Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – Touring Talkies https://touringtalkies.co Sun, 11 Jul 2021 10:34:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவசரமாக சந்திப்பது ஏன்..? https://touringtalkies.co/why-rajini-is-in-such-a-hurry-to-meet-her-fan-association-executives/ Sun, 11 Jul 2021 10:33:17 +0000 https://touringtalkies.co/?p=16094 நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கவிருப்பது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்களுக்கு முன்பாகத்தான் ரஜினி அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார். அடுத்த வாரம் தான் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்திற்கு டப்பிங் பேசவிருக்கிறார். அதையடுத்து இன்னும் எடுக்கவிருக்கும் சிற்சில காட்சிகளில் நடித்துக் கொடுக்கவிருக்கிறார். இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து வந்த வேகத்தில் அவர் தனது ரசிகர் மன்றத் தலைவர்களை சந்திப்பது ஏன் என்ற […]

The post ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவசரமாக சந்திப்பது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினிகாந்த் நாளை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் சந்திக்கவிருப்பது மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 நாட்களுக்கு முன்பாகத்தான் ரஜினி அமெரிக்காவில் இருந்து மருத்துவப் பரிசோதனை முடிந்து சென்னை திரும்பினார். அடுத்த வாரம் தான் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்திற்கு டப்பிங் பேசவிருக்கிறார். அதையடுத்து இன்னும் எடுக்கவிருக்கும் சிற்சில காட்சிகளில் நடித்துக் கொடுக்கவிருக்கிறார்.

இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து வந்த வேகத்தில் அவர் தனது ரசிகர் மன்றத் தலைவர்களை சந்திப்பது ஏன் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துள்ளது.

2021 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தான் கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்று உறுதியுடன் சொல்லிவிட்டுத் தப்பித்தார் ரஜினி. அப்போது அவருடைய ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் சிலர் மன்றத்தில் இருந்து விலகி திமுக மற்றும் அதிமுக, பா.ஜ.க.வில் சேர்ந்தனர்.

சிலர் எந்தக் கட்சியிலும் சேராமலாலேயே அந்தந்தக் கட்சிகளுக்காக தேர்தல் வேலை பார்த்தனர். இதற்காக அரசியல் கட்சிகளிடம் பணமும் பெற்றுக் கொண்டனராம். இந்தத் தகவல் ரஜினியை எட்டியதும் வழக்கம்போல அமைதியாகவே இருந்தார்.

தேர்தல் முடிந்து புதிய அரசும் அமைந்த பின்பு அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பின்புதான் இது பற்றி பேச முடியும் என்பதில் அவர் உறுதியாக இருக்க.. வழக்கம்போல ரஜினி ரசிகர் மன்றத்தினர் தொடர்ந்து இது குறித்து தலைமைக்கு தகவல்களை அனுப்பிக் கொண்டேயிருந்தனர்.

இதையெல்லாம் திரட்டிய தலைமைக் கழக நிர்வாகிகள் இது குறித்து ரஜினியின் கண் பார்வைக்குக் கொண்டு போக இதற்கு ஒரு தீர்வைக் காணத்தான் நாளை அவர் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியைவிட்டு விலகியவர்களுக்குப் பதிலாக புதியவர்களைச் சேர்க்க வேண்டும். பணம் வாங்கிக் கொண்டு ரசிகர் மன்றத்தைக் கூட்டணியாக்கி தேர்தல் வேலை பார்த்தவர்களை மன்றத்தைவிட்டு நீக்க வேண்டும். ரஜினிக்கு எதிராக பேட்டியளித்த சில மாவட்டத் தலைவர்கள், நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்று ரஜினியின் கைகளில் இருக்கும் பைல்களில் நிறைய கோரிக்கைகளும், ஆலோசனைகளும் இருக்கிறதாம்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டத்தான் நாளை ரஜினி தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் என்கிறார்கள் அவரது மன்றத்தினர்.

The post ரஜினி தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை அவசரமாக சந்திப்பது ஏன்..? appeared first on Touring Talkies.

]]>
“பஸ் கண்டக்டர் வேலையை ஏன் கைவிட்டார் ரஜினி..?” – கர்நாடக முன்னாள் அமைச்சர் சொல்லும் ரகசியம்..! https://touringtalkies.co/why-did-rajini-quit-her-job-as-a-bus-conductor-the-secret-told-by-the-former-minister-of-karnataka/ Wed, 09 Jun 2021 11:02:10 +0000 https://touringtalkies.co/?p=15453 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பு முனையாக இருந்தது அவரது மேடை நாடக ஆர்வம்தான் என்கிறார் ரஜினி நடத்துனராகப் பணியாற்றிய பெங்களூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளரான ஜெ.அலெக்ஸாண்டர். கேரளாவில் பிறந்து ஐ.ஏ.எஸ். படித்து முடித்து கர்நாடகா கேடரில் பணியாற்றிய அலெக்ஸாண்டர், பிற்காலத்தில் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணியாற்றியபோதுதான் நமது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அதே நிறுவனத்தின் பேருந்தில் நடத்துனராகப் […]

The post “பஸ் கண்டக்டர் வேலையை ஏன் கைவிட்டார் ரஜினி..?” – கர்நாடக முன்னாள் அமைச்சர் சொல்லும் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் வாழ்க்கையில் முக்கியமான திருப்பு முனையாக இருந்தது அவரது மேடை நாடக ஆர்வம்தான் என்கிறார் ரஜினி நடத்துனராகப் பணியாற்றிய பெங்களூர் சிட்டி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளரான ஜெ.அலெக்ஸாண்டர்.

கேரளாவில் பிறந்து ஐ.ஏ.எஸ். படித்து முடித்து கர்நாடகா கேடரில் பணியாற்றிய அலெக்ஸாண்டர், பிற்காலத்தில் கர்நாடகாவில் சட்டமன்ற உறுப்பினராகி, அமைச்சராகவும் பணியாற்றியவர்.

இவர் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணியாற்றியபோதுதான் நமது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அதே நிறுவனத்தின் பேருந்தில் நடத்துனராகப் பணியாற்றி வந்தார்.

அப்போது நடந்த சம்பவங்களைப் பற்றி சமீபத்தில் ஜெ.அலெக்ஸாண்டர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் ரஜினி பற்றிப் பேசும்போது, “நான் அந்த நிறுவனத்தின் பொறுப்புக்கு வந்த பின்பு ஒரு நாள் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் வந்து ஒரு நடத்துனரின் சஸ்பெண்ட் ஆர்டரை கேன்ஸல் செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். நான் அவர்களிடத்தில் “சஸ்பெண்ட் ஆன அந்த நபரை வந்து என்னை பார்க்கச் சொல்லுங்கள்…” என்றேன்.

மறுநாள் சஸ்பெண்ட்டில் இருந்த அந்த நபரும் என்னைப் பார்க்க வந்தார். அவர்தான் ‘சிவாஜிராவ் கெய்க்வாட்’ என்ற இன்றைய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.

அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை நான் கேட்டபோது ரஜினி மீது எந்தத் தவறும் இல்லையென்றே எனக்குப் பட்டது. அதனால் அந்த சஸ்பென்ஷனை நான் கேன்ஸல் செய்து மீண்டும் அவரை பணியில் சேர்த்தேன். அப்போது மிகவும் மரியாதையுடன் எனக்கு நன்றி சொல்லிவிட்டுப் போனார் சிவாஜிராவ்.

அதன் பிறகு அந்தக் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் தொழிலாளர்களால் நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் சிவாஜிராவும் நடித்திருந்தார். நாடகமும் அருமை. அவருடைய நடிப்பும் நன்றாக இருந்தது. அதனால் சிவாஜிராவை அழைத்து நான் வெகுவாகப் பாரட்டினேன்.

சில நாட்கள் கழித்து திடீரென்று சிவாஜிராவ் என்னிடம் வந்து, “நான் இந்த வேலைல இருந்து நின்னுக்குறேன் ஸார். என்னுடைய லட்சியமே சினிமால நடிக்கிறதுதான் ஸார். அதனால் மெட்ராஸுக்கு போயி பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் சேரப் போகிறேன்..” என்று சொன்னார். எனக்கு பெரிய அதிர்ச்சியானது.

எனக்கு இது ஏற்புடையதாக இல்லை. அதனால் “வேண்டாம்ப்பா. நீ ரொம்ப ரிஸ்க் எடுக்குற. வேண்ணா நான் உனக்கு சம்பளத்தைக் கூட்டித் தரச் சொல்றேன். கொஞ்ச நாள்ல பிரமோஷனும் கிடைக்கும். இங்கயே இருந்திரலாமே…?” என்று அட்வைஸ் செய்தேன். ஆனால் ரஜினி கேட்கவில்லை. பிடிவாதமாக வேலையை ராஜினாமா செய்வதில் குறியாக இருந்தார். நானும் வேறுவழியில்லாமல் அவரது ராஜினாமாவை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பி வைத்தேன்.

அவருடைய உறுதியான நிலைப்பாடு. தன்னை நம்பிய விதம்.. தன்னால் முடியும் என்று அவர் நினைத்தது எல்லாமுமாக சேர்ந்துதான் இன்றைக்கு அவரை சூப்பர் ஸ்டாராக உருவாக்கியிருக்கிறது..” என்று சொல்லியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெ.அலெக்ஸாண்டர்.

The post “பஸ் கண்டக்டர் வேலையை ஏன் கைவிட்டார் ரஜினி..?” – கர்நாடக முன்னாள் அமைச்சர் சொல்லும் ரகசியம்..! appeared first on Touring Talkies.

]]>
“அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! https://touringtalkies.co/rajinikanth-is-universal-super-star-sathyaraj-interview/ Thu, 17 Dec 2020 06:35:46 +0000 https://touringtalkies.co/?p=11158 சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பின்பு, கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையில் கடும் மோதல் என்றும், ரஜினியை கலாய்த்து சத்யராஜ் பேசிய பல வீடியோக்களை இதற்கு உதாரணமாக்கி பலரும் வெளியிட்டு வந்தனர். இது பற்றி சமீபத்தில் நம்மிடம் பேசிய சத்யராஜ், “ரஜினிக்கும், எனக்கும் என்னங்க மோதல்..? ரஜினி யார்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. இந்தியாவுக்கு மட்டுமில்ல.. அகில உலகத்துக்கும் சூப்பர் ஸ்டார் அவர் […]

The post “அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்த பின்பு, கடந்த சில நாட்களாகவே நடிகர் ரஜினிக்கும், சத்யராஜூக்கும் இடையில் கடும் மோதல் என்றும், ரஜினியை கலாய்த்து சத்யராஜ் பேசிய பல வீடியோக்களை இதற்கு உதாரணமாக்கி பலரும் வெளியிட்டு வந்தனர்.

இது பற்றி சமீபத்தில் நம்மிடம் பேசிய சத்யராஜ், “ரஜினிக்கும், எனக்கும் என்னங்க மோதல்..? ரஜினி யார்.. அவர் ஒரு சூப்பர் ஸ்டார்.. அவர் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்ல.. இந்தியாவுக்கு மட்டுமில்ல.. அகில உலகத்துக்கும் சூப்பர் ஸ்டார் அவர் ஒருத்தர்தான்.

இன்றைய உலகத்துல எந்த நாட்டுல, எந்த மொழில.. எந்த நடிகன் 45 வருஷமா ஹீரோவாகவே நடிச்சிட்டு வர்றாரு..? சொல்லுங்க.. அதுலேயும் இன்னிக்கு தமிழ்ச் சினிமால 100 கோடி ரூபாய் சம்பளத்தையும் அவரால வாங்க முடியுதுன்னா அதுதானே அவரோட திறமை.. பெருமை..! அவருக்கும், எனக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர் தீவிர பக்திமான். நான் தீவிர நாத்திகன். இதுதான் எங்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் வேறுபாடே தவிர.. வேறில்லை..” என்றார்.

The post “அகில உலகத்திற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிதான்..!” – சத்யராஜின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>