Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கிஷோர் – Touring Talkies https://touringtalkies.co Sun, 27 Nov 2022 12:20:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கிஷோர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 தங்கையின் காதலுக்கு ரவுடி அண்ணனின் கடும் எதிர்ப்பு..! https://touringtalkies.co/rowdy-brothers-strong-opposition-to-younger-sisters-love/ Sun, 27 Nov 2022 12:19:39 +0000 https://touringtalkies.co/?p=27677 வி.ஆர்.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் படம் ‘மஞ்சக் குருவி.’ இந்த ‘மஞ்சக் குருவி’ படத்தில் ரவுடி குணாவாக கிஷோர், கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன், கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத் தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், […]

The post தங்கையின் காதலுக்கு ரவுடி அண்ணனின் கடும் எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.

]]>
வி.ஆர்.கம்பைன்ஸ் நிறுவனத்தின் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் படம் ‘மஞ்சக் குருவி.’

இந்த மஞ்சக் குருவி’ படத்தில் ரவுடி குணாவாக கிஷோர், கதிராக விஷ்வா, கிஷோர் தங்கையாக நீரஜா மற்றும் கஞ்சா கருப்பு, கோலிசோடா பாண்டி, சுஜாதா சிவகுமார், சுப்புராஜ் இவர்களுடன், கதையின் முக்கிய பாத்திரத்தில் மாஸ்டர் ராஜநாயகம் நடித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத் தொகுப்பையும், மிரட்டல் செல்வா சண்டை பயிற்சியையும், சௌந்தர்யன் இசையையும், கபிலன் மற்றும் டாக்டர் கிருதியா இருவரும் பாடல்களையும், ஸ்ரீதர் தயாரிப்பு நிர்வாகத்தையும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை அரங்கன் சின்னத்தம்பியும் செய்துள்ளனர்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி பேசும்போது, “அண்ணனின் பெயர் குணா. இந்தப் பெயருக்கு ஏற்றவன் இவன் இல்லை. ஊரே இவனை பார்த்து மிரளும். இவன் பார்வை பட்டாலே பார்ப்பவர் குலை நடுங்கும். அண்ணன் செய்யும் அட்டகாசத்தால் மக்கள் அனைவரும் நடுக்கத்துடனே வாழ்ந்து வருகின்றனர்.

ரவுடியிசத்தில் உச்சத்தில் திரியும் இவனுக்கு ஒரு அழகான அழகு மங்கை தங்கையாக ஊரில் பவனி வந்தாள். அண்ணனின் ரவுடித்தனம் தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆனால், அண்ணனோ தங்கை மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தான். ஆனால், அண்ணனின் பாசமோ, அவனின் கனிவான கவனிப்போ அவள் மனதை மாற்றவில்லை.

ஒவ்வொரு நாளும் கனத்த இதயத்துடன் நாட்களை நகர்த்தி வந்த தங்கை பதினெட்டு வயதை கடந்தாள். இந்த நாளுக்காக காத்திருந்த தங்கை அண்ணனையும், வீட்டையும் விட்டுவிட்டு வெளியேறுகிறாள். அண்ணன் எவ்வளவோ தடுத்தும் அவளைத் தடுக்க முடியவில்லை.

தனியே வசித்து வந்த அவளை கதிர் காதலிக்க தொடங்கினான். அவன் காதலை அவள் ஏற்காமல் புறக்கணித்து வந்தாள். தனது அண்ணன் ரவுடியாக இருப்பதால் தனக்கு வாழப் பிடிக்கவில்லை என கதிரிடம் கூறுகிறாள்.

தங்கையை அண்ணனிடம் பேச வைத்து இருவரின் மனதில் உள்ள கசப்பான எண்ணத்தை வேரோடு பிடுங்கி எறிய நினைத்த கதிர் அவளின் அண்ணனிடம் சென்று சேருகிறான்.

அண்ணன் குணாவிற்கு வாழ்வியலை உணர்த்தி, பாசத்தை புரிய வைக்கிறான். அண்ணனும் திருந்தி தங்கையை பார்க்க வருகிறான். அப்பொழுது யாரும் எதிர்பாராத வண்ணம் அந்தத் திடுக்கிடும் சம்பவம் நிகழ்கிறது.

அதன் பிறகு நடைபெறும் சம்பவத்தை விறுவிறுப்பான திரைக்கதையிலும் நறுக் என்ற வசனத்திலும் சொல்லி இருக்கிறேன்” என்று இடைவிடாமல் சொல்லி முடித்தார் இயக்குநர் அரங்கன் சின்னத்தம்பி.

வரும் டிசம்பர்-2-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.

The post தங்கையின் காதலுக்கு ரவுடி அண்ணனின் கடும் எதிர்ப்பு..! appeared first on Touring Talkies.

]]>
காந்தாரா – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/kantara-movie-review/ Sun, 16 Oct 2022 13:11:07 +0000 https://touringtalkies.co/?p=25513 ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள படம் ‘காந்தாரா’. கன்னட மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் இந்தப் படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்த தனுஷ் முதல் கார்த்திவரை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இப்படத்தில்? பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மலைக்கிராம பழங்குடி மக்களின் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்க்கை, குல தெய்வ வழிபாடு, வனத்துறையினர் அவர்களை விரட்ட நினைக்கும் […]

The post காந்தாரா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள படம் ‘காந்தாரா’. கன்னட மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும் இந்தப் படம் தற்போது தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

படத்தைப் பார்த்த தனுஷ் முதல் கார்த்திவரை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். அப்படி என்னதான் இருக்கிறது இப்படத்தில்? பார்க்கலாம்.

கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் மலைக்கிராம பழங்குடி மக்களின் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

அவர்களது வாழ்க்கை, குல தெய்வ வழிபாடு, வனத்துறையினர் அவர்களை விரட்ட நினைக்கும் அதிகாரத்துவம், நில அரசியல், நிலச்சுவான்தார்களின் அதிகாரத் திமிர் என சகலத்தையும் இப்படம் பேசுகிறது.

முன்னொரு காலத்தில் ராஜா ஒருவர் ஆண்டு வருகிறார். எல்லாம் இருந்தும் அவருக்கு நிம்மதியே இல்லாததால் நிம்மதியை தேடி ஊர் ஊராக செல்கிறார். அப்படி செல்கையில் ஒரு மலைக்கிராமத்தில் இருக்கும் கடவுளை தனக்கும் வேண்டும் என்று கேட்க அந்த மக்களின் கடவுளோ, “நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் இந்த நிலத்தை இவர்களுக்கு கொடுத்து விடு” என்கிறது. அதன்படியே ராஜாவும் செய்கிறார்.

காலங்கள் உருண்டோட அரசரின் வாரிசுகள் அந்த இடத்தை அம்மக்களிடம் இருந்து கைப்பற்ற நினைக்கின்றனர். மேலும் வனத்துறையும் இவர்களது இடத்தை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அவர்களை அப்புறப்படுத்த துடிக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் காந்தாரா’.

இயக்குனர் ரிஷப் ஷெட்டிதான் நாயகனாகவும் நடித்துள்ளார். மிகவும் அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார். அதிலும் கிளைமாக்ஸ் காட்சி மெய் சிலிர்க்க வைக்கிறது. அந்த காட்சியில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பும் முகபாவனையும் அற்புதம்.

வனத்துறை அதிகாரியாக நடித்துள்ள கிஷோர் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ரிஷப்பின் அம்மாவாக நடித்தவரின் கோப நடிப்பும், காதலியாக நடித்தவரின் காதல் கலந்த நடிப்பும் படத்திற்கு சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.

அதேபோன்று இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு மணி மகுடமாக உள்ளன. கலை இயக்குநரை கட்டிப் பிடித்துப் பாராட்ட வேண்டும். ஒரு கிராமத்தை அப்படியே ஸ்தாபித்திருக்கிறார். ஒப்பனை கலைஞர்கள் சாமியாடி வேடத்திற்காக பாராட்டினை பெறுகிறார்கள்.

நமது ஊரில் எப்படி ஐய்யனார், கருப்புசாமி போன்ற காவல் தெய்வங்கள் உள்ளதோ அதே போல் அங்குள்ள காவல் தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்கும் பழங்குடி மக்கள் பற்றிய கதையை தாம் சிறு வயதில் பார்த்து கேட்ட கதையை சிறப்பாக படமாக்கியுள்ளார்.

காடு எல்லோருக்கும் பொதுவானது. பல நூறு ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்தவர்களை ஆக்கிரப்பு செய்துவிட்டதாக அவர்களை துன்புறுத்தும் அரசு அதிகாரிகள், முன்னோர்கள் தானமாக கொடுத்த நிலத்தை அவர்களின் வாரிசுகள் எப்படி வஞ்சகம் செய்து அபகரிக்க நினைக்கின்றனர்.

பழங்குடி மக்களின் காவலராக இருக்கும் அரச குடும்பத்து வாரிசு, அப்பகுதி மக்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவது.. அவர்களை நன்றாக வேலை வாங்கிவிட்டு அடிமை போல் ஆட்டுவிப்பது என அத்தனை அரசியலையும் லாவகமாக படத்தில் இணைத்துள்ளார்.

குல தெய்வ வழிபாடு, கடவுள் நம்பிக்கை, பழங்குடி மக்களின் நம்பிக்கை, அரசின் அத்துமீறல், நிலச்சுவான்களின் காட்டுமிராண்டித்தனம் என அத்தனை விஷயங்களையும் ஒரே படத்தில் நுழைத்து ஒரு அட்டகாசமான படத்தை கொடுத்துள்ள இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு நமது வாழ்த்துகள்.

‘கே.ஜி.எப்.’ படத்திற்கு பிறகு கன்னட சினிமாவிற்கும், இந்திய சினிமா உலகிற்கும் இந்த ‘காந்தாரா’ ஒரு மைல் கல்.

RATING : 4.5 / 5

The post காந்தாரா – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ வரிசையில் வரும் ‘மஞ்சக் குருவி’ படம் https://touringtalkies.co/manjakuruvi-movie-news/ Mon, 03 Oct 2022 09:34:47 +0000 https://touringtalkies.co/?p=24796 ‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயிரோட்டமாக காட்டும் படம் மஞ்சக் குருவி. வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் இந்த ‘மஞ்சக் குருவி’ படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அரங்கன் சின்னதம்பி, இசை – […]

The post பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ வரிசையில் வரும் ‘மஞ்சக் குருவி’ படம் appeared first on Touring Talkies.

]]>
பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ படங்களுக்கு பிறகு, அண்ணன், தங்கை பாசத்தை உயிரோட்டமாக காட்டும் படம் மஞ்சக் குருவி.

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில், விமலா ராஜநாயகம் தயாரித்திருக்கும் இந்த ‘மஞ்சக் குருவி’ படத்தில் கிஷோர் கதையின் நாயகனாக நடித்துள்ளார். வில்லனாக ‘குங்ஃபூ மாஸ்டர்’ ராஜநாயகம் நடித்துள்ளார். விஷ்வா, நீரஜா, கஞ்சா கருப்பு, சாரபாம்பு சுப்புராஜ், சூப்பர் குட் சுப்பிரமணி, கோலிசோடா பாண்டி, சுஜாதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அரங்கன் சின்னதம்பி, இசை – சௌந்தர்யன், ஒளிப்பதிவு – ஆர்.வேல், எடிட்டிங் – ராஜா முகமது, சண்டை – மிரட்டல் செல்வா, கலை கே.எம்.நந்தகுமார், மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ், தயாரிப்பு – விமலா ராஜநாயகம்.

இந்தப் படத்தில் அண்ணனாக கிஷோர் நடிக்க, தங்கையாக நீரஜா நடித்துள்ளார். சௌந்தர்யன் இசையில், தங்கையை நினைத்து, அண்ணன் பாடும் பாடல், கல் நெஞ்சையும் உருக வைக்கும். ‘கூட பொறந்த பொறப்பே’… என தொடங்கும் அந்தப் பாடலை, சொளந்தர்யனே தனது வசீகர குரலில் பாடியுள்ளார்.

சூப்பர் ஹிட் பாடல்களுடன் வெளிவரவிருக்கும் இந்தப் படத்தை மிக விரைவில் திரையில் பார்க்கலாம்!

The post பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ வரிசையில் வரும் ‘மஞ்சக் குருவி’ படம் appeared first on Touring Talkies.

]]>