Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சாக்சி அகர்வால் – Touring Talkies https://touringtalkies.co Tue, 25 Oct 2022 07:57:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சாக்சி அகர்வால் – Touring Talkies https://touringtalkies.co 32 32 கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் https://touringtalkies.co/sakshi-aggarwal-shines-as-the-heroine-of-the-story/ Tue, 25 Oct 2022 07:57:05 +0000 https://touringtalkies.co/?p=25994 தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால். முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வரும் இவர் தற்போது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நட்சத்திர […]

The post கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வரும் இவர் தற்போது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நட்சத்திர பிரபலங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் சாக்ஷி அகர்வாலிடம் தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றி கேட்டபோது, ” பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பஹிரா’ மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன்.

‘கெஸ்ட் – சாப்டர் 2’ எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திங நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து ‘கந்தகோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.” என்றார்.

மேலும், “கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வருகிறது. இதில் இரண்டு மலையாள படங்களில் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் எனக்கு பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.

சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது குறித்து கேட்டபோது, ” பட வாய்ப்பிற்காக பதிவிடவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.” என பதிலளித்தார்.

நடிகை சாக்ஷி அகர்வால் நடிப்பிற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சர்வதேச புகழ்பெற்ற நடிப்பு பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர் என்பதும், சில ஹாலிவுட் குறும்படங்களில் நடித்து விருதுகளை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post கதையின் நாயகியாக ஜொலிக்கும் சாக்ஷி அகர்வால் appeared first on Touring Talkies.

]]>
காட்டுக்குள் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை..! https://touringtalkies.co/actress-celebrates-her-birthday-in-the-forest/ Wed, 21 Jul 2021 09:09:18 +0000 https://touringtalkies.co/?p=16386 ‘பிக் பாஸ்’ புகழ் சாக்க்ஷிஅகர்வாலின் மாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம் கேரளா மாநிலம் குடுங்காட்டு பாறா என்ற அடர்ந்த வனப் பகுதியில் நடந்தது. Good hope பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் தமிழ் த்ரில்லர்திரைப்படம் ‘தி நைட்’. நாயகனாக விது நடிக்க, நாயகியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மதுமிதா நடிக்கிறார். வில்லனாக பாலிவுட்டில் இருந்து ரன்வீர்குமார் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் […]

The post காட்டுக்குள் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை..! appeared first on Touring Talkies.

]]>
‘பிக் பாஸ்’ புகழ் சாக்க்ஷிஅகர்வாலின் மாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம் கேரளா மாநிலம் குடுங்காட்டு பாறா என்ற அடர்ந்த வனப் பகுதியில் நடந்தது.

Good hope பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் தமிழ் த்ரில்லர்திரைப்படம் ‘தி நைட்’.

நாயகனாக விது நடிக்க, நாயகியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மதுமிதா நடிக்கிறார். வில்லனாக பாலிவுட்டில் இருந்து ரன்வீர்குமார் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன் கவனிக்க, சியான்‌ ஶ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்  ரங்கா புவனேஷ்வர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் குடுங்காட்டு பாறா எனும் அடர்ந்த வனப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு நேற்று பிறந்த நாள் படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதே படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்த நாளை தயாரிப்பாளர் கலாசா செல்வம் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

The post காட்டுக்குள் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை..! appeared first on Touring Talkies.

]]>
‘4 sorry’ ஆந்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..! https://touringtalkies.co/first-look-of-4-sorry-anthology-movie-released/ Sat, 17 Jul 2021 06:29:16 +0000 https://touringtalkies.co/?p=16264 சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில், தயாரிப்பாளர்கள் என்.செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘4 sorry’. இப்படத்தில் காளி வெங்கட் மற்றும், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்ஷி அகர்வால் மற்றும் சஹானா செட்டி, ஜான் விஜய் மற்றும் முத்துக்குமார், ஆர்.என்.ஆர். மனோகர்  ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குநர் – […]

The post ‘4 sorry’ ஆந்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>
சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில், தயாரிப்பாளர்கள் என்.செந்தில் பிரபு, சக்திவேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘4 sorry’.

இப்படத்தில் காளி வெங்கட் மற்றும், பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்ஷி அகர்வால் மற்றும் சஹானா செட்டி, ஜான் விஜய் மற்றும் முத்துக்குமார், ஆர்.என்.ஆர். மனோகர்  ஆகியோர் நடிக்கிறார்கள்.

இயக்குர் – சக்திவேல், ஒளிப்பதிவு – வெங்கடேஷ் பிரசாத், இசை – பிரசன்னா சிவராமன், படத் தொகுப்பு – பி.கே., கலை இயக்கம் – ஞானம், நேரடி தயாரிப்பாளர் – சிவக்குமார், மக்கள் தொடர்பு – பிரியா.

படம் பற்றி இயக்குநர் சக்திவேல் பேசும்போது, “இப்படம் சமுதாயத்தில் வாழும்  சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் இப்படத்திற்கு ‘4 sorry’ என பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை இப்படம் பிரதிபலிக்க உள்ளது. இப்படம் ஆந்தாலஜி படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் அடுத்தடுத்து அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்…” என்றார்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படம் வெற்றி பெற வாழ்த்தினார்.

The post ‘4 sorry’ ஆந்தாலஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..! appeared first on Touring Talkies.

]]>