Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் சிவக்குமார் – Touring Talkies https://touringtalkies.co Sun, 06 Mar 2022 12:05:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் சிவக்குமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 தன் அம்மாவை நினைத்து மேடையில் கண் கலங்கிய நடிகர் சிவக்குமார் https://touringtalkies.co/actor-sivakumar-stared-at-the-stage-thinking-of-his-mother/ Sun, 06 Mar 2022 12:04:17 +0000 https://touringtalkies.co/?p=21095 தனது மகன் கார்த்தி நடத்தி வரும் ‘உழவன் பவுண்டேஷன்’ நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது தனது தாயாரை நினைத்து கண் கலங்கினார். தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்களில் கார்த்தி ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘சுல்தான்’ ஆகிய படங்களில் விவசாயத்தை உயர்த்திப் பிடிக்கும் கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்திருந்தார். திரையில் மட்டும் விவசாயம் சம்பந்தப்பட்ட கருத்தினை முன்வைத்துவிட்டு நின்றுவிடாமல் நிஜ வாழ்க்கையிலும் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக […]

The post தன் அம்மாவை நினைத்து மேடையில் கண் கலங்கிய நடிகர் சிவக்குமார் appeared first on Touring Talkies.

]]>
தனது மகன் கார்த்தி நடத்தி வரும் ‘உழவன் பவுண்டேஷன்’ நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது தனது தாயாரை நினைத்து கண் கலங்கினார்.

தமிழ்ச் சினிமாவின் மூத்த நடிகரான சிவகுமாரின் மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.

இவர்களில் கார்த்தி கடைக்குட்டி சிங்கம்’, ‘சுல்தான்’ ஆகிய படங்களில் விவசாயத்தை உயர்த்திப் பிடிக்கும் கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்திருந்தார். திரையில் மட்டும் விவசாயம் சம்பந்தப்பட்ட கருத்தினை முன்வைத்துவிட்டு நின்றுவிடாமல் நிஜ வாழ்க்கையிலும் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார் நடிகர் கார்த்தி.

இந்த அமைப்பின் சார்பில் சிறந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் விழா சமீபத்தில் சென்னையில் தி.நகரில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கார்த்தியின் அப்பாவான நடிகர் சிவக்குமாரும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “இந்த உழவன் ஃபவுண்டேஷன்’ அமைப்பை நடிகர் சிவகுமாரின் மகன் தொடங்கவில்லை. ஒரு ஏழை விவசாயி பெண்ணின் பேரன்தான் தொடங்கியிருக்கிறார். எனது தாயார் ஏழை விவசாயி. விவசாயம் சம்பந்தப்பட்ட பலர் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் நான் எனது பிள்ளைகளாகவே பார்க்கிறேன்.

விவசாயி என்றால் எலும்பும் தோலுமாக இருப்பான், தோலில் துண்டு அணிந்திருப்பான் என்பதை தாண்டி இளம் தலைமுறையினர் நவீன விவசாயத்தை செய்து விவசாயத்தை காக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்த அமைப்பை கார்த்தி தொடங்கியிருக்கிறார்.

தேவையில்லாமல் பணத்தை செலவழித்து படித்து பிறரை முதலாளி ஆக்குவதை நிறுத்திவிட்டு நாம் நமது சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்து நம்மையும் நமது சமூகத்தையும் காப்பதே சிறப்பானது என்று நான் கருதுகிறேன்.

நான் பத்து மாதக் குழந்தையாக இருக்கும்போது எனது தந்தை இறந்துவிட்டார். நான் இதை பல மேடைகளில் கூறியிருக்கிறேன். ஒருவேளை எனது தாயார் இறந்து எனது தந்தையார் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயமாக  நான் அனாதை ஆகியிருப்பேன். ஏனென்றால் எந்தத் தந்தையாலும் பத்து மாதக் குழந்தையை எடுத்து வளர்த்துவிட முடியாது.

ராகி, கம்பு, தினையெல்லாம் எங்கள் மண்ணில் விளையவில்லை. எருக்கஞ்செடியும், அரளி விதையும்தான் அதிகம் விளையும். எருக்கம் பால் கொஞ்சம் கொடுத்திருந்தாலும் நான் உயிரிழந்திருப்பேன். ஆனால், அத்தனை கஷ்டத்திலும் சாமி கொடுத்த குழந்தையை விட்டுவிடக் கூடாது என்று என்னை வளர்த்து ஆளாக்கினார் எனது தாயார்…” என்று சொன்னபோது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார் சிவகுமார்.

The post தன் அம்மாவை நினைத்து மேடையில் கண் கலங்கிய நடிகர் சிவக்குமார் appeared first on Touring Talkies.

]]>
“எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன்” – எழுத்தாளர் கி.ரா.வுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி..! https://touringtalkies.co/i-have-lost-my-wise-father-actor-sivakumar-tribute-to-writer-ki-rajanarayanan/ Tue, 18 May 2021 07:09:31 +0000 https://touringtalkies.co/?p=15141 தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர். சாகித்ய  அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். ‘கி.ரா.’ என்று தமிழக மக்களால் அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார். ‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’  போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன் அவர்கள் தமது 99-வது வயதில் நேற்று நள்ளிரவில் மறைந்தார். எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவகுமார் […]

The post “எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன்” – எழுத்தாளர் கி.ரா.வுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர். சாகித்ய  அகாடமி விருது பெற்ற எழுத்தாளர். கி.ரா.’ என்று தமிழக மக்களால் அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் நேற்று இரவு இறைவனடி சேர்ந்தார்.

‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’  போன்ற காலத்தால் அழியாத படைப்புகளைத் தந்த கி. ராஜநாராயணன் அவர்கள் தமது 99-வது வயதில் நேற்று நள்ளிரவில் மறைந்தார்.

எழுத்தாளர் கி.ரா. அவர்களின் மறைவு குறித்து நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நான் பிறந்த பத்து மாதங்களில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ‘ஞானத் தந்தை’ 99 வயது வாழ்ந்த  கி.ரா. அவர்களை இழந்து விட்டேன். கி.ரா. அவர்களும், அவரது மனைவியான மறைந்த கணவதி அம்மாளும், எனக்கு இன்னொரு தாய் தந்தையராக இருந்தவர்கள்.

எனக்கும், அவருக்கும் 35 வருட காலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தப்பட்ட பல விழாக்களுக்காக நான் பாண்டிச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன். அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்…” என்று தெரிவித்துள்ளார்.

The post “எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன்” – எழுத்தாளர் கி.ரா.வுக்கு நடிகர் சிவக்குமார் அஞ்சலி..! appeared first on Touring Talkies.

]]>
“உச்சி வகுந்தெடுத்து’ பாடல் எங்கேயிருந்து, எப்படி வந்தது..?” https://touringtalkies.co/uchi-vaghundhethu-song-story/ Thu, 26 Nov 2020 13:21:52 +0000 https://touringtalkies.co/?p=10407 இயக்குநரும், நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் முதலில் நாடக கதை ஆசிரியராக திரையுலகத்திற்குள் கால் வைத்தவர். ‘இதயம்’, ‘கல்தூண்’ என்ற இரண்டு புகழ் பெற்ற நாடகங்களே அவரை தமிழ்த் திரையுலகத்திற்குள் கொண்டு வந்தன. நடிகர் சிவக்குமாரின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்கு இவர்தான் திரைக்கதை அமைத்திருந்தார். “அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே தமிழக கிராமங்களில் மக்கள் பாடிய நாடோடி பாட்டுக்கள், ஒப்பாரி பாட்டுக்கள், கூத்துக்களில் பாடப்பட்ட பாடல்கள்தான்…” என்கிறார் விஜய் கிருஷ்ணராஜ். இது குறித்து அவர் அளித்திருக்கும் […]

The post “உச்சி வகுந்தெடுத்து’ பாடல் எங்கேயிருந்து, எப்படி வந்தது..?” appeared first on Touring Talkies.

]]>
இயக்குநரும், நடிகருமான விஜய் கிருஷ்ணராஜ் முதலில் நாடக கதை ஆசிரியராக திரையுலகத்திற்குள் கால் வைத்தவர். ‘இதயம்’, ‘கல்தூண்’ என்ற இரண்டு புகழ் பெற்ற நாடகங்களே அவரை தமிழ்த் திரையுலகத்திற்குள் கொண்டு வந்தன.

நடிகர் சிவக்குமாரின் 100-வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்கு இவர்தான் திரைக்கதை அமைத்திருந்தார். “அந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே தமிழக கிராமங்களில் மக்கள் பாடிய நாடோடி பாட்டுக்கள், ஒப்பாரி பாட்டுக்கள், கூத்துக்களில் பாடப்பட்ட பாடல்கள்தான்…” என்கிறார் விஜய் கிருஷ்ணராஜ்.

இது குறித்து அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில், “நான் எழுதிய ‘கல்தூண்’ நாடகத்தைப் பார்க்க சிவக்குமார் வந்திருந்தார். அதைப் பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டிய அவர், தன்னுடைய 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்துக்கு திரைக்கதை எழுதித் தரச் சொன்னார். அதோடு அந்தப் படத்தில் ஒரு இணை இயக்குநராகவும் நான் பணியாற்றினேன். சில காட்சிகளில் நடித்தும் இருக்கிறேன்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற பல கிராமத்து சொலவடைகள் அனைத்தும் கிராமத்துப் பெண்கள் பேசும் பேச்சுக்கள்தான். அதில் பலவற்றை நடிகர் சிவக்குமாரின் அம்மாவே எங்களிடம் சொன்னது. அதையும் படத்தில் சேர்த்திருந்தோம்.

படத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரேமிலும் அந்தப் பகுதி மக்களின் வாழ்வியலையும் சேர்த்துதான் கொடுத்திருந்தோம். நான் அந்தப் படத்தில் கலை இயக்குநர் வேலையைக்கூட சேர்ந்து செய்திருந்தேன்.

அந்தப் படத்தில் இருக்கும் புகழ் பெற்ற பாடலான ‘உச்சி வகுந்தெடுத்து’ பாடல் கிராமங்களில் பெண்கள் பாடும் ஒப்பாரி பாடலில் இருந்துதான் உருவானது. அந்த இசைக்கு பாடல் வரிகளை எழுதும்போது நான் இளையராஜாவிடம் அந்த ஒப்பாரி பாடல் வரிகளைப் பாடிக் காட்டினேன்.

“பட்டில மாடு கட்டி பாலக் கறந்து வச்சா
பால் திரிஞ்சி போனதுன்னு சொன்னாங்க..”

“வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொய்ச்சுதுன்னு சொன்னாங்க..”

பொங்கலுக்குச் செங்கரும்பு பூவான பூங்கரும்பு
சங்கரய்யா தின்னதுன்னு சொன்னாங்க..”

இப்படி இந்தப் பாடல்களைப் பாடிக் காட்டினேன்.

அப்போது அந்தப் பாடலை எழுத வந்த கவிஞர் புலமைப்பித்தன் இந்தப் பாடல்களை மிக லாவகமாக அந்தப் பாடலில் இணைத்துக் கொண்டார்.

இன்றுவரையிலும் அந்தப் பாடல் தமிழ்ச் சினிமாவில் ஒரு மறக்கவியலாத பாடலாக அமைந்திருக்கிறது..” என்றார்.

The post “உச்சி வகுந்தெடுத்து’ பாடல் எங்கேயிருந்து, எப்படி வந்தது..?” appeared first on Touring Talkies.

]]>
“ஜெயசித்ரா மட்டுமே காக்க வைப்பார்…” – ஸ்டில்ஸ் ரவியின் வருத்தம்..! https://touringtalkies.co/jayachithra-insult-to-me-stills-ravi-working-experience/ Sun, 08 Nov 2020 11:22:36 +0000 https://touringtalkies.co/?p=9836 தமிழ்த் திரையுலகின் பிரபலமான புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி தன்னை திரையுலகத்தில் மதித்த, அவமதித்த நடிகர், நடிகைகளைப் பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் பேசும்போது, “என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. எல்லாரும் ஒரே மாதிரி போட்டோக்களை எடுக்கும்போது நான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா மாத்தி எடுக்கணும்ன்னு நினைப்பேன். இதனாலேயே 1980-களில் எனக்கு தமிழ்த் திரையுலகத்தில் நல்ல பெயர் இருந்தது. என்னுடைய துவக்கக் காலத்தில் பல திரையுலகப் பிரபலங்கள் […]

The post “ஜெயசித்ரா மட்டுமே காக்க வைப்பார்…” – ஸ்டில்ஸ் ரவியின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகின் பிரபலமான புகைப்பட கலைஞரான ஸ்டில்ஸ் ரவி தன்னை திரையுலகத்தில் மதித்த, அவமதித்த நடிகர், நடிகைகளைப் பற்றி இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் பேசும்போது, “என்கிட்ட ஒரு பழக்கம் இருக்கு. எல்லாரும் ஒரே மாதிரி போட்டோக்களை எடுக்கும்போது நான் மட்டும் கொஞ்சம் வித்தியாசமா மாத்தி எடுக்கணும்ன்னு நினைப்பேன். இதனாலேயே 1980-களில் எனக்கு தமிழ்த் திரையுலகத்தில் நல்ல பெயர் இருந்தது.

என்னுடைய துவக்கக் காலத்தில் பல திரையுலகப் பிரபலங்கள் என் வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்கள். நடிகர் சிவக்குமார், நடிகை ஸ்ரீப்ரியா இதில் முக்கியமானவர்கள். ஸ்ரீப்ரியாதான் ரஜினி நாயகனாக நடித்த முதல் படமான ‘பைரவி’ படத்தில் என்னை ஸ்டில் போட்டோகிராபர் பணிக்கு சிபாரிசு செய்தார். அந்தப் படத்தின் டைட்டிலில்தான் என்னுடைய பெயர் முதன்முதலாக வெளிவந்தது.

சிவக்குமார் ஸார் தொடர்ந்து பல படங்களுக்கு எனக்கு சிபாரிசு செய்து வேலை வாங்கிக் கொடுத்தார். ‘அன்னக்கிளி’ செல்வராஜ் சுபா சுந்தரம் போட்டோ ஸ்டூடியோவுக்கு தினமும் வந்து போவார். அப்போது அங்கேயிருந்த என்னிடம் நிறைய பேசுவார். என்னை அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.

அவர் ‘காமதேனு’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தில் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் ஹீரோவாக நடித்தார். அந்தப்  படத்தின் விளம்பரத்தில் என்னைக் கேட்காமலேயே என் பெயரைப் போட்டுவிட்டு அதைக் கொண்டு வந்து என் கையில் கொடுத்தார். எனக்கு அது மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

நான் புகைப்படங்கள் எடுக்கும்போது பலரும் அதை வரவேற்பார்கள். நான் விரும்புவரையிலும் அவர்கள் போஸ் கொடுப்பார்கள். இதில் எம்.ஜி.ஆர்.தான் பெஸ்ட். எத்தனை ஸ்டில்ஸ் என்றாலும் அசராமல் போஸ் கொடுப்பார்.

1980-களில் பழைய நடிகர், நடிகைகள் அனைவரையுமே நான் புகைப்படம் எடுத்திருக்கிறேன். நடிகை ஜெயசித்ராவுடன் மட்டுமே எனக்கு கசப்பான அனுபவம் கிடைத்து. அவரிடத்தில் எப்போது புகைப்படம் எடுக்கப் போனாலும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..என்று சொல்லி நம்மைக் காக்க வைத்துவிட்டு, பக்கத்தில் யாரிடமாவது ஏதாவது பேசிக் கொண்டேயிருப்பார். அதன் பின்புதான் போஸ் கொடுப்பார். இவர் ஒருவரிடம் மட்டும்தான் எனக்கு இந்த கசப்பான அனுபவம் கிடைத்தது..” என்றார் ஸ்டில்ஸ் ரவி.

The post “ஜெயசித்ரா மட்டுமே காக்க வைப்பார்…” – ஸ்டில்ஸ் ரவியின் வருத்தம்..! appeared first on Touring Talkies.

]]>
“இனி உங்கள் வழிக்கு வர மாட்டேன்…” – எம்.ஜி.ஆரிடம் சொன்ன நடிகர் சோபன்பாபு…! https://touringtalkies.co/actor-shoban-babu-meeting-with-mgr/ Mon, 19 Oct 2020 09:59:36 +0000 https://touringtalkies.co/?p=8982 சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ‘ராமன் பரசுராமன்’. நடிகர் சுரேஷின் தந்தையான கோபிநாத் இயக்கி தயாரித்த அந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவானது, தெலுங்கு மொழியில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சோபன்பாபு. அவருக்கும், நடிகை ஜெயலலிதாவுக்கும் இருந்த உறவு வாசகர்கள் அறிந்ததே. அந்தப் படத்துக்காக ஜப்பானில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிய அந்தப் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் அந்தக் காட்சிகளை மட்டும் எடிட் […]

The post “இனி உங்கள் வழிக்கு வர மாட்டேன்…” – எம்.ஜி.ஆரிடம் சொன்ன நடிகர் சோபன்பாபு…! appeared first on Touring Talkies.

]]>

சிவகுமார் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படம் ‘ராமன் பரசுராமன்’. நடிகர் சுரேஷின் தந்தையான கோபிநாத் இயக்கி தயாரித்த அந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவானது,

தெலுங்கு மொழியில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் சோபன்பாபு. அவருக்கும், நடிகை ஜெயலலிதாவுக்கும் இருந்த உறவு வாசகர்கள் அறிந்ததே.

அந்தப் படத்துக்காக ஜப்பானில் ஒரு சண்டைக் காட்சியை படமாக்கிய அந்தப் படத்தின் ஸ்டன்ட் மாஸ்டர் அந்தக் காட்சிகளை மட்டும் எடிட் செய்து தருமாறு நடிகர் ஜெயம் ரவியின் தந்தையான எடிட்டர் மோகனிடம் கேட்டுக் கொண்டார்.

எடிட்டிங் பணியில் அப்போது மிகவும் சிறந்தவராக விளங்கிய மோகன் அந்தச் சண்டைக் காட்சிகளை அவருக்காக மிக அழகாக எடிட் செய்து கொடுத்தார். அந்த சண்டைக் காட்சிகள் மிகச் சிறப்பாக  அமையவே அதை எம்ஜிஆருக்கு போட்டு காட்ட விரும்பினார் அந்த படத்தின் கதாநாயகனான நடிகர் சிவகுமார்.

எம்.ஜி.ஆர். அந்தச் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவில் அமைந்திருந்த தியேட்டருக்கு வந்தபோது அந்த சண்டைக் காட்சிகளைப் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகர் சோபன்பாபு எம்ஜிஆரை பார்த்தவுடன் அவரது காலில் விழுந்து வணங்கிவிட்டு “இனி, உங்களுக்கு குறுக்கே எப்போதும் வர மாட்டேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றாராம்.

இந்த தகவலை டூரிங் டாக்கீஸின் ‘சாய் வித் சித்ரா’ நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எடிட்டர் மோகன்.

The post “இனி உங்கள் வழிக்கு வர மாட்டேன்…” – எம்.ஜி.ஆரிடம் சொன்ன நடிகர் சோபன்பாபு…! appeared first on Touring Talkies.

]]>