Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – Touring Talkies https://touringtalkies.co Thu, 26 May 2022 09:46:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் லோகேஷ் கனகராஜ் – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..! https://touringtalkies.co/vikram-has-made-a-profit-even-before-its-release/ Thu, 26 May 2022 09:45:56 +0000 https://touringtalkies.co/?p=22295 நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் ரிலீஸுக்கு முன்பே 172 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ‘விக்ரம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, ஸ்டார் […]

The post ‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, நடித்திருக்கும் ‘விக்ரம்’ படம் ரிலீஸுக்கு முன்பே 172 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘விக்ரம்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.

கேரள உரிமையை ஷிபு தமீம் 5.50 கோடிக்கும், தெலுங்கு உரிமையை நடிகர் நிதின் 5.50 கோடிக்கும், கர்நாடக உரிமையை கற்பக விநாயகா ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் 4.25 கோடிக்கும் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தவிர, ஸ்டார் நெட்வொர்க் நிறுவனம் அனைத்து மொழிகளுக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை 93 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே படத்தின் பாடல் உரிமம் 4.25 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை 25 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது.

இதையெல்லாம் சேர்த்தால் 172 கோடி ரூபாய் அளவுக்கு ரிலீஸுக்கு முன்பே இந்த ‘விக்ரம்’ படம் வியாபாரம் ஆகியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த விக்ரம் படத்தின் மொத்தத் தயாரிப்பு செலவு கமல்ஹாசனின் சம்பளம் இல்லாமல் 75 கோடி என்கிறது சினிமா வட்டாரம். இதன் மூலமாக 100 கோடி அளவுக்கு இப்போதே விக்ரம் படம் லாபத்தை அள்ளிவிட்டதாகவே திரையுலகத்தினர் சொல்கிறார்கள்.

The post ‘விக்ரம்’ படம் வெளியீட்டுக்கு முன்பேயே லாபத்தை ஈட்டிவிட்டதாம்..! appeared first on Touring Talkies.

]]>
விஜய்யின் 66-வது படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார்..? https://touringtalkies.co/who-is-the-director-of-vijay-66th-movie/ Thu, 18 Mar 2021 07:22:00 +0000 https://touringtalkies.co/?p=13683 நடிகர் விஜய் தற்போது நடிக்கவிருக்கும் அவருடைய 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கப் போகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதற்கடுத்த 66-வது திரைப்படத்தின் தயாரிப்பாளரையும் விஜய் 2 மாதங்களுக்கு முன்பேயே முடிவு செய்துவிட்டார். ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த இராம.நாராயணின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் முரளி ராமசாமிதான் அந்த அதிர்ஷ்டக்காரத் தயாரிப்பாளர். இவர் ஏற்கெனவே தயாரித்த ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றெடுத்தாலும் அந்தப் படத்தின் இயக்குநரான அட்லீயின் திட்டமிடாத பணிகளாலும், ஷூட்டிங் […]

The post விஜய்யின் 66-வது படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார்..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் தற்போது நடிக்கவிருக்கும் அவருடைய 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கப் போகிறார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இதற்கடுத்த 66-வது திரைப்படத்தின் தயாரிப்பாளரையும் விஜய் 2 மாதங்களுக்கு முன்பேயே முடிவு செய்துவிட்டார். ‘மெர்சல்’ படத்தைத் தயாரித்த இராம.நாராயணின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் முரளி ராமசாமிதான் அந்த அதிர்ஷ்டக்காரத் தயாரிப்பாளர்.

இவர் ஏற்கெனவே தயாரித்த ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வசூலைப் பெற்றெடுத்தாலும் அந்தப் படத்தின் இயக்குநரான அட்லீயின் திட்டமிடாத பணிகளாலும், ஷூட்டிங் நாட்களை அதிகப்படுத்தியதாலும் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டத்தைச் சம்பாதித்தார் முரளி ராமசாமி.

தேனாண்டாள் பிலிம்ஸுக்கு வாழ்க்கைக் கொடுப்பதற்காக இன்னொரு வாய்ப்பினைத் தந்திருக்கிறார் நடிகர் விஜய்.

இந்த நிலையில் இந்த விஜய்யின் 66-வது படத்தை இயக்கப் போவது யார் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.

அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். கடைசியாக விஜய் நடிப்பில் அவர் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் அபார வெற்றிதான் லோகேஷூக்கு மீண்டும் விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

‘மெர்சல்’ படம் போல திட்டமிடாமல் செய்து பட்ஜெட்டை இரட்டிப்பாக்காத இயக்குநர்தான் தேவை என்று தயாரிப்பாளர் முரளி ராமசாமி தேடிக் கொண்டிருந்தபோது நடிகர் விஜய்யே “லோகேஷே போதும். பக்காவா செய்து கொடுப்பார்..” என்று அவருடைய பெயரை டிக் செய்துவிட்டாராம்.

ஸோ.. தற்போது மணிரத்னம் தயாரித்து வரும் ‘நவரஸா’ ஆந்தாலஜி படத்தின் ஒரு பகுதியை இயக்கி வரும் லோகேஷ்… அந்தப் பணி முடிந்ததும் இந்த விஜய்-66 படத்திற்கான வேலையைத் துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடையில் நடிகர் கமல்ஹாசனின் ‘விக்ரம்-2’ படமும் லோகேஷூக்காகக் காத்திருக்கிறது என்றாலும், அந்தப் படத்தின் துவக்கம் கமல்ஹாசனின் தேர்தல் வெற்றியைப் பொறுத்தே அமையும் என்பதால் லோகேஷூக்கு இது பிரச்சினையைக் கொடுக்காது என்றே நம்பலாம்.

The post விஜய்யின் 66-வது படத்தை இயக்கவிருக்கும் இயக்குநர் யார்..? appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ வெளியீட்டில் உருவாகியிருக்கும் பெரிய சிக்கல்..? https://touringtalkies.co/master-movie-release-news/ Thu, 03 Dec 2020 05:42:09 +0000 https://touringtalkies.co/?p=10636 சின்ன பட்ஜெட் படமாக இருந்தால் 10 அல்லது 20 தியேட்டர்களில் படத்தைத் திரையிட்டுவிட்டு வந்ததை வாங்கிக் கொண்டு நம் படம் தியேட்டரில் வெளியாகிவிட்டது என்கிற திருப்தியோடு வீட்டுக்குப் போகலாம். ஆனால் ‘மாஸ்டர்’ போன்ற 200 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை என்ன செய்வது..? அப்படியே கொண்டு வந்து தியேட்டரில் போட்டுவிட முடியாதே..?! “இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் தியேட்டர்களில் 50 சதவிகித சீட்டுக்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்…” என்கிற அரசின் உத்தரவு இருப்பதால் ‘மாஸ்டர்’ வெளியாவது தள்ளிப் […]

The post ‘மாஸ்டர்’ வெளியீட்டில் உருவாகியிருக்கும் பெரிய சிக்கல்..? appeared first on Touring Talkies.

]]>
சின்ன பட்ஜெட் படமாக இருந்தால் 10 அல்லது 20 தியேட்டர்களில் படத்தைத் திரையிட்டுவிட்டு வந்ததை வாங்கிக் கொண்டு நம் படம் தியேட்டரில் வெளியாகிவிட்டது என்கிற திருப்தியோடு வீட்டுக்குப் போகலாம்.

ஆனால் ‘மாஸ்டர்’ போன்ற 200 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை என்ன செய்வது..? அப்படியே கொண்டு வந்து தியேட்டரில் போட்டுவிட முடியாதே..?!

“இந்தக் கொரோனா காலக்கட்டத்தில் தியேட்டர்களில் 50 சதவிகித சீட்டுக்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் கொடுக்கப்பட வேண்டும்…” என்கிற அரசின் உத்தரவு இருப்பதால் ‘மாஸ்டர்’ வெளியாவது தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது.

இப்போது கூடுதலாக பல பிரச்சினைகள் வரிசையாக ‘மாஸ்டரு’க்கு வந்து கொண்டேயிருக்கிறது.

‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை 30 கோடிக்கு வாங்கிய விநியோகஸ்தர், “இப்போது அந்தளவுக்கு வசூல் வராது என்பதால் தன்னால் 15 கோடி அளவுக்குத்தான் தர முடியும்…” என்கிறாராம்.

காரணம், உலகத்தின் பல்வேறு நாடுகளிலும் சினிமா தியேட்டர்கள் இன்னமும் திறக்கப்படவில்லை என்பதுதான். இதனால் ஏற்படும் பண இழப்பினை தயாரிப்பாளர்கள்தான் ஏற்க வேண்டும் என்கிறாராம் அந்த விநியோகஸ்தர்.

இந்தப் பிரச்சினை ஒரு புறம் இருக்க. இன்னொரு பக்கம் தமிழகத்திலேயே தற்போது தியேட்டர்களில் கூட்டமே இல்லை. தினமும் மாலை, இரவு காட்சிகளை பல தியேட்டர்கள் கேன்சல் செய்து வருகின்றன. ஒற்றைப் படை இலக்கத்தில்தான் கூட்டம் வருகிறதாம்.

“இந்தக் கூட்டத்தை நம்பி நாம் எப்படி படத்தை பொங்கலுக்குக் கொண்டு வர முடியும்…?” என்று யோசிக்கிறார்கள் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர்கள்.

ஆக மொத்தத்தில், தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி, மற்றும் தியேட்டருக்கு ரசிகர்களின் வருகையும் அதிகரித்த பின்புதான் விஜய்யின் ‘மாஸ்டர்’ தியேட்டருக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

The post ‘மாஸ்டர்’ வெளியீட்டில் உருவாகியிருக்கும் பெரிய சிக்கல்..? appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் https://touringtalkies.co/master-movie-teaser/ Sat, 14 Nov 2020 12:39:07 +0000 https://touringtalkies.co/?p=10045 Master – Starring Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das Written & Directed by Lokesh Kanagaraj Produced by Xavier Britto Co-Produced by Lalit Kumar & Jagadish Palanisamy Music – Anirudh Ravichander DOP – Sathyan Sooryan Art Director – Sathees Kumar Editor – Philomin Raj Lyrics – Arunraja Kamaraj, Vigneshshivn, Vishnu […]

The post ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
Master – Starring Thalapathy Vijay, Vijay Sethupathi, Malavika Mohanan, Andrea Jeremiah, Shanthanu Bhagyaraj, Arjun Das Written & Directed by Lokesh Kanagaraj Produced by Xavier Britto Co-Produced by Lalit Kumar & Jagadish Palanisamy Music – Anirudh Ravichander DOP – Sathyan Sooryan Art Director – Sathees Kumar Editor – Philomin Raj Lyrics – Arunraja Kamaraj, Vigneshshivn, Vishnu Edavan, Arivu Stunts – Stunt Silva Choreography – Dinesh, Sathish Executive Producer – R Udayakumar Managers – KTS.Swaminathan, Balamurugan, Viswanathan, Jeyaprakash, Suresh Kanagaraj Sound Design – Sync Cinema Sound Mix – Kannan Ganpat Costume Designer – Pallavi Singh Chief Make-Up Artist – P.Nagaraj & Preethi Sheel Costumer – V.Sai DI – Igene VFX – Unifi Media DI Colorist – Ranga Publicity Design – Gopi Prasannaa Stills – Maneksha PRO – Riaz K Ahmed Music on – Sony Music Entertainment Asso. Directors – Magesh Balasubramaniam, Santhosh Krishnan, Sathya, Venki, Logi, Vishnu Edavan #MasterOfficialTeaser #ThalapathyVijay #SunTV

The post ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர் appeared first on Touring Talkies.

]]>
‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..? https://touringtalkies.co/master-movie-will-release-2021-pongal-day/ Mon, 02 Nov 2020 11:47:34 +0000 https://touringtalkies.co/?p=9612 ‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளன. தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள மற்றைய மாநிலங்களில் இருக்கும் திரையரங்குகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏகத்துக்கும் […]

The post ‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..? appeared first on Touring Talkies.

]]>
‘இளைய தளபதி’ விஜய்யின் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ படம் என்றைக்கு வெளியாகும் என்பது சஸ்பென்ஸாகவே இருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் வரும் நவம்பர் 10-ம் தேதியன்று திறக்கப்படவுள்ளன.

தமிழ்நாடு தவிர இந்தியாவில் உள்ள மற்றைய மாநிலங்களில் இருக்கும் திரையரங்குகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுவிட்டதால், இனிமேல் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் இருக்காது என்று பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏகத்துக்கும் பல பஞ்சாயத்துக்கள் திரைப்பட தயாரிப்பாளர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

இதில் மாஸ்டர்’ போன்ற மெகா பட்ஜெட் படங்களை சட்டென்று திரைக்குக் கொண்டு வருவது நிச்சயமாக முடியாத விஷயம் என்பதால், வரும் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வரவே வராது என்று உறுதியாகச் சொல்லலாம்.

அடுத்தாண்டு ஜனவரி 14-ம் தேதியன்று பொங்கல் தினத்தன்றாவது ‘மாஸ்டர்’ வெளியாகுமா என்பதும் இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது.

இதற்கிடையில் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் இன்றைக்கு அளித்துள்ள பேட்டியில், “வரும் தீபாவளிக்கு ‘மாஸ்டர்’ படம் வெளியாகாது. 2021 பொங்கலுக்கு வெளியாகுமா என்பது அப்போதைய காலச் சூழலைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும்…” என்று கூறியுள்ளார்.

ஏற்கெனவே ‘தியேட்டர்களின் திரையீட்டுக் கட்டண விவகாரத்தில் ஒரு சமூக முடிவு காணாதவரைக்கும் பெரிய பட்ஜெட் படங்களை திரையிட மாட்டோம்’ என்று ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ அறிவித்துள்ளது.

‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் இந்தச் சங்கத்தில் முக்கியமான நபராக இருப்பதால் சங்கத்தின் முடிவுக்கு அவர் நிச்சயமாகக் கட்டுப்படுவார். இதனாலேயே ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றகிறது.

தயாரிப்பாளர் இந்த நிலையில் இருந்தாலும், படத்தின் நாயகனான ‘இளைய தளபதி’ விஜய்யின் எண்ணவோட்டம் வேறாக இருக்கிறதாம்.

பொதுவாக விஜய் படத்தின் வசூலை விஜய்யின் ரசிகர்களைவிடவும் அஜீத்தின் ரசிகர்கள்தான் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். காரணம், ‘அஜீத்தின் எந்தப் படத்தின் வசூலை விஜய்யின் இந்தப் படம் தாண்டியிருக்கிறது…?’ என்றுதான் அவர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

விஜய் படமோ, அஜீத் படமோ வெளியான சில நாட்களில் டிவீட்டரிலும், முகநூலிலும் இரு தரப்பு ரசிகர்களிடையே சூடான விவாதங்கள் நடைபெறும். இரு தரப்புமே தங்களுக்கு ஆதாரமாக பல்வேறு புள்ளி விவரக் கணக்குகளைச் சொல்வார்கள்.

“தங்களது ஹீரோ நடித்த படம்தான் மிக அதிகமான ஸ்கிரீன்களில் வெளியிடப்பட்டது. மிக அதிகமான தியேட்டர்களில் வெளியானது.. முதல் நாள் வசூலில் முந்தைய படத்தை தாண்டிவிட்டது. மொத்த வசூலிலும் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது..” – இப்படி இரு தரப்பினருமே சுதந்திரப் போராட்டம் போல படத்தின் வசூல் கணக்கை வைத்து பெரும் சர்ச்சையைக் கிளப்புவார்கள்.

வசூல் ரீதியாக இது நாள்வரையிலும் பல்வேறு ரிக்கார்டுகளை தன் வசம் வைத்திருக்கும் விஜய், இப்போதைய சூழலில் மாஸ்டர்’ படம் வெளியானால் இதுவரை தான் நடித்த படங்களிலேயே மிகக் குறைவான வசூலையும், மிகக் குறைவான தியேட்டர்கள், மிகக் குறைந்த ஸ்கிரீன்கள், மிகக் குறைவான முதல் நாள் வசூல் என்று மிகப் பெரிய பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று யோசிக்கிறார்.

ஏனெனில், இந்தியா உள்பட ஒரு சில நாடுகளில் மட்டும்தான் இன்றைய தேதிவரையிலும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. உலகில் பல நாடுகளில் இன்னமும் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. அமெரிக்காவில் பல மாநிலங்களில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.

இந்தச் சூழலில் மாஸ்டர்’ படத்தை இப்போது வெளியிட்டால் திரையிடப்படும் ஸ்கிரீன்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும்.

மாஸ்டர்’ படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகியுள்ள திரைப்படம் என்பதால் மிக அதிக வசூலையும் அந்தப் படம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. இந்த நிலையில் தியேட்டர்களில் 50 சதவிகிதம் மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அரசுகளின் விதிமுறையினால் இதுவரையிலும் வந்து கொண்டிருந்த தியேட்டர் வசூலில் இந்தப் படத்திற்கு பாதிதான் கிடைக்கும் என்ற கசப்பான உண்மையும், விஜய்யை யோசிக்க வைத்திருக்கிறது.

இதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் முடிந்து உலகம் தழுவிய அளவுக்கு கொரோனாவை விரட்டிவிட்டு… அனைத்துத் தியேட்டர்களும் திறந்த பின்பு மாஸ்டர்’  படத்தை வெளியீட்டுக் கொள்ளலாம் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாராம்.

இதனாலேயே ‘மாஸ்டர்’ பற்றி எந்த முன்னேற்பாட்டையும் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தரப்பு திணறி வருகிறது.

The post ‘மாஸ்டர்’ படம் 2021 பொங்கல் தினத்தன்று வெளியாகுமா..? appeared first on Touring Talkies.

]]>