Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co Tue, 24 Nov 2020 11:52:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..! https://touringtalkies.co/cinema-theatres-crisis-story/ Tue, 24 Nov 2020 11:52:38 +0000 https://touringtalkies.co/?p=10352 8 மாதங்கள் கழித்து கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக தியேட்டரின் மொத்த டிக்கெட்டுக்களையும் வழங்காமல் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இடைவேளையில் தின்பண்டங்கள் வாங்க ரசிகர்கள் கியூவில் நிற்கக் கூடாது. மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன. இதையும் தாண்டி மக்கள் நிச்சயமாகத் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், வந்த கூட்டம் தீபாவளியையொட்டிய […]

The post தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..! appeared first on Touring Talkies.

]]>
8 மாதங்கள் கழித்து கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக தியேட்டரின் மொத்த டிக்கெட்டுக்களையும் வழங்காமல் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இடைவேளையில் தின்பண்டங்கள் வாங்க ரசிகர்கள் கியூவில் நிற்கக் கூடாது. மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இதையும் தாண்டி மக்கள் நிச்சயமாகத் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், வந்த கூட்டம் தீபாவளியையொட்டிய சில தினங்கள் மட்டுமே தொடர்ந்து வந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் 10 பேர் அல்லது 15 பேராக வந்து செல்லத் துவங்க.. தியேட்டர் அதிபர்கள் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

இந்தக் கூட்டமில்லாத நிலையால் ஒவ்வொரு தியேட்டரிலும் மின்சாரக் கட்டணத்தை்ககூட கட்ட முடியாது என்னும் யதார்த்தத்தை பல தியேட்டர் உரிமையாளர்கள் உணர்ந்ததால் பல தியேட்டர்கள் திறந்த வேகத்தில் மூடப்பட்டுவிட்டன.

மக்களுக்கு கொரோனா பயம் ஒரு புறம்.. இன்னொரு பக்கம் கொரோனா தாக்கத்தால் பல்வேறு வழிகளில் பண வரவு குறைந்ததால் அவர்கள் கையிலும் பணமில்லாத நிலை.. இதனாலேயே கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை என்பதை யூகித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

தற்போது மழைக் காலம் வேறு.. சினிமா தியேட்டர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலே மக்கள் வெளியில் வர மாட்டார்கள். இந்த நேரத்தில் நிவார் புயல் உட்பட பல்வேறு மழை, வெள்ளம் என்று வரிசையாக சோதனைகள் வந்து கொண்டிருக்க மக்களின் கவனம் வேறு பக்கம் திசை திரும்பியிருக்கிறது.

இந்தச் சூழலில் எப்படி இந்த சினிமா தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மெட்ரோபாலிட்டன் ஊர்களில் இருக்கும் மால் தியேட்டர்களில்கூட இதே நிலைமைதான் என்றவுடன் என்ன செய்வது.. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்னையில் இருக்கும் ‘காசி’ தியேட்டர்ஸ் அதிரடி ஆபராக.. ஒரு டிக்கெட்டுக்கு இன்னொரு டிக்கெட் ப்ரீ என்று அறிவித்தது. போரூர் ‘ஜி.கே.’ தியேட்டரும் இந்த சலுகையை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறது.

இதன் கூடவே கேண்டீனில் விற்கும் பாப்கார்ன் முதற்கொண்டு அனைத்துத் திண்பண்டங்களுக்கும் விலை குறைப்பை சில தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

இருந்தாலும் மக்கள் தைரியமாக வந்து செல்லவும், தாராளமாக பணம் செலவு செய்யவும் வேண்டுமெனில் புத்தம் புதிய படங்கள் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விரும்புகிறார்கள்.

அதிலும், மிகப் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால் மட்டுமே இனிமேல் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். இல்லையெனில் இப்போது இருப்பதுபோல ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகளை விற்க முடியும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

“ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, கார்த்தி என்று ஸ்டார் நடிகர்கள் அனைவரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்தாலே போதும்..

ஒவ்வொரு நடிகருக்கும், ஒவ்வொரு படத்திற்கும் 3 வாரங்கள் என்று வைத்துக் கொண்டால்கூட வருடம் முழவதும் கூட்டம் வந்து கொண்டேயிருக்கும். வசூலுக்குக் குறைவில்லாமல் இருக்கும். நாங்களும் பொழைப்போம்.. சினிமா துறையும் நன்றாக இருக்கும். நடிகர், நடிகைகள், சினிமா தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலையும் கிடைக்கும்.

இதை மனதில் வைத்தாவது அந்த நடிகர்கள் மின்னல் வேகத்தில் தங்களது படங்களை முடித்துக் கொடுத்து படத்தைத் தியேட்டர்களுக்கு கொண்டு வர வேண்டும்..” என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதை நடிகர்களிடம் யார் போய் சொல்வது..?

The post தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..! appeared first on Touring Talkies.

]]>
VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? https://touringtalkies.co/vpf-charges-crisis-meeting-news/ Tue, 10 Nov 2020 06:38:05 +0000 https://touringtalkies.co/?p=9885 கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான். “சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” […]

The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
கொரோனா லாக் டவுனால் கிட்டத்தட்ட 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள் இன்றைக்கு திறக்கப்பட்டுவிட்டன. ஆனாலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

காரணம், “புதிய படங்களை நாங்கள் திரையிட மாட்டோம்” என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து அறிவித்த முடிவுதான்.

“சினிமா தியேட்டர்களில் படங்களை வெளியிடும் புரொஜெக்டருக்கான கட்டணமாக இதுவரையிலும் கோடிக்கணக்கான பணத்தை தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் நிறுவனங்களுக்கு கொடுத்திருப்பதால் இனிமேல் அந்தத் கட்டணத்தை நாங்கள் தர மாட்டோம்…” என்று தயாரிப்பாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்கள்.

ஆனால், “இது திரையீட்டுக்கான கட்டணம்தானே ஒழிய.. புரொஜெக்டருக்கான கட்டணம் இல்லை…” என்பது திரையரங்கு உரிமையாளர்களின் வாதம்.

இந்த முடிவுறாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக கடந்த சில நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள், கியூப் நிறுவனம், தயாரிப்பாளர்கள் ஆகியோருக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது “வெளிநாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு வி.பி.எஃப். கட்டணம் கிடையாது. ஆனால், இங்கே மட்டும் கியூப்புக்கு நாங்கள் ஏன் பணம் கட்ட வேண்டும்..?” என்று தயாரிப்பாளர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதற்குப் பதிலளித்த தியேட்டர்காரர்கள், “அப்போ ஹாலிவுட் படங்களுக்குத் தருவதுபோல நாம் பங்கு பிரித்துக் கொள்ளும் பெர்சேண்ட்டேஜை வைத்துக் கொள்வோமா..?” என்று எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்கள். ஆனால், இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையில் கியூப் நிறுவனம் தனது தற்போதைய கட்டணத்தில் இருந்து 50 சதவிகிதத்தை தள்ளுபடி செய்வதாக இறங்கி வந்தது. இதையும் தியேட்டர்காரர்கள் 60 சதவிகிதமாக்கச் சொல்ல அதையும் கியூப் ஏற்றுக் கொண்டது. “இதுவும் டிசம்பர் 31-ம் தேதிவரையிலுமே…” என்று சொன்னார்கள் கியூப் நிறுவனத்தார்.

ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்க மறுத்து “அடுத்த ஆண்டு மார்ச் 31-ம் தேதிவரையிலும் வேண்டும்…” என்றார்கள். இதனை தியேட்டர்காரர்களும், கியூப் நிறுவனத்தினரும் ஏற்றுக் கொண்டாலும் தயாரிப்பாளர்கள் மேலும் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.

“அந்த மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு நாங்கள் இந்தக் கட்டணத்தைக் கட்டவே மாட்டோம். இதை ஒரு நிபந்தனையாக வைக்கிறோம்…” என்றார்கள். ஆனால், இதனை கியூப் நிறுவனமும், தியேட்டர் உரிமையாளர்களும் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

பேச்சுவார்த்தையின் இன்னொரு கட்டத்தில், “தியேட்டர் உரிமையாளர்களே வி.பி.எஃப். கட்டணத்தை கட்டிக் கொள்ளட்டும். படத்தைத் திரையீட்டு முடிந்த பிறகு தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஷேர் தொகையில் அந்தப் பணத்தை அவர்கள் கழித்துக் கொள்ளட்டும்…” என்று தயாரிப்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

“அப்படியென்றால் எந்தவொரு பெரிய படத்திற்கும் தியேட்டர்காரர்களிடமிருந்து தயாரிப்பாளர்கள் முன் பணம் பெறக் கூடாது.. இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டால் நாங்கள் வி.பி.எஃப். கட்டணத்தைக் கட்டத் தயார்…” என்று தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இதனை தயாரிப்பாளர்கள் ஏற்காததால் இந்த வாதமும் தோல்வியாகிவிட்டது.

கடைசியாக இந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எடுக்கப்படாமல் முறிந்து போனது.

இதையடுத்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “எங்களது சங்கம் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியும் நமது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்வரையிலும் எங்களது சங்க உறுப்பினர்களின் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்தது..!

இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று காலை கியூப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வி.பி.எஃப். கட்டணத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. ஆனாலும், இந்தச் சலுகை இந்த நவம்பர் மாதம்வரையிலும்தான் என்று தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனையை தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, “தியேட்டர்கள் திறக்கப்பட வேண்டும். புதிய திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றே இந்த அரசு விரும்புகிறது. வி.பி.எஃப். பிரச்சினையில் அரசு தலையிட வேண்டிய கட்டாயம் இருந்தால் நிச்சயமாக சமாதானப் பேச்சுவார்த்தையை அரசு முன்னின்று நடத்தும்..” என்று சொல்லியிருக்கிறார்.

ஆக, இனிமேல் கோட்டையில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையில்தான் இந்த வி.பி.எஃப். பிரச்சினைக்கு ஒரு முடிவு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

The post VPF பிரச்சினை – முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>