Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
கயல் ஆனந்தி – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Nov 2022 18:27:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png கயல் ஆனந்தி – Touring Talkies https://touringtalkies.co 32 32 யூகி – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/yuki-movie-review/ Tue, 22 Nov 2022 18:27:25 +0000 https://touringtalkies.co/?p=27459 வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர். இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு […]

The post யூகி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
வாடகை தாய் பின்னணியில் உணர்வுப்பூர்வமான திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. ‘கார்த்திகா’ என்ற கயல் ஆனந்தி பட்டப் பகலில் கார் மூலமாகக் கடத்தப்படுகிறார். அவரைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்தி வரும் நரேனிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் டி.எஸ்.பி.யான பிரதாப் போத்தன். பிரதாப் போத்தன் சொன்னதாகச் சொல்லி இவர்களுடன் இணைகிறார் சப்-இன்ஸ்பெக்டர் கதிர்.

இன்னொரு பக்கம் பிரபல நடிகரான ஜான் விஜய், அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருந்து வருகிறது.  

தனது உதவியாளர்களுடன் இணைந்து ஆனந்தியைத் தேடத் துவங்குகிறார் நரேன். இந்தத் தேடுதல் வேட்டையின் முடிச்சுக்கள் அவிழ.. அவிழ.. இந்தக் களத்திற்குள் நிற்கும் யாருமே உண்மையாளர்கள் இல்லை. அனைவருமே போலிகள் என்பது காட்சிக்குக் காட்சி ஒன்றன் பின் ஒன்றாக நிரூபணமாகிறது.  

கார்த்திகா யார்? கார்த்திகாவின் கணவன் யார்? உண்மையில் அவருக்கு என்ன நடந்தது? பிரதாப் போத்தன் கண்டு பிடிக்க சொல்லும் பெண் யார்? சிலை கடத்தலில் ஈடுபட்ட வழக்கைத் தீர்த்தது யார்? ஜான் விஜய் எதற்காக கொல்லப்பட்டார்? இந்த எல்லா கேள்விகளுக்குமான விடைதான் இந்த யூகி’ படம்.

துப்பறியும் நிபுணரான நரேனை சுற்றித்தான் மொத்தத் திரைக்கதையும் நகர்கிறது. தன்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் அவர் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதும், பார்வையாலேயே குற்றங்களை அளவெடுப்பதும், கதிரை கண்காணிப்பிலேயே வைத்திருக்க அவர் எடுக்கும் அவசர ஸ்டண்ட்களும், தனது சக ஊழியர்களிடையேகூட உண்மையாக நடந்ததை மறைத்துவிட்டு கதையைத் திருப்பவதுமாய் ஒரு அழுத்தமான நடிகராய் திரையில் வலம் வருகிறார் நரேன்.

சாமி சரணம் என்று சொன்னபடியே கொலை செய்யக்கூட தயங்காத நடிப்பைக் காண்பித்திருக்கிறார் நட்டி நட்ராஜ். இவருக்கான பின்புலக் காட்சிகள் அழுத்தமாய் இல்லாதது மட்டும்தான் ஒரேயொரு குறை. முதல் பாதியில் கதிருக்கு அதிக வேலையில்லை என்றாலும், போகப் போக அவரால்தான் கதையே நகர்கிறது. தனக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு நேர் வழியில் சென்றால் நீதி கிடைக்காது என்று நினைத்து புத்திசாலித்தனமாய் செயல்பட்டு நீதியை நிலைநாட்டும் அந்தக் கதாபாத்திரத்திற்கு கதிர் சாலப்பொருத்தம்தான்.

எப்போதும் இறுகிய முகம்.. பதட்டப்படாத குணம்.. காரியத்தில் முனைப்பு.. செய்து காட்டுவதில் திறமை என்று தனது கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை உணர்த்தியிருக்கிறார் கதிர். பவித்ரா லட்சுமி ஒரு பரிதாபமான கதாப்பாத்திரத்தில் உயிராய், உணர்வாய் நடித்திருக்கிறார். உண்மை தெரியும்போது நம்மால் பாவப்படத்தான் முடிகிறது.

கார்த்திகாவாக வரும் ஆனந்தியின் நடிப்புதான் படத்தில் ரசிகர்களை கொஞ்சம் ஒன்றிப் போக வைக்கிறது. இயலாமையின் காரணமாய் வாடகைத் தாய் விஷயத்துக்கு ஒத்துக் கொண்டு பின்பு அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் அந்தப் பரிதவிப்பை நடிப்பில் அழகாய் காட்டியிருக்கிறார் ஆனந்தி. பாராட்டுக்கள்.

ஜான் விஜய் வழக்கம்போல தெனாவெட்டு கேரக்டரை அலட்சியமாகச் செய்து பரிதாபமாய் செத்துப் போகிறார். வாடகை தாய் முறைக்கு புரோக்கர் வேலை பார்க்கும் மருத்துவராக வினோதினியும் தன் பங்குக்கு விஷம் தடவிய நடிப்பைக் காண்பித்து ஸ்கோர் செய்திருக்கிறார். பிரதாப் போத்தன் நடித்து வெளிவந்திருக்கும் கடைசி படம் இது. அந்த ஒரு பெருமையை மட்டுமே பிரதாப்பிற்கு இந்தப் படம் கொடுக்கிறது.

ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷின் கேமிரா நல்லதும் செய்யவில்லை. கெடுதலும் செய்யவில்லை. படத்தையும் டிஸ்டர்ப் செய்யாமல் ரசிக்க வைத்திருக்கிறது. இது போதும் எனலாம். பாடலுக்கான ரஞ்சின் ராஜின் இசை மென்மையைக் கூட்டியிருக்கிறது. டான் வின்சென்ட்டின் பின்னணி இசை படத்தின் திகில், சஸ்பென்ஸ் உணர்வை கடக்க வைத்திருக்கிறது.

சமீப நாட்களில் பிரபலமாகியிருக்கும் வாடகைத் தாய் விவகாரத்தில் மறைந்திருக்கும் சில விஷயங்களை இந்தப் படம் நேர்மையாகப் பேசியிருக்கிறது. பிள்ளை பெற்றுக் கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ள தம்பதிகள் பிள்ளைப் பேறு காலத்திலேயே பிரிந்து போனால் அந்தப் பிள்ளைக்கு யார் பொறுப்பு.. அந்த வாடகைத் தாயை யார் கவனித்துக் கொள்வது.. இது போன்ற இந்த விஷயத்தில் மறைந்திருக்கும் ஒரு விஷயத்தை இந்தப் படம் எடுத்துக் காட்டியிருப்பது நல்ல விஷயம்தான்..!

கொஞ்சம் பிகசினாலும் கதை புரியாமற்போய்விடும் அபாயம் உள்ள இந்தக் கதையை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கும் இயக்குநரின் திரைக்கதை திறமைக்கும், சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் கடைசிவரையிலும் கொண்டுபோயிருக்கும் விதத்திற்கும், நடிகர், நடிகைகளை அழுத்தமாக அந்தக் கேரக்டராகவே வாழ்வதுபோல நடிக்க வைத்திருக்கும் இயக்கத் திறமைக்காகவும் மனதாரப் பாராட்டுகிறோம். வாழ்த்துகள்.

சிறந்த திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புவர்களுக்கேற்ற படம் இது..!

RATING : 4.5 / 5

The post யூகி – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“தற்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது” – கரு.பழனியப்பன் பேச்சு https://touringtalkies.co/currently-the-grammar-for-heroines-in-cinema-has-changed-karu-palaniappan-speech/ Sat, 16 Jul 2022 06:00:10 +0000 https://touringtalkies.co/?p=23247 ‘கயல்’ ஆனந்தி, சாம் ஜோன்ஸ் நடித்து இயக்குநர் தாமரை செல்வன் இயக்கியுள்ள ‘நதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சாம் ஜோன்ஸ், ‘கயல்’ ஆனந்தி, வடிவேல் முருகன், கரு.பழனியப்பன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை ‘கயல்’ ஆனந்தி பேசும்போது, “இக்கதையை கேட்டதுமே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது. இக்கதைக்கு தேவையானது போல் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். அனைவரும் படம் […]

The post “தற்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது” – கரு.பழனியப்பன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
‘கயல்’ ஆனந்தி, சாம் ஜோன்ஸ் நடித்து இயக்குநர் தாமரை செல்வன் இயக்கியுள்ள ‘நதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சாம் ஜோன்ஸ், ‘கயல்’ ஆனந்தி, வடிவேல் முருகன், கரு.பழனியப்பன், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகை கயல்’ ஆனந்தி பேசும்போது, “இக்கதையை கேட்டதுமே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று உடனே தோன்றியது. இக்கதைக்கு தேவையானது போல் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினரை இயக்குநர் பயன்படுத்தியுள்ளார். அனைவரும் படம் பார்த்துவிட்டு சப்போர்ட் செய்யுங்கள். மேலும் நல்ல கதைகள் கிடைத்தால் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்..” என்றார்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இங்கு உள்ள எல்லோரும் எனக்கு தாமரையை பிடிக்கும் என்றனர். எனக்கும் தாமரையை பிடிக்கும். நான் இயக்குநர் தாமரையை சொன்னேன்.

ஒரு நடிகன் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடிக்கும்போது திரையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நல்லவனாக நடிப்பது சலிப்பைத் தரும். ஒரு உண்மைக் கதையை சிறப்பாக இயக்குநர் எடுத்துள்ளார்.

நான் சமீபத்தில் பார்த்த படங்களில் மிக சிறப்பான இடைவேளைக் காட்சி இப்படத்தில்தான் உள்ளது.

இப்போது சினிமா துறை மிகப் பிரமாதமாக உள்ளது. நாயகி ஆனந்தி நிறைய படங்களில் நடிக்க வேண்டும். தற்போது சினிமாவில் கதாநாயகிகளுக்கான இலக்கணமும் மாறிவிட்டது. அழகாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. நன்றாக நடித்தால் போதும். இப்படம் ஆனந்தியின் சினிமா வாழ்க்கையில் சிறந்த படமாக இருக்கும்..” என்றார்.

The post “தற்போது சினிமாவில் நாயகிகளுக்கான இலக்கணம் மாறிவிட்டது” – கரு.பழனியப்பன் பேச்சு appeared first on Touring Talkies.

]]>
ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’ https://touringtalkies.co/white-rose-movie-preview-news/ Mon, 23 May 2022 07:36:58 +0000 https://touringtalkies.co/?p=22215 நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’ சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார். தயாரிப்பாளர் ரூஸோவும், மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி ஆர்.கே.சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட்டும் ஒரு சிறப்பு வேடத்தில் […]

The post ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’ appeared first on Touring Talkies.

]]>
நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்.’

சைக்கோ திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த ‘ஒயிட் ரோஸ்’ திரைப்படத்தை ஸ்டூடியோ 9 பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ், தயாரிப்பாளர் எஸ். ரூஸோவுடன் இணைந்து பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரிக்கிறார்.

தயாரிப்பாளர் ரூஸோவும், மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை ‘கயல்’ ஆனந்தி ஆர்.கே.சுரேசிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ்.ஆர்.ஜாங்கிட்டும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார்.

என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, கோபி கிருஷ்ணா படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை டி.என்.கபிலன் கவனிக்க, சண்டைப் பயிற்சி இயக்கத்தை பிரபு அமைக்கிறார். அறிமுக இயக்குநரான ராஜசேகர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ராஜசேகர் பேசும்போது, “அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி, சைக்கோ திரில்லர் பாணியில் விறுவிறுப்பான திரைக்கதையில் இந்த ‘ஒயிட் ரோஸ்’ படம் உருவாகியிருக்கிறது.” என்றார். 

‘விசித்திரன்’ திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் தயாராகும் சைக்கோ திரில்லர் படம் என்பதால், ‘ஒயிட் ரோஸ்’ படத்திற்கு அறிவிப்பு நிலையிலேயே ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ஆரி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

The post ஆர்.கே.சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒயிட் ரோஸ்’ appeared first on Touring Talkies.

]]>
“கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்” – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம் https://touringtalkies.co/kamali-from-naducauvery-movie-press-meet-news/ Thu, 11 Feb 2021 04:08:59 +0000 https://touringtalkies.co/?p=12943 ‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது, “எனக்குச் சொந்த ஊர் திருச்சி மாவட்டம்.  நான்தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம்தான் கமலி கதாபாத்திரம். அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள். அரசாங்க வேலையில் […]

The post “கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்” – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
‘கமலி ப்ரம் நடுக்காவேரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தில் பங்கு கொண்ட நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது, “எனக்குச் சொந்த ஊர் திருச்சி மாவட்டம்.  நான்தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம்தான் கமலி கதாபாத்திரம்.

அபுண்டு ஸ்டூடியோஸ்-ன் துரைசாமி என்னுடைய கதையைக் கேட்டதும் என் பொறுப்பிலேயே அனைத்தையும் விட்டுவிட்டார்கள்.

அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர், தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடம்தான் இப்படத்தின் கருவாக எனக்குள் தோன்றியது.

இந்தப் படத்தை நாயகியை மையப்படுத்திய படமாக எடுத்தால்தான் முழுக்க, முழுக்க குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இதை உருவாக்க முடியும் என்று நினைத்தேன். அது போலவே செய்திருக்கிறேன்.

இந்தக் கதையை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. “நீங்கள் இருக்கும் இடத்திற்கு நாங்கள் வருகிறோம். கதை கேளுங்கள். பிடித்தால் பணியாற்றுங்கள்…” என்று கூறினோம். உடனே, வாரங்கல் சென்று கதை கூறினோம்.

கதையைக் கேட்டு முடித்த அடுத்த நிமிடம் “எப்போது ஷூட்டிங் போகலாம். நான் என்ன செய்ய வேண்டும்..?” என்றார் ஆனந்தி. இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும்வரை அவர் கமலி’யாகவே வாழ்ந்தார்.

இப்படத்தில் கமலி காதல் செய்யும் போது எப்படி இருப்பாள்..? மகளாக எப்படி இருப்பாள்..? என்று ஒவ்வொரு காட்சியையும் நான் எப்படி எதிர்பார்த்தனோ, அப்படியே நடித்துக் கொடுத்தார் ஆனந்தி.

பிரதாப் போத்தனிடம் கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக பணியாற்றினார். பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன். இசையமைப்பாளர் தனக்கென்று இசையமைக்காமல், படத்திற்கு என்ன தேவையோ அதை செய்தார். இப்படத்தில் நடிகர்கள் மட்டும் அல்ல; அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள்…” என்றார்.

படத்தின் நாயகியான ‘கயல்’ ஆனந்தி பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இதுவொரு முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும்விதமாக இந்தப் படம் இருக்கும். பெற்றோர்களை ஊக்கமளிக்கும்விதமாக இருக்கும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் “ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்..?” என்று என்னிடம் முன்பே கேட்டதுதான் என் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்தக் கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம்தான். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் வந்து பார்க்க வேண்டும்…” என்றார்.

The post “கமலி கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்” – ‘கயல்’ ஆனந்தி பெருமிதம் appeared first on Touring Talkies.

]]>
நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம் https://touringtalkies.co/actress-kayal-anandhi-gets-marriage-today/ Thu, 07 Jan 2021 05:44:25 +0000 https://touringtalkies.co/?p=11870 தெலுங்கு படவுலகில் ‘ரக்சிதா’ என்ற பெயரில் 2012-ம் ஆண்டில் இருந்து சில படங்களில் நடித்து வந்தவர் நடிகை ‘கயல்’ ஆனந்தி. 2014-ம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருடைய பெயர் ஆனந்தியாக இருக்கவே அன்று முதல் ‘கயல்’ ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார். இதன் பின்பு ‘சண்டி வீரன்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘ரூபாய்’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் […]

The post நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம் appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு படவுலகில் ‘ரக்சிதா’ என்ற பெயரில் 2012-ம் ஆண்டில் இருந்து சில படங்களில் நடித்து வந்தவர் நடிகை ‘கயல்’ ஆனந்தி.

2014-ம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருடைய பெயர் ஆனந்தியாக இருக்கவே அன்று முதல் ‘கயல்’ ஆனந்தி என்றே அழைக்கப்பட்டார்.

இதன் பின்பு ‘சண்டி வீரன்’, ‘திரிஷா இல்லனா நயன்தாரா’, ‘விசாரணை’, ‘ரூபாய்’, ‘என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் தற்போது ‘ஏஞ்சல்’, ‘ராவணக் கோட்டம்’, ‘அலாவுதீனின் அற்புத கேமிரா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஆனந்தி திடீரென்று திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி தற்போது திரையுலகத்தில் பரவி வருகிறது.

அவருடைய திருமணம் இன்று இரவு ஆந்திராவில், வாரங்கல் பகுதியில் இருக்கும் ஹண்டர் சாலையில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடிக்கவிருக்கிறதாம்.

நடிகை ஆனந்தியை மணக்கவிருக்கும் மணமகனின் பெயர் சாக்ரடீஸ் என்றும் இந்தத் திருமணம் ஒரு காதல் திருமணமாகும். மணமகன் சாக்ரட்டீஸ், இயக்குநர் மூடர் கூடம் நவீனின் மைத்துனர். அதாவது நவீன் மனைவியின் தம்பி.

மணமகன் சாக்ரடீஸ் தமிழ்ச் சினிமாவில் இணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இவர் நவீன் இயக்கத்தில் ஆனந்தி தற்போது நடித்து வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இப்போது அருண் விஜய், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்திலும் சாக்ரடீஸ் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். சில வருடங்களாகவே ஆனந்தியும், சாக்ரடீஸும் காதலித்து வந்துள்ளனர். அந்தக் காதல் தற்போது கல்யாணத்தில் வந்து முடிந்திருக்கிறது.

நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

The post நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம் appeared first on Touring Talkies.

]]>