Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சூரரைப் போற்று திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Mon, 10 Oct 2022 09:04:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சூரரைப் போற்று திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் https://touringtalkies.co/soorarai-potru-movie-bags-6-awards-in-filmfare-awards/ Mon, 10 Oct 2022 09:04:12 +0000 https://touringtalkies.co/?p=25094 நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது. இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ‘ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. மேலும், சூர்யா தயாரித்து […]

The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
நேற்று இரவு பெங்களூரில் நடந்து முடிந்த 2021-ம் ஆண்டு சிறந்த தென்னிந்திய திரைப்படங்களுக்கான பிலிம்ஃபேர் விருது நிகழ்ச்சியில் சூர்யாவின் சூரரைப் போற்று’ திரைப்படம் 6 விருதுகளை வாங்கியது.

இப்படத்தில் நடித்த சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சூர்யாவின் அம்மாவாக நடித்த ஊர்வசிக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜி.வி.பிரகாஷுக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஆகாசம்’ பாடலை பாடிய கிறிஸ்டியன் ஜோஸ் மற்றும் கோவிந்த் வசந்தா ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், சூர்யா தயாரித்து நடித்த ஜெய் பீம்’ திரைப்படமும் 2 விருதுகளை வென்றுள்ளது. இப்படத்தில் நாயகியாக நடித்திருந்த லிஜோ மோல் ஜோஸ் சிறந்த நடிகைக்கான விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதினை த.செ.ஞானவேலும் பெற்றனர்.

அத்துடன் பா.ரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற சார்பட்டா பரம்பரை’ படமும் மூன்று விருதுகளை வென்றது. இந்தப் படத்தில்  ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதில் ஹீரோவாக நடித்த ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘நீயே ஒலி’ என்ற பாடல் வரிகளை எழுதிய தெருக்குரல் அறிவு’க்கு சிறந்த பாடலாசிரியருக்கான விருதும் வழங்கப்பட்டது.

The post 6 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியேட்டரில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் https://touringtalkies.co/soorarai-poatru-movie-released-on-madurai-theatre/ Sat, 05 Feb 2022 17:46:14 +0000 https://touringtalkies.co/?p=20584 விநியோகஸ்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்று மதுரையில் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். அப்போது கொரோனா வைரஸின் முதல் கட்டப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்ததால் இந்தப் படம் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இதை எதிர்பார்க்காத தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் சூர்யா மீது கோபமடைந்தனர். இதையடுத்து சூர்யாவின் குடும்பத் தயாரிப்புப் […]

The post எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியேட்டரில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
விநியோகஸ்தர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்று மதுரையில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் தயாரிப்பில் இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம்.

அப்போது கொரோனா வைரஸின் முதல் கட்டப் பரவல் உச்சக்கட்டத்தில் இருந்ததால் இந்தப் படம் தியேட்டர்களுக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியானது.

இதை எதிர்பார்க்காத தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் சூர்யா மீது கோபமடைந்தனர். இதையடுத்து சூர்யாவின் குடும்பத் தயாரிப்புப் படங்களை இனிமேல் தியேட்டர்களில் திரையிடக் கூடாது என்ற தீர்மானத்தை அவரவர் சங்கத்தின் கூட்டத்தில் முடிவெடுத்தனர்.

இதற்கிடையில் இந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சினிமா விமர்சகர்களிடத்திலும், பல்வேறு மாநில திரையுலக பிரபலங்களின் பாராட்டையும் பெற்றது. ஆஸ்கர் விருது போட்டிக்கான முதல் தகுதிப் போட்டியிலும் போட்டியிட்டது.

மேலும் இந்த ‘சூரரைப் போற்று’ பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. இருந்தாலும் தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்து வந்தது.

ஆனால் இப்போது திடீரென்று மதுரையில் இருக்கும் ‘மிட்லண்ட்’ தியேட்டரில் இத்திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து முதல் காட்சியே ஹவுஸ் புல்லானது.

இந்தப் படம் தியேட்டருக்கு வருகிறது என்றவுடனேயே மதுரையில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்கள் சங்கத்தினரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். உடனேயே ‘மிட்லண்ட்’ தியேட்டர் உரிமையாளரான கஜேந்திரனிடம் போனில் பேசிய நிர்வாகிகள், “சங்கக் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ள வேண்டாம். ‘சூரரைப் போற்று’ படத்தை வெளியிட வேண்டாம். மீறினால் அடுத்து எந்த புதிய படமும் ‘மிட்லண்ட்’ தியேட்டருக்குக் கிடைக்காது…” என்றும் மிரட்டியிருக்கிறார்கள்.

ஆனால், எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத மிட்லண்ட்’ தியேட்டர் உரிமையாளர் படத்தை திட்டமிட்டபடியே நேற்றைக்கு வெளியிட்டுவிட்டார். படம் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் கூட்டம், கூட்டமாக வந்து கொண்டிருப்பதால் தியேட்டர் உரிமையாளர் சந்தோஷத்தில் இருக்கிறார்.

ஆனால், இனிமேல் ‘மிட்லண்ட்’ தியேட்டருக்கு புதிய படங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள் மதுரை வட்டார விநியோகஸ்தர்கள் சங்கத்தினர்..!

The post எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியேட்டரில் வெளியானது ‘சூரரைப் போற்று’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
மெல்பர்ன் திரைப்பட விருதுகளை சூர்யா-ஜோதிகா தம்பதிகள் பெற்றுக் கொண்டனர் https://touringtalkies.co/melbourne-film-festival-awards-received-by-suriya-jyothika-couples/ Sun, 05 Sep 2021 11:46:10 +0000 https://touringtalkies.co/?p=17686 நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த ‘சூரரைப் போற்று’ படத்திற்குக் கிடைத்த மெல்பர்ன் சர்வதேச திரைப்பட விருதுகள் பத்திரமாக சூர்யாவிடம் வந்து சேர்ந்தது. இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் வென்று வருகிறது. அந்த வகையில் அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற […]

The post மெல்பர்ன் திரைப்பட விருதுகளை சூர்யா-ஜோதிகா தம்பதிகள் பெற்றுக் கொண்டனர் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த சூரரைப் போற்று’ படத்திற்குக் கிடைத்த மெல்பர்ன் சர்வதேச திரைப்பட விருதுகள் பத்திரமாக சூர்யாவிடம் வந்து சேர்ந்தது.

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரித்து, நடித்த படம் ‘சூரரைப் போற்று’.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி இத்திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்போதும் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளையும் வென்று வருகிறது.

அந்த வகையில் அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த சூரரைப் போற்று’ திரை்பபடம் கலந்து கொண்டது. இந்த விழாவில் இந்தப் படத்துக்கு, சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு விருதுகளை வென்றது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விருது விழா ஆன்லைனில் நடத்தப்பட்டது. இதனால், மெல்போர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படம் வென்ற விருதுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்த விருதுகளை படத்தைத் தயாரித்த 2டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ராஜேசகர் பாண்டியன் முன்னிலையில் நடிகர் சூர்யாவும், ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“இது ‘சூரரைப் போற்று’ படக் குழுவினரின் கடின உழைப்புக்கு கிடைத்த விருது” என நடிகர் சூர்யா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

The post மெல்பர்ன் திரைப்பட விருதுகளை சூர்யா-ஜோதிகா தம்பதிகள் பெற்றுக் கொண்டனர் appeared first on Touring Talkies.

]]>
‘மெல்பர்ன் திரைப்பட விழா’வில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் https://touringtalkies.co/soorarai-potru-movie-gets-2-awards-in-melbourn-indian-film-festival/ Fri, 20 Aug 2021 10:57:44 +0000 https://touringtalkies.co/?p=17179 நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று.’ ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பல்வேறு திரையுலக பிரபலங்களும் […]

The post ‘மெல்பர்ன் திரைப்பட விழா’வில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘சூரரைப் போற்று’ திரைப்படம் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும், சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் சுதா கொங்கராவின் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘சூரரைப் போற்று.’

ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவின் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்து பாராட்டினார்கள்.

கடந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ்ப் படம் என்கிற பெருமை இந்த படத்திற்குத்தான் கிடைத்தது. மேலும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் ஆஸ்கார் போட்டிக்குத் தேர்வாகி சாதனை படைத்தது இந்த சூரரைப் போற்று’ திரைப்படம். மேலும், IMDB-யில் அதிக மதிப்பெண் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதும் ஆச்சரியமானதாகும்.

இப்போது ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதை ‘சூரரைப் போற்று’ படமும், சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் பெற்றுள்ளனர். இது சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post ‘மெல்பர்ன் திரைப்பட விழா’வில் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்திற்கு 2 விருதுகள் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூர்யாவுக்கு நடிகர் ராதாரவி கடும் கண்டனம்..! https://touringtalkies.co/actor-radharavi-condems-actor-surya-for-his-movie-release-in-ott/ Mon, 28 Dec 2020 09:34:15 +0000 https://touringtalkies.co/?p=11527 ‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. உண்மையில் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகமானோர் பார்வையிட்ட திரைப்படம் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்தான். ஆனால், இந்தப் படத்தைத் தியேட்டர்களுக்குத் தராமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்காக நடிகர் சூர்யாவை, நடிகர் ராதாரவி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “சமீபத்தில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்தேன். ‘சூரரைப் போற்று’ வெற்றிகரமான 25-வது நாள் என்று போட்டிருந்தது. […]

The post நடிகர் சூர்யாவுக்கு நடிகர் ராதாரவி கடும் கண்டனம்..! appeared first on Touring Talkies.

]]>
‘சூரரைப் போற்று’ திரைப்படம் கடந்த மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.

உண்மையில் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் அதிகமானோர் பார்வையிட்ட திரைப்படம் ‘சூரரைப் போற்று’ திரைப்படம்தான்.

ஆனால், இந்தப் படத்தைத் தியேட்டர்களுக்குத் தராமல் ஓடிடி தளத்தில் வெளியிட்டதற்காக நடிகர் சூர்யாவை, நடிகர் ராதாரவி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், “சமீபத்தில் ஒரு விளம்பரம் ஒன்றை பார்த்தேன். ‘சூரரைப் போற்று’ வெற்றிகரமான 25-வது நாள் என்று போட்டிருந்தது. ஏது.. தியேட்டரில் வெளியாகி 25 நாள் கொண்டாடுதோன்னு நினைச்சேன். அப்புறம்தான் சொன்னாங்க.. ஓடிடில ரிலீஸாகி இந்தப் படம் இன்னியோட 25-வது நாளு. அதுக்குத்தான் விளம்பரம் கொடுத்திருக்காங்க..

அதென்ன ஓடிடி..? தியேட்டர்கள் இல்லாமல் சினிமா துறை இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்குமா.. தியேட்டர்களில் படத்தைக் கொண்டு வந்தால்தான் ஒரு ரசிகனாக ஒரு படத்தை உணர்ந்து ரசிக்க முடியும். ஓடிடில வீட்ல உக்காந்து பார்க்குறதுல என்ன சந்தோஷம் வந்திரப் போகுது..? ஆனால், அந்தப் படம் ரொம்பவும் அருமையான படம். நான் இல்லைன்னு சொல்லலை.

நாடகக் கொட்டகை, சினிமா தியேட்டர் என்று திரைப்படத் தொழில் மாறினாலும் தியேட்டர்கள்தான் எப்போதும் நிரந்தரமானது. இதை பெரிய நடிகர்களே புரிந்து கொள்ளாமல் ஓடிடிக்கு கொண்டு போனால், கடைசியா இவர்களை நம்பியிருக்குற தியேட்டர்களை என்ன செய்வது..? சுத்தமா மூடிரலாமா..? அது தப்பில்லையா..?

சினிமான்னா அது தியேட்டருக்குத்தான் வரணும். அதுதான் தொழிலை வளர்த்தெடுக்கும். நீங்க ஓடிடிக்கே போயிட்டீங்கன்னா உங்களுக்கே அடுத்தத் தலைமுறை ரசிகன் கிடைக்க மாட்டான்..

சூர்யா தம்பி செஞ்சது ரொம்பத் தப்பு. நான் எங்கேயாவது அந்தத் தம்பியை பார்த்தால் கண்டிப்பாக இதைப் பற்றிக் கேட்பேன்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் ராதாரவி.

The post நடிகர் சூர்யாவுக்கு நடிகர் ராதாரவி கடும் கண்டனம்..! appeared first on Touring Talkies.

]]>
கோல்டன் குளோப் விருது போட்டிக்குத் தேர்வான ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள்..! https://touringtalkies.co/asuran-and-soorarai-poatru-tamil-films-selected-for-the-golden-globe-awards/ Mon, 21 Dec 2020 04:56:16 +0000 https://touringtalkies.co/?p=11284 உலக அளவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் ‘ஆஸ்கார் விருது’க்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விருதாக ‘கோல்டன் குளோப் விருது’கள் கருதப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினைப் பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ‘ஆஸ்கார் விருதும்’ அதே ஆண்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பல வருடங்களாக உள்ளது. இந்த வருடத்திய 78-வது ‘கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா கொரோனா லாக் டவுனால் நடத்தப்படவில்லை. அதனால், […]

The post கோல்டன் குளோப் விருது போட்டிக்குத் தேர்வான ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள்..! appeared first on Touring Talkies.

]]>
உலக அளவில் திரைப்படத் துறையில் வழங்கப்படும் விருதுகளில் ‘ஆஸ்கார் விருது’க்கு அடுத்தபடியாக மிகப் பெரிய விருதாக ‘கோல்டன் குளோப் விருது’கள் கருதப்படுகின்றன.

வருடந்தோறும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக் கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினைப் பெறும் படங்கள் மற்றும் நடிகர்களுக்கு ‘ஆஸ்கார் விருதும்’ அதே ஆண்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் பல வருடங்களாக உள்ளது.

இந்த வருடத்திய 78-வது ‘கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா கொரோனா லாக் டவுனால் நடத்தப்படவில்லை. அதனால், இந்த வருடத்திற்கான விருதுகள் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் இந்த ஆண்டு ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் திரைப்படங்களும் போட்டியில் பங்கேற்க தகுதி உள்ளவை என்று அறிவிக்கப்பட்டு இருந்தன.

இந்தப் போட்டிக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் திரையிட உலக அளவில் பல்வேறு மொழிகளில் இருந்து 127 படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றில் 50 படங்கள் திரையிட தேர்வாகி உள்ளன.

தேர்வான படங்கள் பட்டியலில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த சூரரைப் போற்று’, வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ மற்றும் மலையாள படமான ‘ஜல்லிக்கட்டு’ ஆகிய படங்களும் இடம் பெற்றுள்ளன. இது தமிழ்த் திரையுலகத்திற்கும், அந்த படக் குழுவினருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. ‘அசுரன்’ படம் தியேட்டர்களில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது நினைவிருக்கலாம். அதோடு, கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் அசுரன் திரைப்படம் ஏற்கனவே தேர்வாகி உள்ளது.

ஜல்லிக்கட்டு’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பில் போட்டியிட அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

The post கோல்டன் குளோப் விருது போட்டிக்குத் தேர்வான ‘அசுரன்’, ‘சூரரைப் போற்று’ திரைப்படங்கள்..! appeared first on Touring Talkies.

]]>
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்..! https://touringtalkies.co/soorarai-potru-movie-trailer/ Mon, 26 Oct 2020 05:27:54 +0000 https://touringtalkies.co/?p=9284 The post சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.

]]>
The post சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் டிரெயிலர்..! appeared first on Touring Talkies.

]]>
‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! https://touringtalkies.co/soorarai-potru-movie-release-postponed-news/ Fri, 23 Oct 2020 04:02:04 +0000 https://touringtalkies.co/?p=9144 சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால், அது தள்ளிப் போவதாக நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். “இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும். இப்போது நான் மனந் திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச […]

The post ‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! appeared first on Touring Talkies.

]]>

சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம், வரும் அக்டோபர் 30-ம் தேதி அமேஸான் ஓடிடி தளத்தில் வெளியாவதாக இருந்தது. சில காரணங்களால், அது தள்ளிப் போவதாக நேற்றைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி சூர்யா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“இது வழக்கமாக நாம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடிதம் அல்ல. சில நேரம் எனது சூழல் இதற்கு முன் சந்தித்திராத வகையில் அமையும்.

இப்போது நான் மனந் திறந்த நிலையில் வெளிப்படையாக உங்கள் முன் நிற்கிறேன். பேச விரும்புகிறேன். ஏனென்றால், நீங்கள்தான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து நிற்க வைத்திருக்கிறீர்கள் எல்லா வகையிலும். உங்களது பிரதிபலன் பாராத அன்பும் பாராட்டும், உண்மையும்தான் இந்த தகுதியை எனக்கு வாங்கி கொடுத்திருக்கிறது.

‘சூரரைப் போற்று’  படம் தொடங்கியபோதே இது ஒரு சவாலான முயற்சி என்று அதை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியாக நாங்கள் உணர்ந்தோம். இதற்கான  படப்பிடிப்புத் தளங்கள் இதுவரை காணாதவை. பணி புரிந்த புதிய புதிய படப்பிடிப்பு இடங்கள், சந்தித்த மனிதர்கள், சந்தித்த வெவ்வேறு மொழியினர், பணியாற்றிய திறமைசாலிகள் என அனைத்தும் மறக்க முடியாதவை. அவை வித்தியாசமானவை மட்டுமல்ல குறிப்பிடத்தக்கதாகவும் இருந்தவை.

‘மாறா’  என்ற அந்த உலகத்தில் கொண்டு சேர்க்கும்விதமாக இருந்த அந்த பிரம்மாண்டமான அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது.

 படத்தில் விமானப் படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அது சம்பந்தமாக ஏராளமான நடைமுறைகளும், அனுமதிகளும் பெற வேண்டியிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால், அது சம்பந்தமாக இந்திய விமானப் படையுடன்  நாங்கள் தொடர்பு கொண்டு அணுகி அவர்களது ஒத்துழைப்பையும் பெற வேண்டி இருந்தது.

படத்தை வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால், சூரரைப் போற்று’ பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது. இது வழக்கமான நடைமுறைதான் வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்.

‘சூரரைப் போற்று’ படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம். தனிப்பட்ட முறையில் என்னை மிகவும் பாதித்த கதை இது.  துரதிஷ்டவசமாக சிறு தாமதம் ஆகிறது.

படம் தாமதம் என்பது எனக்கும் சிறு வலி ஏற்படுத்திடும் விஷயம்தான். ஏனென்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் நீங்கள் இருக்கிறீர்கள். இந்தத் தாமதத்தை எதிர்பார்ப்பைக் கூட்டும் ஒரு அம்சமாக நாம் நேர்நிலையாக எடுத்துக் கொள்வோம்.

இந்த சின்ன இடைவெளியை மாறா’வின் உலகத்தில் நீங்கள் பிரவேசிக்க ஒரு முன் தயாரிப்பு நேரமாக எடுத்துக் கொள்ளலாம். இப்படியொரு பாசிட்டிவாக இந்தத் தடங்கலை எடுத்துக் கொள்வோம்.

விரைவில் சூரரைப் போற்று’ படத்தின் சிறப்பு முன்னோட்டத்தை வெளியிட இருக்கிறோம். இத்துடன் ஒரு அழகான நட்பைப் பற்றிய பாடலையும் வெளியிடுகிறோம். அது நம் நட்புக்கான அர்ப்பணிப்பாகவும், அன்பின் அடையாளமாகவும் இருக்கும்.”

இவ்வாறு சூர்யா  கூறியுள்ளார்.

The post ‘சூரரைப் போற்று’ எப்போது வெளியாகும்..? – நாயகன் சூர்யா விளக்கம்…! appeared first on Touring Talkies.

]]>