Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஜி.வி.பிரகாஷ்குமார் – Touring Talkies https://touringtalkies.co Tue, 08 Nov 2022 13:50:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஜி.வி.பிரகாஷ்குமார் – Touring Talkies https://touringtalkies.co 32 32 G.V.பிரகாஷ், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கவிதாலயா தயாரிக்கும் புதிய படம்..! https://touringtalkies.co/g-v-prakash-anaswara-rajan-acting-in-a-kavithalayas-production-movie/ Tue, 08 Nov 2022 13:46:39 +0000 https://touringtalkies.co/?p=26792 ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா நிறுவனம், முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாருடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோ நாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலரும் […]

The post G.V.பிரகாஷ், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கவிதாலயா தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா நிறுவனம், முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டாருடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாகவும், அனஸ்வரா ராஜன் நாயகியாகவும் நடிக்கின்றனர்.

மேலும் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோ நாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

ஹிருதயம்’ உள்ளிட்ட பல மலையாள வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, யு.கே.வசந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார். படத் தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். ஷிவா யாதவ் கலை வடிவமைப்பு பணிகளை செய்கிறார். பாடல்களை பார்வதி மீரா எழுதியுள்ளார், சண்டை பயிற்சி பணிகளை ஜி.என்.முருகன் கையாள்கிறார்.

இப்படத்தை நாளை’, ‘சக்கர வியூகம்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2’,  ‘ஆஃபிஸ்’ உள்ளிட்ட தொடர்களிலும், பல வெற்றிப் படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை – திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இவரின் கதை – திரைக்கதையில் கே.பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம்’ தொடர் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.

நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாகிறது இப்படம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியது.

The post G.V.பிரகாஷ், அனஸ்வரா ராஜன் நடிப்பில் கவிதாலயா தயாரிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
வடிவேலு வில்லனாக நடிக்கிறாரா..? https://touringtalkies.co/is-vadivelu-playing-the-villain/ Thu, 03 Nov 2022 18:00:10 +0000 https://touringtalkies.co/?p=26494 ‘வைகைப் புயல்’ வடிவேலுவைப் பற்றி வாரத்திற்கு ஒரு வதந்தி செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த வாரம் வந்திருப்பது அவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பதுதான். வடிவேலு தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரே ஒரு கேரக்டரில் மட்டும் இதுவரையிலும் நடித்ததேயில்லை. அது வில்லன் வேடம். தற்போது அவருக்கு அந்தக் குறையையும் விட்டுவைக்காமல் வில்லன் கதாப்பாத்திரத்திலும் வடிவேலு நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில்தான் வடிவேலு வில்லனாக […]

The post வடிவேலு வில்லனாக நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.

]]>
வைகைப் புயல்’ வடிவேலுவைப் பற்றி வாரத்திற்கு ஒரு வதந்தி செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த வாரம் வந்திருப்பது அவர் வில்லனாக நடிக்கப் போகிறார் என்பதுதான்.

வடிவேலு தன்னுடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் பல்வேறு வகையான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரே ஒரு கேரக்டரில் மட்டும் இதுவரையிலும் நடித்ததேயில்லை. அது வில்லன் வேடம்.

தற்போது அவருக்கு அந்தக் குறையையும் விட்டுவைக்காமல் வில்லன் கதாப்பாத்திரத்திலும் வடிவேலு நடிக்கப் போவதாகச் செய்திகள் வந்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில்தான் வடிவேலு வில்லனாக நடிக்கவுள்ளாராம்.

சந்தானத்தை வைத்து தில்லுக்கு துட்டு என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ராம்பாலாதான் இந்தப் புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

வடிவேலு நடிக்கவிருக்கும் இந்த வில்லன் கதாப்பாத்திரம் நிஜமான வில்லனா அல்லது காமெடி கலந்த வில்லனா என்பது படம் பார்த்தால்தான் தெரியும்.

The post வடிவேலு வில்லனாக நடிக்கிறாரா..? appeared first on Touring Talkies.

]]>
‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! https://touringtalkies.co/song-ready-for-maveera-in-10-minutes/ Thu, 03 Nov 2022 17:12:41 +0000 https://touringtalkies.co/?p=26487 வி.கே புரடக்க்ஷன் வழங்கும் ‘மாவீரா’ படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும், மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது. கவிப் பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது. பட்டாம்பூச்சிக்குபட்டுத்துணி போட்டது போலசிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டிவிட்டது யாரு?சீனிக்கட்டியில செலை ஒன்னுசெஞ்சு வச்சது போலஎட்டா ஒயரத்தில் எச்சி ஊறவிட்டது யாரு? வன்னித் தமிழா வாய்யாஉனக்கு வாச்சப் பொருளைத் தாயாபச்ச முத்தம் ஒண்ணு கொடுத்தாபற்றிக் கொள்வேன் தீயா அடி வஞ்சிக்கொடியே வாடிவளர்த்த பொருளத்தாடிபாசத்த உள்ள வச்சுப்பாசாங்க வெளிய வச்சுவேசங்கட்டி […]

The post ‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! appeared first on Touring Talkies.

]]>
வி.கே புரடக்க்ஷன் வழங்கும் ‘மாவீரா’ படத்தின் இரண்டாவது பாடலுக்கான பாடலும், மெட்டமைக்கும் பணியும் நடைபெற்றது.

கவிப் பேரரசரின் புலமையும், ஜி.வி.பிரகாசின் அழகிசையும் காலமுள்ளவரை ஒலிக்கும். பத்தே நிமிடத்தில் பாட்டு தயரானது.

பட்டாம்பூச்சிக்கு
பட்டுத்துணி போட்டது போல
சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக் கட்டி
விட்டது யாரு?
சீனிக்கட்டியில செலை ஒன்னு
செஞ்சு வச்சது போல
எட்டா ஒயரத்தில் எச்சி ஊற
விட்டது யாரு?

வன்னித் தமிழா வாய்யா
உனக்கு வாச்சப் பொருளைத் தாயா
பச்ச முத்தம் ஒண்ணு கொடுத்தா
பற்றிக் கொள்வேன் தீயா

அடி வஞ்சிக்கொடியே வாடி
வளர்த்த பொருளத்தாடி
பாசத்த உள்ள வச்சுப்
பாசாங்க வெளிய வச்சு
வேசங்கட்டி வந்தவளே
வெறும் வாய மெல்லுறியே

மாவீரன் மண் காக்க
மானமுள்ள பெண் காக்க
அஞ்சாறுப் புலிக்குட்டி
அவசரமா வேணுமடி.

இன்னும் இன்னும் திகட்ட இப்படி நீள்கிறது பாடல்…

“இந்த ‘மாவீரா’ படம் மாபெரும் வெற்றியைப் பெறும் என்பதை இரண்டாவதாக இந்தப் பாடலும் உறுதிப்படுத்தியுள்ளது. பேராளுமைகள் இருவருக்கும் நெகிழ்ந்த நன்றிகள்.” என்கிறார் படத்தின் இயக்குநரான வ.கௌதமன்.

The post ‘மாவீரா’ படத்துக்காக 10 நிமிடங்களில் தயாரான பாடல்…! appeared first on Touring Talkies.

]]>
தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம் https://touringtalkies.co/gv-prakash-joins-with-thangarbachan-in-karumegangal-ean-kalaigindrana-movie/ Thu, 26 May 2022 08:34:01 +0000 https://touringtalkies.co/?p=22274 மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார். இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார். இப்புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இதுவரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் […]

The post தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம் appeared first on Touring Talkies.

]]>
மனித உறவுகளை மய்யமாகக் கொண்ட ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘தென்றல்’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ போன்ற தரமான அழுத்தமான திரைப்படங்களை தந்த இயக்குநர் தங்கர்பச்சான் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். அதற்கு ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்று பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D.வீரசக்தி பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கிறார்.

இப்புதிய படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூவருமே இதுவரை நடித்திராத அழுத்தமான கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்கள். மற்றொரு முக்கிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகையைத் தேடி வருகிறார்கள்.

மிக முக்கியமாக இப்படத்தின் இசை அமைக்கும் பொறுப்பை ஜி.வி.பிரகாஷ் ஏற்றுள்ளார். இவர் முதன்முறையாக தங்கர்பச்சானுடன் இணைந்து பணிபுரிகிறார்.

ஒளிப்பதிவு – N.K.ஏகாம்பரம், கலை இயக்கம் – முத்துராஜ் தங்கவேல். பத்திரிகை தொடர்பு – ஜான்ஸன், எழுத்து, இயக்கம் – தங்கர்பச்சான்.

வரும் ஜூலை 25-ம் தேதி முதல் இரு கட்டங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.  

இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பிறர் அறியாத பெரிய தவறு ஒன்றை செய்துவிட்டு குற்ற உணர்வில் நிம்மதி இழந்து மன்னிப்புத் தேடி அலைபவனின் மனநிலைக்கு ஏற்ப பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வைரமுத்து, “தங்கர்பச்சான் இயக்க ஜி.வி.பிரகாஷ் இசைக்கும் படம் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ பாட்டெழுதும்போதே சொல்லோடு கசிந்தது கண்ணீர். விழுமியங்கள் மாறிப் போன சமூகத்திற்கு என்னோடு அழுவதற்கு கண்ணீர் இருக்குமா? இல்லை.. கண்களாவது இருக்குமா?..” என தனது அழுத்தமான மன உணர்வுகளை பதிவிட்டுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான D.வீரசக்தி இப்படம் குறித்து பேசும்போது, “மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் அற்புதமான படைப்பு இது. இக்கதையை கேட்ட மாத்திரத்திலேயே கண்ணீர்விட்டு அழுதுவிட்டேன். அடுத்த நொடியே படத்தை தயாரிக்க முடிவெடுத்துவிட்டேன். இது தங்கர்பச்சானின் அழுத்தமான மற்றொரு படைப்பு. தமிழ் சினிமாவின் முக்கியமான ஒரு படமாக இது இருக்கும்..” என்றார்.

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளுக்கிடையில் இப்புதிய திரைப்படத்தின் பாடல்களை உருவாக்கும் பணிகளை துவக்கியுள்ளார் தங்கர்பச்சான்.

The post தங்கர்பச்சானுடன் ஜி.வி.பிரகாஷ் இணையும் ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ படம் appeared first on Touring Talkies.

]]>
ஐங்கரன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/aiyngaran-movie-review/ Tue, 17 May 2022 06:52:02 +0000 https://touringtalkies.co/?p=22096 நாமக்கல்லில் போலீஸ் ஏட்டுவான அப்பா மற்றும் அம்மாவோடு குடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். ஒரே நேரத்தில் 20 குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்ற வட்ட வடிவிலான குழாய், சைக்கிள் பெடலை வைத்து கிரைண்டரை இயக்குவது.. டூயல் பேன் என்று விதம்விதமாக இவர் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் அரசாங்கத்தின் அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இவரது எந்தக் கண்டுபிடிப்பையும் ஏற்காமல் உதாசீனப்படுத்துகிறது. இந்த நேரத்தில் பேருந்தில் இவருடன் சண்டையிட்டு […]

The post ஐங்கரன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
நாமக்கல்லில் போலீஸ் ஏட்டுவான அப்பா மற்றும் அம்மாவோடு குடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

ஒரே நேரத்தில் 20 குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்ற வட்ட வடிவிலான குழாய், சைக்கிள் பெடலை வைத்து கிரைண்டரை இயக்குவது.. டூயல் பேன் என்று விதம்விதமாக இவர் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் அரசாங்கத்தின் அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இவரது எந்தக் கண்டுபிடிப்பையும் ஏற்காமல் உதாசீனப்படுத்துகிறது.

இந்த நேரத்தில் பேருந்தில் இவருடன் சண்டையிட்டு ஏமாற்றும் மஹிமா நம்பியாருடன் காதல் பிறந்து அந்தக் காதல் ஒரு பக்கம் ஓடுகிறது.

அதே நேரம் இன்னொரு பக்கம் வட இந்தியாவில் இருந்து பலே கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் நுழைகிறார்கள்.

கோவை, மதுரை, திருச்சி, சென்னை என்ற மிகப் பெரிய நகரங்களில் இருக்கும் நகைக் கடைகளில் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இதில் கோவை நகைக்கடை கொள்ளை மிகச் சரியாக அரங்கேறுகிறது.

இதைத் தொடர்ந்து மதுரை நகைக்கடையிலும் கொள்ளையடிக்கிறார்கள். பின்பு எல்லா வழிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால் எப்படி வெளியேறுவது என்று யோசித்தவர்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியே பெங்களூர் செல்ல முடிவெடுக்கிறார்கள்.

இவர்கள் நாமக்கல் அருகே நடு இரவில் வரும் வழியில் போலீஸ் குறுக்கிட.. நகைகள் இருக்கும் பைகளை வெளியில் தூக்கி எறிகிறார்கள். அந்தப் பை கிணறுக்காக வெட்டப்பட்டிருந்த ஆழ் துளைக்குள் சென்று விழுகிறது.

இந்த இரவில் அதை தன் குரூப்பினரை வைத்து எடுப்பது சாத்தியமில்லை என்று யோசிக்கும்போது ஒரு சிறு குழந்தை அந்தக் குழிக்குள் விழுகிறது.

உடனேயே இவர்களே கத்திக் கூப்பாடு போட்டு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். விடிவதற்குள் போலீஸ், தீயணைப்புப் படை என்று மொத்த அரசு நிர்வாகமும் அங்கே வந்துவிட குழந்தையைக்  காப்பாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

இனிமேல் நடப்பது என்ன..? இதில் ஜி.வி.பிரகாஷின் பங்களிப்பு என்ன..? அந்தக் குழந்தையை மீட்டார்களா..? நகைகள் என்னவாயின..? என்பதெல்லாம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியின் திரைக்கதையாகும்.

ஜி.வி.பிரகாஷ் சமீபமாக தனக்குத் தோதான கதைகளில்தான் நடித்து வருகிறார். தன் உருவத்திற்கும், நடிப்புக்கும் ஏற்ற வகையில் ‘செல்பி’ போன்ற படங்களைத் தேர்வு செய்தவர் அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தேர்வு செய்திருக்கிறார். சரியான தேர்வுதான்.

ஆனால் மிகையான நடிப்புக்குத்தான் இதில் இடமே இல்லை. காளி வெங்கட்டை ஏமாற்றுவது.. துப்பறிவது.. அரசு அலுவலகத்தில் பாவமாய் இருப்பது.. அப்பாவிடம் கோபமாய் பேசுவது.. கலெக்டரிடமும், எஸ்.பி.யிடமும் கெஞ்சுவது என்று பல்வேறு வகையான காட்சிகளுக்கேற்ப தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

நாயகியான மஹிமா நம்பியாருக்கு பெரிய ரோல் இல்லை. ஆனால் இருந்த காட்சிகளில் நம்மைக் கவர்கிறார். ஹரீஷ் பெராடியின் வில்லத்தனம்தான் ரசிக்க வைக்கிறது. மனிதரின் புருவம்கூட நடிக்கிறது. சிறப்பான நடிப்புதான். ‘ஆடுகளம்’ நரேன் தனது நேர்மையான குணத்தை நடிப்பில் காட்டியிருக்கிறார். காளி வெங்கட் தனது பரிதாப நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

கொள்ளையர்களில் கூட்டத்தில் கடைசி தத்தியாக இருப்பவன் கவனிக்க வைத்திருக்கிறான். மற்றவர்கள் வழக்கம்போல இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

நாமக்கல் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். ஆனால், காட்சியமைப்புகள் அதுபோல் இல்லை என்பதால் ஒளிப்பதிவாளரின் பணி சற்று மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. குழந்தையை மீட்கும் பணிகூட இரவிலேயே நடைபெறுவதால் அந்த விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்ளேயே படத்தைக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஜி.வி.யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். குழந்தை மீட்பு நேரத்தில் திரையில் இருந்த பதட்டத்தை பார்வையாளர்களுக்கும் கொடுக்கிறது பின்னணி இசை.

கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். நகைக் கடை கொள்ளைகளில் சிறப்பாக செட்டுக்களை அமைத்திருக்கிறார்கள். அதேபோல் குழந்தை மீட்பு காட்சிகளிலும் கலை துறையின் பணி சிறப்புதான்.

இந்தப் படத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று ஒரு இளைஞன் கண்டறிந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசுகள் அங்கீகாரம் தராமல் அலட்சியம் காட்டுவது.. இன்னொன்று இந்தக் காலத்திலும் ஆழமான துளைகளில் விழும் குழந்தைகளை மீட்க எந்தவொரு புதிய கருவியும் நம்மிடம் இல்லாதது. இந்த இரண்டையும் ரயில் தண்டவாளம்போல ஒன்றாக, அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர் ரவி அரசு.

எப்படியும் குழந்தையை மீட்கத்தான் போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் அந்த நகைகள் என்னவாகும் என்ற கேள்வியை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தது பாராட்டுக்குரியது. அதேபோல் போலீஸ்-கொள்ளையர்கள் கூட்டணி பற்றிய திரைக்கதையும் கடைசியில் வெளிவருவது எதிர்பாராத டிவிஸ்ட்.

படத்தின் பின் பாதியில் இருந்த வேகத்தை படத்தின் முன் பாதியிலும் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்த ‘ஐங்கரன்’ நிச்சயம் நம்மை சோதிக்கவில்லை. மாறாக அருள் பாலிக்கிறான் என்பதுதான் உண்மை.

RATING : 3.5 / 5

The post ஐங்கரன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் பதிவானது..! https://touringtalkies.co/g-v-prakash-kumar-sing-a-song-for-battery-movie/ Thu, 17 Mar 2022 07:00:58 +0000 https://touringtalkies.co/?p=21272 ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பேட்டரி’. இந்தப் படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும்  தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை, அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார் அம்மு. ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக் கொண்டிருக்கும்  செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவரது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அப்போது அம்மு அபிராமி […]

The post ‘பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் பதிவானது..! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீஅண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘பேட்டரி’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும்  தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

போலிஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை, அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார் அம்மு. ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக் கொண்டிருக்கும்  செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவரது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அப்போது அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாகப் பாடுகிறார்.

கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய –

நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே

என்னில் ஏதோ ஆனது நீதானே..

காதலே நீதானே..

பூகோளம் சொல்லும் பொல்லாத பொய்தானா..“ –

என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள்.

மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின்  நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலுமணாலியில் படமாக்கப்பட்டது.

பேட்டரி’ திரைப்படம் வரும் 2022 மே மாதம் திரைக்கு வருகிறது.

The post ‘பேட்டரி’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் பாடிய பாடல் பதிவானது..! appeared first on Touring Talkies.

]]>
“கண்டிப்பா நாங்க திருந்துறோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு https://touringtalkies.co/g-v-prakash-speech-in-bachelor-movie-success-meet/ Fri, 17 Dec 2021 17:36:42 +0000 https://touringtalkies.co/?p=19889 “பேச்சிலர்’ படம் பற்றிய சர்ச்சைகள், கருத்துக்களை படித்துத் தெரிந்து கொண்டதாகவும், அதில் இருந்து தங்களைத் திருத்திக் கொள்வதாகவும்” நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இன்று சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘பேச்சிலர்’ படத்தின் வெற்றி விழா கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். நடிகர் G.V.பிரகாஷ் குமார் அந்த விழாவில் பேசும்போது, “ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில்தான் அந்தப் படத்தின் வெற்றி […]

The post “கண்டிப்பா நாங்க திருந்துறோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
பேச்சிலர்’ படம் பற்றிய சர்ச்சைகள், கருத்துக்களை படித்துத் தெரிந்து கொண்டதாகவும், அதில் இருந்து தங்களைத் திருத்திக் கொள்வதாகவும்” நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை, பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘பேச்சிலர்’ படத்தின் வெற்றி விழா கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நடிகர் G.V.பிரகாஷ் குமார் அந்த விழாவில் பேசும்போது, “ஒரு படம் வந்து நாம் செய்து முடித்த பிறகு மக்களிடம் சென்று சேர்வதும், அவர்கள் அந்த படத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதில்தான் அந்தப் படத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளதை நினைத்து மகிழ்கிறேன். அதற்கு காரணம் தயாரிப்பாளர் டில்லி சாரும், விநியோகஸ்தர் சக்தி சாரும்தான்.

ஒரு படத்திற்கு இதுதான் பட்ஜெட் என தீர்மானித்து வடிவமைத்து, அதை மக்களிடம் கொண்டு சேர்த்தது அவர்கள்தான். இந்தப் படம் சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு பிறகு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் பேச்சிலர் படம் ரசிகர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தப் படம் 3-வது வாரத்தைக் கடந்திருக்கிறது.

நீங்கள் தந்த அறிவுரைக்கும், விமர்சனங்களுக்கும் பெரிய நன்றி. நீங்கள் தரும் கருத்துக்களில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்கிறோம். இப்படத்தை அட்டகாசமாக உருவாக்கிய சதீஷ் மற்றும் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.

The post “கண்டிப்பா நாங்க திருந்துறோம்” – நடிகர் ஜி.வி.பிரகாஷ் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
வசந்த பாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது உருவான ‘நகரோடி’ பாடல்.! https://touringtalkies.co/nagaroodi-song-story/ Fri, 12 Nov 2021 12:08:05 +0000 https://touringtalkies.co/?p=19354 இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ‘பசங்க’ பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். […]

The post வசந்த பாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது உருவான ‘நகரோடி’ பாடல்.! appeared first on Touring Talkies.

]]>
இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஜெயில்’.

இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அபர்னதி நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார், ‘பசங்க’ பாண்டி, நந்தன் ராம், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தின் கதையை இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்து எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனும் வசனத்தை பாக்கியம் சங்கர் அவர்களும் எழுதியிருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கொரோனா காரணமாக திட்டமிட்டபடி வெளியிட முடியாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்த இப்படத்தை தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடவுள்ளது.

இந்த ‘ஜெயில்’ படத்தில் நடிகர் தனுஷ், நடிகை அதிதி ராவ் ஹையாத்ரி ஆகியோரின் குரலில் இடம் பெற்ற ‘காத்தோடு காத்தானேன்…’ எனத் தொடங்கும் பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி, 21 மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் ‘நகரோடி…’ எனத் தொடங்கும் பாடலும் வெளியான இரண்டு தினங்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

இந்த ஜெயில்’ படத்தைப் பற்றி இயக்குநர் வசந்த பாலன் பேசுகையில், ”இந்தப் படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், கர்ணா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒடுக்கப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் குரல்தான் கர்ணன்’. நம்முடைய புராணங்களிலுள்ள ‘கர்ணன்’, வாழ்நாள் முழுவதும் தனக்கான அங்கீகாரத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் வலியை சுமந்து திரிந்தவன். அந்தப் பண்பு நலன் இந்தப் படத்தில் இருக்கும் ஜீவியின் கதாபாத்திரத்திற்கும் பொருந்தும்.

சம காலத்தின் வாழ்க்கை, நவீன சிந்தனை, நமது வரலாறு போன்ற விசயங்கள் என்னுடைய படைப்புகளில் இடம் பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். இதற்காகவே எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன்.

ஜெயில்’ படத்தை முடித்துவிட்டு ‘அநீதி’ படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். அப்போதுதான் கரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

திடீரென்று எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. செவிலியர்களிடமும், மருத்துவர்களிடம் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்று சொன்னேன். எனக்கு ஆக்ஸிஜன் வைத்தார்கள். அந்த நேரத்தில் அந்த வார்டு முழுவதும் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற வார்த்தைகள் கேட்டுக் கொண்டேயிருப்பதுபோல் உணர்ந்தேன்.

அதேசமயம் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற குரல் ஜார்ஜ் பிளாய்ட்டின் குரலாகக் கேட்கத் தொடங்கியது. அவருடைய இந்த மூன்று வார்த்தைகள் விடுதலையின் குரல், அதற்காக ஏங்கி நிற்கும் வலியின் குரல். சர்வநிச்சயமாக ஒரு நோயாளியின் குரல் அல்ல.

அப்போது போனில் கூகுளில் தூலாவிக்கொண்டிருந்தபோது ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்கிற தனியிசைப் பாடல் 2020-க்கான கிராமி விருது பெற்றிருப்பது என் கண்களில் பட்டது.

நமது ‘ஜெயில்’ படமும் ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்றுதானே குரல் எழுப்புகிறது என்கிற எண்ணம் வந்ததும்… மருத்துவமனையிருந்தே இந்தப் பாடலுக்கான ‘டம்மி’ வரிகளை எழுதி ஜி.வி.பிரகாஷுக்கு வாட்ஸ் ஆப் வழியே அனுப்பினேன்.

அவரோ.. ‘இந்தச் சூழ்நிலையில் உங்கள் உடல் நிலையல்லாவா முக்கியம்..?என்றார். “நோயை மறந்து வேலை செய்வதுதான் உற்சாகம்” என்றேன். உடனே பாடலுக்கான இசையை கம்போஸ் செய்து பல மெட்டுகளை அடுத்தடுத்து அனுப்பினார். அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம்.

இந்தப் பாடலை யாரிடம் கொடுத்து எழுத வைக்கலாம் என்று யோசித்தபோது ‘தெருக்குரல்’ அறிவுதான் இதற்கு சரியான தேர்வாக இருப்பார் என முடிவு செய்தோம். இசை மெட்டைக் கேட்டுவிட்டு, அறிவு எழுதி அனுப்பிய வரிகளைப் பார்த்ததும் அதில் அவர் பயன்படுத்தியிருந்த  ‘நகரோடி’ என்கிற சொல் எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

நாடோடி’ என்ற சொல் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் ‘நகரோடி’ என்கிற சொல் முற்றிலும் நமக்குப் புதியது. யார் இத்தனை அழகான நகரத்தை யார் உருவாக்கினார்களோ.. அவர்களை இந்த நகரத்தின் புழக்கடைப் பகுதிக்கு அப்புறப்படுத்துவதை வலியுடன் உணர்த்தும் சொல்லாகவே அது இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் நிலை. அதைத்தான் இந்த ‘நகரோடி’ பாடல் சொல்கிறது.

இது இந்தப் படத்துக்கான குரல் மட்டுமே அல்ல. இந்தப் படத்திற்கான குரலாகவும், முகவரியாகவும் அமைந்திருக்கிறது.” என்றார்.

The post வசந்த பாலன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது உருவான ‘நகரோடி’ பாடல்.! appeared first on Touring Talkies.

]]>
பாடல்களை இணையத்தில் NFT முறையில் ஏலத்தில் விற்பனை செய்கிறார் ஜி.வி.பிரகாஷ் https://touringtalkies.co/music-director-g-v-prakash-sell-his-songs-by-nft-in-internet/ Thu, 08 Jul 2021 13:46:12 +0000 https://touringtalkies.co/?p=16049 வர்த்தகம் தொடர்பான மொபைல் அப்ளிகேஷன்ஸ் வாயிலாக தனது பாடல்களை ஏலத்தில் விடுகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிஜிட்டல் உலகில் இதுவொரு புது முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக NFT முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. இதன் மூலமாக முதலில் 6 பாடல்களை மட்டும் ஜி.வி.பிரகாஷ் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார். டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் NFT […]

The post பாடல்களை இணையத்தில் NFT முறையில் ஏலத்தில் விற்பனை செய்கிறார் ஜி.வி.பிரகாஷ் appeared first on Touring Talkies.

]]>
வர்த்தகம் தொடர்பான மொபைல் அப்ளிகேஷன்ஸ் வாயிலாக தனது பாடல்களை ஏலத்தில் விடுகிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

டிஜிட்டல் உலகில் இதுவொரு புது முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல… இந்தியாவிலேயே ஒரு கலைஞர் தனது படைப்புகளை இவ்வாறாக NFT முறையில் ஏலம் விடுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

இதன் மூலமாக முதலில் 6 பாடல்களை மட்டும் ஜி.வி.பிரகாஷ் ஏலம் விடுகிறார். அதன் ஆரம்ப விலையாக 5 எரித்தீயம் என நிர்ணயித்துள்ளார்.

டிஜிட்டல் சொத்துகளுக்கு முக்கியத்துவம் பெருகிவரும் சூழலில் NFT பற்றி புரிந்து கொண்டால்தான் ஜி.வி.பிரகாஷ் செய்யும் முயற்சிகளின் விளைவுகள் புரியும்.

இதன் பின்னணியில் இருப்பது பிளாக் செயின் தொழில் நுட்பமாகும். பிளாக் செயின் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, NFT போன்றவை செயல்படுகின்றன.

இதன் பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை இந்த பிளாக் செயின் தொழில் நுட்பம் தேவையில்லாமல் செய்துவிடுகிறது.

ஆனால், பிட்காயினைவிடவும் இந்த NFT சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு NFT-க்கும் ஒரு மதிப்பு உண்டு. ஒரு பிட் காயினைக் கொடுத்து இன்னொரு பிட் காயினை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு NFT-யைக் கொடுத்து இன்னொரு NFT-யை வாங்க முடியாது.

இந்த NFT முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில்தான் அறிமுகமானது. அந்த ஆன்லைன் கேமில் வரும் பூனைகளை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படித்தான் NFT நடைமுறைக்கு வந்தது.

பூனையில் ஆரம்பித்தது தற்போது மெய்நிகர் ரியல் எஸ்டேட் அளவு வளர்ந்து இருக்கிறது.

தற்போது நிஜ உலகில் நிலம் வாங்குவது எல்லாம் பழைய கதையாக மாறிவிடும் அளவுக்கு மெய்நிகர் உலகில் (virtual reality) நிலம் வாங்கும் போக்கு ஆரம்பமாகி இருக்கிறது.

இதைத்தான் இப்போது ஜி.வி.பிரகாஷ் முயற்சித்திருக்கிறார். வெற்றி கிட்டுமா என்பது விரைவில் தெரியும்..!

The post பாடல்களை இணையத்தில் NFT முறையில் ஏலத்தில் விற்பனை செய்கிறார் ஜி.வி.பிரகாஷ் appeared first on Touring Talkies.

]]>
சினிமா பாடலாசிரியராக விரும்புபவர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் அறிவித்திருக்கும் போட்டி..! https://touringtalkies.co/director-vasantha-balan-has-announced-a-competition-for-those-who-want-to-become-film-song-writers/ Tue, 08 Jun 2021 06:39:48 +0000 https://touringtalkies.co/?p=15428 தனது நண்பரும், மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன். இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான் : “ஜெயில்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரை பிரவேசத்திற்குக் காத்திருக்கிறது. அதைத் தொடர்ந்து என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய URBAN BOYZ STUDIOS  நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்பை ரசிகர்கள் […]

The post சினிமா பாடலாசிரியராக விரும்புபவர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் அறிவித்திருக்கும் போட்டி..! appeared first on Touring Talkies.

]]>
தனது நண்பரும், மறைந்த கவிஞருமான நா.முத்துக்குமார் நினைவாக, தமிழ் திரைத்துறையில் பாடலாசிரியர் ஆக விரும்புபவர்களுக்கு போட்டி ஒன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

இது குறித்த அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான் :

“ஜெயில்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து திரை பிரவேசத்திற்குக் காத்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து என் பள்ளி நண்பர்களுடன் இணைந்து உருவாக்கிய URBAN BOYZ STUDIOS  நிறுவனத்தில் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன் என்ப ரசிகர்கள் அறிவீர்கள்.

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்கள் இசையமைக்கிறார். இந்த படத்தினுடைய கதைப் போக்கில் கவிஞர் நா.முத்துக்குமாருக்கு நினைவேந்தல் செய்வதைப் போல ஒரு கதாபாத்திரமும், சில காட்சிகளும் அமைந்துள்ளன.

இது ஏதேச்சையானதா  அல்லது  25 ஆண்டு கால நா முத்துக்குமாருடன் எனக்கு ஏற்பட்ட ஆழமான நட்பின் வெளிப்பாடா..  அல்லது இரண்டு பேருமே ஜூலை 12 என்ற ஓரே தேதியில் பிறந்ததனால் ஏற்பட்ட மானசீக உறவா… அல்லது நான் சோர்வாய் வீட்டில் முடங்கிக் கிடந்த காலத்தில் உப்புக் கறியுடன் என்னை எழுப்பி என்னை பசியார வைத்த நண்பன் மீது கொண்ட பாசமா என்று தெரியவில்லை.

இந்தக் கதையில் வரும் கதை நாயகி பண்பலை வானொலியில் ஒலிக்கும் திரைப் பாடல்களுடன் இணைந்து பாடல்களைக் கேட்டு ரசித்து பாடுகிற ஒரு கதாபாத்திரம். நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகை.

மூன்றாம் பிறையிரவில் கதாநாயகனுக்கு நா.முத்துக்குமாரின் வரிகளில் ஒளிந்திருக்கும் அர்த்தங்களை கதாநாயகி விளக்க அவனும் மெல்ல அவனும் மெல்ல நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளில் ஈர்க்கப்படுகிறான். ரசிக்கிறான்.

இருவரும் மீண்டும் சந்திக்கும் ஒரு பௌர்ணமி இரவில் முத்துக்குமாரின் ஒரு பாடல் வரியை கதாநாயகன் உச்சரிக்க, அடுத்த வரியை கதாநாயகி உச்சரிக்க, வரிகள் பாடலாகி இசையாகி காதல் மலர்கிறது. இந்தத் தருணத்தில் ஒலிக்கும் ஒரு காதல் பாடலுக்கு பாடல் வரிகள் தேவைப்பட்டது.

நண்பரும், கவிஞருமான கபிலனிடம் எதேச்சையாக இந்த மாதிரி காட்சியமைப்பு உள்ளது என்ன செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தேன். “நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளையே உபயோகப்படுத்தலாமே..?” என்று கபிலன் ஆலோசனை வழங்கினார். எனக்கும் அதுதான் மிக சரியாகப்பட்டது.

ஆனால் நா.முத்துக்குமார் கடல் அளவு கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதிலுள்ள ஒரு காதல் கவிதையை பாடலாக மாற்றவேண்டும். அல்லது சில காதல் கவிதைகளில் இருந்து ஒரு முத்து முத்தான காதல் ததும்பும்  வரிகளை தேர்ந்தெடுத்து முழுப் பாடலாக மாற்ற வேண்டும். நோய்மையில் அது மூச்சு முட்டும் பணி.

இதில் மற்றொரு சவாலும் இருக்கிறது. கவிதை வரிகள் உரைநடை பாணியில் இருக்கும். இசை சந்தங்களுக்கு பொருத்தமான வரிகள் இருந்தால்தான் இசையமைக்க இசைவாகவும் இருக்கும் அது வெற்றியும் பெறும்.

இந்த பெரும் பணியில் நா.முத்துக்குமாரின் நண்பனாக, ஒரு திரைப்பட இயக்குநராக நான் மட்டும் ஈடுபடுவதைவிட, நா.முத்துக்குமாரின் தீவிர ரசிகர்கள் விரும்பினால் என்னுடன் கை கோர்க்கலாம்.

விரும்பினால் இளம் பாடலாசிரியர்கள் நா முத்துக்குமாரின் கவிதையிலிருந்து சின்ன சின்ன மாற்றங்களுடன் சந்தத்திற்கு ஏற்ற ஒரு பாடலை எழுதி அனுப்பலாம்.

காட்சிக்கும், இசைக்கும் பொருத்தமாக இருக்கும் பாடலை நானும் இசையமைப்பாளரும் இணைந்து தேர்ந்தெடுத்து திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வோம்.

அப்படி தேர்வாகும் பாடலை ஒருங்கிணைத்த அல்லது எழுதிய அந்த ரசிகருக்கு அல்லது பாடலாசிரியருக்கு நா.மு. கவிதையைத் தேர்ந்தெடுத்து தந்ததற்கு அல்லது சில கவிதைகளை வைத்து பாடலாகத் தொகுத்தமைக்கான அங்கீகாரமும், மரியாதையும், சன்மானமும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் வைத்து வழங்கப்படும். மேலும், நா.முத்துக்குமாரின் கவிதைக்கான காப்புத் தொகை நா.முத்துக்குமாரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நா.முத்துக்குமாரின் கவிதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தினம் 30 ஜூன் 2021.

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :  vb@urbanboyzstudios.com

The post சினிமா பாடலாசிரியராக விரும்புபவர்களுக்கு இயக்குநர் வசந்தபாலன் அறிவித்திருக்கும் போட்டி..! appeared first on Touring Talkies.

]]>