Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
நடிகர் அருண் விஜய் – Touring Talkies https://touringtalkies.co Thu, 12 May 2022 09:17:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png நடிகர் அருண் விஜய் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஓ மை டாக் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/oh-my-dog-movie-review/ Fri, 22 Apr 2022 09:08:00 +0000 https://touringtalkies.co/?p=21996 அருண் விஜய் ஊட்டியில் இருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார். தனது மனைவி மகிமா, மகன் அர்னவ் மற்றும் தந்தை விஜய்குமாருடன் வசித்து வருகிறார் அருண் விஜய். தனது மகன் அர்னவ்வை உலகத் தரம் வாய்ந்த பள்ளியில் படிக்க வைப்பதற்காக தனது வீட்டை அடகு வைத்து கடன் பெற்று அந்தப் பணத்தில் அர்னவ்வை ஒரு மிகப் பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார் அருண் விஜய். தற்போது அந்தக் கடனுக்கான வட்டியைக்கூட கட்ட முடியாமல் தவித்துக் […]

The post ஓ மை டாக் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
அருண் விஜய் ஊட்டியில் இருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் வேலை செய்து வருகிறார். தனது மனைவி மகிமா, மகன் அர்னவ் மற்றும் தந்தை விஜய்குமாருடன் வசித்து வருகிறார் அருண் விஜய்.

தனது மகன் அர்னவ்வை உலகத் தரம் வாய்ந்த பள்ளியில் படிக்க வைப்பதற்காக தனது வீட்டை அடகு வைத்து கடன் பெற்று அந்தப் பணத்தில் அர்னவ்வை ஒரு மிகப் பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார் அருண் விஜய். தற்போது அந்தக் கடனுக்கான வட்டியைக்கூட கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

அர்னவ் 2-ம் வகுப்பு மாணவனாக இருந்தாலும் படு சுட்டியாக இருக்கிறான். அப்பாவும், அம்மாவும் அவன் மீது அளவு கடந்த பாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் அதே ஊட்டியில் வசிக்கிறார் பெரும் பணக்காரரான வினய். இவருடைய முழு நேரத் தொழிலே நாய்களை வளர்ப்பதுதான். விலையுயர்ந்த நாய்களை வாங்கி வளர்த்து அவற்றுக்குப் பயிற்சிகள் கொடுத்து நாய்களுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.  

வினய் இதுவரையிலும் ஆறு போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றிருக்கிறார். தற்போது ஏழாவதாக முறையாகவும் வெற்றி பெற்றால் அது கின்னஸ் சாதனையாகும் என்பதால் அடுத்தப் போட்டிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் அவரிடத்தில் இருக்கும்  ‘சைபீரியன் அஸ்கி’ வகை நாய் குட்டிகளில் ஒன்று கண் தெரியாமல் இருப்பதை பார்த்துவிட்டு, அதைக் கொன்று விடும்படி தன் அடியாட்களிடம் சொல்கிறார். அவர்கள் அந்தக் குட்டியை கொலை செய்து புதைப்பதற்காக எடுத்துச் செல்லும்போது, அது எப்படியோ தப்பியோடி விடுகிறது.

இந்தக் கண் தெரியாத குட்டி நாய், அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அர்னவ் அந்த நாய்க் குட்டிக்கு சிம்பா’ என்று பெயரிட்டு பாசத்துடன் வளர்த்து வருகிறான். அர்னவ்வின் இந்த நாய் வளர்ப்பு பள்ளியில் இருப்பவர்களுக்குத் தெரிந்து பின்பு வீட்டுக்குத் தெரிந்தாலும் நாய் வளர்ப்பில் அர்ணவ் தீவிரமாக இருக்க.. வேறு வழியில்லாமல் அருண் விஜய்யும் இதை ஏற்றுக் கொள்கிறார்.

சிம்பா வளர, வளர அதற்குக் கண் தெரியவில்லை என்பதையறியும் அருண் விஜய் சிம்பாவுக்கு கண் ஆபரேஷன்  செய்து கண் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்கிறார்.

அதே நேரம் ஊட்டியில் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டி நடைபெறுவதை அறிந்து சிம்பாவை அர்னவ் அதில் கலந்து கொள்ள வைக்கிறார். அதில் சிம்பா மூன்றாவதாக வென்று இறுதிப் போட்டிக்கு செல்கிறது.

தனக்குப் போட்டியாக யாருமே இல்லாத சந்தோஷத்தில் இருந்த வினய்க்கு இது அதிர்ச்சியைக் கொடுக்கிறது. வீடு தேடி வந்து நாயைக் கேட்கிறார். அருண் விஜய் குடும்பத்தினர் இதைக் கொடு்க்க மறுக்கிறார்கள்.

இதனால் கோபமடையும் வினய், சிம்பாவை இந்தக் கடைசி போட்டியில் கலந்து கொள்ளாமல் இருக்க பல வழிகளில் முயற்சி செய்கிறார்.

இந்த நெருக்கடிகளை தாண்டி சிம்பா போட்டியில் கலந்து கொண்டதா..? வெற்றி பெற்றதா.. இல்லையா..என்பதுதான் மீதிக் கதை.

அருண் விஜய் தனது அனுபவ நடிப்பைக் காண்பித்திருக்கிறார். ஒரு தந்தையாக தனது மகனது சந்தோஷத்திற்காக அவர் விட்டுக் கொடுக்கும் இடங்களிலும், கடைசியில் சிம்பு மீது அவருக்கே பாசம் உண்டாகி அதனை ஜெயிக்க வைக்க போராடும்விதத்திலும் தனது நடிப்பு பங்களிப்பை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

ஒரு பக்கம் கரிச்சுக் கொட்டும் அப்பா விஜயகுமார், ஒரு பக்கம் கடன்காரன்.. மறுபக்கம் பள்ளியில் பிரச்சினையைக் கிளப்பி வரும் மகன்.. என்று பலவித பிரச்சினைகளை சந்திக்கும் தகப்பன் ஸ்தானத்தில் அருண் விஜய்யின் நடிப்பு குறையில்லாதது என்றே சொல்லலாம்.

இவருடைய நிஜ மகனான அர்னவ் படத்திலும் அருண் விஜய்க்கு மகனாக நடித்திருக்கிறான். நடிப்பு என்னும் திறமை பரம்பரை, பரம்பரையாக அப்படியே தொடர்ந்து வருவதை அவனது நடிப்பில் உணர முடிகிறது. சின்னப் பையன்களுக்கே உரித்தான அந்த வேகம், படபடப்பு, பிடிவாதம் எல்லாவற்றையும் தனது சின்ன முகத்தில் அழகாகக் காட்டியிருக்கிறான் அர்னவ். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். இவருடன் ஈடு கொடுத்து சைபீரியன் அஸ்கி வகை நாயான சிம்பாவும் நன்றாக நடித்துள்ளது.

தாத்தா விஜயகுமார் கண்டிப்பு நிறைந்தவராக.. யதார்த்த நிலைமையை எடுத்துச் சொல்லி மகனுக்கு அறிவுரை சொல்லும் பாசக்கார அப்பாவாக நிறைவாக நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் மனைவி மகிமா நம்பியார் ஒரு நடுத்தர குடும்பத் தலைவியாக தான் இருக்கும் காட்சிகளில் இயல்பாக நடித்திருக்கிறார்.  

ஸ்டைலிஷ் வில்லனாக வினய் ராய் தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். இவர் மட்டுமல்ல பானுசுந்தர், ஏ.வெங்கடேஷூம் இப்படியே அவரவர் கேரக்டர்களுக்கு நியாயமாக நடித்திருக்கிறார்கள்.

மற்றவர்களில் மனோபாலாவும், சுவாமிநாதனும் திரையில் தோன்றியிருக்கிறார்கள். வினய்யின் அடியாட்கள் இருவரும் சிரிப்பை வரவழைக்க பெரிதும் முயன்று தோற்றிருக்கிறார்கள்.

ஊட்டியின் அழகையும், இயற்கை எழிலையும் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோபிநாத். நாய் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிகவும் கஷ்டப்பட்டு படம் பிடித்திருக்கிறார் போலும்.. பாராட்டுக்கள்.

சூப்பர் சுப்பு, பாலாஜி, மோகன், சரஸ் மேனன் ஆகியோர் ஆங்கில பாடல் வரிகளில் தமிழ் மெட்டோடு இசையை குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் கொடுத்து. பின்னணி இசையையும் ரசிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.

விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக  தொய்வில்லாத கச்சிதமான படத் தொகுப்பினை செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் மேகநாதன். ஊட்டி வீட்டின் செட் அமைப்பு அழகாக உள்ளது. அதேபோல் நாய்களுக்கான விளையாட்டுப் போட்டிக்கான அரங்கமும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. கலை இயக்குநர் மைக்கேலுக்கு இதற்காக சிறப்பு பாராட்டு உரித்தாகட்டும்.

அதேபோல் நாய்களுக்கு கடினமாக டிரெயினிங் கொடுத்திருக்கிறார்கள். “100 நாட்கள் டிரெயினிங் கொடுத்த பின்புதான் நாய்களை நடிக்க வைத்தோம்” என்றார் இயக்குநர். மிகவும் கடினமான பணிதான். அந்தப் பணியைச் செய்த டிரெயினருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தப் படம் முழுக்க, முழுக்க குழந்தைகளுக்கான படம். அதோடு கூடவே குடும்ப செண்டிமெண்ட் கலந்து வளர்ப்பு பிராணியான நாயைப் பிரதானப்படுத்தி யதார்த்தமான கதையை கொடுத்துள்ளார் இயக்குநர் சரோவ் சண்முகம்.

வளர்ப்பு பிராணிகளிடத்தில் நாம் அன்பு செலுத்தினால் அதற்கான பிரதிபலனை நமக்கு அவைகள் திருப்பிக் கொடுத்து நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதைத்தான் இந்தப் படத்தின் நீதியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

குழந்தைகளுக்கான படம் என்பதால் சட்டென்று மாறும் திரைக்கதைகள் நிறையவே படத்தில் இருக்கிறது. விஜயகுமார் மருத்துவமனையில் தன் உயிரைக் காப்பாற்றிய நாய்க்காக மனம் மாறும் காட்சியும், சிம்பாவை போட்டியில் கலந்து கொள்ள வைக்க ஆடியன்ஸ் குரல் கொடுக்கும் காட்சியும், இறுதியில் வினய் மனம் மாறும் திடீர் டிவிஸ்ட்டும்,  இந்தப் படத்தின் தன்மைக்காக வைக்கப்பட்ட  திரைக்கதை என்பதால் குறை சொல்ல முடியாதுதான்.

மொத்தத்தில் எளிதில் ஊகிக்கக் கூடிய திரைக்கதையாகவே இருந்தாலும், எந்த இடத்திலும் தொய்வு வராத அளவுக்கு குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் படமாக்கியிருக்கிறார் இயக்குர் சரோவ் சண்முகம்.

இந்த சிம்பா’வை குடும்பத்துடன் பார்த்து மகிழலாம்..!

RATING : 3 / 5

The post ஓ மை டாக் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/border-movie-title-release-function-held-on-the-park-hotel/ Thu, 15 Apr 2021 07:26:46 +0000 https://touringtalkies.co/?p=14374 ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’. அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், ‘பக்ஸ்’ என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார். ‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள […]

The post ஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பார்டர்’.

அருண் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகை ரெஜினா கசாண்ட்ரா, புதுமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், பக்ஸ்’ என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ். இசை அமைத்திருக்கிறார்.

‘AV31’ என பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னை ஜெமினி மேம்பாலம் அருகேயுள்ள தி பார்க் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் மூத்த நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர், அறிவழகன், நடிகர் அருண் விஜய், நடிகை ஸ்ஃடெபி பட்டேல், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர் ஏ.எல்.விஜய்,  இயக்குநர் கார்த்திக் நரேன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் பிரபு திலக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கமாக சென்னையின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் ‘த பார்க்’ நட்சத்திர ஹோட்டலில் முகப்பு பகுதியில் 3டி மேப்பிங் தொழில் நுட்பத்தில் இப்படத்தின் டைட்டிலான ‘பார்டர்’ வெளியிடப்பட்டது.

தமிழ்த் திரை உலகில் முதன்முறையாக இந்த தொழில் நுட்பத்தில் ஒரு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், விழாவிற்கு வருகை தந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் வியப்புடன் கண்டுகளித்து கரவொலி எழுப்பினர்.

திடீரென்று முன்னறவிப்பின்றி நடத்தப்பட்ட இந்தத் திடீர் விழாவினால் ஜெமினி மேம்பாலத்தின் அருகேயுள்ள சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பல டூவீலர் பயணிகள் வண்டிகளை ஓரங்கட்டிவிட்டு பாரக் ஹோட்டலின் கட்டிடத்தின் மீது ஒளிபரப்பான டைட்டில் வீடியோவை பார்த்து ரசித்தனர். இதனால் தொடர்ந்து 15 நி்மிடங்களுக்கு அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னர் விழாவில் படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் நடிகர் அருண் விஜய் பேசுகையில், “இது போன்ற ஒரு நன்னாளில் நான் நடித்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவல் அச்சத்திற்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கைதி’ படத்தின் பின்னணி இசையை பார்த்தும், கேட்டும் வியப்படைந்தேன். இப்படத்தின் கதையைக் கேட்டபிறகு இயக்குநர், சாம் சி.எஸ்.தான் நம்ம படத்திற்கும் இசையமைக்கிறார் என்று சொன்னதும் நான் உற்சாகமானேன். ஏனெனில் இந்த ‘பார்டர்’ படத்திற்கு பின்னணி இசைக்கு பெரும் பங்களிப்பு உண்டு.

என்னுடைய கலை உலக பயணத்தில் நான் நம்பும் ஒரு சில இயக்குநர்களில் அறிவழகன் சாரும் ஒருவர். ஒரு நடிகருக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இயக்குநர்கள்தான். அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் எனக்கு பக்க பலமாகவும், நல்லதொரு புரிதலுடனும் இருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் நல்லவிதமாக அமைந்து விட்டது.  இதற்கு முன் வேறு ஒரு தலைப்பை வைக்கலாமென திட்டமிட்டிருந்தோம். ஆனால் ‘பார்டர்’ என்ற தலைப்பு மிகப் பொருத்தமாக அமைந்தது, வெற்றிக்கான ஆசியாக நினைக்கிறேன்.

நடிப்பைப் பொருத்தவரை இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. திரைப்படங்கள் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு ரசிகர்கள் வருகை தருவார்கள் என்பதை இந்த கொரோனா தொற்று காலகட்டத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பார்டர்’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் 3-டி மேப்பிங் தொழில் நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது குழுவினர் மும்பைக்கும், புது டெல்லிக்கும் கடந்த நான்கு மாத காலமாக பறந்து, பறந்து கடினமாக உழைத்ததை நான் நேரில் கண்டிருக்கிறேன்.  தற்போது ரசிகர்கள் அதனை பெரிதும் வரவேற்கிறார்கள்.

என்னுடைய நடிப்பையும் அடுத்த கட்டத்திற்கு இந்த ‘பார்டர்’ படம் நகர்த்தியிருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

The post ஜெமினி மேம்பாலத்தின் டிராபிக்கை ஸ்தம்பிக்க வைத்த ‘பார்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஹரி –அருண் விஜய் இணையும் புதிய படம் 2021 பிப்ரவரியில் துவங்குகிறது..! https://touringtalkies.co/director-hari-arun-vijay-movie-will-starts-2021-february/ Wed, 16 Dec 2020 08:17:38 +0000 https://touringtalkies.co/?p=11103 இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது. அதிரடி ஆக்ஷன், குடும்பக் கதையுடன் தென் தமிழ்நாட்டுப் பின்புலம் என்கிற கலவையில் இயக்குநர் ஹரி இயக்கிய பெரும்பாலான படங்களும் வெற்றி பெற்றவை. .அவற்றில் நடித்த கதாநாயகர்களைப் பல படிகள் மேலே ஏற்றி வைத்தவை. அப்படிப்பட்ட வணிக இயக்குநரான ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இப்புதிய படம் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திள்ளது. அருண் விஜய், தனது சகோதரியின் கணவரான ஹரியின் இயக்கத்தில் […]

The post ஹரி –அருண் விஜய் இணையும் புதிய படம் 2021 பிப்ரவரியில் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் கூட்டணியில் புதிய படம் உருவாக இருக்கிறது.

அதிரடி ஆக்ஷன், குடும்பக் கதையுடன் தென் தமிழ்நாட்டுப் பின்புலம் என்கிற கலவையில் இயக்குநர் ஹரி இயக்கிய பெரும்பாலான படங்களும் வெற்றி பெற்றவை. .அவற்றில் நடித்த கதாநாயகர்களைப் பல படிகள் மேலே ஏற்றி வைத்தவை.

அப்படிப்பட்ட வணிக இயக்குநரான ஹரியின் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இப்புதிய படம் பெரும் எதிபார்ப்பை ஏற்படுத்திள்ளது. அருண் விஜய், தனது சகோதரியின் கணவரான ஹரியின் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் படத்தை ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘இமைக்கா நொடிகள்’, ‘இஃக்லூ’ ஆகிய படங்களைத்  தயாரித்த டிரம் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கிறார்.

இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பினை 2021 பிப்ரவரியில் துவக்கி, ஆகஸ்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

சரியான திட்டமிடல் – முறையான முன் தயாரிப்போடு படப்பிடிப்புக்குச் செல்பவர் இயக்குநர் ஹரி. எனவே படத்தை விரைவாக முடித்து குறிப்பிட்ட வெளியீட்டுத் தேதிக்குள்  வெளியிட வழி செய்வார் என்று படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் பல பகுதிகளில் நடைபெறும்.

The post ஹரி –அருண் விஜய் இணையும் புதிய படம் 2021 பிப்ரவரியில் துவங்குகிறது..! appeared first on Touring Talkies.

]]>
கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! https://touringtalkies.co/director-hari-joined-with-actor-arun-vijay/ Sun, 08 Nov 2020 10:33:22 +0000 https://touringtalkies.co/?p=9829 பரபரப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரி, தற்போது அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை. சூர்யாவை வைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ‘அருவா’ படத்தை இயக்க முழுக் கதை, திரைக்கதை, வசனத்துடன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவர் அந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்.. அந்த பிராஜெக்ட்டை அவர் கை கழுவினார். இந்தப் படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம் சூர்யா. சூர்யா இருக்கும் தைரியத்தில் விஜய்யிடமும், விக்ரமிடம்கூட போகாமல் இருந்த ஹரிக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. […]

The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.

]]>
பரபரப்பான இயக்குநர்களில் ஒருவராக இருந்த ஹரி, தற்போது அமைதியாக இருக்க வேண்டிய சூழ்நிலை.

சூர்யாவை வைத்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ‘அருவா’ படத்தை இயக்க முழுக் கதை, திரைக்கதை, வசனத்துடன் தயாராகத்தான் இருந்தார். ஆனால், அவர் அந்தப் படத்தின் கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்.. அந்த பிராஜெக்ட்டை அவர் கை கழுவினார். இந்தப் படத்துக்குக் கொடுத்த கால்ஷீட்டை பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம் சூர்யா.

சூர்யா இருக்கும் தைரியத்தில் விஜய்யிடமும், விக்ரமிடம்கூட போகாமல் இருந்த ஹரிக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது. இத்தனை மாதங்கள் காத்திருந்தது முழுக்க வீணாகிப் போன கோபத்தில் இருந்தார் ஹரி.

இந்தக் கோபத்தைத்தான் “சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியாகும்…” என்று சூர்யா சொன்னவுடன், உடனேயே சூர்யாவைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஹரி. இருந்தும் சூர்யா அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

இடையில் தான் கையில் வைத்திருக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்றாற் போன்ற ஹீரோக்களைத் தேடிய ஹரிக்கு ஏமாற்றமே கிடைத்தது. விஜய்யின் பக்கத்திலேயே போக முடியவில்லை. விக்ரமும் இப்போ என் ஸ்டைலே மாறிருச்சு என்று சொல்லி எஸ்கேப்பாக, தனித்து நின்றார் ஹரி.

இப்போது இவருக்குக் கை கொடுத்திருப்பது இவருடைய மைத்துனரான நடிகர் அருண் விஜய். இயக்குநர் ஹரி, தனது இத்தனை வருட கால திரையுலக வாழ்க்கையில் அருண் விஜய்யை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. அருண் விஜய்யை ஒரு படத்தில்கூட நடிக்க வைத்ததும் இல்லை.

இப்படியிருக்க நாம் ஏன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று நினைத்த மாமனும், மச்சானும், பட்ஜெட்டை கூற, குறைய மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து இதே ‘அருவா’ படத்தைத் துவக்குகிறார்களாம்.

‘தடம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றியிருக்கும் இடம் நோக்கியெல்லாம் ஓடத் துவங்கியிருக்கிறார் அருண் விஜய்.

வெற்றி கிட்டட்டும்..!

The post கடைசியாக இணைந்துவிட்டனர் மாமனும், மச்சானும்..! appeared first on Touring Talkies.

]]>