்தவர் அண்ணன் கமல்ஹாசன்தான். அவர் இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னதும் என்னால் மறுக்க முடியவில்லை. அவருக்காகவே அந்த ‘ரோலக்ஸ்’ கேரக்டரில் நடித்தேன்..” என்றார்.

“ரோலக்ஸ் மீண்டும் திரையில் தோன்றுவாரா..?” என்ற கேள்விக்கு, “இதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அந்தப் படத்தின் 2-ம் பாகம் உருவானால் அந்த கேரக்டரில் நிச்சயமா நான் நடிப்பேன்” என்றார்.

The post “விக்ரம்-2′ உருவானால் ரோலக்ஸூம் நிச்சயமாக வருவான்” – நடிகர் சூர்யா வாக்குறுதி appeared first on Touring Talkies.

]]>
“விருமனுக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கலை” – நடிகர் கார்த்தியின் பெருமிதப் பேச்சு https://touringtalkies.co/i-didnt-get-a-ticket-for-viruman-actor-karthis-proud-speech/ Wed, 17 Aug 2022 09:12:41 +0000 https://touringtalkies.co/?p=23848 நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது ‘விருமன்’ திரைப்படம். இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “விட்டுக் கொடுத்து செல்வதுதான் குடும்பத்திற்கு […]

The post “விருமனுக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கலை” – நடிகர் கார்த்தியின் பெருமிதப் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவின் 2-டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில், இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியாகி தொடர்ந்து வசூல் வாகை சூடி வருகிறது விருமன்’ திரைப்படம்.

இந்த மாபெரும் வெற்றிக்கு துணை நின்ற நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்களின் குடும்பங்களை கொண்டாடும் வகையில், ‘விருமன்’ படத்தின் வெற்றி விழா, சென்னை வி.ஜி.பி. கோல்டன் பீச் ரிசார்ட்ஸில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, “விட்டுக் கொடுத்து செல்வதுதான் குடும்பத்திற்கு அழகு. ஒன்றாக இருப்பது அவ்வளவு சுலபமானதல்ல; சேர்ந்து இருப்பதற்கு நிறைய சகிப்புத் தன்மை வேண்டும். நம்மைவிட அவர்கள் முக்கியம் என்று நினைக்கும் மனம் வேண்டும். இந்த விஷயங்களை இந்த விருமன்’ படம் மூலமாக தமிழக மக்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கிறோம்.

பலரும் படம் முடிந்து வெளியில் வரும்போது “எங்கள் குழந்தைகளுக்கு இது பெரிய பாடமாக இருக்கிறது…” என்று கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் கிராமத்தில்தான் நன்றாக போகும். நகரத்தில் ஓரளவுக்குத்தான் போகும் என்று சிலர் கூறினார்கள். ஆனால், நகரத்தில் எங்களுக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. நான் கேட்டே டிக்கெட் கிடைக்கவில்லை.

இந்த இரண்டு வருட கொரோனா காலகட்டத்தில் எல்லோரும் வீட்டிலேயே உட்கார்ந்து ஓடிடி-யில் கொரியன் படமாகப் பார்த்து பழகி இருப்பார்கள். தியேட்டருக்கு வந்து பார்க்க விரும்ப மாட்டார்களோ? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஒருவேளை நம் மக்கள் மாறிவிட்டார்களா? என்ன நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால், அப்படியெல்லாம் யாரும் மாறவில்லை. நம் பண்பாடு, கலாச்சாரம் என்றுமே மாறப் போவதில்லை என்பதற்கு இந்த விருமன்’ படத்தின் வெற்றி எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

இந்தக் கொண்டாட்டமே எங்கள் குடும்பங்களில் தியாகத்தால்தான் நாங்கள் வெளியில் சென்று உழைக்க முடிகிறது. அவர்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி வெளியே அழைத்து சென்றிருக்கிறோமா..? வாய்ப்பே இல்லையா..? ஆகையால், ஒரே நாளில் அனைவரையும் சேர்த்துப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.

குழந்தைகள் இதனை அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். அம்மாவை அழைத்து வந்துருக்கிறோம் என்று கூறினார்கள். கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எத்தனை நாள் அவர்களை வெளியே அழைத்து சென்றிருப்போம்..? சாப்பாடு வாங்கி கொடுத்திருப்போம்..? ஆகையால்தான் இந்தப் படத்தில் அதிதியை ஹோட்டலுக்கு அழைத்து செல்லும் காட்சியை வைத்தோம்.

பெண்கள் அசதியாக இருக்கிறது. ஹோட்டலுக்கு அழைத்து செல்லுங்கள் என்று கேட்பது சோம்பேறித்தனம் கிடையாது. தினமும் சமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளைக்காவது சமைக்காமல் சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான்.

அந்த வகையில் பெண்களுக்கு ஓய்வு கொடுக்கவும், சந்தோசமாக இருக்கவும்தான் இந்த விழாவை திட்டமிட்டோம். இப்போது சந்தோசமாக இருக்கிறது. இதுபோல் விளையாடி பல நாட்கள் ஆகிறது. அதிதியிடம் தோல்வியடைந்ததில் மகிழ்ச்சிதான்.

பட குழுவினரும், பத்திரிகை நண்பர்களும் ஒன்று திரண்டு இங்கு வந்திருப்பதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அனைவரும் கண்டிப்பாக உணவருந்தி விட்டு செல்லுங்கள். இந்த விழாவை சிறப்பாக உருவாக்கி கொடுத்த ராஜாவுக்கு நன்றி…” என்றார்.

The post “விருமனுக்கு எனக்கே டிக்கெட் கிடைக்கலை” – நடிகர் கார்த்தியின் பெருமிதப் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா https://touringtalkies.co/actor-surya-wrote-a-letter-to-his-fans/ Sat, 23 Jul 2022 05:03:25 +0000 https://touringtalkies.co/?p=23355 நடிகர் சூர்யா நாயகனாக நடித்து, தயாரித்த ‘சூரரைப் போற்று’ படம் 5 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறது. சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் தற்போது அமெரிக்காவில் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார். இந்தச் சூழலில் நடிகர் சூர்யா இந்த தேசிய விருதுகளுக்காக திரைப்பட ரசிகர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதம் இது : வணக்கம். அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள். ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு   ’ஐந்து தேசிய […]

The post தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா நாயகனாக நடித்து, தயாரித்த ‘சூரரைப் போற்று’ படம் 5 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.

சூர்யா தன் மனைவி ஜோதிகாவுடன் தற்போது அமெரிக்காவில் விடுமுறையைக் கொண்டாடி வருகிறார்.

இந்தச் சூழலில் நடிகர் சூர்யா இந்த தேசிய விருதுகளுக்காக திரைப்பட ரசிகர்களுக்கும், தனது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.

அந்தக் கடிதம் இது :

வணக்கம்.

அன்பான வாழ்த்துகளால் வாழ்வை நிறைக்கும் அனைவருக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றிகள்.

‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு   ’ஐந்து தேசிய விருதுகள்’ கிடைத்திருப்பது  பெருமகிழ்ச்சி அளிக்கிறது. பெருந்தொற்று காலத்தில் எதிர்பாராத நெருக்கடிகளுக்கு இடையில் வெளியான இத்திரைப்படத்திற்கு  இந்திய அளவில் வரவேற்பு கிடைத்தது.

தன்னம்பிக்கை நிறைந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்வைச் சிறந்த திரைப்படமாக்க பல ஆண்டுகள் உழைத்த, இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் படைப்புத் திறனுக்குச் சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

தேசிய விருது பெறுகிற சுதா கொங்கரா – ஷாலினி உஷாநாயர், ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி,  இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

சிறந்த திரைப்படத்தை தயாரிக்க துணை நின்ற படக் குழுவினர் அனைவருக்கும் இந்த அங்கீகாரம் உரியது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை என்னுடன் பகிர்ந்து கொள்ளும் சகோதரர் அஜய் தேவ்கன் அவர்களுக்கும், மேலும் தேசிய விருது பெறுகிற இயக்குநர் வசந்த் சாய், ஸ்ரீகர் பிரசாத், லஷ்மி ப்ரியா சந்திரமௌலி, இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் 68-வது தேசிய விருது பெறுகிற சக கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.  

’நேருக்கு நேர்’ திரைப்படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து அறிமுகம் செய்த இயக்குநர் வசந்த் சாய் அவர்களுக்கும், தயாரிப்பாளர் இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும், வழிகாட்டலும் தந்து எப்போதும் துணை நிற்கும் அம்மா, அப்பா, கார்த்தி, பிருந்தா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் வலியுறுத்திய என் ஜோதிகாவிற்கும், அன்பு பிள்ளைகள் தியா, தேவ் ஆகியோருக்கும் இந்த விருதை அன்புடன் உரித்தாக்குகிறேன். 

என் முயற்சிகளை வரவேற்று கொண்டாடும் மக்களுக்கும், என்னுடைய ஏற்றத் தாழ்வுகளில் எப்போதும் உடனிருக்கும் அன்பு தம்பி-தங்கைகளுக்கும் நெஞ்சம் நிறைந்த அன்பும்.. நன்றியும்..!

இந்த தேசிய விருது அங்கீகாரம், நல்ல திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றும் ஊக்கத்தை அளிக்கிறது. தேர்வுக் குழுவினருக்கும், இந்திய அரசிற்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

அன்பின் வாழ்த்துகளால் நெகிழச் செய்கிற அனைவருக்கும் மீண்டும் நன்றி..!

அன்புடன்,

சூர்யா

The post தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா appeared first on Touring Talkies.

]]>
ஜோதிகா முன்பாகவே சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்த பெண் நடன இயக்குநர் https://touringtalkies.co/a-female-choreographer-who-had-given-a-love-letter-to-surya/ Wed, 26 Jan 2022 11:49:47 +0000 https://touringtalkies.co/?p=20440 நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக பிரபல பெண் நடன இயக்குநரான பாபி கூறியிருக்கிறார். பாபி, நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரிடம் உதவியாளராக நிறைய சினிமாக்களில் நடன உதவியாளராகப் பணியாற்றியவர். சின்ன வயதில் இருந்தே சூர்யாவின் ரசிகையாக இருந்த பாபிக்கு சூர்யா நடித்த ஒரு படத்தில் உதவி நடன இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தைரியத்தை வரவழைத்து லவ் லெட்டரை சூர்யாவிடம் கொடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பேபி. அந்தப் பேட்டியில் பேபி சொல்லும்போது, […]

The post ஜோதிகா முன்பாகவே சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்த பெண் நடன இயக்குநர் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்ததாக பிரபல பெண் நடன இயக்குநரான பாபி கூறியிருக்கிறார்.

பாபி, நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டரிடம் உதவியாளராக நிறைய சினிமாக்களில் நடன உதவியாளராகப் பணியாற்றியவர்.

சின்ன வயதில் இருந்தே சூர்யாவின் ரசிகையாக இருந்த பாபிக்கு சூர்யா நடித்த ஒரு படத்தில் உதவி நடன இயக்குநராகும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் தைரியத்தை வரவழைத்து லவ் லெட்டரை சூர்யாவிடம் கொடுத்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார் பேபி.

அந்தப் பேட்டியில் பேபி சொல்லும்போது, “நான் பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே சூர்யாவை ரொம்பவும் பிடிக்கும். காக்க காக்க’ படத்தில் பிருந்தா மாஸ்டருக்கு உதவியாளராக நான் பணி புரிந்தேன்.

அப்போது ஒரு நாள் என்னைக் கொஞ்சம் மாற்றி’ பாடல் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். சூர்யாவும், ஜோதிகாவும் ஜீப்பில் வரும் காட்சி படமாக்கிக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு பேப்பரில் “சூர்யா நீங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களை காதலிக்கிறேன்…” என்று எழுதி, சூர்யாவிடம் சென்று “உங்களிடம் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்” என்று கூறினேன். அதற்கு சூர்யா “சொல்லுங்க பாபி.. என்ன விஷயம்..?” என கேட்டார்.

அப்போது நான் அவரிடம் லட்டரை நீட்டினேன். “இதில் என்ன இருக்கு..?” என்று கேட்டார் சூர்யா. “நான் உங்களை லவ் பண்றேன் ஸார். இதுல எழுதியிருக்கேன்..” என்று தைரியமாகச் சொன்னேன்.

அதைக் கேட்டு சூர்யா, அங்கிருந்த கேமராமேன், ஜோதிகா, பிருந்தா மாஸ்டர் உட்பட அனைவரும் ஒரு நிமிஷம் திகைத்துவிட்டனர். அப்போது சூர்யா “சாரி பாபி.. நான் ஜோதிகாவை லவ் பண்றேன்…” என்று சிரித்தபடியே கூறினார்.

அப்போது ஜோதிகா, “என்ன பாபி கொஞ்சம் முன்னாடி சொல்லிருக்கலாம்ல…” என்று என்னைக் கிண்டல் செய்தார். அதற்கு நான், “அதனால் இப்போது ஒன்றும் பிரச்சனையில்லை. நான் சூர்யாவை காதலிக்கிறேன்.. நீங்க என்கூடவே வந்திருங்க…” என்று சூர்யாவிடம் நானும் என்று விளையாட்டாக சொன்னேன்” என்று சொல்லியிருக்கிறார் நடன  இயக்குநர் பாபி.

The post ஜோதிகா முன்பாகவே சூர்யாவுக்கு காதல் கடிதம் கொடுத்த பெண் நடன இயக்குநர் appeared first on Touring Talkies.

]]>
கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம் https://touringtalkies.co/jai-bhim-movie-goes-to-golden-globe-awards-2022/ Thu, 02 Dec 2021 06:21:53 +0000 https://touringtalkies.co/?p=19690 நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.  ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இயக்குநர் த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி […]

The post கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த நவம்பர் 2-ம் தேதி வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

நாடு முழுவதும் உள்ள திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இயக்குநர் த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படம் உலக அளவில் திரைப்படங்களை மதிப்பிடும் ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தைப் பிடித்தது.  

இந்த நிலையில், உலக அளவில் சினிமா துறையில் உயரிய விருதாக கருதப்படும் ‘கோல்டன் குளோப்’ விருதுக்கு ஜெய் பீம்’ திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா வெளியிடும் ‘கூழாங்கல்’ திரைப்படமும் ‘கோல்டன் குளோப்’ விருதுக்காக அனுப்பப்ட்டுள்ளது.

இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் தேர்வாகும் என்பது குறித்து விரைவில் தெரியவரும். 

The post கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுகிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போனது..! https://touringtalkies.co/etherkum-thnunindhavan-movie-release-date-postponed/ Fri, 19 Nov 2021 13:58:29 +0000 https://touringtalkies.co/?p=19484 இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலுவும், இசையமைப்பாளராக இமானும் பணி புரிந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் 2022 பொங்கல் தினத்தன்று வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு இந்தப் படம் வரும் […]

The post ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போனது..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் பாண்டிராஜின் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக ரத்னவேலுவும், இசையமைப்பாளராக இமானும் பணி புரிந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் 2022 பொங்கல் தினத்தன்று வெளியாவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது அதில் திருத்தம் செய்யப்பட்டு இந்தப் படம் வரும் 2022  பிப்ரவரி 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, சூர்யா ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

பொங்கலுக்கு இந்தப் படம் வராததற்குக் காரணம் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் என்கிறார்கள் திரையுலகத்தினர்.

பொதுவாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமே கைப்பற்றி வருகிறது. அந்த வகையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வாங்கியுள்ளது.

அதே சமயம் அதே பொங்கல் தினத்தன்று வெளியாகவிருக்கும் அஜித்தின் ‘வலிமை’ படத்தைத் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனமே வெளியிடவுள்ளதால் தியேட்டர்கள் ஒதுக்கீட்டில் குழப்பம் ஏற்படும் என்பதால்தான் எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

மேலும், தெலுங்கில் சூர்யாவின் படங்களுக்கென்று தனி மார்க்கெட் உள்ளது. தற்போது பொங்கலுக்கு ‘ஆர்ஆர்ஆர்’, ‘பீம்லா நாயக்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் தெலுங்கு படங்கள் வெளியாக இருப்பதால் அந்த சமயத்தில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் சூர்யாவின் படத்திற்குத் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனாலும் எதற்கும் துணிந்தவன்’ பட வெளியீடூ ஒரு மாதம் தள்ளிப் போயிருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீடு தள்ளிப் போனது..! appeared first on Touring Talkies.

]]>
“சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் https://touringtalkies.co/it-is-wrong-to-use-violence-against-surya-director-bharathiraja-condemns-anbumani-ramadoss/ Tue, 16 Nov 2021 17:09:52 +0000 https://touringtalkies.co/?p=19416 ‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்புமணி ராமதாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது : சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத் தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த […]

The post “சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்புமணி ராமதாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தலைவராக இருக்கும் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக அவர் இன்றைக்கு வெளியிட்டுள்ள அறிக்கை இது :

சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று பேசப்படும் ஏற்றத் தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக நின்று திரைப்பதிவாக்கம் செய்த உரிமையில் உங்களுக்கு, உங்கள் பாரதிராஜா எழுதுகிறேன்.

திரைத் துறை என்பது எல்லாவற்றையும் பேசக் கூடியது. கல்வி, காதல், மோகம், சரி, தவறு, சமூக சீர்திருத்தம் இப்படி மனித வர்க்கம் சந்திக்கும் எல்லா நிகழ்வுகளையும் படம் பிடித்து மக்களிடமே முன் வைக்கும் ஒரு இயங்கு தளம்.

பெரும்பாலும் சினிமா என்ற இயங்குதளம் மக்களை நல்வழிப்படுத்தவேமுயற்சிக்கும். அதனால்தான் கதாநாயகன் நல்லவனாக சித்தரிக்கப்படுகிறான். பல சமூக, அரசியல் மாற்றங்களின் பங்களிப்பாக சினிமா இருந்திருக்கிறது

பல வாழ்க்கைப் படைப்புகள் நம் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அது மக்கள் முன்னிலையில் வைக்கப்படும்போது உண்மை எது? தவறு எது? எனத் தெரிந்தே அவர்கள் அதை வரவேற்றோ, புறந்தள்ளியோ வருகின்றனர்.

அப்படி ஒரு படைப்பாக வரவேற்கப்பட்டதே “ஜெய்பீம்”. அன்பு பிள்ளைகள் சூர்யா-ஜோதிகாவால் தயாரிக்கப்பட்டு தம்பி ஞானவேல் இயக்கத்தில் வெளிவந்த படம்.

கடந்த கால சம்பவங்களைப் படமாக்கும் போது.. அதை படமாகப் பார்த்துவிட்டு சமூக மாற்றத்திற்கு அது எவ்வகையில் பயனாகும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும்.

அதில் பூதக் கண்ணாடியை அணிந்துகொண்டு குற்றம் பார்க்கத் தொடங்கினால் எந்த ஒரு படைப்பும் எளியோருக்காக பேசாமல் முடங்கிவிடும்.

இன்றைய எளியோர்களின் சமத்துவ அதிகாரத்திற்காக அன்றே பேசியது நாங்கள்தான்.

அன்று என்னுடைய வேதம் புதிது’ படத்தை முடக்க முயற்சித்தபோது புரட்சித் தலைவர் என்னுடன் நின்றார். அந்த படைப்பு எத்தகைய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்தியது..? அது போன்றதொரு படைப்புதான் “ஜெய் பீம்” படமும்.

இதை படைப்பாக மட்டுமே பார்க்க முயன்றால் நீங்களும், உங்கள் தந்தையும் போராடும் அதே எளியவர்களுக்கான போராட்டம்தான் இது.

தம்பி சூர்யாவைப் பொருத்தவரையில் அவர் யாரையும் காயப்படுத்தும் தன்மை கொண்டவரல்ல. கல்வி, எளியவர்களுக்கான உதவி என நகர்ந்து கொண்டிருப்பவர். ஒரு இயக்குநரின் சேகரிப்பிற்கு தன்னையும்… தன் நிழலையும் தந்து உதவியுள்ளவர்.

அவருக்கு எல்லோரும் சமம். யாரையும் ஏற்ற இறக்கத்தோடு கண்காணிப்பவரல்ல. தன்னால் எங்கேனும் ஒரு மாற்றம் நிகழுமா? எனப் பார்ப்பவர்.

அவரை ஒரு சமூகத்திற்கு எதிரானவராக சித்தரிப்பதும்… அவர் மீதான வன்மத்தையும்… வன்முறையை ஏவிவிடுவதும் மிகத் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும்.

ஒரு படைப்பின் சுதந்திரத்தை அதன்படியே விட்டுவிடுவது இன்னும் அதிகமான நல்ல படைப்புகளைக் கொண்டு வர உதவும்.

சினிமாவைவிட இங்கு கவனம் செலுத்த நிறைய வேலைகள் இருக்கின்றன. சமூக மாற்றங்களுக்கான உங்கள் போராட்டங்களே நிறைய உள்ளது. தங்கள் தகுதிக்கு நீங்கள் இங்கு வர வேண்டாமே..!

நடுவண் அரசு, மாநில அரசு, சார்ந்திருக்கும் மக்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனைகள் போன்ற எத்தனையோ இடங்களில் உங்களின் குரல் ஒலிக்கட்டும்.

எங்கள் திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்குப் பயந்து படம் எடுக்க வேண்டும் எனத் தெரியவில்லை.

இப்படியே போனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் வாசல்களிலும் எங்கள் படைப்பாளிகள் கதை சொல்லக் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

வம்படியாக திணித்தோ, திரித்தோ அப்படத்தில் எந்த கருத்துருவாக்கமும் செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க மாற்றங்களும் செய்யப்பட்டிருக்கிறது. திரைத்துறையை அதன் இயல்பில் இயங்க விட கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை எப்போதும் செவிகொடுத்து கேட்கும் மனநிலையில் உள்ள மனிதனுடன் ஏன் தேவையற்ற வார்த்தைப் போர்..?

ஒரு அலைபேசியில் முடிந்திருக்க வேண்டியதும் சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டித் தீர்க்க வேண்டியதுமான இப்பிரச்சனையை எதிர்காற்றில் பற்றியெரியும் நெருப்புத் துகளாக்கியது ஏன் எனப் புரியவில்லை.

எதுவாக இருந்தாலும், எங்களோடு பேசுங்கள். சரியென்றால் சரி செய்து கொள்ளும் நண்பர்கள் நாங்கள். எப்போதும் நட்போடு பயணப்படுவோம். +

நன்றி..!

எப்போதும் உங்கள் நட்புறவையே விரும்பும்

பாரதிராஜா,

தலைவர்,

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்.

The post “சூர்யா மீது வன்முறையை ஏவுவது தவறு…” – அன்புமணி ராமதாஸூக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் appeared first on Touring Talkies.

]]>
“நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு https://touringtalkies.co/1-lakh-rupees-reward-for-attacking-actor-surya-paattaali-makkal-party-announcement/ Mon, 15 Nov 2021 18:04:43 +0000 https://touringtalkies.co/?p=19413 ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…” என்று மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு […]

The post “நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், “நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்…” என்று மயிலாடுதுறை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய் பீம்’ திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  சுகுணாசிங்கிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் அந்தக் கட்சியினர் ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும், இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர்.

நடிகர் சூரியா நடித்த ஜெய் பீம்’ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டிவிட்டு வேண்டுமென்றே  வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும்விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின்  பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத் தலைர் குருவின் பெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப் பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப் பெரிய  கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர்.

எனவே ஜெய் பீம்’ பட  தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குர் ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல்’ திரைப்படம் திரையிடப்பட்ட  திரையரங்கிற்கு வந்த பா.ம.க.வினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக் கொண்டிருந்த வேல்’ திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பா.ம.க.வினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். இதனால் படம் நிறுத்தப்பட்டது. படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  மாவட்ட செயலாளர்  பழனிச்சாமி, “ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு  லட்சம் ரூபாய் பரிசு  அளிக்கப்படும். மேலும், இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பா.ம.க. அனுமதிக்காது…” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இச்சம்பவம் அறிந்து அங்கே விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார் திரைப்பட காட்சியை நடத்தமாறு கூறினார்கள். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தியேட்டர் நிர்வாகிகள் “நாங்கள் படத்தை மாற்றிக் கொள்கிறோம்” என்று சொல்லி காட்சிகளை ரத்து செய்தனர்.

The post “நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு” – பாட்டாளி மக்கள் கட்சி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் https://touringtalkies.co/jai-bhim-movie-praises-from-indian-film-industry/ Wed, 10 Nov 2021 07:16:21 +0000 https://touringtalkies.co/?p=19309 நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று ஒலித்த பட்டாசுகளின் சத்தத்தைவிட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலி சத்தம்தான் அதிகமாக இருந்தது. நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் […]

The post இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று ஒலித்த பட்டாசுகளின் சத்தத்தைவிட, சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலி சத்தம்தான் அதிகமாக இருந்தது.

நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ வெளியானது. 

இதனை கண்டு ரசித்த பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நீதிமன்றத்தை மையப்படுத்திய ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களின் பாராட்டுகளை இடையறாமல் வழங்கி வருகிறார்கள்.

இயக்குநர் தா.செ.ஞானவேல், கலைஞர்கள் சூர்யா, லிஜோ மோள் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் என இந்த படத்தில் நடித்த அனைவரும் நடிகர்களாக திரையில் தோன்றாமல், அந்தந்த கதாபாத்திரத்திற்கு உரிய இயல்புடன் நடித்ததால் ஏராளமானவர்கள் பாராட்டுகிறார்கள். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் பிரபலங்களும் இப்படத்திற்கு தங்களின் ஆதரவை மனமுவந்து தெரிவித்து வருகிறார்கள். 

தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரை உலகின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும், பிரபலங்களும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு தங்களுடைய சமூக வலைதளங்களின் மூலமாக பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் தன்னுடைய சுட்டுரையில், “சில திரைப்படங்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து, உங்களை சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்ள தூண்டுகின்றன. சூர்யா மற்றும் அமேசான் பிரைம் வீடியோவின் கூட்டணியில் வெளியாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் புத்திசாலித்தனமான படைப்புத் திறன், படத்தை ஈடுபாட்டுடன் காணத் தூண்டுகிறது. உன்னதமான படைப்பு. அதன் நோக்கத்துடன் உங்களையும் கவர்ந்திழுக்கிறது…” என பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் அரவிந்த்சாமி தன்னுடைய சுட்டுரையில், “சூர்யா மற்றும் படக் குழுவினருக்கு நன்றி. ‘ஜெய் பீம்’ என்ற உன்னதமான படைப்பை வழங்கிய ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்….” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய சுட்டுரையில், “ஜெய் பீம் துணிச்சலான படைப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்துவதுடன், நீதித்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. தவறாமல் காண வேண்டிய அற்புதமான படைப்பு…” என பதிவிட்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி நடிகரான நானி தன்னுடைய சுட்டுரையில், “இந்த ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்தேன். சூர்யா சாருக்கு மரியாதை கலந்த வணக்கம். படத்தில் செங்கேணி’ மற்றும் ‘ராஜாகண்ணு’வாக நடித்த நடிகர்களின் நடிப்பு தனித்துவம் மிக்கது. ஒப்புயர்வற்ற மாணிக்கம் போன்ற இந்தப் படைப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், அவர்களது கடின உழைப்பிற்கும் என் வாழ்த்துக்கள்…” என பதிவிட்டிருக்கிறார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய சுட்டுரையில், ”சாதி எதிர்ப்பையும் சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே- இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனி வரும். அது நம் தலைமுறையை மாற்றும். ஜெய் பீம்’ திரைப்படத்தை கொடுத்த திரு சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல், 2-டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக் குழுவினருக்கு பெரும் நன்றிகள்…!” என பதிவிட்டிருக்கிறார்.

இதனை தவிர்த்து இந்திய அளவில் சமூக வலைதளப் பக்கத்தில் தீவிரமாக இயங்கிவரும் ஊடகவியலாளர் சோலி அமண்டா பெய்லி, நடிகர் சித்தார்த், நடிகர் யோகிபாபு, நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, கொல்கத்தா ஐ.ஐ.டி.யில் பணி புரியும் ஆணையர் சுக்ரீவ் மீனா, ஒடிசா மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணிபுரியும் விஜய் ஐஏஎஸ், சட்டீஸ்கர் மாநிலத்தில் காவல்துறை உயர் அதிகாரியாக பணியாற்றும் சந்தோஷ் சிங் ஐபிஎஸ், தகவல் தொடர்பு துறையில் தொழில் முனைவோராக திகழும் மயூர் சேகர் உள்ளிட்ட ஏராளமானவர்களின் நேர்மறையான பாராட்டை பெற்றிருக்கிறது. ரசிகர்களின் பேராதரவும் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த ‘ஜெய் பீம்’ படத்தின் அற்புத தருணங்களையும், உன்னதமான படைப்பினையும் இதுவரை கண்டு ரசிக்காதவர்கள் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் இப்படம் காணக் கிடைக்கிறது.

The post இந்தியத் திரையுலகத்தில் பாராட்டுக்களைப் பெற்று வரும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>