Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தலைப்பு – Touring Talkies https://touringtalkies.co Thu, 27 Oct 2022 14:45:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தலைப்பு – Touring Talkies https://touringtalkies.co 32 32 நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! https://touringtalkies.co/nadodi-manan-the-secret-of-the-title/ Fri, 28 Oct 2022 14:42:00 +0000 https://touringtalkies.co/?p=26122 ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை.  சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார். அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன்.  காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து […]

The post நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை.  சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார்.


அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன்.  காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து உருவாக்கினார்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் அப்படம் உருவானது. திரையுலகமே, எதற்காக இவ்வளவு செலவு செய்து ரிஸ்க் எடுக்கிறார் என அதிசயித்தது.

இதை  அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் வாய்விட்டே கேட்டுவிட்டார்கள்.

அதற்கு சிரித்தபடியே, “என் சம்பாத்தியம் முழுவதையும் இப்படத்திற்காக செலவு செய்துவிட்டேன். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் திரையுலகில் நான் வெற்றிகரமாக தொடர முடியும். அதாவது இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி. ஆகவேதான் படத்துக்கும் அபபடி பெயர் வைத்தேன்” என்று சொல்லி வியக்க வைத்தார்.

படம் வெற்றி பெற்று நிஜமாகவே திரையுலகின் மன்னன் ஆனார் எம்.ஜி.ஆர்.!

The post நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
தலைப்பு மாற்றப்பட்ட விஜய் படம்! https://touringtalkies.co/vijay-movie-with-changed-title/ Tue, 25 Oct 2022 06:26:51 +0000 https://touringtalkies.co/?p=25972 பெரிய நடிகர்களின் படங்களுக்கு படப்பிடிப்பு நடக்கும்போதுதான் பெயர் அறிவிக்கப்படும். அதுவரை நடிகரின் அடைமொழியைக் குறிப்பிட்டு தல 8, தளபதி 7 என்றுதான் அழைக்கப்படும். ஆனால் விஜய் நடித்த படத்துக்கு ஒரு பெயர் வைக்கப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டது தெரியுமா? முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த “துப்பாக்கி” படம்தான் அது. விஜய்யின் திரைப்பட வரலாற்றிலேயே, “துப்பாக்கி” திரைப்படம் முக்கியமானது.  குறிப்பாக இத்திரைப்படத்தின் இடைவேளை காட்சியில் விஜய் பேசிய “ஐ […]

The post தலைப்பு மாற்றப்பட்ட விஜய் படம்! appeared first on Touring Talkies.

]]>
பெரிய நடிகர்களின் படங்களுக்கு படப்பிடிப்பு நடக்கும்போதுதான் பெயர் அறிவிக்கப்படும். அதுவரை நடிகரின் அடைமொழியைக் குறிப்பிட்டு தல 8, தளபதி 7 என்றுதான் அழைக்கப்படும்.

ஆனால் விஜய் நடித்த படத்துக்கு ஒரு பெயர் வைக்கப்பட்டு பிறகு பெயர் மாற்றப்பட்டது தெரியுமா?

முருகதாஸ் இயக்கத்தில்  விஜய் நடிப்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த “துப்பாக்கி” படம்தான் அது.


விஜய்யின் திரைப்பட வரலாற்றிலேயே, “துப்பாக்கி” திரைப்படம் முக்கியமானது.  குறிப்பாக இத்திரைப்படத்தின் இடைவேளை காட்சியில் விஜய் பேசிய “ஐ அம் வெயிட்டிங்” என்ற  அதிரடி வசனம் இன்று வரை பிரபலம்.

இந்த படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ் முதலில் வைத்த பெயர், “மாலை நேர மழைத்துளி” என்பதுதான். பிறகு, “ஆக்சன் திரைப்படத்திற்கு வேறு அதிரடியான பெயர் வைக்கலாமே” என்ற யோசனை வர “துப்பாக்கி” என்று தலைப்பு வைக்கப்பட்டது.

விஜய் நடித்த படங்களிலேயே பெயர் மாற்றப்பட்ட  படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்.

The post தலைப்பு மாற்றப்பட்ட விஜய் படம்! appeared first on Touring Talkies.

]]>