Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சிலம்பரசன் – Touring Talkies https://touringtalkies.co Sun, 23 Oct 2022 14:41:09 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சிலம்பரசன் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! https://touringtalkies.co/an-old-video-of-sivakarthikeyan-teasing-simbu-has-gone-viral/ Sun, 23 Oct 2022 14:40:32 +0000 https://touringtalkies.co/?p=25898 தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடையில் பல்வேறு நடிகர்களைப் பற்றி மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது […]

The post சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! appeared first on Touring Talkies.

]]>
தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், ஆரம்பத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக இருந்து பின்னர் விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக உயர்ந்து, அதன் மூலம் கிடைத்த புகழால் சினிமாவிற்குள் நுழைந்தவர்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மேடையில் பல்வேறு நடிகர்களைப் பற்றி மிமிக்ரி செய்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் சாலமன் பாப்பையா, சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோரது குரலில் சிவகார்த்திகேயன் மிமிக்ரி செய்துள்ளார். அப்போது சிம்பு அரசியலுக்கு வந்த என்ன செய்வார் என்கிற கான்செப்டில் பேசிய சிவகார்த்திகேயன், “கர்ப்பிணிப் பெண்களுக்கு அரசு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்னு சொல்லியிருக்கிறது. நான் அரசியலுக்கு வந்தால் அதை நிறைய பேரை வாங்க வைப்பேன் சார்..” என்று காமெடியாக சிம்புவின் குரலிலேயே பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் நடிகராவதற்கு முன்பாக நகைச்சுவைக்காக இப்படி பேசி இருந்தாலும், தற்போது அவர் ஒரு முன்னணி நடிகராக இருப்பதால் அவரின் இந்த பேச்சுக்கு சிம்புவின் ரசிகர்கஎிடையே பலவித எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன.

The post சிம்புவை கிண்டல் செய்து சிவகார்த்திகேயன் பேசிய பழைய வீடியோ வைரலானது..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு, கவுதம் மேனனுக்கு பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் https://touringtalkies.co/producer-isari-k-ganesh-gives-gifts-to-simbu-and-gautham-vasudev-menon/ Mon, 26 Sep 2022 07:46:25 +0000 https://touringtalkies.co/?p=24658 ‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளதால், அப்படத்தின் நாயகன் தனுஷ், இயக்குநர் கவுதம் மேனன் இருவருக்கும் கார் மற்றும் பைக்குகளை வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ். படத்தின் நாயகனான சிம்புவுக்கு 92 லட்சம் மதிப்புள்ள டயோட்டா vellfire காரினை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர். அதேபோல் இயக்குநர் கவுதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு […]

The post சிம்பு, கவுதம் மேனனுக்கு பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ படம் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக மாபெரும் வெற்றிப் படமாக அமைந்துள்ளதால், அப்படத்தின் நாயகன் தனுஷ், இயக்குநர் கவுதம் மேனன் இருவருக்கும் கார் மற்றும் பைக்குகளை வாங்கிக் கொடுத்து பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ்.

படத்தின் நாயகனான சிம்புவுக்கு 92 லட்சம் மதிப்புள்ள டயோட்டா vellfire காரினை பரிசளித்துள்ளார் தயாரிப்பாளர்.

அதேபோல் இயக்குநர் கவுதம் மேனனுக்கு பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். கவுதம் மேனனுக்கு அவர் கொடுத்துள்ள புல்லட் பைக்கின் விலை ரூ.2 லட்சத்துக்கு மேலான மதிப்புள்ளது.

சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றபோது அதன் இயக்குநருக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்கு பைக்குகளையும் பரிசளித்தார்.

தற்போது அதே டிரெண்டை தயாரிப்பாளர் ஐசரி கணேசனும், பாலோ பண்ணியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிம்பு, கவுதம் மேனனுக்கு பரிசளித்த தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் appeared first on Touring Talkies.

]]>
“சிம்புவுக்கு தேசிய விருது உறுதி..!” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டு..! https://touringtalkies.co/national-award-confirmed-for-simbu-appreciation-of-producer-isari-ganesh/ Tue, 20 Sep 2022 05:52:26 +0000 https://touringtalkies.co/?p=24595 தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினரின் சார்பில் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் Dr ஐசரி K.கணேஷ் பேசும்போது, “இந்தப் படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.   நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக […]

The post “சிம்புவுக்கு தேசிய விருது உறுதி..!” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினரின் சார்பில் நன்றி அறிவிப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் Dr ஐசரி K.கணேஷ் பேசும்போது, “இந்தப் படம் தமிழ்நாட்டை தாண்டி, பல இடங்களில் பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் படத்தை தயாரித்ததில் எங்கள் நிறுவனம் பெருமை அடைகிறது.  

நடிகர் சிம்பு இந்த படத்தின் முத்து கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார். இந்தப் படம் முழுவதிலும் அவருடைய நடிப்பு பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இந்த படத்திற்காக அவர் கண்டிப்பாக தேசிய விருது வாங்குவார். அதற்கு வேல்ஸ் நிறுவனம் உறுதுணையாக இருக்கும். இந்தப் படத்திற்காக அவர் கடின உழைப்பை கொடுத்துள்ளார்.

இயக்குநர் கௌதம் அவருடைய பாணியில் இல்லாமல், வேறு ஒரு பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை வெற்றி படமாக அவர் மாற்றியுள்ளார். இந்த படத்தின் கூடுதல் சிறப்பு ஏ.ஆர்.ரகுமான் சார்தான். அவருக்கு எனது நன்றிகள். ஒளிப்பதிவாளர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.  

படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கு நன்றி. வெந்து தணிந்தது காடு பாகம்-2  விரைவில் தயாராகும்.” என்றார்.

The post “சிம்புவுக்கு தேசிய விருது உறுதி..!” – தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
மஹா – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/mahaa-movie-review/ Sun, 24 Jul 2022 09:22:24 +0000 https://touringtalkies.co/?p=23372 பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையைப் பற்றிப் பேசும் படம் இது. சென்னையில் தொடர்ச்சியாக சில சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளியின் கொலைச் செயல் கொடூரமாக இருக்கிறது. அவனைப் பிடிக்க போலீஸில் துணை கமிஷனரான ஸ்ரீகாந்தின் தலைமையில் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் உட்பட ஒரு டீம் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹன்சிகா தன் மகள் மானஸ்வியுடன் தனிமையில் வாழ்ந்து வருபவர். மானஸ்வியையும் ஒரு நாள் அந்தக் […]

The post மஹா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையைப் பற்றிப் பேசும் படம் இது.

சென்னையில் தொடர்ச்சியாக சில சிறு வயது பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளியின் கொலைச் செயல் கொடூரமாக இருக்கிறது.

அவனைப் பிடிக்க போலீஸில் துணை கமிஷனரான ஸ்ரீகாந்தின் தலைமையில் இன்ஸ்பெக்டர் தம்பி ராமையா, சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் உட்பட ஒரு டீம் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஹன்சிகா தன் மகள் மானஸ்வியுடன் தனிமையில் வாழ்ந்து வருபவர். மானஸ்வியையும் ஒரு நாள் அந்தக் கொலைகாரன் கடத்திவிடுகிறான். கணவரை இழந்த நிலையில் தன் குழந்தைக்காக வாழ்ந்து வரும் ஹன்சிகா துடித்துப் போய்விடுகிறார். மானஸ்வியை கண்டறிய பெரும் முயற்சி செய்தும் முடியாமல் போகிறது.

தன் மகளைப் பறி கொடுத்த ஹன்சிகா அந்தக் கொலையாளி யார் என்பதைக் கண்டறிய தானே களத்தில் இறங்குகிறார். அதே நேரம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸின் பேத்தியையும் கடத்திவிடுகிறான் கொலைகாரன்.

போலீஸ் இப்போது கூடுதல் கவனத்துடன் தேடுதல் வேட்டையைத் துவக்க.. ஹன்சிகாவும் இன்னொரு பக்கம் அந்தக் கொலைகாரனைத் தேடுகிறார். கொலைகாரன் கிடைத்தானா.. இல்லையா.. என்பதுதான் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ் – திரில்லரான திரைக்கதை.

இந்தப் படம் ஹன்சிகாவின் நடிப்பாற்றலை வெளிப்படுத்தவே உருவாக்கியிருப்பதைப் போல தெரிகிறது. அவரது 50-வது படம் என்று சொல்வதற்கு இந்தப் படம் தகுதியானதுதான். அந்த அளவுக்கு நடித்திருக்கிறார் ஹன்சிகா.

காதலரான சிம்புவுடனா காதல் காட்சிகளில் காதலை வெளிப்படுத்தும்விதத்தை பார்க்கும்போது ஒரு நல்ல ஹீரோயின், தற்போது பீல்டிலேயே இல்லையே என்ற வருத்தம் நமக்கு வருகிறது.

மானஸ்விக்கும், ஹன்சிகாவுக்குமான பாசக் காட்சிகள் இன்னொரு பக்கம் இப்படியொரு அம்மா, மகளா.. திருஷ்டி சுத்திப் போடணும் என்று சொல்ல வைக்கிறது.

மகள் காணாமல் போன பதட்டத்தில் ஹன்சிகா போலீஸ் ஸ்டேஷனில் வந்து பதைபதைக்கும் காட்சியிலும், கிளைமாக்ஸில் ஆக்ரோஷமாக சண்டையிடும் காட்சியிலும் ஹன்சிகாவுக்கு இன்னமும் சரியான இடத்தைத் தமிழ்ச் சினிமாவுலகம் கொடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது. அதே நேரம் ஹன்சிகாவின் வயதான தோற்றமும் முகத்தில் தெரிவதை மறுப்பதற்கில்லை..!

மகளாக நடித்திருக்கும் மானஸ்வி கொட்டாச்சியின் நடிப்பு கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. “அம்மாவுக்கு முன்பாக தானே எழுந்து வீட்டில் அத்தனை வேலைகளையும் செய்கிறேன்” என்று வீடியோவில் சொல்லும் அந்தக் காட்சி ஒரு குறும்படம். இந்தக் குழந்தையை சின்னாப்பின்னமாக்கும் அந்தக் காட்சி நமக்குத் தாங்க முடியாததாகத் தோன்றுகிறது. உயிருடன் வைத்திருந்து தேட விட்டிருக்கலாமே என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

சிம்பு பிளாஷ்பேக் காட்சியில்தான் அதிகம் வருகிறார். இவரது அறிமுகக் காட்சியை இப்படி எந்தவித பில்டப்பும் இல்லாமல் காட்டியிருப்பது ஏன் என்று தெரியவில்லை. ஒரு ரசிகப் பட்டாளத்தைக் கையில் வைத்திருப்பவரை இப்படியா பயன்படுத்துவது..?

ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து தனது சொந்தக் கதை, சோகக் கதையையும் வசனத்தில் பின்னிப் பிணைந்து அள்ளித் தெளித்திருக்கிறார் சிம்பு. “இந்த உலகம் என்னைக்குத்தான் என்னை புரிஞ்சுக்க போகுது..?” என்ற ஏக்கத்தை சிம்பு சரியான விதத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்னும் சில காட்சிகளை சிம்புவுக்கு வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சைக்கோ கொலைகாரனாக நடித்திருக்கும் சுஜீத் சங்கரின் இயல்பான முகமே வித்தியாசமான தோற்றத்தில் இருப்பதால் இந்தக் கொலைகார சைக்கோ கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாக பொருந்தியுள்ளார்.

தம்பி ராமையா வழக்கம்போல தனது பரிதவிப்பு நடிப்பை முழுமையாகச் செய்து பரிதாபத்தை பெற்றுக் கொள்கிறார். அசிஸ்டன்ட் கமிஷனரான ஸ்ரீகாந்தின் நடிப்புதான் பேசப்படவே இல்லை. அண்ணன் இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கிறார் போலும்..!

தொழில் நுட்பம் என்று பார்த்தால் மதியின் ஒளிப்பதிவுதான் மிகப் பெரிய பலம். சிம்பு ஹன்சிகா காதல் காட்சிகள் ரம்மியமாக படமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அந்த சண்டை காட்சியும்.. கொலைகாரனின் வீட்டின் உட்புற வடிவமைப்புடன் ஒளிப்பதிவும் சேர்ந்தே மிரட்டியிருக்கிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிலும் குறிப்பாக கொலையாளி வரும் காட்சிகளிலெல்லாம் தெறிக்க விட்டிருக்கிறார் ஜிப்ரான். கிளைமாக்ஸ் சண்டை காட்சியை இப்படியொரு ஹீரோயினை வைத்துக் கொண்டு செய்வதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இந்த சண்டை பயிற்சியாளருக்கு நமது பாராட்டுக்கள்.

கதை என்று பார்த்தால் இப்போதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் வன்கொடுமைகளை சொல்லியிருக்கிறது என்றாலும் காட்சி வடிவத்தில் இத்தனை கொடூரமாகக் காட்டத் தேவையில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

மேலும் கற்பழிப்பு’, ‘ரேப்’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக பாலியல் வன்கொடுமை என்று பயன்படுத்தியிருந்திருக்கலாம்.

மானஸ்வியை அந்தப் பள்ளி பேருந்து ஊழியர்களே சிக்க வைக்கிறார்கள் என்பது நம்ப முடியாததாக உள்ளது. அதிலும் அவர்களை டிரேஸ் செய்ய முடியவில்லை என்று சொல்வதும் ஏற்புடையதாக இல்லை.

கதை ஓகேதான் என்றாலும் திரைக்கதையில் போலீஸின் தேடுதல் வேட்டையை இன்னமும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

RATINGS : 3.5 / 5

The post மஹா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர், பைனான்ஸியர் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார் https://touringtalkies.co/t-rajender-files-a-case-against-producer-suresh-kamatchi-and-financier-uthamsanth/ Sat, 11 Dec 2021 17:57:17 +0000 https://touringtalkies.co/?p=19777 ‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை T.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் பைனான்சியர் உத்தம்சந்த் மற்றும் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சிக்கு  நோட்டீஸ் அனுப்ப சென்னையில் இருக்கும் 20-வது நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இப்போதுவரையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தின் கடைசி நேர வெளியீட்டின்போது பல்வேறு சிக்கல்கள் […]

The post ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர், பைனான்ஸியர் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார் appeared first on Touring Talkies.

]]>
‘மாநாடு’ படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கியதை எதிர்த்து நடிகர் சிம்புவின் தந்தை T.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் பைனான்சியர் உத்தம்சந்த் மற்றும் தயாரிப்பாளர்  சுரேஷ் காமாட்சிக்கு  நோட்டீஸ் அனுப்ப சென்னையில் இருக்கும் 20-வது நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில் நடிகர் சிம்புவின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி இப்போதுவரையிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘மாநாடு’.

இந்தப் படத்தின் கடைசி நேர வெளியீட்டின்போது பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. அப்போது சிம்புவின் அப்பாவான நடிகர், இயக்குநர் டி.ராஜேந்தர் தானே முன் வந்து சில கோடிகளுக்குத்தான் பொறுப்பேற்றுக் கொள்வதாகக் கூறியதையடுத்து விடியற்காலை காட்சி மட்டும் ரத்தான நிலையில் அன்றைக்கு ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் வெளியானது.

தற்போது ‘மாநாடு’ படத்திற்கு பைனான்ஸ் உதவி செய்த உத்தம்சந்த் மற்றும் ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி இருவருக்கும் எதிராக சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், “சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிப்பில் உருவான “மாநாடு” திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி வெளியாகி உலகமெங்கும், மற்றும் தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது யாவரும் அறிந்ததே.

ஆனால், அந்தத் திரைப்படம் வெளியாவதற்கு முந்தைய தினம் நவம்பர் 24-ம் தேதி படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி அவர்கள், ‘மாநாடு’ படத்திற்கு ஏகப்பட்ட பைனான்ஸ் பிரச்சனை, பணச் சிக்கல் இருப்பதாகவும்… வேறு வழியில்லாததால் பெருத்த மன வலியோடு ‘படம் நாளைய தினம் வெளியாகாது. படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கிறேன்’ என்று அதிரடியாக டிவிட்டரில் டிவிட்செய்தார்.

இந்த நிலையில் ‘மாநாடு’ படத்தை வெளியிட காத்திருந்த உலகெங்கிலும் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடிய திரையரங்க உரிமையாளர்களும் படத்தை வாங்கியிருந்த பட விநியோகதர்கள் பலரும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளராகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவராகவும் இருக்கக் கூடிய டி.ராஜேந்தர் அவர்களை தொடர்பு கொண்டு எப்படியாவது தலையிட்டு இந்த இக்கட்டான சூழ்நிலையில் விநியோகஸ்தர்களுக்கும் ‘மாநாடு’ வெளியிட உள்ள திரையரங்க உரிமையாளர்களுக்கும் கை கொடுக்க வேண்டும். என்று கோரிக்கை விடுத்தவண்ணம் இருந்தனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்று டி.ராஜேந்தர் அவர்களும், சிம்புவின் தாயாரும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் உஷா ராஜேந்தர் அவர்களும் படத்தை வெளிக்கொண்டு வர களம் இறங்கி அன்று விடிய, விடிய கொட்டும் மழையையும் மிறி போராடினார்கள்.

25-ம் தேதி காலை வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 5 மணி காட்சி பல திரையரங்குகளில் ரத்தாகி ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

இந்த பதட்டமான சூழ்நிலையில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் அவர்களுடைய கணக்கில் ‘மாநாடு’ படத்தின் நெகட்டிவ் மீதான 5 கோடி பாக்கித் தொகையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தர வேண்டும்.

இந்தப் படத்தின் சாட்டிலைட் விற்காத காரணத்தால் இன்றைய நிலையில் சாட்டிலைட் மதிப்பான 5 கோடி ரூபாய் குறைவாக உள்ளது.

இதை டி.ராஜேந்தர்தான் பொறுப்பேற்று கொண்டு அவரது மகன் சிலம்பரசன் நடித்து ஐசரி கணேஷ் அவா்கள் தயாரிப்பில் உருவாகும் படத்தின் வெளியீட்டின்போது தருவதாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

மேலும், சாட்டிலைட் உர்மையை விற்று ஒரு வேளை படம் 5 கோடிக்கு கீழே விற்றால் குறைவது எத்தனை கோடியானாலும் அதை டி.ராஜேந்தர்தான் தர வேண்டும் என்று உத்திரவாத கடிதத்தை (கேரண்டி கடிதம்) உத்தம் சந்த் அவர்களே தன் கைப்பட எழுதி டி.ராஜேந்தர் அவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கையொப்பமிட மற்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் திரு.சௌந்தரபாண்டியன் சாட்சி கையொப்பமிட அந்த உத்தரவாத கடிதத்தை பெற்றுக் கொண்டு காலை 8 மணி காட்சிக்குத்தான் ‘மாநாடு‘ படத்தை வெளியிட்டனர்.

ஆனால், இந்தப் படம் வெளியாகாது என்று தயாரிப்பாளர் டிவிட்டரில் அறிவித்த பின்னும் டி.ராஜேந்தரும், அவரது மனைவி உஷா ராஜேந்தரும் போராடியதற்கு பின்னால் எல்லாம் வல்ல இறைவன் அருளால் படம் வெளியாகி வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

காட்சி மாறியது. படம் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் அவர்களும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களும் டி.ராஜேந்தர் அவர்களுக்கு தெரிவிக்காமலேயே சில தனியார் தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் உர்மையை விற்பதற்கு முற்பட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் சென்னை 20-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் டி.ராஜேந்தர் ‘மாநாடு’ திரைப்படத்தின் சாட்டிலைட் உர்மை குறித்து வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசார்த்த கனம் நீதிபதி அவர்கள் முதல் பிரதிவாதி உத்தம் சந்த் அவர்களும், இரண்டாவது பிரதிவாதியான ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளா் சுரேஷ் காமாட்சி அவர்களும் உரிய பதில் அளிக்குமாறு வழக்கை வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டிருக்கிறார்.

The post ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர், பைனான்ஸியர் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார் appeared first on Touring Talkies.

]]>
“தற்போதைய அரசியலைப் பேசும் படம்தான் மாநாடு”! – சீமானின் பாராட்டு..! https://touringtalkies.co/seemaan-prasied-maanaadu-movie/ Tue, 30 Nov 2021 07:55:49 +0000 https://touringtalkies.co/?p=19646 தயாரிப்பாளர் சுரேஷ்  காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த ‘நாம் தமிழர்’ கடைசியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் “இந்தப் படம் சம காலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவை மிக்க கலைப் படைப்பு…” என்று பாராட்டியிருக்கிறார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது : அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான […]

The post “தற்போதைய அரசியலைப் பேசும் படம்தான் மாநாடு”! – சீமானின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சுரேஷ்  காமாட்சியின் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘மாநாடு’ படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பார்த்த ‘நாம் தமிழர்’ கடைசியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் “இந்தப் படம் சம காலத்திற்குத் தேவையான அரசியலைப் பேசும் சுவை மிக்க கலைப் படைப்பு…” என்று பாராட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

அன்புத் தம்பி சிலம்பரசன் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தைக் கண்டு களித்தேன். மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சியமைப்புகளும் படத்தோடு நம்மை ஒன்றச்செய்து, மிகவும் ரசிக்கும்படியாகத் திரைப்படத்தை நகர்த்திச் செல்கிறது.

மதத்தால் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சி சமகாலத்தில் ஆளும் வர்க்கத்தால் நாளும் அரங்கேற்றப்படும்போது, அதனை வெகுமக்களுக்கு உணர்த்தி விழிப்பூட்டும் சுவை மிக்கக் கலைப் படைப்பாக இத்திரைப்படத்தைத் தந்திருக்கிறார் தம்பி வெங்கட்பிரபு.

இசுலாமிய மக்கள் குறித்துப் பரப்பப்படும் கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி, கோவை கலவரத்தில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போகிறபோக்கில் பேசி, அவர்கள் குறித்துப் பொதுப் புத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தவறானப் பிம்பத்தை தகர்த்தெரியும்விதத்திலான வசனங்களையும், காட்சிகளையும் படத்தின் கருப் பொருளாக அமையச் செய்திருப்பது இத்திரைப்படத்தின் சிறப்பம்சமாகும்.

சொல்ல வந்த செய்தியை மிகச் சரியாகக் காட்சிப்படுத்தி, அதனைத் திரைமொழியில் மக்களுக்கு விருந்தாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ள தம்பி வெங்கட் பிரபுவின் கலைத் திறன் இத்திரைப்படத்தின் மூலம் மென்மேலும் மெருகேறியிருக்கிறது.

எனது தம்பி சிலம்பரசன் அவர்கள் தனது துடிப்பான நடிப்பாற்றலாலும், மக்களின் மனம்கவரும் வகையிலான தனித்துவமிக்க திரைமொழி ஆளுகையினாலும், நுட்பமான உடல் மொழியாலும், உயிரோட்டமான வசன உச்சரிப்புகளாலும் மீண்டுமொரு முறை முத்திரைப்  பதித்திருக்கிறார். கலையுலகப் பயணத்தில் அவரது வளர்ச்சி குறித்து பெரும் அக்கறை கொள்கிறேன்! அவரது உயரத்தை எண்ணி மன மகிழ்வடைகிறேன்!

அன்புச் சகோதரன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் எதிர்மறை கதாபாத்திரத்தைத் தாங்கியிருந்தாலும் தனக்கே உரித்தான மொழி நடையாலும், எவரையும் சுண்டியிழுக்கும் வகையிலான அளப்பெரும் நடிப்புத் திறனாலும் படத்தினையே தாங்கி நிற்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் யாவற்றையும் பெரிதும் விரும்பி ரசித்தேன்!

தம்பி யுவன் சங்கர்ராஜாவின் பலமிக்க பின்னணி இசையும், தம்பி கே.எல்.பிரவீண் நேர்த்தியான படத்தொகுப்பும் படைப்புக்குப் பெரிதும் துணைநிற்கின்றன.

இத்திரைப்படத்தில் நடித்த அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஐயா ஒ.ஜி.மகேந்திரன், தம்பி மனோஜ் பாரதிராஜா, தம்பி சுப்பு அருணாச்சலம், தம்பி பிரேம்ஜி அமரன், தம்பி கருணாகரன், தங்கை கல்யாணி பிரியதர்ஷன் என யாவரும் தங்களது பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

காலத்திற்கேற்ற அரசியலைப் பேசும் சாலச் சிறந்தப் படைப்பாகவும், மாறுபட்ட திரைக்கதை அமைப்புகொண்ட நல்லதொரு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கும் இதனைத் தயாரித்து, பெரும் சிரமங்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டபோதும் சற்றும் தளராது நின்று வென்று காட்டி, வெற்றிப் படைப்பாக நிலைநாட்டிய ஆருயிர் இளவல் எனது பாசத்திற்குரிய தம்பி சுரேஷ் காமாட்சி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

மண்ணுக்கும், மக்களுக்கும் தேவையான இன்னும் பல பல படைப்புகளைத் தந்து, அவர் மென்மேலும் வளர்ந்து உச்சம் தொட வேண்டுமென எனது வாழ்த்துகளையும், அன்பையும் தெரிவிக்கிறேன்!   

எனது தம்பிகள் தங்களது அயராத உழைப்பின் மூலம் ஈட்டிய அளப்பெரும் வெற்றியைக் கண்டு உள்ளம் பூரிப்பு அடைகிறேன்..!  நானே வெற்றி பெற்றதாக எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்..!

இப்படைப்புக்காக உழைத்திட்ட அத்தனை பேருக்கும் எனது வெற்றி வாழ்த்துகளையும், உளப்பூர்வமான பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

The post “தற்போதைய அரசியலைப் பேசும் படம்தான் மாநாடு”! – சீமானின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
“ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! https://touringtalkies.co/i-will-fast-in-front-of-stalins-house-t-rajender-warns/ Wed, 20 Oct 2021 17:53:00 +0000 https://touringtalkies.co/?p=18932 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார். சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு. இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு […]

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் ‘மாநாடு’ படத்தை இந்தத் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தார்கள். இந்நிலையில் திடீரென்று “தீபாவளியன்று ‘மாநாடு’ வெளிவராது. நவம்பர் 25-ம் தேதி ரிலீஸாகும்” என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கையொன்றை வெளியிட்டார்.

சிம்புவும் தற்போது இயக்குநர் கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள மும்பை சென்றுவிட்டார் சிம்பு.

இந்த நேரத்தில் டி.ராஜேந்தர் மற்றும் உஷா டி.ராஜேந்தர் இருவரும் இன்று காலை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேரில் சென்று மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு ஜனநாயக முறைப்படி இல்லாமல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

சிலம்பரசனை வைத்து ‘அன்பானவன், அசராவதவன், அடங்காதவன்’ படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு எந்தப் பணமும் கொடுக்க வேண்டியதில்லை. சிம்பு அந்தப் படத்தில் தனக்கு வர வேண்டிய சம்பளத்தைக்கூட விட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஆனால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார். அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருகிறார்கள். இதனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளான முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களிடத்தில் பேசிய டி.ராஜேந்தர், “தமிழ் சினிமாவில் சிலர் ஜனநாயகத்திற்கு எதிராக அமைக்கப்பட்ட நடப்பு விநியோகஸ்தர் சங்கம்’ என்ற பெயரில் கட்டப் பஞ்சாயத்து செய்து வருகின்றனர்.

மைக்கேல் ராயப்பனுக்கு சிம்பு பணம் கொடுக்க தேவையில்லை. மேலும் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் அருள்பதி, மைக்கேல் ராயப்பனுக்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி, ராதாகிருஷ்ணன், மன்னன், சந்துரு பிரகாஷ் ஜெய்ன், கதிரேசன், தினேஷ் ஆகியோர் மறைமுகமாக உதவுகின்றனர்.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள். இந்தக் கட்டப் பஞ்சாயத்து கும்பல் மீதும், ரெட் கார்டு போடும் கும்பல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம்.

இது மாதிரியான கட்டப் பஞ்சாயத்து கும்பலை களையெடுக்க ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட விசாரணை ஆணையம் ஏன் கிடப்பில் உள்ளது..? இந்தக் கட்ட பஞ்சாயத்து கும்பல் நீதிமன்றம் மற்றும் எந்த சட்ட திட்டங்களையும் கண்டு கொள்வதில்லை.

நான், சிம்புவுக்காக மட்டும் பேசவில்லை. தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்சினையை இத்தோடு விடப் போவதில்லை. டெல்லிவரை கொண்டு போய் சேர்க்க உள்ளேன்.

சிம்புவின் மாநாடு’ படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தயாராக இருக்கிறேன்…” என்று தெரிவித்தார்.

The post “ஸ்டாலின் வீட்டு முன் உண்ணாவிரதம் இருப்பேன்” – டி.ராஜேந்தர் எச்சரிக்கை..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு படத்திற்கு எழுந்துள்ள ‘தலைப்பு’ பிரச்சினை..! https://touringtalkies.co/title-issue-for-simbu-movie/ Mon, 09 Aug 2021 13:09:26 +0000 https://touringtalkies.co/?p=16904 சிம்பு படம் என்றாலே பிரச்சினைதான் போலிருக்கிறது. இப்போதுதான் கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகைகளைக் கொடுத்தால்தான் அடுத்தப் படத்தில் நடிக்க முடியும் என்று சிம்புவுக்கு ரெட் கார்னர் போடும் அளவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்திலும் சிம்பு படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த முதல் ஷெட்யூல் முடிந்தவுடன் மீண்டும் பஞ்சாயத்து முதலில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது. இந்த நேரத்தில் புதிய பிரச்சினை ஒன்று தலை தூக்கியிருக்கிறது. ‘வெந்து தணிந்தது […]

The post சிம்பு படத்திற்கு எழுந்துள்ள ‘தலைப்பு’ பிரச்சினை..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு படம் என்றாலே பிரச்சினைதான் போலிருக்கிறது.

இப்போதுதான் கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகைகளைக் கொடுத்தால்தான் அடுத்தப் படத்தில் நடிக்க முடியும் என்று சிம்புவுக்கு ரெட் கார்னர் போடும் அளவுக்கு தயாரிப்பாளர் சங்கம் சிம்புவுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்திலும் சிம்பு படத்தின் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த முதல் ஷெட்யூல் முடிந்தவுடன் மீண்டும் பஞ்சாயத்து முதலில் இருந்து துவங்கும் என்று தெரிகிறது.

இந்த நேரத்தில் புதிய பிரச்சினை ஒன்று தலை தூக்கியிருக்கிறது.

வெந்து தணிந்தது காடு’ என்று இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பில் ஏற்கெனவே ஒரு திரைப்படம் தமிழில் தயாராகியுள்ளதாம். ஆகவே, சிம்பு நடிக்கும் படத்தின் படத்தின் தலைப்பை மாற்றிக் கொள்ளும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

இந்தப் படம் இலங்கை தமிழர்களின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம். ஈழத்து நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான மதி சுதா இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார். கிரவுண்ட் பண்டிங் எனப்படும் முறையில் நிதி திரட்டித்தான் இந்தப் படத்தை மதி சுதா தயாரித்திருக்கிறாராம்.

சினிமாவின் வழக்கமான வியாபார விஷயங்களால் இத்திரைப்படம் இன்னமும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த நேரத்தில் இந்த சிம்பு படமும் அதே பெயரில் வெளிவர இருப்பது அந்த சின்னப் பட்ஜெட் படத்தைப் பாதிக்கும் என்பதால் கவுதம் மேனன்- சிம்பு கூட்டணி தங்களது படத்தின் பெயரை மாற்றிக் கொள்ளும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக அந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான மதி சுதா தனது முகநூலில் எழுதியிருப்பது இது.

நானும் கெளதம் மேனனும் பயன்படுத்திக் கொண்ட ஒரே திரைப்படத் தலைப்பும் முடங்கிப் போன என் திரைப்படமும்…

1) எங்களுக்கென்றொரு சினிமா தேவையில்லை
2) மக்கள் இருக்கும் நிலையில் சினிமாவெல்லாம் ஒரு கேடா

போன்ற எதிர் நிலைப்பாடுள்ளவர்கள் இதற்கு மேல் படிக்காமல் கடந்து செல்வது ஆரோக்கியமாகும்.

ஒரு ஆலமரத்தின் கீழ் முளைக்கத் துடிக்கும் அருகம்புல்லாக சின்ன சின்ன விடயத்துக்கும் போராடிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

A) தென்னிந்திய சினிமாவின் ஊடக ஆக்கிரமிப்புக்களால் எம்மக்களிடம் எம்படைப்புக்களை கொண்டு சேர்க்க ஒரு புறம் போராடிக் கொண்டிருக்கிறோம்.

B ) தயாரிப்பாளர் என்று எவருமே இல்லாத இடத்தில் ஒவ்வொருவரிடமும் சிறுக, சிறுக 1000 ஆயிரம் ஆக சேர்த்து, இருக்கும் காசுக்கு ஏற்ப இருக்கும் வளத்தை வைத்துதான் ஒரு படைப்பை செய்து முடிக்க வேண்டியுள்ளது.

C) இந்தக் கனவோடு பயணிக்கும் ஒவ்வொருத்தனும் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பலதை துறந்துதான் தியாக மனதுடன் உழைத்துக் கொண்டிருக்கின்றான்.

இது சில உதாரணங்களே… இந்நிலையில் ஒரு உண்மையான கலைஞனாக இன்னொரு படைப்பாளியின் படைப்புக்கும், உழைப்புக்கும் உள்ள உரிமைக்கு சின்ன அங்கீகரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தன் மொழியில் உள்ள ஒரு தலைப்பை முதன் முதலாக ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தும் ஒரு உரிமைகூட தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனுக்கு இல்லையா ?

இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனது திரைப்படத் தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தேன். பலம ாதங்களுக்கு முன் திட்டமிட்ட இத்தலைப்பை பட வேலைகளை முடித்த பின் அறிவிப்போம் என்ற நிலைப்பாட்டில் படத்தை கையில் வைத்துக் கொண்டே அறிவித்தோம்.

“மூடப்பட்ட பங்கர்களுக்குள்தான் எங்கள் கதைகள் புதைந்து கிடக்கின்றன” என்ற மூலக் கருவைக் கொண்ட இத்திரைப்படத்துக்கு தயாரிப்பாளரே கிடைக்காத நிலையில் 111 பேரிடம் இருந்து சேகரித்த பணத்தைக் கொண்டு ஐ போன் மூலம் உருவாக்கியிருந்தோம்.

இன்றைய நாள், கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் திரைப்படம் அதே பெயரில் வெளியாகியிருக்கின்றது.

1) பாரதியாரின் கவிதைதானே… யாரும் அதை வைக்கலாம் என கருத்துப்பட சிலரது எதிர்வாதங்களைக் கண்டேன்.

அக்கருத்தை நான் மறுக்கவில்லை ஆனால் அதே தலைப்பை… எந்த வகைப் படைப்புக்கு முதல் முதல் யார் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்ற விடயமும் கணக்கில் எடுக்கப்படும். நான் தலைப்பிட முன் தேடிய வகையில் இப்பெயரில் கவிதை நூல் ஒன்று மட்டுமே இருந்தது. திரைப்படம் எதுவும் இருக்கவில்லை.

ஒரு திரைப்பட தயாரிப்புக் குழுவின் முக்கிய வேலைகளில் ஒன்றாக தலைப்புகளை ஆய்வு செய்தலும் அடங்கும். அவ்வகையில் பல இந்திய ஊடகங்களிலும் வெளியாகியிருந்த எமது திரைப்படத்தின் தலைப்பை அறிந்திருக்கவில்லை என்பதற்கு சந்தர்ப்பமே இல்லை. நிச்சயம் கூகுளிலாவது ஒரு தடவை தேடிப் பார்த்திருப்பார்கள்.

அவர்களது பணபலம், விளம்பர பலம், star value என்பவற்றின் மூலம் இச்சிறிய படைப்பு மறைக்கப்பட்டு விடும் என கருதியுமிருக்கலாம்.

2) இரண்டு வெவ்வேறுபட்ட நாடுகள்தானே… இதைக் கணக்கெடுக்க தேவையில்லை என்ற கருத்துக்கான பதில்

இலங்கையில் பணம் கொடுத்து வாங்கக் கூடிய OTT-கள் இல்லாத நிலையில் இந்தியாவை மையப்படுத்திய OTT-களுக்கு மட்டுமே விற்க முடியும்.

எமது படம் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இப்படத்தை பதிவிட இருப்பதால் படைப்பை விற்பதில் பெரும் சிக்கல் ஒன்று உள்ளது.

ஏற்கனவே இத் திரைப்படத்துக்கு வியாபார விடயம் பேசிக் கொண்டிருந்த இரண்டு பெரிய நிறுவனங்களும்(பெயர் குறிப்பிட முடியவில்லை) இத் தலைப்பால் இப்படைப்பில் ஏற்படும் தாக்கம் குறித்து பதில் தர 3 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளன. பெரும்பாலும் இத்தலைப்பில் ஒரு படைப்பு முதலில் வருவதை விரும்ப மாட்டார்கள்.

ஏதோ, என் மூன்றரை வருட ஒட்டு மொத்த கனவும், உழைப்பும், காத்திருப்பும் இந்த ஒரு சம்பவத்தால் சுக்கு நூறாக்கப்பட்டுவிட்டதாக நான் உணர்கின்றேன்.

வழமை போல இந்தப் படைப்பை ஓடுவதற்கு தற்போது தியேட்டர்களும் இல்லை. படத்துக்கு தேடி வந்த யூரியூப்காரர்களும் தமது channel-க்கு தாருங்கள் வரும் பணத்தில் 50% தருகிறோம் என்ற வியாபார கணக்கோடு வரிசையிடுகின்றார்கள்…”

இவ்வாறு இயக்குநர்-தயாரிப்பாளர் மதிசுதா பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு கெளதம் மேனன் – சிம்பு கூட்டணியின் பதில் என்ன என்பது தெரியவில்லை.

The post சிம்பு படத்திற்கு எழுந்துள்ள ‘தலைப்பு’ பிரச்சினை..! appeared first on Touring Talkies.

]]>
‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு https://touringtalkies.co/simbu-47th-movie-title-vendhu-thaninthathu-kaadu-poster-released/ Fri, 06 Aug 2021 08:20:12 +0000 https://touringtalkies.co/?p=16795 நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. ‘வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் […]

The post ‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவின் 47-வது படத்தின் பெயர் தற்போது வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படங்கள் என்றாலே தலைப்பு மிகவும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்பது தமிழ்த் திரை ரசிகர்கள் அறிந்ததுதான். இந்த நிலையில் இந்தப் புதிய  தலைப்பும் இது கெளதம் படம்தான் என்பதை சொல்ல வைத்திருக்கிறது.

இந்தப் படத்தின் மூலமாக சிம்புவும் இயக்குநர் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். நடிகர் சிம்பு ஏற்கெனவே இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இவர்களது கூட்டணி எப்போது இணையும் என சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீண்டும், இருவரும் இந்தப் படத்தில்தான் இணைந்துள்ளனர்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

சற்று முன்னர் வெளியான இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சிம்பு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியாக்கியிருக்கிறது.

சிம்பு மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் அழுக்கு சட்டை, கைலி கட்டியபடி கையில் ஒரு சொரட்டு கோல் வைத்துள்ளார். மேலும் அவர் நிற்கும் இடத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது.

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை கெளதம் மேனன் இயக்கிய படங்களில் இருந்து இந்த கதை மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலமாகத் தெரிகிறது.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

The post ‘வெந்து தணிந்தது காடு’ போஸ்டரில் கலக்கும் சிம்பு appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..! https://touringtalkies.co/venkat-prabhu-held-a-conference-in-the-pouring-rain-with-simbus-cooperation/ Tue, 22 Dec 2020 13:49:50 +0000 https://touringtalkies.co/?p=11348 ‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப் […]

The post சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.

]]>
‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் ‘மாநாடு’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின.

கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.

அதேசமயம் அந்த சமயத்திலும்கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒரு நாளைகூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு,

அதன் பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால்தான், ‘மாநாடு’ படக் குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் பாண்டிச்சேரி மற்றும் ஏற்காடு கிளம்புகிறது மாநாடு’ படக் குழு.

‘ஈஸ்வரன்’ படம் மிக விரைவாக  முடிக்கப்பட்டது.. அதேபோல் மிகப் பெரிய பட்ஜெட், அரசியல் படம் என்பதால் அதிக எண்ணிக்கையிலான துணை நடிகர்கள் கூட்டம் என இருந்தாலும்கூட, ‘மாநாடு’ படமும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிவடைந்து உரிய நேரத்தில் ரிலீஸுக்கும் தயாராகிவிடும் என்று படக் குழுவினர் கூறியுள்ளார்கள்.

இந்த சுறுசுறுப்பையும், வேகத்தையும் சிலம்பரசன் தொடர்ந்தார் என்றால், நிச்சயமாக வருடத்திற்கு மூன்று படங்களை அவரால் கொடுக்க முடியும் என்பது திரையுலகத்தினரின் கணிப்பு.

The post சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.

]]>