Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் வெங்கட் பிரபு – Touring Talkies https://touringtalkies.co Sat, 06 Feb 2021 13:37:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் வெங்கட் பிரபு – Touring Talkies https://touringtalkies.co 32 32 4 இயக்குநர்கள், 4 கதைகளை இயக்கியிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’ திரைப்படம் https://touringtalkies.co/kutty-story-movie-press-meet-news/ Sat, 06 Feb 2021 13:35:51 +0000 https://touringtalkies.co/?p=12800 வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி.K.கணேஷ் தயாரித்துள்ள படம் ‘குட்டி ஸ்டோரி’. இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன், இரண்டாவது தொகுப்பை  விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஒரே திரைப்படத்தில் 4 இயக்குநர்கள் 4 கதைகளை இயக்குவது தமிழ்த் திரையுலகத்தில் இதுவே முதல் முறையாகும். இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் […]

The post 4 இயக்குநர்கள், 4 கதைகளை இயக்கியிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் Dr.ஐசரி.K.கணேஷ் தயாரித்துள்ள படம் குட்டி ஸ்டோரி’.

இந்தப் படத்தை முதல்முறையாக நான்கு முன்னணி இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ளனர். முதல் தொகுப்பை கௌதம் வாசுதேவ மேனன், இரண்டாவது தொகுப்பை  விஜய், மூன்றாவது தொகுப்பை வெங்கட் பிரபு, நான்காவது தொகுப்பை நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

ஒரே திரைப்படத்தில் 4 இயக்குநர்கள் 4 கதைகளை இயக்குவது தமிழ்த் திரையுலகத்தில் இதுவே முதல் முறையாகும்.

இதில் கௌதம் மேனன் இயக்கி உள்ள கதையில் அவரே  நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ள கதையில் மேகா ஆகாஷ் நாயகியாகவும், அமிர் டாஸ், பிரதான் ஆர்யா, சுகாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள கதையில் வருண், சங்கீதா, சாக்ஷி ஆகியோர் நடித்துள்ளனர். நலன் குமாரசாமி இயக்கியுள்ள கதையில் விஜய் சேதுபதி. அதிதி பாலன் நடித்துள்ளனர்.

குட்டி ஸ்டோரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் Dr.ஐசரி.K. கணேஷ் பேசுகையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த குறும்பட கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் எனக்கு பிடித்தது. இது ஆந்தாலஜி மெத்தட் என்பதால் புதிதாக தோன்றியது. உடனே ஒப்புக் கொண்டேன். பெரிய படங்களுக்கு இணையாக இதற்கும் பட்ஜெட் ஒதுக்கி எடுத்துள்ளோம்.

முதல்முறையாக நான்கு பெரிய இயக்குநர்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர் என்றதும் இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. இந்தப் படம் காதலர் தினத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகிறது…” என்றார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன் பேசுகையில், “நான் கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் பல குறும்படங்களை இயக்கினேன். அதிலும் காதல் கதை படங்களை இயக்குவது பிடித்ததாக இருந்தது.

இந்த கான்செப்ட் பற்றி என்னிடம் கூறியதும் முதலில்  நான்கு இயக்குநர்களும் ஒன்றாகப் பேசி அவரவர் கதைகளை முடிவு செய்தோம். நான்கு கதைகளும் வித்தியாசமாக அமைந்தது.

என்னுடைய கதையை நான்கே நாட்களில் படமாக்கினேன். கதாநாயகியாக அமலா பால் நடித்துள்ளார். முதலில் நான் நடிப்பதாக இல்லை. அதன் பிறகு கதையை முடித்தவுடன்  நானே நடிக்க முடிவு செய்தேன்.  படம் நன்றாக வந்துள்ளது…” என்றார்

இயக்குநர் விஜய் பேசுகையில், “முதலில் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து இது போன்ற ஒரு காதல் கதை படத்தை இயக்கப் போகிறோம் என்றதும் எதிர்பார்ப்பு அதிகமானது. மற்ற  இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும்போது அவர்களுடைய ஸ்டைலை என்னால் கற்றுக் கொள்ள முடிந்தது.

இந்தக் கதைக்கு  யாரை நடிக்க வைக்கலாம்  என யோசித்தபோது  மேகா ஆகாஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது.  உடனே அவரிடம்  கதையை  சொன்னேன்  அவரும் நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார். நான் ஏழு நாட்களில் இந்த கதையை படமாக்கினேன். முழுக்க, முழுக்க சென்னையிலேயே எடுத்துள்ளோம்…” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், “முதலில் நாங்கள் நான்கு பேரும் இணைந்து இந்த ஆந்தாலஜிபடத்தை உருவாக்கி உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிலும் என் கதை அனிமேஷன் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதில் காதலையும் கலந்து சொல்லியுள்ளேன். ஒரு குறும் படத்திற்கு தேவையான எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. எனக்கும் இது ஒரு புது வித அனுபவத்தை தந்துள்ளது…” என்றார்.

இயக்குநர் நலன் குமாரசாமி பேசியதாவது  “லாக் டவுன் முடிந்தவுடன் எனது புதிய படத்தை தொடங்க திட்டமிட்டு இருந்தேன். அதற்கு முன்பாக இந்த குறும்பட வாய்ப்பு வந்தது. எனக்கும் அந்தப் படத்துக்கு முன்னர் இதை இயக்கினால் என்னை தயார்படுத்திக் கொள்ள முடியும் என்பதால் ஒப்புக் கொண்டேன்.

இந்த கதையை எழுதியவுடன் என் நண்பர் விஜய் சேதுபதியிடம் யாரை நடிக்க வைக்கலாம் என கேட்டேன். அவர் எனக்கு இந்தக் கதை பிடித்துள்ளது. நானே நடிக்கிறேன் என்று கூறி நடித்துக் கொடுத்தார். மற்ற இயக்குநர்கள் அவர்களுக்கான கதையை குறிப்பிட்ட நாட்களில் முடித்துக் கொடுத்தனர். நான் கொஞ்சம் அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டேன். 11 நாட்கள் மிகவும் சிரமப்பட்டு இந்தக் கதையை படமாக்கி முடித்தேன். ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது.

இயக்குனர் கௌதம் மேனனும் படப்பிடிப்பின்போது சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்து படப்பிடிப்பை பார்வையிட்டார். ஒரு சில காட்சிகளுக்கு விஜய் சேதுபதியும் உதவி செய்தார். நாங்கள் நினைத்தது போலவே இந்த படம் அமைந்துள்ளது…” என்றார்.

The post 4 இயக்குநர்கள், 4 கதைகளை இயக்கியிருக்கும் ‘குட்டி ஸ்டோரி’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
சிம்பு-வெங்கட் பிரபு இணையும் ‘மாநாடு’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/maanaadu-movie-teaser/ Wed, 03 Feb 2021 09:12:25 +0000 https://touringtalkies.co/?p=12719 V House Productions present the official teaser of #Maanaadu​ (மாநாடு) #Rewind​ #रिवाइंड​ #రీవైన్డ్​ #ರಿವೈoಡ್​ #റിവൈൻഡ്​ #மாநாடு​ Cast: STR, Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, SJ Suryah, Premgi Amaren, Karunakaran Written & Directed – Venkat Prabhu Producer – Suresh Kamatchi Music Director – Yuvan Shankar Raja Director Of Photography – Richard M Nathan Editor – Praveen KL […]

The post சிம்பு-வெங்கட் பிரபு இணையும் ‘மாநாடு’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
V House Productions present the official teaser of #Maanaadu​ (மாநாடு) #Rewind#रिवाइंड#రీవైన్డ్#ರಿವೈoಡ್#റിവൈൻഡ്#மாநாடு​ Cast: STR, Kalyani Priyadarshan, S. A. Chandrasekhar, SJ Suryah, Premgi Amaren, Karunakaran Written & Directed – Venkat Prabhu Producer – Suresh Kamatchi Music Director – Yuvan Shankar Raja Director Of Photography – Richard M Nathan Editor – Praveen KL Art Director – Umesh J Kumar Action Director – Stunt Silva Costume Designer – Vasuki Bhaskar Lyrics – Madhan Karky Choreography – Raju Sundaram Audiography – T. Udayakumar Production Controller – Subramanian Narayanan VFX – Harihara Suthan Promo Stills – Sudharshan Stills – Mohan PRO – A. John Publicity Design – Tuney John / 24AM Banner : V House Productions Direction Team: A. N. Pitchumani | Veer Ramakrishnan | R. Thirunavukkarasu | Sasikumar Paramasivan | Palanivel Ariyaputhri | Vivek Kumar | T. Suresh Kumar | OPT Vinoth Kumar | Karthiick Saravanan Cinematography Team: Kedarnath S | K.V.Pavithran | Vivekanandhan.T.V Associate Editor – M. Sandeep ©️ 2021 V HOUSE PRODUCTION

The post சிம்பு-வெங்கட் பிரபு இணையும் ‘மாநாடு’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள வெப் சீரிஸின் கதை என்னுடையது” – இயக்குநர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு https://touringtalkies.co/venkat-prabhu-was-thieft-my-story-director-sasitharan-complaint/ Wed, 03 Feb 2021 07:21:26 +0000 https://touringtalkies.co/?p=12709 இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. இந்த சீரிஸ், விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்த இயக்குநர் சசிதரண், இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இந்தக் கதையை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை […]

The post “இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள வெப் சீரிஸின் கதை என்னுடையது” – இயக்குநர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் ‘லைவ் டெலிகாஸ்ட்’. இந்த சீரிஸ், விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதைப் பார்த்த இயக்குநர் சசிதரண், இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இந்தக் கதையை வைத்து இயக்குநர் வெங்கட் பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

இயக்குநர் சசிதரண், அட்டக்கத்தி’ தினேஷ் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து.. தற்போது big boss புகழ் ஆரி அர்ஜுனின் புதிய படத்தை இயக்கி கொண்டிருக்கிறார்.

தன்னுடைய கதை வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்னும் வெப் சீரிஸாக உருவாகியிருப்பது குறித்து, இயக்குநர் சசிதரன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “2005-ம் ஆண்டின் காலக்கட்டத்தில் வெங்கட் பிரபுவும் நானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அந்த சமயத்தில் அவர் நடித்திருந்த ‘உன்னை சரணடைந்தேன்’ என்கிற படம் வெளியாகி இருந்தது.

அப்போது அவரை ஹீரோவாக வைத்து நான் ஒரு படம் இயக்குவதற்காக, இருவரும் முயற்சி செய்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில்தான் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரணிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் வெங்கட்பிரபு.

ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக கூறிய எஸ்.பி.பி.சரண் என்னிடம் கதை இருக்கிறதா என கேட்டார்.

அப்போது அவரிடம் நான் ஒரு கதை கூறினேன். அது அவருக்கும் பிடித்துவிட்டது. ஆனால், அதன் பிறகு அது பற்றிய பேச்சே இல்லை.

ஒரு நாள் திடீரென வெங்கட் பிரபு என்னிடம் வந்து, தனது நண்பரான சிங்கப்பூரை சேர்ந்த கேபிடல் சினிமாஸ் சரவணன் என்பவர் மூலமாக தனக்கு ஒரு படம்  இயக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறினார்.

அப்போது ஆங்கில ஹாரர் படம் ஒன்றை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றலாம் என கூறினார்கள்.  ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.. அதனால் நாமே புதிதாக ஒரு கதையை உருவாக்கலாம் என கூறி, சில நாட்களில் ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற ஒரு புதிய ஹாரர் கதையை உருவாக்கி வெங்கட் பிரபுவிடம் கூறினேன். அவருக்கும் அந்த கதை பிடித்துவிட்டது.

உடனே அதை எஸ்.பி.பி.சரணிடம் கூற அவரும் சம்மதித்து, கதை விவாதத்தில் உட்கார்ந்து விட்டனர். அப்போதும் என்னை அழைத்த வெங்கட் பிரபுவும், எஸ்.பி.பி.சரணும் இந்தப் படத்தின் முழு திரைக்கதையையும், வசனத்தையும் என்னையே உருவாக்கும்படி கேட்டுக் கொண்டார்கள்.

ஏற்கனவே எஸ்.பி.பி.சரண், எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு தருவதாக கூறியிருந்ததால், அந்த நம்பிக்கையில் வெங்கட் பிரபு இயக்குவதற்காக இந்த ஹாரர் கதையை நான் முழு மூச்சாக அமர்ந்து உருவாக்கி முடித்தேன். அதன் பிறகு மொத்த டீமையும் அழைத்து நான் உருவாக்கிய மொத்த ஸ்கிரிப்டையும் படித்துக் காட்டினேன். அனைவருக்குமே பிடித்துவிட்டது.

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 100

தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இந்த கதை பிடித்திருந்தாலும், படத்திற்கு அதிக செலவாகும் என்பதாலும் இயக்குனர் வெங்கட் பிரபுவை நம்பி அவரது முதல் படமாக அவ்வளவு ரூபாயை தன்னால் செலவு செய்ய முடியாது என்றும் கூறினார்.

அதன் பிறகு சில மாதங்கள்வரை அது பற்றிய பேச்சே இல்லாமல் இருந்தது. ஒரு நாள் அவர்கள் இருவரும் தாங்கள் இணைந்து நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு என்னை வரவழைத்தார்கள்.

அப்போதும் நான் கூறிய கதையை படமாக்க வேண்டும் என வெங்கட் பிரபு சொல்ல, பட்ஜெட் அதிகம் என மீண்டும் மறுத்தார் எஸ்.பி.பி.சரண். அதேசமயம் வெங்கட் பிரபுவிடம் வேறு ஒரு கதை உள்ளது. அதை பண்ணலாம் என்று கூற, அப்போது வெங்கட் பிரபு “தெருவோரமாக கிரிக்கெட் விளையாடுபவர்களின் இடையே இருக்கும் நட்பு…” என்கிற ஒரு வரி கான்செப்ட்டை மட்டும் என்னிடம் கூறினார்.

ஆனால், வெங்கட் பிரபுவுவோ, தெருவோர கிரிக்கெட் என்கிற வார்த்தை மட்டுமே தன்னிடம் உள்ளது, அதை வைத்து மேற்கொண்டு என்ன செய்வது என்று மீண்டும்  என்னிடமே கேட்டார். எஸ்.பி.பி.சரண் எனக்கு இயக்குநர் வாய்ப்பு அளிக்கிறேன் என்று சொன்னதை மட்டுமே நம்பி.. தெருவோர கிரிக்கெட்’ என்ற அந்தப் புள்ளியை மட்டுமே வைத்துக் கொண்டு சென்னை-28’ படத்திற்கான முழு கதையையும், திரைக்கதையையும் நானே தயார் செய்து வசனத்தையும் எழுதினேன்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற நடிகர் ஜெய்யின்  கதாபாத்திரம்கூட, எனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள்தான். அப்படி என் திறமை அனைத்தையும் கொட்டி எழுதிய கதைதான் ‘சென்னை-28’ திரைப்படம்.

ஆனால், மொத்தப் படத்தின் கதையை எழுதி முடித்து அவர்களிடம் கொடுத்ததுமே அதன் பின் வந்த நாட்களில் வெங்கட் பிரபுவும், எஸ்.பி.பி.சரணும் என்னை ஒதுக்க ஆரம்பித்தார்கள். சொல்லப் போனால் அந்தப் படத்தில் நான் பணிபுரிவதையே அவர்கள் விரும்பவில்லை. ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து நானே விலகுவதாக கூறி வெளியே வந்துவிட்டேன்.

சென்னை-28’ படத்தின் டைட்டில் கார்டில் ‘கதை, திரைக்கதை, வசனம்’ என்று என் பெயரைப் போடும்படி கேட்டேன். ஆனால், திரைக்கதை-வசனம்’ என்று போட்டுவிட்டு அதன் அருகில் சிறியதாக உதவி என்று சிறியதாகப் போட்டார் வெங்கட் பிரபு.

அதன் பிறகு அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றதும், வெங்கட் பிரபு மீண்டும் இணைந்து பணியாற்றலாம் என என்னை அழைத்தார். ஆனால், எனக்கு அவருடன் மீண்டும் இணைவதற்கு விருப்பம் இல்லாததால் அவரது அழைப்பை நிராகரித்துவிட்டேன்.

அதன் பிறகு அட்டகத்தி தினேஷை வைத்து, தற்போது ‘வாராயோ வெண்ணிலாவே’ என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டேன். சென்சார் பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில்தான் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள வெப் சீரிஸின் டீசரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். காரணம் சரவணன் மற்றும் சரண் தயாரிப்பில்   வெங்கட் பிரபு இயக்குவதற்காக நான் எழுதிக் கொடுத்து, பட்ஜெட் அதிகம் என ஒதுக்கி வைத்தார்களே, அதே ஸ்கிரிப்ட்டைத்தான் தற்போது வெங்கட் பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற வெப் சீரிஸாக இயக்கியுள்ளார்.

 கடந்த 2007-ம் ஆண்டிலேயே, இந்தக் கதையை நான் எழுத்தாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்து வைத்துள்ளேன். அந்தக் கதைக்கும்கூட ‘நேரடி ஒளிபரப்பு’ என்று டைட்டில் வைத்துதான் பதிவு செய்துள்ளேன். அதையே தற்போது ஆங்கிலத்தில் லைவ் டெலிகாஸ்ட்’ என்கிற பெயரிலேயே வெப் சீரிஸாக உருவாக்கியுள்ளார் வெங்கட் பிரபு.

என் பெயரில் அந்தக் கதை இருக்கும்போது, என்னிடம் அனுமதி பெறாமலேயே, எனக்கு தெரியாமலேயே வெங்கட் பிரபு இவ்வளவு துணிச்சலாக அதை வெப் சீரிஸாக இயக்கி இருக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இன்னொரு வலுவான காரணமும் இருக்கிறது.

அதாவது கடந்த 2007-ம் ஆண்டில் நான் சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருந்தபோது, என்னுடைய வீட்டில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ விபத்தில் பல பொருட்கள் எரிந்து நாசம் ஆனாலும், நான் எழுதி வைத்திருந்த எண்பதுக்கும் மேற்பட்ட கதைகள் அடங்கிய பெட்டி அதிர்ஷ்டவசமாக தப்பியது. பெரிய அளவில் சேதாரம் இல்லாமல் என்னுடைய கதைகளும் தீயிலிருந்து தப்பின.

இந்த தீ விபத்து குறித்து எப்படியோ கேள்விப்பட்ட வெங்கட் பிரபு, மறுநாள் என்னிடம் அது குறித்து விசாரித்து விட்டு, அப்படியே பேச்சுவாக்கில், “என் கதைகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா..?” என்று கேட்டார். நான் “அவையெல்லாம் தீயில் எரிந்துவிட்டன…” என்று கூறினேன். அதை கேட்டுக் கொண்ட வெங்கட் பிரபு, அதன் பிறகு என்னிடம் தொடர்பு கொள்ளவே இல்லை..

இப்போதுதான் எனக்குத் தெரிகிறது, என்னுடைய கதைகள் எரிந்து விட்டது என்கிற தைரியத்தில்தான், வெங்கட்பிரபு ‘லைவ் டெலிகாஸ்ட்’ கதையை வெப் சீரிஸாக தற்போது எடுத்துள்ளார் என்று..!!

வெங்கட் பிரபுவுக்கு இது சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது மிகப் பெரிய அதிர்ச்சியான விஷயமாக இருந்தது. காரணம் இதே கதையை, அதாவது நான் ஏற்கனவே எழுதிய ‘நேரடி ஒளிபரப்பு’ என்கிற கதையைத்தான் வெப் சீரிஸாக இயக்குவதற்காக ‘வி கோஷ் மீடியா’ என்கிற நிறுவனத்துடன் பேசி கடந்த அக்டோபர் மாதம்தான், அதற்காக முன் பணமும் வாங்கியுள்ளேன்.

இந்த நிலையில்தான் இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்து கொண்டேன். இது குறித்து தற்போது நான் எழுத்தாளர் சங்கத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன். விரைவில் நேரில் சென்று அவர்களிடம் இது குறித்து பேச இருக்கிறேன்.. எனக்கான நியாயத்தை சங்கத்தின் மூலமாக பெற முயற்சி எடுக்க இருக்கிறேன்…” என்று கூறியுள்ளார்.

சினிமா, தொலைக்காட்சித் தொடர்களின் கதைகள்தான் காப்பியடிக்கப்பட்டன என்று புகார்கள் வந்தன. இப்போது கடைசியாக வெப் சீரிஸின் கதையும் காப்பி என்று வந்துவிட்டது..!

இயக்குநர் வெங்கட் பிரபுதான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்..!

The post “இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள வெப் சீரிஸின் கதை என்னுடையது” – இயக்குநர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
‘மாநாடு’ படத்தின் டீஸர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது..! https://touringtalkies.co/maanaadu-movie-teaser-will-release-on-february-3/ Fri, 29 Jan 2021 10:55:59 +0000 https://touringtalkies.co/?p=12571 தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் நாயகனான சிம்புவே அறிவித்திருக்கிறார். பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவுக்கும் மிக முக்கியமான நாள். அன்றைக்கு அவரது பிறந்த நாள் என்பதால் ‘மாநாடு’ படத்தின் டீஸர் வெளியாவதற்கு பொருத்தமான நாளாகத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனலாம். இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கை விடுத்திருக்கும் நடிகர் சிம்பு, “எனது […]

The post ‘மாநாடு’ படத்தின் டீஸர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் நாயகனான சிம்புவே அறிவித்திருக்கிறார்.

பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவுக்கும் மிக முக்கியமான நாள். அன்றைக்கு அவரது பிறந்த நாள் என்பதால் ‘மாநாடு’ படத்தின் டீஸர் வெளியாவதற்கு பொருத்தமான நாளாகத் தேர்வு செய்திருக்கிறார்கள் எனலாம்.

இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கை விடுத்திருக்கும் நடிகர் சிம்பு, “எனது பிறந்த நாளான வரும் பிப்ரவரி 3-ம் தேதியன்று தான் சென்னையில் உள்ள வீட்டில் இருக்கப் போவதில்லை. வெளியூர் செல்கிறேன். இதனால் ரசிகர்கள் அன்றைக்கு என் வீட்டுக்கு வர வேண்டாம். கூடிய சீக்கிரமே ரசிகர்களை நான் சந்திக்கிறேன்..” என்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

The post ‘மாநாடு’ படத்தின் டீஸர் பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகிறது..! appeared first on Touring Talkies.

]]>
சிம்பு படத்தில் இருந்து வெங்கட் பிரபு விலகல்..! https://touringtalkies.co/venkat-prabhu-withdraw-from-simbus-next-movie/ Tue, 15 Dec 2020 06:42:34 +0000 https://touringtalkies.co/?p=11045 வாராவாரம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் லைம் லைட்டுக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார் சிம்பு. இந்த வாரத்திய சிம்பு சம்பந்தமான செய்தி என்னவெனில், அவரை வைத்து அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக இருந்த வெங்கட் பிரபு வேலைப் பளு காரணமாக அந்தப் படத்தை இயக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் வேறு இயக்குநர் தேடுகிறார்கள் என்பதுதான். இந்தப் படம் டி.ராஜேந்தர் சமீபத்தில் துவக்கிய ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்ற சங்கத்தின் நிதிக்காக சிம்பு நடிக்கும் படமாகும். தேர்தலுக்கு […]

The post சிம்பு படத்தில் இருந்து வெங்கட் பிரபு விலகல்..! appeared first on Touring Talkies.

]]>
வாராவாரம் தமிழ்ச் சினிமாவுலகத்தில் லைம் லைட்டுக்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டேயிருக்கிறார் சிம்பு.

இந்த வாரத்திய சிம்பு சம்பந்தமான செய்தி என்னவெனில், அவரை வைத்து அடுத்தப் படத்தை இயக்கப் போவதாக இருந்த வெங்கட் பிரபு வேலைப் பளு காரணமாக அந்தப் படத்தை இயக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம். இதனால் வேறு இயக்குநர் தேடுகிறார்கள் என்பதுதான்.

இந்தப் படம் டி.ராஜேந்தர் சமீபத்தில் துவக்கிய ‘தமிழ்நாடு மூவி மேக்கர்ஸ் சங்கம்’ என்ற சங்கத்தின் நிதிக்காக சிம்பு நடிக்கும் படமாகும். தேர்தலுக்கு முன்பாகவே இந்தத் திட்டம் தீட்டப்பட்டு தயாராக இருந்தது.

டி.ராஜேந்தர் சங்கத்தை ஆரம்பிப்பதாகச் சொன்னவுடன் இந்தப் புதிய படத்திற்கான வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வந்தன. முதலில் ‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு இந்தப் படத்தை வெங்கட் பிரபுவே இயக்கவிருப்பதாகச் சொல்லியிருந்தார்கள்.

ஆனால், இப்போது இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழலில் இருக்கும் ‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு அதன் போஸ்ட் புரொடெக்சன்ஸ் வேலைகளில் மூழ்கவிருப்பதால் தனக்கு நேரம் இருக்காது என்பதை வெங்கட் பிரபுவே சம்பந்தப்பட்டவர்களிடத்தில் சொல்லிவிட்டாராம்.

எனவே, வெங்கட் பிரபுவை கழற்றிவிட்டு புதிய இயக்குநரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் டி.ராஜேந்தர்.

அதோடு, அந்தப் படத்திற்காக ஒரு நல்ல கதையையும் தேடுகிறார் டி.ராஜேந்தர். இந்தக் கதை கேட்கும் படலத்தில் சிம்புவுக்காக லிங்குசாமியின் தம்பி சுபாஷ் சந்திரபோஸும் கதைக் கேட்டு வருகிறாராம்.

சிம்புவுக்கேற்ற கதையை வைத்திருக்கும் இயக்குநர்கள் விரைந்து செயல்பட்டால் வாய்ப்பு கிடைக்கலாம்..!

The post சிம்பு படத்தில் இருந்து வெங்கட் பிரபு விலகல்..! appeared first on Touring Talkies.

]]>
‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு..! https://touringtalkies.co/director-venkat-prabhu-released-poster-of-chidambaram-railway-gate-movie/ Fri, 04 Dec 2020 12:38:45 +0000 https://touringtalkies.co/?p=10703 தயாரிப்பாளர் எஸ்.எம். இப்ராஹிம் அவர்களின் ‘S Crown Pictures’ தயாரிப்பு நிறுவனத்தின் தனது முதல் படைப்பு ‘சிதம்பரம் ரயில்வே கேட்’. பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியும், மாஸ்டர் மகேந்திரனும் இந்தப் படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நீரஜா மற்றும் காயத்ரி இருவரும் நாயகிகளாக நடிக்க, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக களமிறங்கி உள்ளார். மேலும், ரேகா, ஜி.எம்.குமார், டேனியல் மற்றும் ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். […]

The post ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் எஸ்.எம். இப்ராஹிம் அவர்களின் ‘S Crown Pictures’ தயாரிப்பு நிறுவனத்தின் தனது முதல் படைப்பு ‘சிதம்பரம் ரயில்வே கேட்’.

பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகரான மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமியும், மாஸ்டர் மகேந்திரனும் இந்தப் படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர்.

நீரஜா மற்றும் காயத்ரி இருவரும் நாயகிகளாக நடிக்க, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் வில்லனாக களமிறங்கி உள்ளார். மேலும், ரேகா, ஜி.எம்.குமார், டேனியல் மற்றும் ‘லொள்ளு சபா’ மனோகர் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசைஞானியின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத் தொகுப்பு பணியை சுரேஷ் அர்ஸ் மேற்கொள்ள R.வேல் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும் அசோக் ராஜா நடன  இயக்குநராக களமிறங்குகிறார். அறிமுக இயக்குநரான சிவ பாலவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.

திரில்லர் கலந்த கமர்சியல் படமாக உருவாகி உள்ள இப்படத்தின் First Look போஸ்டரை பிரபல இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

The post ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு..! appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! https://touringtalkies.co/simbu-venkat-prabhu-will-joins-for-tfpc-production-movie/ Mon, 30 Nov 2020 09:32:41 +0000 https://touringtalkies.co/?p=10466 நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” […]

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்பு சமீப காலங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். அதிகமான படங்களுக்கு ஒத்துக் கொள்வது.. கொடுத்த கால்ஷீட்டில் சமர்த்துப் பிள்ளையாய் வந்து நடித்துக் கொடுப்பது என்று தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் செல்லமாய் உருமாறிக் கொண்டிருக்கிறார்.

இந்த நேரத்தில் இன்னொரு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமான ஒரு விஷயத்தையும் செய்திருக்கிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் அவரது தந்தையான இயக்குநர் டி.ராஜேந்தர் தேர்தல் தோல்வியடைந்தாலும் “தயாரிப்பாளர்கள் சங்கத்திற்காக ஒரு படத்தை உருவாக்கித் தர வேண்டும்” என்று கொள்கையில் இருக்கிறார் டி.ராஜேந்தர்.

அந்தக் கொள்கைக்குத் துணை கொடுக்க தனது மகன் சிம்புவை நாடியிருக்கிறார் டி.ராஜேந்தர். அப்பா பேச்சுக்கு செவி கொடுத்த சிம்பு இதற்கு டபுள் “ஓகே” சொல்லியிருக்கிறாராரம்.

படத்திற்கு ‘மெண்டல்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தையும் இயக்குநர் வெங்கட் பிரபுதான் இயக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த ஒரு படத்தின் மூலமாகக் கிடைக்கும் லாபத் தொகை முழுவதும் அப்படியே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அளிக்கப்படுமாம். தோராயமாக 10 அல்லது 12 கோடி ரூபாய் இதன் மூலமாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நன்கொடையாகத் தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ராஜேந்தரின் இந்த உயரிய எண்ணத்திற்கு சிம்புவின் காட் மதரான உஷா ராஜேந்தரும் ஒப்புதல் அளித்துவிட்டாராம். எனவே, படம் தயாராவது உறுதி. தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பேங்க் பேலன்ஸை டி.ராஜேந்தர் உயத்தப் போவதும் உறுதி.

ஆனால், இதை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் தற்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் இருக்கிறார்களா என்பதுதான் தெரியவில்லை.

அவர்களும் ‘தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொன்னால்.. தயாரிப்பாளர்கள் சங்கம் நிச்சயமாக வலு பெறும். கஷ்டப்படும் ஏழை, எளிய தயாரிப்பாளர்கள் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

The post தயாரிப்பாளர் சங்கத்திற்காக உருவாகும் படத்தில் இணைகிறது சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி..! appeared first on Touring Talkies.

]]>
சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! https://touringtalkies.co/simbus-new-movie-stats-today-at-dindigul/ Sat, 10 Oct 2020 05:16:39 +0000 https://touringtalkies.co/?p=8539 நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம் தொடர்ச்சியாக நல்லவைகளாகவே நடந்து வருகின்றன. முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு […]

The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் இந்த வருடம் தொடர்ச்சியாக நல்லவைகளாகவே நடந்து வருகின்றன.

முதலில் ‘மாநாடு’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு பின்பு, வழக்கம்போல ‘பிகு’ செய்து கொண்டிருந்த சிம்பு, கடைசியாக நடந்த சில, பல கட்ட கட்டப் பஞ்சாயத்துகளுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்த இடைவெளியில் ச்சும்மா இல்லாத சிம்பு தன்னுடைய உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். இதற்காகவே கேரளாவுக்கு இரண்டு முறை சென்று ஆயுர்வேத சிகிச்சையெல்லாம் பெற்று 100 கிலோவில் இருந்து தற்சமயம் 70 கிலோவாக உருமாறியுள்ளார்.

அதோடு, ‘மாநாடு’ படத்திற்கிடையே சுசீந்திரனின் படத்திலும் நடிக்க திடீரென்று ஒத்துக் கொண்டார். அதுலேயும் ஒரே ஷெட்யூலில் 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறுவதால் தன்னுடைய போர்ஷன் முழுவதையும் ஒரே கட்டமாக நடித்துக் கொடு்க்கப் போவதாக வாக்குறுதியளித்தவர்.. இன்றைக்கு திண்டுக்கல்லில் அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பாண்டிச்சேரியில் அடுத்த மாதம் துவங்கவிருக்கும் ‘மாநாடு’ படத்தின் ஷூட்டிங்கில் தொடர்ந்து நடிக்கப் போகிறாராம் சிம்பு.

இதற்கிடையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி கோவிலுக்கும் ஆன்மீகப் பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.

சிம்புவிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம்… அவரது ரசிகர்களுக்கும், அவரை வைத்து படமெடுக்கத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.

சுசீந்திரனின் திரைப்படம், ‘மாநாடு’ திரைப்படம் இரண்டும் சிம்புவால் எந்தச் சிக்கலும் இல்லாமல் வெளியானால்.. தயாரிப்பாளர்கள் கூட்டம் சிம்புவை மொய்க்கும் என்பதில் சந்தேகமில்லை.

“இனி எல்லாமே அவருடைய கைகளில்தான் உள்ளது…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

The post சிம்புவின் அதிரடி மாற்றம் – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி..! appeared first on Touring Talkies.

]]>