Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஜி.வி.பிரகாஷ் குமார் – Touring Talkies https://touringtalkies.co Fri, 21 Oct 2022 19:07:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஜி.வி.பிரகாஷ் குமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது https://touringtalkies.co/13-movie-teaser-news/ Fri, 21 Oct 2022 19:06:37 +0000 https://touringtalkies.co/?p=25814 மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம் மேக்கர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் ’13’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், இயக்குநர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ’13’ படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை […]

The post ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம் மேக்கர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் ’13’ படத்தின் டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், இயக்குநர் K.விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ’13’ படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக் கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளனர். இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

டீசரில் கெளதம் வாசுதேவ் மேனன், ‘ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது’ எனத் தெரிவித்து கதையின் முன்னுரையை பார்வையாளர்களுக்குச் சொல்லி கதைக்கான ஆர்வத்தையும் கணிப்பையும் விதைத்துள்ளார்.

அன்ஷூ பிராபகர் ஃபிலிம்ஸூடன் இணைந்து மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை K.விவேக் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா மற்றும் ஐஷ்வர்யா ஆகிய மற்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தொழில் நுட்பக் குழு விவரம்:

இசை: சித்துகுமார்,
DOP: C.M. மூவேந்தர்,
எடிட்டர்: JF காஸ்ட்ரோ,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஷங்கர்,
கலை இயக்குநர்: நாஞ்சில் P.S. ராபர்ட்,
பாடல் வரிகள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,
நடனம்: சந்தோஷ்,
ஸ்டைலிங் மற்றும் உடை: ஹீனா,
சண்டைப் பயிற்சி: ‘ஸ்டண்ட்’ ராம்குமார்,
DI: Accel Media,
ஒலி வடிவமைப்பு & கலவை: ஜெய்சன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One

The post ஜி.வி.பிரகாஷ், கெளதம் மேனன் நடித்த ’13’ படத்தின் டீசர் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் காயத்ரி சங்கர் https://touringtalkies.co/gayathri-shankar-acting-with-g-v-prakash-kumar-in-seenu-ramasamy-movie/ Fri, 30 Jul 2021 12:17:14 +0000 https://touringtalkies.co/?p=16621 தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் G.V.பிரகாஷ் குமார் நடிக்கிறார். சீனு ராமசாமியின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த காயத்ரி சங்கர், இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் செவிலியர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். M.S.பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். தற்காலிகமாக […]

The post ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் காயத்ரி சங்கர் appeared first on Touring Talkies.

]]>
தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்தப் படத்தில் நாயகனாக நடிகர் G.V.பிரகாஷ் குமார் நடிக்கிறார். சீனு ராமசாமியின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள மாமனிதன்’ திரைப்படத்தில் நாயகியாக நடித்த காயத்ரி சங்கர், இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் செவிலியர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

M.S.பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

தற்காலிகமாக ‘Production No.2’  என அழைக்கப்படும் இப்படத்தை Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

இயக்குநர் சீனு ராமசாமியுடன் ‘தென்மேற்கு பருவக் காற்று மற்றும் ‘நீர் பறவை’ போன்ற படங்களில் பணியாற்றிய இசையமைப்பாளர் N.R.ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘கவிப்பேரரசு’ வைரமுத்து பாடல் வரிகளை எழுதுகிறார்.

இத்திரைப்படம் இயக்குநர் சீனு ராமசாமியின் வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்குமாம். கிராமத்து பின்னணியில்,  முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக இந்தப் படம் உருவாகிறது.

படத்தின் நாயகியாக காயத்ரியைத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், “படத்தின் நாயகியின் கதாப்பாத்திரம் வாழ்க்கையின் மூன்று நிலைகளில் பயணிக்கிறது. பள்ளி மாணவி, வேலை செய்யும் பெண் மற்றும் ஒரு தாய். இந்த மூன்று நிலைகளிலும் தன் நடிப்பால்  நியாயம் செய்வார் காயத்திரி. அவருக்கு அந்த திறமை இருக்கிறது. அவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் செவிலியராக இப்படத்தில் நடிக்கிறார்.

எனது முந்தைய திரைப்படங்களைப் போலவே, இப்படத்திலும் பெண் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர்கள் கதையிலும்  அதிகத் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.

ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் தேனியில் முதல் கட்ட படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளோம்.   25 நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து நடத்தவுள்ளோம்…” என்றார்.

The post ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கிறார் காயத்ரி சங்கர் appeared first on Touring Talkies.

]]>
சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் https://touringtalkies.co/director-seenu-ramasamys-next-movie-hero-g-v-prakash/ Thu, 22 Jul 2021 11:40:34 +0000 https://touringtalkies.co/?p=16418 இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறாராம். இயக்குநர் சீனு ராமசாமி தற்போதைய தமிழ்த் திரையுலகத்தில் பட்ஜெட் இயக்குநராக பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். அவரை வைத்து படம் தயாரித்த எந்தவொரு தயாரிப்பாளரும், இதுவரையிலும் அவரைப் பற்றி ஒரு குற்றம், குறை சொல்லாத அளவுக்கு நடந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். அதே சமயம் எந்தவிதத்திலும் தரம் குறையாத படங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த தேசிய விருது பெற்ற இயக்குநர். கூடல் நகர்(2007), தென்மேற்குப் பருவக் காற்று(2010), […]

The post சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறாராம்.

இயக்குநர் சீனு ராமசாமி தற்போதைய தமிழ்த் திரையுலகத்தில் பட்ஜெட் இயக்குநராக பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார். அவரை வைத்து படம் தயாரித்த எந்தவொரு தயாரிப்பாளரும், இதுவரையிலும் அவரைப் பற்றி ஒரு குற்றம், குறை சொல்லாத அளவுக்கு நடந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார்.

அதே சமயம் எந்தவிதத்திலும் தரம் குறையாத படங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த தேசிய விருது பெற்ற இயக்குநர்.

கூடல் நகர்(2007), தென்மேற்குப் பருவக் காற்று(2010), நீர்ப்பறவை(2012), இடம் பொருள் ஏவல்(2013), தர்மதுரை(2016), கண்ணே கலைமானே(2019), மாமனிதன்(2020) என்று வரிசையாக படங்களை இயக்கியிருக்கிறார்.

இதில் ‘இடம் பொருள் ஏவல்’ மற்றும் ‘மாமனிதன்’ ஆகிய படங்கள் மட்டுமே இன்னும் திரைக்கு வரவில்லை. அவைகள் இந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது அடுத்தப் படத்திற்கான கதையை தற்போது எழுதி முடித்திருக்கும் சீனு ராமசாமி அந்தக் கதைக்கேற்ற நாயகனாக ஜீ.வி.பிரகாஷை தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிக்கிறார்.

இந்தப் படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க.. கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

இத்திரைப்படம் இதுவரையிலும் வெளிவந்த சீனு ராமசாமியின் படங்களில் இருந்து சற்று மாறுதலாக கிராமத்து பின்புலத்தில் ஆக்சன், திரில்லர் கலந்த படமாக உருவாகப் போகிறதாம்.

இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது.

The post சீனு ராமசாமியின் அடுத்தப் படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ் appeared first on Touring Talkies.

]]>