Friday, April 12, 2024

காட்டுக்குள் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பிக் பாஸ்’ புகழ் சாக்க்ஷிஅகர்வாலின் மாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம் கேரளா மாநிலம் குடுங்காட்டு பாறா என்ற அடர்ந்த வனப் பகுதியில் நடந்தது.

Good hope பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், கலாசா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் தமிழ் த்ரில்லர்திரைப்படம் ‘தி நைட்’.

நாயகனாக விது நடிக்க, நாயகியாக பிக்பாஸ் புகழ் சாக்க்ஷிஅவகர்வால் நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மதுமிதா நடிக்கிறார். வில்லனாக பாலிவுட்டில் இருந்து ரன்வீர்குமார் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ரமேஷ் குணசேகரன் கவனிக்க, சியான்‌ ஶ்ரீகாந்த் படத் தொகுப்பு செய்கிறார். அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்  ரங்கா புவனேஷ்வர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கேரளா மாநிலத்தில் குடுங்காட்டு பாறா எனும் அடர்ந்த வனப் பகுதியில் நடைபெற்று வருகிறது.

இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு நேற்று பிறந்த நாள் படப்பிடிப்புக் குழுவினர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதே படப்பிடிப்பு தளத்தில் தன் பிறந்த நாளை தயாரிப்பாளர் கலாசா செல்வம் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார் நடிகை சாக்க்ஷி அகர்வால்.

- Advertisement -

Read more

Local News