Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் – Touring Talkies https://touringtalkies.co Sun, 13 Nov 2022 15:35:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் – Touring Talkies https://touringtalkies.co 32 32 டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுபவர்.. https://touringtalkies.co/a-real-fight-with-director-lokesh-kanagaraju/ Sun, 13 Nov 2022 15:35:39 +0000 https://touringtalkies.co/?p=27033 டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுவேன் என தெரிவித்துள்ளார் எடிட்டர் பிலோமின் ராஜா. லோகேஷ் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து எடிட்டிங் செய்வது இவர்தான். சமீபத்தில் ஒரு பேட்டியில், “எடிட்டிங் நேரத்தில் பெரும்பாலும் லோகேஷ் எண்ணமும் எனது எண்ணமும் ஒத்துப்போய்விடும். ஆனால் சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. அப்போது கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்வோம்.. சண்டை போடுவோம். பிறகு யார் சொல்வது சிறப்பாக இருக்கறதோ அதை ஒப்புக்கொள்வோம். தனிப்பட்ட விசயத்துக்காகவா சண்டை போடுகிறோம்… திரைப்படத்துக்கா.. ஒரு […]

The post டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுபவர்.. appeared first on Touring Talkies.

]]>
டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுவேன் என தெரிவித்துள்ளார் எடிட்டர் பிலோமின் ராஜா.

லோகேஷ் இயக்கும் படங்களுக்கு தொடர்ந்து எடிட்டிங் செய்வது இவர்தான். சமீபத்தில் ஒரு பேட்டியில், “எடிட்டிங் நேரத்தில் பெரும்பாலும் லோகேஷ் எண்ணமும் எனது எண்ணமும் ஒத்துப்போய்விடும். ஆனால் சில சமயங்களில் கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. அப்போது கடுமையாக வாக்குவாதம் செய்துகொள்வோம்.. சண்டை போடுவோம்.

பிறகு யார் சொல்வது சிறப்பாக இருக்கறதோ அதை ஒப்புக்கொள்வோம்.

தனிப்பட்ட விசயத்துக்காகவா சண்டை போடுகிறோம்… திரைப்படத்துக்கா.. ஒரு படைப்பு சிறப்பாக வரவேண்டும் என்பதற்காகத்தானே” என்று கேள்வி கேட்கிறார் பிலோமின் ராஜா.

சரியான கேள்விதான்!

The post டைரக்டர் லோகேஷ் கனகராஜூடன் நிஜமாகவே சண்டை போடுபவர்.. appeared first on Touring Talkies.

]]>
மணிரத்னம் நினைத்தாலும் முடியாது! https://touringtalkies.co/mani-ratnam-cant-even-think/ Thu, 10 Nov 2022 04:27:46 +0000 https://touringtalkies.co/?p=26891 தமிழின் முன்னணி  இயக்குநரான மணி ரத்னம்,  “பல்லவி அணு பல்லவி” என்ற திரைப்படத்தின் கன்னட படம் மூலம்  இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார். அடுத்து “பகல் நிலவு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்த இவர், தொடர்ந்து  “மௌன ராகம்”, “நாயகன்” “ரோஜா” பம்பாய்”, “உயிரே”, “அலை பாயுதே”,என பல ஹிட் படத்தை அளித்தார். சமீபத்தில் அவர் இயக்கிய “பொன்னியின் செல்வன்”   மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த […]

The post மணிரத்னம் நினைத்தாலும் முடியாது! appeared first on Touring Talkies.

]]>

தமிழின் முன்னணி  இயக்குநரான மணி ரத்னம்,  “பல்லவி அணு பல்லவி” என்ற திரைப்படத்தின் கன்னட படம் மூலம்  இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் “உணரு” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அடுத்து “பகல் நிலவு” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கால் பதித்த இவர், தொடர்ந்து  “மௌன ராகம்”, “நாயகன்” “ரோஜா” பம்பாய்”, “உயிரே”, “அலை பாயுதே”,என பல ஹிட் படத்தை அளித்தார்.

சமீபத்தில் அவர் இயக்கிய “பொன்னியின் செல்வன்”   மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்பிரமணியம்  மணிரத்தினம் குறித்து சொல்லி இருக்கிறார்.

அவர்,  “இப்போது அவர் இயக்கிய பொன்னியின் செல்வன் பெரும் வசூலை குவித்துள்ளது. ஆனால் முன்பு போல நீண்ட நாட்கள் எந்தப் படமும் ஓடுவதில்லை. ஒரே நேரத்தில் பல திரையரங்குகளில் படங்களை வெளியிடுவதால் இந்த நிலை. நூறு நாட்களில் கிடைக்கும் வசூல் பத்து நாட்களில்  கிடைத்து விடுகிறது.

இந்த நிலையில் மணிரத்தினத்தின் படம் ஒன்றை பற்றி சொல்ல விரும்புகிறேன். அவரது இயக்கத்தில் பிரபு, கார்த்திக் உள்ளிட்டோர் நடித்த  அக்னி நட்சத்திரம் திரைப்படம் 1988 வெளியானது. இந்த திரைப்படம் பாபா திரையரங்கில்  100 நாட்கள், 400 ஷோக்களும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடியது.  இப்போது மணிரத்னம் நினைத்தாலும் அது போல நடக்காது” என்று ஆதங்கத்துடன்   மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

The post மணிரத்னம் நினைத்தாலும் முடியாது! appeared first on Touring Talkies.

]]>
‘அந்த’ பெரிய நடிகர் படத்தையே மறுத்த வசந்த்! https://touringtalkies.co/vasant-refused-the-big-actor-film/ Thu, 10 Nov 2022 04:25:47 +0000 https://touringtalkies.co/?p=26888 இயக்குநர் வசந்த்துக்கு அறிமுகம் தேவையில்லை. கேளடி கண்மணி திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனவர், தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். அதோடு,  இவர் இயக்கிய தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் தேசிய விருதினை பெற்றது. இந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் அல்லவா. இப்படத்தை இயக்க கே.பாலசந்தர் முதலில் வாய்ப்பு அளித்தது வசந்த்துக்குத்தான். ஆனால் சொந்த காரணங்கள் சிலவற்றால் அப்போது […]

The post ‘அந்த’ பெரிய நடிகர் படத்தையே மறுத்த வசந்த்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வசந்த்துக்கு அறிமுகம் தேவையில்லை. கேளடி கண்மணி திரைப்படம் மூலம் இயக்குநர் ஆனவர், தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கினார். அதோடு,  இவர் இயக்கிய தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் தேசிய விருதினை பெற்றது.

இந்த நிலையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

கே.பாலசந்தர் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார் அல்லவா. இப்படத்தை இயக்க கே.பாலசந்தர் முதலில் வாய்ப்பு அளித்தது வசந்த்துக்குத்தான்.

ஆனால் சொந்த காரணங்கள் சிலவற்றால் அப்போது அப்படத்தை இயக்க முடியாமல் போனது வசந்த்துக்கு.

சினிமாவில் மட்டுமல்ல.. சினிமா உருவாவதும் ஒரு மேஜிக்தான். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதைச் சொல்லவே முடியாது.

vasanth

The post ‘அந்த’ பெரிய நடிகர் படத்தையே மறுத்த வசந்த்! appeared first on Touring Talkies.

]]>
எச்சரித்த இயக்குநர்.. கேட்காத கமல்! https://touringtalkies.co/the-director-warned-kamal-did-not-listen/ Thu, 10 Nov 2022 04:18:38 +0000 https://touringtalkies.co/?p=26883   ரிஸ்க் எடுப்பது கமலுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. அப்படியான ஒரு படம்தான் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில்  அவர், குள்ள மனிதனாக கமல் நடித்திருப்பார். இது மிகவும் வரவேற்பு பெற்றது. ஆனால் அதற்காக கமல் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல. தொழில்நுட்பம் வளராத அந்த  காலத்தில் சிஜியில்லாமல் கமல் எப்படி செய்தார் என்பதே பெரும் ஆச்சரியம். அக்காட்சிகளுக்கு  சில யுத்திகள் பயன்படுத்தப்பட்டன. . முதலில் நின்றப்படியே எடுக்கும் ஷாட்களுக்கு குழி தோண்டி முட்டிக்கு பிரத்யேகமான ஷூட் போட்டு […]

The post எச்சரித்த இயக்குநர்.. கேட்காத கமல்! appeared first on Touring Talkies.

]]>

 

ரிஸ்க் எடுப்பது கமலுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. அப்படியான ஒரு படம்தான் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில்  அவர், குள்ள மனிதனாக கமல் நடித்திருப்பார். இது மிகவும் வரவேற்பு பெற்றது.

ஆனால் அதற்காக கமல் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல.

தொழில்நுட்பம் வளராத அந்த  காலத்தில் சிஜியில்லாமல் கமல் எப்படி செய்தார் என்பதே பெரும் ஆச்சரியம்.

அக்காட்சிகளுக்கு  சில யுத்திகள் பயன்படுத்தப்பட்டன. . முதலில் நின்றப்படியே எடுக்கும் ஷாட்களுக்கு குழி தோண்டி முட்டிக்கு பிரத்யேகமான ஷூட் போட்டு எடுத்திருந்தனர். அதே போல,  அவர் நடக்கும் காட்சிகளுக்கு நீள குழியை தோண்டி வைத்து எடுத்தனர். ஆனாலும் வீட்டின் உள்ளே எடுக்கும் காட்சிகளுக்கு கொஞ்சம் சிரமம் இருந்ததாம்.

மற்ற நடிகர்கள்  18 இன்ச் மேடையில் நிறுத்தி கமலுக்கு குழி தோண்டி நடிக்க வைத்தனராம். அதுமட்டுமல்லாமல், அப்பு கமல் காட்சிக்கு கேமராவும் குழிக்குள் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மு

கமலுக்கு பிரத்யேகமான காலை சகாதேவன் என்பவர் உருவாக்கி கொடுத்தார். அவர், “இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குநர் பாலசந்தர், “நீ ஒரு முக்கிய நடிகன். எசகுபிசகாக நடித்து, உடலுக்கு பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ளாதே” என  எச்சரித்தார். ஆனால் கமல் கேட்கவில்லை.. அந்த சவாலான கதாபாத்திரத்தில் நடித்தே தீருவது என உறுதியாக இருந்தார். அதை நினைத்தால் இப்போதும் வியப்பாக இருக்கிறது” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

.  

The post எச்சரித்த இயக்குநர்.. கேட்காத கமல்! appeared first on Touring Talkies.

]]>
‘தாடி இல்லை.. இயக்குநர் ஆகலை?’ : ஸ்ரீகாந்த் கொடுத்த அதிரடி பதில் https://touringtalkies.co/why-not-become-a-director-srikanths-action-response/ Wed, 09 Nov 2022 06:06:10 +0000 https://touringtalkies.co/?p=26805 ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் ஸ்ரீகாந்த்.  சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா மற்றும் பலருடன் இணைந்து நடித்த காபி வித் காதல் படமும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்தது. இவரிடம், “பல படங்களில் நடித்துவிட்டீர்கள், நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை  இல்லையா” என கேட்கப்பட்டது. அதற்கு ஸ்ரீகாந்த், “தமிழ்ல, இயக்குநர் என்றால் தாடி வச்சு, மெச்சூர்டான முக பாவனையுடன் இருக்கணும். அப்பத்தான் இயக்குநர்னு ஒப்புக்குவாங்க. நான் எவ்வளவோ […]

The post ‘தாடி இல்லை.. இயக்குநர் ஆகலை?’ : ஸ்ரீகாந்த் கொடுத்த அதிரடி பதில் appeared first on Touring Talkies.

]]>
ரோஜாக்கூட்டம், பார்த்திபன் கனவு உள்ளிட்ட படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் ஸ்ரீகாந்த்.  சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் ஜீவா மற்றும் பலருடன் இணைந்து நடித்த காபி வித் காதல் படமும் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருந்தது.

இவரிடம், “பல படங்களில் நடித்துவிட்டீர்கள், நடித்துக்கொண்டு இருக்கிறீர்கள். திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை  இல்லையா” என கேட்கப்பட்டது.

அதற்கு ஸ்ரீகாந்த், “தமிழ்ல, இயக்குநர் என்றால் தாடி வச்சு, மெச்சூர்டான முக பாவனையுடன் இருக்கணும். அப்பத்தான் இயக்குநர்னு ஒப்புக்குவாங்க. நான் எவ்வளவோ ஷேவ் செய்து பார்த்தும் தாடி வளரலை. அதனால இயக்குற ஆசையை விட்டுட்டேன்” என நகைச்சுவையாக பதில் கூறினார்.

ரொம்பத்தான் குறும்பு!

The post ‘தாடி இல்லை.. இயக்குநர் ஆகலை?’ : ஸ்ரீகாந்த் கொடுத்த அதிரடி பதில் appeared first on Touring Talkies.

]]>
“என் வெற்றிக்கு இதுவும் காரணம்!” : பா.ரஞ்சித் https://touringtalkies.co/this-is-the-reason-for-my-success-pa-ranjith/ Sun, 06 Nov 2022 13:05:00 +0000 https://touringtalkies.co/?p=26639 சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் பா.ரஞ்சித், தனது வெற்றிக்கான இரு காரணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். “எந்த ஒரு கதை தோன்றினாலும் உடனே ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்துவிட மாட்டேன்.  அந்த கதைக்குத் தேவையான கதைக்களத்தைத் தேடி  செல்வேன். அங்குள்ள மனிதர்கள், சூழல் குறித்து ஆய்வு செய்வேன். முதல் படமான அட்டகத்தியில் இருந்து இன்று வரை அப்படித்தான். அதே போல அட்டகத்தி படம் வரும் முன்பே, சார்பேட்டா கதை தோன்றிவிட்டது. ஆகவே அது குறித்து அப்போதே பல விசயங்களை சேகரிக்க […]

The post “என் வெற்றிக்கு இதுவும் காரணம்!” : பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் பா.ரஞ்சித், தனது வெற்றிக்கான இரு காரணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

“எந்த ஒரு கதை தோன்றினாலும் உடனே ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்துவிட மாட்டேன்.  அந்த கதைக்குத் தேவையான கதைக்களத்தைத் தேடி  செல்வேன். அங்குள்ள மனிதர்கள், சூழல் குறித்து ஆய்வு செய்வேன். முதல் படமான அட்டகத்தியில் இருந்து இன்று வரை அப்படித்தான். அதே போல அட்டகத்தி படம் வரும் முன்பே, சார்பேட்டா கதை தோன்றிவிட்டது. ஆகவே அது குறித்து அப்போதே பல விசயங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.

அடுத்து, எனது கேமரா ஊருக்குள்.. அதாவது மக்கள் வசிப்பிடத்தி்ல் இருக்கும். காட்சிகளுக்கு நடுவே ஆட்கள் வந்துபோய்க்கொண்டு இருப்பார்கள். அப்போததான் அந்த களத்தில் தாங்களும் இருக்கிறோம் என்ற உணர்வு ரசிகர்களுக்கு வரும். இந்த இர காரணங்களும் என் படங்களில் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்” என்றார்.

The post “என் வெற்றிக்கு இதுவும் காரணம்!” : பா.ரஞ்சித் appeared first on Touring Talkies.

]]>
“அப்பா சொன்ன அந்த அறிவுரை” : கரு. பழனியப்பன் https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%b0/ Sun, 06 Nov 2022 12:48:00 +0000 https://touringtalkies.co/?p=26630 பார்த்திபன் கனவு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட தனது படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டி ஒன்றில் இவரிடம், “நீங்கள் எம்.ஏ. படித்தவர். திரைத்துறைக்கு போவதாகச் சொன்னவுடன் உங்கள் அப்பா மறுக்கவில்லையா” என கேட்கப்பட்டது. அதற்கு கரு.பழனியப்பன், “சினிமாவுக்குப் போறேன் என்று சொன்னவுடனேயே, என் தந்தை சொன்னது இதுதான்.. ‘உனக்கு விருப்பமான வேலையை பண்ணு.. அதுல ஜெயிக்கணும்னு அவசியம் […]

The post “அப்பா சொன்ன அந்த அறிவுரை” : கரு. பழனியப்பன் appeared first on Touring Talkies.

]]>
பார்த்திபன் கனவு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கரு.பழனியப்பன். தொடர்ந்து சமூக அக்கறை கொண்ட தனது படங்களின் மூலம் கவனத்தை ஈர்த்தவர். தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்.

பேட்டி ஒன்றில் இவரிடம், “நீங்கள் எம்.ஏ. படித்தவர். திரைத்துறைக்கு போவதாகச் சொன்னவுடன் உங்கள் அப்பா மறுக்கவில்லையா” என கேட்கப்பட்டது.

அதற்கு கரு.பழனியப்பன், “சினிமாவுக்குப் போறேன் என்று சொன்னவுடனேயே, என் தந்தை சொன்னது இதுதான்.. ‘உனக்கு விருப்பமான வேலையை பண்ணு.. அதுல ஜெயிக்கணும்னு அவசியம் இல்லை.. மகிழ்ச்சியா ஈடுபடு.. அதில தோத்துட்டா, ‘ஆமா, நான் தோத்துட்டேன்’னு மத்தவங்ககிட்ட சொல்ற தைரியம் வேணும். அப்புறம் அந்த வேலையைத் தூக்கிப்போட்டு அடுத்த வேலையைப் பார்க்கிற மனப்பக்குவம் வேணும். அவ்வளவுதான்’ என்று என் அப்பா சொன்னார்” என கரு.பழனியப்பன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த அறிவுரையை எல்லா தகப்பனாரும் தங்கள் மகனுக்குச் சொல்ல வேண்டும்.

The post “அப்பா சொன்ன அந்த அறிவுரை” : கரு. பழனியப்பன் appeared first on Touring Talkies.

]]>
“என் படத்தை தானே பார்ப்பதில்லை!”: வெற்றிமாறன் https://touringtalkies.co/i-dont-watch-my-film-by-myself-vetimaaran/ Sun, 06 Nov 2022 12:10:00 +0000 https://touringtalkies.co/?p=26620 பொல்லாதவன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இயக்குநர் வெற்றிமாறன்  முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். அடுத்த படமான ஆடுகளம் படத்துக்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் தேசிய விருதுகளைப் பெற்றர். அதோடு இந்தப் படத்துக்கு  6 தேசிய விருதுகள் கிடைத்தன. தொடர்ந்து விசாரணை,  வடசென்னை, அசுரன் என அதிரடியான… அதே நேரம் உணர்வுபூர்வமான படங்களை அளித்து சிறந்த இயக்குநர் என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருப்பவர். ஆனால் தான் இயக்கிய படங்களை தானே பார்ப்பதில்லை […]

The post “என் படத்தை தானே பார்ப்பதில்லை!”: வெற்றிமாறன் appeared first on Touring Talkies.

]]>
பொல்லாதவன் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்த இயக்குநர் வெற்றிமாறன்  முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். அடுத்த படமான ஆடுகளம் படத்துக்காக சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் தேசிய விருதுகளைப் பெற்றர். அதோடு இந்தப் படத்துக்கு  6 தேசிய விருதுகள் கிடைத்தன.

தொடர்ந்து விசாரணை,  வடசென்னை, அசுரன் என அதிரடியான… அதே நேரம் உணர்வுபூர்வமான படங்களை அளித்து சிறந்த இயக்குநர் என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு இருப்பவர்.

ஆனால் தான் இயக்கிய படங்களை தானே பார்ப்பதில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார்.

“திரைப்படத்தைப் பொறுத்தவரை நான் திருப்தி அடையவே மாட்டேன். இயக்கி முடித்து, போஸ்ட் புரடக்சன் வேலை முடிந்து படம் தயாரான பிறகு அடுத்த வேலைக்குச் சென்றுவிடுவேன். ஏனென்றால் மீண்டும் படத்தைப் பார்த்தால்… ‘அட.. இந்த காட்சியை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாமே என தோன்றும். அது மன உளைச்சலை ஏற்படுத்தும். ஆகவே தொலைக்காட்சிகளில் எனது படத்தின் பாடல்கள், காட்சிகள் ஓடினாலும் உடனே சேனலை திருப்பிவிடுவேன்” என்று சொல்லி இருக்கிறார் வெற்றி மாறன்.

The post “என் படத்தை தானே பார்ப்பதில்லை!”: வெற்றிமாறன் appeared first on Touring Talkies.

]]>
குஷ்புவுக்கு முன் சுந்தர் சி காதலித்தது யாரை? https://touringtalkies.co/who-did-sundar-c-love-before-khushbu/ Sat, 05 Nov 2022 02:46:31 +0000 https://touringtalkies.co/?p=26602 திரையுலகில் மேட் பார் ஈச் அதர் தம்பதி குஷ்பு – சுந்தர் சி! தங்களது அந்நியோன்யம் குறித்து இருவரும் பல முறை கூறியிருக்கிறார்கள். “பரஸ்பரம் அன்பு.. விட்டுக்கொடுத்தல்.. இதுதான் எங்கள் வெற்றிகரமான தாம்பத்ய ரகசியம்” என்று ஒரு முறை சொல்லி இருக்கிறார். அத்தனை அன்பான காதல் தம்பதி. அதே  நேரம், குஷ்புவை சந்திக்கும் முன்பான தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சுந்தர் சி. அவர், “அழகான பொண்ணுங்களைப் பார்த்தா உடனே காதலிக்க ஆரம்பிச்சுருவேன்.. அப்படி என் […]

The post குஷ்புவுக்கு முன் சுந்தர் சி காதலித்தது யாரை? appeared first on Touring Talkies.

]]>
திரையுலகில் மேட் பார் ஈச் அதர் தம்பதி குஷ்பு – சுந்தர் சி! தங்களது அந்நியோன்யம் குறித்து இருவரும் பல முறை கூறியிருக்கிறார்கள். “பரஸ்பரம் அன்பு.. விட்டுக்கொடுத்தல்.. இதுதான் எங்கள் வெற்றிகரமான தாம்பத்ய ரகசியம்” என்று ஒரு முறை சொல்லி இருக்கிறார். அத்தனை அன்பான காதல் தம்பதி.

அதே  நேரம், குஷ்புவை சந்திக்கும் முன்பான தனது காதல் அனுபவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சுந்தர் சி.

அவர், “அழகான பொண்ணுங்களைப் பார்த்தா உடனே காதலிக்க ஆரம்பிச்சுருவேன்.. அப்படி என் பள்ளிக் காலத்துல நிறைய பெண்களை காதலிச்சிருக்கேன். ஆனா அதெல்லாம் வயசுக்கோளாறு.

ஆனா மனசு விட்டு முதன் முதலா காதலிச்சதும் உண்டு. மணிவண்ணன் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்தேன். ஊட்டியில் படப்பிடிப்பு. அந்த படத்தில் ஹீரோயினா நடிக்க ஒரு இந்தி பொண்ணு வந்தது. இந்த பொண்ணு நமக்காகவே பிறந்து வந்திருக்கு அப்படினு ஒரு பீலிங்.  எப்படியாவது அந்த பொண்ணுகிட்ட பேசிடனும்னு துடிச்சேன்.

டைரக்டர் மணிவண்ணன் கண்டிப்பானவர். கேமராவுல ஸூம் வச்சு, உதவி இயக்குநர்கள் சரியா ஒர்க் பண்றாங்களானு அப்பப்போ கண்காணிச்சுக்கிட்டே இருப்பாரு. அதனால அந்த முதல் காதல் நிறைவேறாமலேயே போச்சு” என கூறியிருக்கிறார் சுந்தர் சி.

பரவாயில்லை.. தனது முதல் காதல் குறித்து வெளிப்படையாக பேசுகிறாரே சுந்தர் சி.!

The post குஷ்புவுக்கு முன் சுந்தர் சி காதலித்தது யாரை? appeared first on Touring Talkies.

]]>
“மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி https://touringtalkies.co/the-generosity-of-mani-ratnam-says-karti/ Fri, 04 Nov 2022 15:52:56 +0000 https://touringtalkies.co/?p=26536 இன்று தமிழின் மிக முக்கிய நாயகர்களில் ஒருவர் கார்த்தி. தான் போட்ட முதல் ஆட்டோகிராப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ பேட்டியில் சொல்லி இருக்கிறார். “அப்போது நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகளுக்கு திருணம். அங்கு மணமக்களுக்கு மேடை அமைத்தது போலவே, வருகிற வி.ஐ.பி.க்களுக்கும் தனி நேடை அமைத்திருந்தனர்.  மணிரத்னம் சார் அந்த மேடையில்  உள்ள இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டார். நானும் அவர் […]

The post “மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி appeared first on Touring Talkies.

]]>
இன்று தமிழின் மிக முக்கிய நாயகர்களில் ஒருவர் கார்த்தி. தான் போட்ட முதல் ஆட்டோகிராப் பற்றி சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோ பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

“அப்போது நான் மணிரத்னம் சாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தேன். ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் மகளுக்கு திருணம். அங்கு மணமக்களுக்கு மேடை அமைத்தது போலவே, வருகிற வி.ஐ.பி.க்களுக்கும் தனி நேடை அமைத்திருந்தனர்.  மணிரத்னம் சார் அந்த மேடையில்  உள்ள இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டார். நானும் அவர் பின்னால் நின்றிருந்தேன்.  மணிரத்னம் சார் உட்காரச் சொல்லவே நானும் பின் இருக்கையில் அமர்ந்தேன்.

அப்போது கூட்டமாக வந்த சிலர், மணிரத்னம் சாரிடம் ஆட்டோ கிராப் வாங்கினார்கள். திடீரென சிலர் என்னிடமும்  ஆட்டோ கிராப் கேட்க.. எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஆனாம் மணிரத்னம் சாரே, ஆட்டோ கிராப் நோட்டை வாங்கி என்னிடம் கொடுத்தார். எனக்கு வெட்கமாக போய்விட்டது. அவர் எவ்வளவு பெரிய இக்குநர்.. இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாரே என நினைத்தேன்.

நான் போட்ட முதல் ஆட்டோகிராப்  அதுதான்” என்று கூறியிருக்கிறார் கார்த்தி.

The post “மணிரத்னத்தின் பெருந்தன்மை!”: சொல்கிறார் கார்த்தி appeared first on Touring Talkies.

]]>