Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் பாரதிராஜா – Touring Talkies https://touringtalkies.co Sat, 16 Apr 2022 09:27:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் பாரதிராஜா – Touring Talkies https://touringtalkies.co 32 32 “சினிமாவைவிட நல்ல தொழில் உலகத்தில் வேறு எதுவும் கிடையாது” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு https://touringtalkies.co/director-bharathiraja-speech-in-aadhaar-movie-audio-function/ Sat, 16 Apr 2022 09:25:59 +0000 https://touringtalkies.co/?p=21789 நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் […]

The post “சினிமாவைவிட நல்ல தொழில் உலகத்தில் வேறு எதுவும் கிடையாது” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவருடன் இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, பூச்சி முருகன், இயக்குநர் அமீர், இயக்குநர் இரா. சரவணன், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியன், படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், நடிகர் கருணாஸ், இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான், ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பேசுகையில், ”பொதுவாக இது போன்ற நிகழ்வுகளில் நான் கலந்து கொள்ள விரும்புவதில்லை. ஆனால் தற்போது இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இது போன்ற நிகழ்வுகளில்தான் எனது சக கலைஞர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்த்தேன். அதில் கருணாஸ் கைக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு  வீதிகளில் நடக்கும்போது என் கண்களில் என்னையும் அறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது. கதை என்ன என்று முழுதாக தெரியாதிருந்தாலும் முன்னோட்டத்தை பார்க்கும்போதே கண்ணீர் வருகிறது.

இந்தச் சினிமா துறையில் நமக்கு கிடைக்கும் பேரும். புகழும் வேறு எங்கும் கிடைப்பதில்லை. சினிமா தொழில் நல்ல தொழில்தான். ஒரு தயாரிப்பின் மதிப்பு 100 ரூபாய். ஆனால் அந்தத் தயாரிப்பு 70 ரூபாய் செலவில் உருவாகிறது என்ற கவலைதான் அருண் பாண்டியனுக்கு. ஏனென்றால் அவன் தயாரிப்பாளராகவும் இருந்தவன்.

நடிகர்கள் சம்பளம் வாங்குவதை தவறென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பட தயாரிப்பில் அவர்களுடைய சம்பளம் மட்டும் எவ்வளவு பங்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தமிழ்ப் படங்களைவிட தெலுங்கு படங்களில் அண்மைக் காலமாக பிரம்மாண்டமாக பணத்தை செலவழித்து ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார்கள்.

அந்த வகையில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் தமிழ் மலையாள சினிமாக்களை விட தெலுங்கு சினிமா ஒரு படி உயர்வாகவே இருக்கிறது.

எனக்கு மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால் அதிலும் சினிமாக்காரன் ஆகவே பிறக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை…” என்றார்.நிகழ்ச்சியின் இறுதியில் படத்தின் இசைத் தட்டை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் அதைப் பெற்றுக் கொண்டனர்.

The post “சினிமாவைவிட நல்ல தொழில் உலகத்தில் வேறு எதுவும் கிடையாது” – இயக்குநர் பாரதிராஜா பேச்சு appeared first on Touring Talkies.

]]>
“வில்லன் சத்யராஜை ஹீரோவாக்கியது ஏன்..?” – இயக்குநர் பாரதிராஜா விளக்கம் https://touringtalkies.co/why-did-the-villain-sathyaraj-make-a-hero-director-bharathiraja-description/ Mon, 26 Apr 2021 15:35:42 +0000 https://touringtalkies.co/?p=14702 நடிகர் சத்யராஜை  தனது ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாதான் என்பது தமிழ்த் திரையுலகமே அறிந்ததுதான். ஆனால் இதே சத்யராஜ் தனது திரையுலக வாழ்க்கையின் துவக்கத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டுப் போனபோது, “உன் உடம்புக்கும், உசரத்துக்கும் உனக்கு வில்லன் கதாபாத்திரம்தான்யா பொருத்தமா இருக்கும்…” என்று சொல்லித் திருப்பியனுப்பிவிட்டாராம் பாரதிராஜா. அப்படி திருப்பியனுப்பப்பட்ட சத்யராஜ் எப்படி அதே பாரதிராஜாவின் படத்தில் நாயகனாக அறிமுகமானார்..? இது பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சமீபத்தில் […]

The post “வில்லன் சத்யராஜை ஹீரோவாக்கியது ஏன்..?” – இயக்குநர் பாரதிராஜா விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சத்யராஜை  தனது ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாதான் என்பது தமிழ்த் திரையுலகமே அறிந்ததுதான்.

ஆனால் இதே சத்யராஜ் தனது திரையுலக வாழ்க்கையின் துவக்கத்தில் இயக்குநர் பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டுப் போனபோது, “உன் உடம்புக்கும், உசரத்துக்கும் உனக்கு வில்லன் கதாபாத்திரம்தான்யா பொருத்தமா இருக்கும்…” என்று சொல்லித் திருப்பியனுப்பிவிட்டாராம் பாரதிராஜா.

அப்படி திருப்பியனுப்பப்பட்ட சத்யராஜ் எப்படி அதே பாரதிராஜாவின் படத்தில் நாயகனாக அறிமுகமானார்..?

இது பற்றி ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர் பேசும்போது, “1985-ம் ஆண்டு ‘முதல் மரியாதை’ திரைப்படத்தில் ஒரு சின்ன வில்லன் வேடம் இருந்தது. இதில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது அப்போதைக்கு வில்லனாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த சத்யராஜின் முகம் எனக்கு நினைவுக்கு வந்தது. உடனேயே அவரை வரவழைத்து, “சின்னக் கேரக்டர்தான். இப்போ பண்ணு. அப்புறம் நல்ல கதை கிடைத்தால் உன்னை பெரிய ஆளாக்குறேன்..” என்று சொல்லித்தான் நடிக்க வைத்தேன்.

இதற்குப் பின்பு எனது அடுத்தப் படமான ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் நாயகனாக யாரை தேர்வு செய்யலாம் என்று யோசித்தேன்.அந்தப் படத்தின் கதைப்படி, ”ஆள் பார்க்கவே வில்லன் மாதிரி இருக்கணும். ரவுடி மாதிரியிருக்கணும்.. ஆனால் ஹீரோவா தெரியவே கூடாது…” என்று யோசித்தபோது சத்யராஜ்தான் நினைவுக்கு வந்தார்.

வரச் சொல்லிப் பேசினேன். “ஸார் நான் ஹீரோவா..? என்ன ஸார் காமெடி பண்றீங்களா..? என்னை விட்ருங்க.. நான் பாட்டுக்கு ஒரு பக்கம் வில்லத்தனம் பண்ணிட்டுப் போயிர்றேன்..” என்றார். “இல்ல.. இல்ல.. இந்தக் கதைக்கு நீதான் ஷூட்டா இருப்பா. நீயே நடிச்சிரு..” என்று சொல்லி நடிக்க வைத்தேன்.

இதற்கடுத்த வருஷமே சத்யராஜ் பரபரப்பான முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாறிட்டார். அந்த அளவுக்கு நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருந்தார். இந்த நேரத்துலதான் என்கிட்ட ‘வேதம் புதிது’ என்ற கதை வந்தது.

இந்தக் கதைப்படி கொஞ்சம் நக்கலும், கிண்டலும், கேலியுமா பேசுற ஆளு தேவைன்றதால இப்பவும் எனக்கு சத்யராஜ்தான் தோணுச்சு.

மத்தவங்ககிட்ட இல்லாத ஒரு தனித்திறமை சத்யராஜ்கிட்ட இருக்குன்னா அது அவரோட கிண்டல் செய்ற தொனி. நக்கல் செய்யும் தனித்துவம்.. இதெல்லாம் மத்தவங்ககிட்ட இல்லை. இந்தப் படத்துக்கும் இதுதான் தேவைன்றதால சத்யராஜையே இதுலேயும் நடிக்க வைச்சேன்.

நான் எதிர்பார்த்ததுக்கும் மேலாக அந்த ‘பாலு தேவர்’ என்ற கதாபாத்திரத்தைத் தூக்கி சுமந்தார் சத்யராஜ். இன்றைக்கும் அந்தக் கதாபாத்திரம் தமிழகத்தில் மறக்க முடியாமல் இருக்குன்னா அதுக்குக் காரணம் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவராக இருந்த சத்யராஜ்தான்..” என்று பாராட்டியிருக்கிறார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

The post “வில்லன் சத்யராஜை ஹீரோவாக்கியது ஏன்..?” – இயக்குநர் பாரதிராஜா விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
“ரஜினி ஒரு தமிழன்தான்” – இயக்குநர் பாரதிராஜாவின் பாராட்டு..! https://touringtalkies.co/rajini-is-a-tamilan-director-bharathirajas-praise/ Wed, 30 Dec 2020 08:03:36 +0000 https://touringtalkies.co/?p=11599 ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. பல ரசிகர்கள் அவரது உடல் நிலையைக் கருத்திக் கொண்டு இதை ஏற்றுக் கொண்டாலும் சில ரசிகர்களால் இதனை ஏற்க முடியவில்லை. ஆனால், துவக்கத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வந்தவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா. ரஜினி தன்னுடைய அரசியல் பயணத்தைக் கைவிட்டதை வரவேற்று நேற்று இரவு ஒரு வீடியோ பதிவொன்றை வெளியிட்டார் ‘இயக்குநர் இமயம்’ […]

The post “ரஜினி ஒரு தமிழன்தான்” – இயக்குநர் பாரதிராஜாவின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்ததையடுத்து அவரது ரசிகர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது.

பல ரசிகர்கள் அவரது உடல் நிலையைக் கருத்திக் கொண்டு இதை ஏற்றுக் கொண்டாலும் சில ரசிகர்களால் இதனை ஏற்க முடியவில்லை.

ஆனால், துவக்கத்தில் இருந்தே ரஜினி அரசியலுக்கு வருவதை கடுமையாக எதிர்த்து வந்தவர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

ரஜினி தன்னுடைய அரசியல் பயணத்தைக் கைவிட்டதை வரவேற்று நேற்று இரவு ஒரு வீடியோ பதிவொன்றை வெளியிட்டார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

அந்தப் பதிவில் அவர் பேசியிருப்பது இதுதான் :

“இன்று பூகம்பமான ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. ரஜினி அரசியலுக்கு இப்போது வருவார், அப்போது வருவார், எப்போது வேண்டுமானாலும் வருவார் என்றெல்லாம் வதந்திகள் வெளியானபோது, கட்சியை அறிவிக்க இருந்தார்.

எனக்கு அரசியலில் நுழைவதில் உடன்பாடில்லை என்று நண்பனான ரஜினியுடன் சண்டையிட்டுள்ளேன். என் நண்பன் ரஜினிக்கு இனிமேலும் உச்சம் தேவையா..? இமயமலை உச்சிக்கு மேல் வேறொரு உச்சி இல்லை. பணம், பொருள், புகழ் அத்தனையும் வந்துவிட்டது. அதற்கு மேல் சிகரம் எதுவுமில்லை. இனிமேலும் குதித்தாலும் வேஸ்ட்டுதான்.

நீ புல்லில் நடந்தாய், பூக்களின் வாசனை முகர்ந்து நடந்தாய், உன் பாதங்கள் புனித நீரிலேயே நனைந்து வந்தன. புழுதியில் உன் கால் பதிய வேண்டுமா..?’ என்று கேட்டேன். அது அவனுக்குத் தெரியும். இதெல்லாம் காலச் சக்கரங்களில் ஓடிவிட்டது. அரசியல் சூதாட்டக் களம் என்பது வேறு. கலைஞர்களின் களம் என்பது வேறு.

என்னால் அரசியல் சூதாட்டத்தில் காய் நகர்த்த முடியாது. ஏனென்றால், மென்மையான மக்களையும், மனிதர்களையும், பூக்களையும், நதிகளையும், மேகங்களையும் ரசித்தவன். நான் உள்ளே நுழைய வேண்டுமென்றால் என் கை கறைபடிய வேண்டும். கட்சி நடத்த வேண்டுமென்றால் என் கை கறைபடிய வேண்டும். நான் அந்த மாதிரி ஆளில்லை.

மரணத்தின் போதும் என் கதை, என் உழைப்பால் நான் வாழ்ந்தேன். என் உழைப்பால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் உழைப்பில் உள்ள ஊதியத்தில் இவர்கள் என்னைப் புதைக்கப் போகிறார்கள். இதுதான் நான். இதை நான் அவனிடம் பேசினேன்.

ஹைதராபாத் படப்பிடிப்புக்குச் சென்றபோது, அங்கு 6 பேருக்குக் கரோனா. அதற்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதித்தது பெரிய விஷயமல்ல. நான் எஸ்.பி.பி.யை மருத்துவமனையில் போய் பார்த்தேன். அந்த வலி எனக்குதான் தெரியும். என் நண்பனை இழந்த வலி.

கூட இருப்பவர்கள் ஆயிரம் சொல்லலாம் அது வேறு. உன் வலி, உன் வேதனை உன் உடம்புக்கு மட்டும்தான் தெரியும். உன் மனதுக்கு மட்டும்தான் தெரியும். மருத்துவமனையில் இருக்கும்போது உன்னிடம் பேசினேன்.

எப்போதுமே அவனைத் தலைவா’ என்றுதான் கூப்பிடுவேன். “தலைவா.. நீ எட்டாத உயரமில்லை. இனியும் உனக்கு இந்த அரசியல் தேவையா..? மன நிம்மதிதான் தேவை. ஒரு பிறப்புதான். இன்னொரு பிறப்பில்லை. நீ பெரிய ஆன்மிகவாதி. கடவுள் உனக்கு அனைத்து அனுக்கிரகங்களையும் கொடுத்திருக்கிறான். இதற்கு மேல் நீ எங்கு போக முடியும். ப்ளீஸ்.. அரசியலுக்கு வருவது குறித்து யோசி…?” என்று சொன்னேன்.

அப்போது நான் அழுதேன். நீ அரசியல்வாதியாகி பெரிய ஆளாகி எல்லாம் ஒன்றுமில்லை. என் ரஜினி என் நண்பனாகக் கடைசிவரைக்கும் இருக்க வேண்டும் என்று சொன்னேன். கண்ணீருடன் சொன்னேன். அவனுக்கும் அதே உணர்வு இருந்தது. என்ன முடிவெடுப்பான் என்பது தெரியாமல் இருந்தேன்.

இப்போது ஒரு முடிவெடுத்திருக்கிறான். சரியான முடிவு. அவன் யோசிக்காமல் முடிவு எடுக்க மாட்டான். முன்பு எல்லாம் ஆரம்பிக்கப் போவது குறித்துச் சொன்னான். என்னதான் இருந்தாலும் மனிதனுக்குச் சில குழப்பங்கள் வரும். அல்டிமேட்டாக யோசிக்கும்போது முடிவு வரும். ரஜினி எடுத்த முடிவு சரியான முடிவு.

எங்கு நான் பெருமைப்பட்டேன் என்றால், ரஜினி ரசிகர்கள் உங்களை நம்பி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம். அரசியல் பயணம் வரும் என்று எதிர்பார்த்தோம். திடீரென்று கட்சி ஆரம்பிக்கவில்லை என்று கொதித்து விடுவார்களோ என நினைத்தேன்.

ஏனென்றால், அவன் வெறி பிடித்த ரசிகன். அனைவருடைய பேச்சையும் பார்த்தேன். எந்தவொரு எதிர்பார்ப்புமே இல்லாமல் பயணப்பட்டு இருக்கிறான். ரஜினி என்ன சொல்கிறாரோ அதுதான். எங்களுக்கு அவருடைய உயிர் முக்கியம், உடல் முக்கியம் என்றான். அவருடைய ரசிகர்களுக்குப் பாராட்டுகள். அப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைத்திருப்பது பெரிய விஷயம்.

ஆன்மிகத்தின் உச்சத்தில் நீ ஜெயித்துள்ளாய். நல்ல முடிவு எடுத்திருக்கிறாய் ரஜினி. ஐ லவ் யூ. நீ எந்த மொழிக்கும் சொந்தக்காரன் அல்ல. தமிழக மக்கள் உன்னை விரும்பினார்கள். நீ மராட்டியன் அல்ல, நீ கன்னடன் அல்ல, நீ தமிழன். அதை இப்போது ஒப்புக் கொள்வேன்.

நான் முதல்வராக வர மாட்டேன் என்று சொன்னாய், தமிழன்தான் வருவான் என்று சொன்னதற்கு கை தட்டினேன். உனக்காக வேண்டிக் கொள்கிறேன். 3 நாளுக்கு முன்னால் உனக்காகக் கோயிலுக்குச் சென்று வேண்டினேன். போன் பண்ணினேன். அழுது கொண்டே பேசினேன்.

ஏனென்றால், நீ எனக்கொரு நல்ல நண்பன். இது ஒரு சாக்கடை. நீ இங்கிருந்தே மக்களுக்கு நல்லது செய்யலாம். யாருடைய சொல்லையும் கேட்காமல், தனித்த முடிவு எடுப்பதில் நீ தலைவன். கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அந்த முரட்டுத்தனத்தில் எடுத்த முடிவை வரவேற்கிறேன்.

யார் என்ன சொன்னாலும் கேட்க வேண்டாம். நீ முக்கியம், உன் உயிர் முக்கியம், உன் உணர்வு முக்கியம். இந்த ரசிகர்களுக்கு நீ முக்கியம்…”

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

The post “ரஜினி ஒரு தமிழன்தான்” – இயக்குநர் பாரதிராஜாவின் பாராட்டு..! appeared first on Touring Talkies.

]]>
சாதாரண குமரேசன் நடிகர் நெப்போலியனாக மாறியது எப்படி..? https://touringtalkies.co/how-did-the-ordinary-kumerasan-to-become-actor-napoleon/ Tue, 22 Dec 2020 05:01:20 +0000 https://touringtalkies.co/?p=11324 நடிகர் நெப்போலியனின் இயற்பெயர் ‘குமரசேன்’ என்பது தற்போதைய சினிமா ரசிகர்களுக்குத் தெரியாத ஒன்று. அவருடைய இயற் பெயர் எப்படி சினிமாவில் ‘நெப்போலியனாக’ மாறியது என்ற சுவாரசியமான விஷயத்தை அவரே சொல்கிறார். “நான் அறிமுகமான ‘புது நெல்லு புது நாத்து’ படத்துல வில்லன் கேரக்டர்ல வயசான ஆளா நடிச்சேன். ஆனால் அப்போ எனக்கு வயசு வெறும் 27தான். ஆனாலும் நடிப்பு மீது எனக்கிருந்த ஆர்வத்தால் நான் நடித்தேன். நடித்து முடித்து படம் வெளியாக இருக்கும்போது என் குருநாதர் பாரதிராஜா […]

The post சாதாரண குமரேசன் நடிகர் நெப்போலியனாக மாறியது எப்படி..? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் நெப்போலியனின் இயற்பெயர் ‘குமரசேன்’ என்பது தற்போதைய சினிமா ரசிகர்களுக்குத் தெரியாத ஒன்று.

அவருடைய இயற் பெயர் எப்படி சினிமாவில் ‘நெப்போலியனாக’ மாறியது என்ற சுவாரசியமான விஷயத்தை அவரே சொல்கிறார்.

“நான் அறிமுகமான ‘புது நெல்லு புது நாத்து’ படத்துல வில்லன் கேரக்டர்ல வயசான ஆளா நடிச்சேன். ஆனால் அப்போ எனக்கு வயசு வெறும் 27தான். ஆனாலும் நடிப்பு மீது எனக்கிருந்த ஆர்வத்தால் நான் நடித்தேன்.

நடித்து முடித்து படம் வெளியாக இருக்கும்போது என் குருநாதர் பாரதிராஜா என்னைக் கூப்பிட்டு “உனக்கு வேற பேர் வைக்கலாம்ன்னு இருக்கேன். நீயே ஒரு பத்து பேரை எழுதிட்டு வா.. அதில இருந்து நான் ஒரு பேரை செலக்ட் செய்றேன்…” என்றார்.

நானும் எனக்குப் பிடிச்ச பத்து பெயர்களை எழுதிட்டு்ப் போய் அவர்கிட்ட கொடுத்தேன். எதுவுமே அவருக்குப் பிடிக்கலை. “உன் உருவத்துக்கும், உசரத்துக்கும் பொருத்தமா இருக்கணும்ய்யா.. அப்படியொரு பேரா வைக்கணும்.. சரி.. நானே யோசிக்கிறேன்…” என்றார்.

திடீர்ன்னு பட ரிலீஸுக்கு 2 நாள் முன்னாடி திரும்பவும் ஆபீஸுக்கு வரச் சொன்னார். நான் போனவுடனேயே “உனக்கு ‘நெப்போலியன்’னு பேர் வைக்கிறேன்”னார் பாரதிராஜா. ஏதோ மதுபான பிராண்ட் மாதிரி இருக்கேன்னு பீல் செஞ்சேன். ஆனால், பாரதிராஜா இதில் உறுதியாக இருந்தார். நானும் நமக்கு ஒரு கெத்தா.. நம்ம உருவத்துக்குத் தகுந்தாப்புல இருக்கேன்னு விட்டுட்டேன்.

அன்னிக்கு ஆரம்பிச்சு தென்னிந்திய மொழிகள்ல எல்லாத்துலேயும் படம் பண்ணிட்டேன். கடைசியா இப்போ ஹாலிவுட்லகூட 4 படத்துல நடிச்சிட்டேன். இது எனக்குப் பெருமைதானே…?!” என்றார்.

The post சாதாரண குமரேசன் நடிகர் நெப்போலியனாக மாறியது எப்படி..? appeared first on Touring Talkies.

]]>
“சினிமாக்காரனை தலையில் தூக்கி வைச்சு ஆடாதே….” – ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அறிவுரை..! https://touringtalkies.co/director-bharathirajas-advise-to-tamil-peoples/ Fri, 04 Dec 2020 04:50:21 +0000 https://touringtalkies.co/?p=10680 ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சி அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமருமா என்ற வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவோ, “சினிமாக்காரனை தலையில் தூக்கி வைச்சு ஆடாதே…” என்று தனது இனிய தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்கிறார். “நான் பிறந்த மண்ணுக்கு அடிக்கடி விசேஷத்துல கலந்துக்கப் போயிட்டு வருவேன். அப்போலாம் விசேஷ வீட்டு வாசல்கள்ல பெரிய, பெரிய கட் அவுட், ஃப்ளெக்ஸ் போர்டுகள்ல, யாராச்சும் ஒரு சினிமா நடிகன் சிரிச்சுட்டு […]

The post “சினிமாக்காரனை தலையில் தூக்கி வைச்சு ஆடாதே….” – ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி ஆரம்பிக்கப் போகும் கட்சி அடுத்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமருமா என்ற வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவோ, “சினிமாக்காரனை தலையில் தூக்கி வைச்சு ஆடாதே…” என்று தனது இனிய தமிழ் மக்களுக்கு அறிவுரை சொல்கிறார்.

“நான் பிறந்த மண்ணுக்கு அடிக்கடி விசேஷத்துல கலந்துக்கப் போயிட்டு வருவேன். அப்போலாம் விசேஷ வீட்டு வாசல்கள்ல பெரிய, பெரிய கட் அவுட், ஃப்ளெக்ஸ் போர்டுகள்ல, யாராச்சும் ஒரு சினிமா நடிகன் சிரிச்சுட்டு நிப்பான்.

எனக்கு ஆச்சரியமா இருக்கும். `அட… கல்யாணப் பொண்ணுக்குத் தாய் மாமன் சினிமால நடிச்சுட்டு இருக்கான்போல. நமக்குத் தெரியாமப் போச்சே’னு நொந்துக்குவேன்.

உங்க அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி போட்டோவைப் போட்டு பேனர் வைங்க. நான் கை தட்டுறேன். ஏன், நீ சினிமா நடிகனைக் கொண்டாடுற..? அப்புறம் நீ திண்டாடுறப்ப, `அவன் எனக்கு எதுவும் பண்ணலை’னு குத்தம் சொல்லுற..?

என் இனிய தமிழ் மக்களே… சினிமாக்காரங்க தன் தொழில்ல தெளிவா இருப்பாங்க. வேலையில் சின்சியரா இருப்பாங்க. அதைத் தாண்டி அவங்ககிட்ட எதையும் எதிர்பார்க்கக் கூடாதுங்கிற உண்மையை, பாவப்பட்ட தமிழன் என்னைக்குப் புரிஞ்சுக்கிறானோ… அன்னைக்குத்தான் அவனுக்கு விடிவு காலம் பிறக்கும்!” என்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

The post “சினிமாக்காரனை தலையில் தூக்கி வைச்சு ஆடாதே….” – ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அறிவுரை..! appeared first on Touring Talkies.

]]>
விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..! https://touringtalkies.co/actor-kamalhasan-worked-as-assistant-director-in-tik-tik-tik-shooting-spot/ Thu, 03 Dec 2020 12:30:47 +0000 https://touringtalkies.co/?p=10660 “உலக நாயகன்’ கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதால் வெறுமனே நடிகராக மட்டுமே நின்று கொள்வார் என்பதெல்லாம் இல்லவே இல்லை. கடைசி உதவி இயக்குநராகக்கூட அவர் வேலை செய்வார். எந்த ஈகோவும் இல்லாமல் என் படங்களில் அந்த வேலையைப் பார்த்திருக்கிறார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முன்பே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். “பாரதிராஜா சொன்னது உண்மைதான்” என்கிறார்கள் ‘இயக்குநர் இமய’த்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய இயக்குநர்கள் மனோபாலாவும், கே.ரங்கராஜூம். ‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பின்போது ‘இயக்குநர் […]

The post விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..! appeared first on Touring Talkies.

]]>
“உலக நாயகன்’ கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார் என்பதால் வெறுமனே நடிகராக மட்டுமே நின்று கொள்வார் என்பதெல்லாம் இல்லவே இல்லை.

கடைசி உதவி இயக்குநராகக்கூட அவர் வேலை செய்வார். எந்த ஈகோவும் இல்லாமல் என் படங்களில் அந்த வேலையைப் பார்த்திருக்கிறார்…” என்று ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா முன்பே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

“பாரதிராஜா சொன்னது உண்மைதான்” என்கிறார்கள் ‘இயக்குநர் இமய’த்திடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிய இயக்குநர்கள் மனோபாலாவும், கே.ரங்கராஜூம்.

‘டிக் டிக் டிக்’ படத்தின் படப்பிடிப்பின்போது ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிடம் உதவியாளர்களாக இருந்த நால்வர் சித்ரா லட்சுமணன், மனோபாலா, கே.ரங்கராஜ், மணிவண்ணன்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு இரவு, பகலாக தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. கொஞ்சம்கூட ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்ததால் மிகவும் களைத்துப் போன நிலைமையில் மனோபாலா, கே.ரங்கராஜ், மணிவண்ணன் மூவரும் இருந்துள்ளனர்.

ஒரு நாள் இரவு ஷூட்டிங்கின்போது மனோபாலா கே.ரங்கராஜிடம் “என் வேலையையும் நீயே பார்த்துக்க.. கொஞ்ச நேரம் தூங்கிட்டு வர்றேன்.. ரொம்ப டயர்டா இருக்கு…” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

சிறிது நேரம் கழித்து கே.ரங்கராஜ், மணிவண்ணனிடம் இதையே சொல்லிவிட்டு அவரும் தூங்கப் போயிருக்கிறார். மணிவண்ணன் அடுத்து இருந்த கடைசி அஸிஸ்டெண்ட்டான சித்ரா லட்சுமணனிடம் “கொஞ்சம் நீ பார்த்துக்க” என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.

மிகுந்த களைப்பில் இருந்த இந்த மூவரும் ஒரே காருக்குள் தஞ்சம் புகுந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே ஷூட்டிங் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்போது விடிய விடிய நடந்த அந்த ஷூட்டிங்கின்போது நடிகர் கமல்ஹாசனே கவுரவம் பார்க்காமல் ஒவ்வொரு ஷாட்டுக்கும் கிளாப் அடித்திருக்கிறார்.

விடியற்காலை பொழுதில் இந்த மூவர் கூட்டணி மெல்ல, மெல்ல ஸ்பாட்டுக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இயக்குநர் இமயம் பாரதிராஜா அன்றைக்கு நல்ல மூடில் இருந்ததால் திட்டு வாங்காமல் தப்பித்தார்களாம்..!

இது எல்லாவற்றையும்விட படத்தின் நாயகனாக நடித்துக் கொண்டே கிளாப்பும் அடித்து உதவியிருக்கும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு ஒரு ‘ஜே‘ போடலாம் என்றுதான் தோன்றுகிறது.

The post விடிய, விடிய கிளாப் அடித்த கமல்ஹாசன்..! appeared first on Touring Talkies.

]]>
“சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் ஒரு மிகச் சிறந்த நடிகை” – பாரதிராஜாவின் பாராட்டு https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/ Sat, 28 Nov 2020 03:08:08 +0000 https://touringtalkies.co/?p=10452 “16 வயதினிலே” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா தயாரிப்பாளரான முதல் திரைப்படம் “புதிய வார்ப்புகள்”. அதற்கு வித்திட்டவர் பாரதிராஜாவின் காட்பாதரான கேஆர்ஜி. பாரதிராஜாவிடம் “நீ சொந்தப் படம் எடு”என்று அவர் சொன்னபோது “நானா சொந்தப் படமா?” என்று அதிர்ச்சியோடு அவரிடம் கேள்வி கேட்டவர்தான் பாரதிராஜா. “படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு எக்கச்சக்கமாக பணம் வேண்டுமே.. அது என்கிட்ட எங்க இருக்கு..?” என்று பாரதிராஜா கேட்டபோது, “நீ உன் பெயரைப் போட்டு ஒரு கால் பக்கம் தினத்தந்தி […]

The post “சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் ஒரு மிகச் சிறந்த நடிகை” – பாரதிராஜாவின் பாராட்டு appeared first on Touring Talkies.

]]>
“16 வயதினிலே” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா தயாரிப்பாளரான முதல் திரைப்படம் “புதிய வார்ப்புகள்”. அதற்கு வித்திட்டவர் பாரதிராஜாவின் காட்பாதரான கேஆர்ஜி. பாரதிராஜாவிடம் “நீ சொந்தப் படம் எடு”என்று அவர் சொன்னபோது “நானா சொந்தப் படமா?” என்று அதிர்ச்சியோடு அவரிடம் கேள்வி கேட்டவர்தான் பாரதிராஜா.

“படம் எடுக்க வேண்டுமென்றால் அதற்கு எக்கச்சக்கமாக பணம் வேண்டுமே.. அது என்கிட்ட எங்க இருக்கு..?” என்று பாரதிராஜா கேட்டபோது, “நீ உன் பெயரைப் போட்டு ஒரு கால் பக்கம் தினத்தந்தி பத்திரிகையில் விளம்பரம் கொடு. அப்புறம் என்ன நடக்குதுன்னு பாரு..?” என்று அவருக்கு அறிவுரை கூறியதோடு நிற்காமல், தன் கையில் இருந்து 5,000 ரூபாயை பாரதிராஜாவிடம் கொடுத்த கே.ஆர்.ஜி. “இதை வைத்துக்கொண்டு படத்துக்கு முதல்ல பூஜை போடு” என்றார்.

அப்படி ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம்தான் பாக்யராஜ் கதாநாயகனாக அறிமுகமான “புதிய வார்ப்புகள்” திரைப்படம். அந்தப் படத்தில்தான் ரதி அக்னிஹோத்ரி கதாநாயகியாக அறிமுகமானார்.

சிம்புவின் தாயான உஷா ராஜேந்தரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நடிக்கின்ற வாய்ப்பை உஷாவுக்கு வழங்கினார்.

உஷாவின் நடிப்பாற்றலைப் பற்றி குறிப்பிடும் போது”அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு உணர்ச்சிமயமான காட்சியில் நடிப்பில் பின்னி எடுத்துவிட்டார் உஷா…” என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பாரதிராஜா.

The post “சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் ஒரு மிகச் சிறந்த நடிகை” – பாரதிராஜாவின் பாராட்டு appeared first on Touring Talkies.

]]>
‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார். https://touringtalkies.co/director-bharathiraja-released-chasing-movie-poster/ Wed, 11 Nov 2020 06:06:49 +0000 https://touringtalkies.co/?p=9932 ஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி தயாரித்துள்ள திரைப்படம் ‘சேஸிங்’. இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன்,  பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலர்   நடித்துள்ளனர். தயாரிப்பாளரான  மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தில் வில்லனாக  நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்  சண்டை காட்சிகளில்  டூப்  போடாமல்  நடித்துள்ளார். இசை – தஷி, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – பொன் பார்த்திபன்,  எழுத்து — இயக்கம்  […]

The post ‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார். appeared first on Touring Talkies.

]]>
ஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி தயாரித்துள்ள திரைப்படம் சேஸிங்’.

இப்படத்தில்  வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன்,  பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலர்   நடித்துள்ளனர்.

தயாரிப்பாளரான  மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தில் வில்லனாக  நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார்  சண்டை காட்சிகளில்  டூப்  போடாமல்  நடித்துள்ளார்.

இசை – தஷி, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – பொன் பார்த்திபன்,  எழுத்து — இயக்கம்  k.வீரக்குமார்.

இப்படம் ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் 70 சதவீதம் மலேசியாவில் படமாக்கப்பட்டது.

விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் போஸ்டர் வீடியோவை இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று வெளியிட்டார். படத்தின் போஸ்டர் வீடியோவை பார்த்தவர் மிகச் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று படக் குழுவினரை வாழ்த்தினார்.

The post ‘சேஸிங்’ படத்தின் போஸ்டரை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா வெளியிட்டார். appeared first on Touring Talkies.

]]>
திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! https://touringtalkies.co/new-tamil-movies-will-release-on-coming-deepavali-day-2/ Tue, 10 Nov 2020 09:48:45 +0000 https://touringtalkies.co/?p=9903 தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன. வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது. இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன. பின்பு […]

The post திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன.

வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது.

இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன.

பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன.

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து சற்று நேரத்திற்கு முன்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான்.

VPF சம்மந்தமான எங்கள் சங்கத்தின்  நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில் ‘ஆடு நனைகிறதே என ஓநாய்’ அழுத கதையாக, டிஜிட்டல் புரொஜெக்சன்  நிறுவனங்கள் திடீரென்று ‘VPF கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு ரத்து’ என அறிவித்து இருக்கின்றன. நல்லது..!

திரையரங்கங்களுடன் எங்களுக்கு பங்காளி சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல.

பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் தற்போது VPF கட்டணத்தை விலக்கியிருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்கு பயன்படும் பட்சத்தில் இதை எங்களது சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்களில் மட்டும் எங்களது திரைப்படங்களை திரையிட முடிவு செய்துள்ளோம்.

அதேசமயம் VPF கட்டணத்தைக் கட்டி படங்களை திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இப்போதும் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல, நிலையான ஒரு தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்…” என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால் தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் நீங்கியிருக்கின்றன.

தயாராகி வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படங்களில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’, ‘இரண்டாம் குத்து’, ‘களத்தில் சந்திப்போம்’,’ எம்.ஜி.ஆர். மகன்’ ஆகியவை தீபாவளி ரேஸில் உள்ளன.

இவற்றில் எந்தெந்த படங்கள் வெளியாகும் என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்..!

The post திடீர் திருப்பம் – தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாகும்..! appeared first on Touring Talkies.

]]>
“என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..” https://touringtalkies.co/nizhalgal-ravi-interview-about-manvasanai-movie/ Fri, 06 Nov 2020 10:54:55 +0000 https://touringtalkies.co/?p=9773 ‘நிழல்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நிழல்கள் ரவி, “தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ‘மண் வாசனை’ திரைப்படம்தான்…” என்கிறார். இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார். “1989-ல் ‘நிழல்கள்’ படத்தில் நான் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு தமிழில் அதிகமாக எனக்குப் படங்கள் வரவில்லை. அதனால் மலையாளத்தில் நடிக்கத் துவங்கினேன். மலையாளத்தில் நான் நடித்த முதல் படம் ஹிட்டானதால் தொடர்ந்து எனக்கு அங்கே வாய்ப்புகள் […]

The post “என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..” appeared first on Touring Talkies.

]]>
‘நிழல்கள்’ படத்தில் நாயகனாக அறிமுகமான நடிகர் நிழல்கள் ரவி, “தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையாக இருந்தது ‘மண் வாசனை’ திரைப்படம்தான்…” என்கிறார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

“1989-ல் ‘நிழல்கள்’ படத்தில் நான் அறிமுகமானாலும் அதற்குப் பிறகு தமிழில் அதிகமாக எனக்குப் படங்கள் வரவில்லை. அதனால் மலையாளத்தில் நடிக்கத் துவங்கினேன். மலையாளத்தில் நான் நடித்த முதல் படம் ஹிட்டானதால் தொடர்ந்து எனக்கு அங்கே வாய்ப்புகள் கிடைத்தது.

1981, 1982, 1983-ம் ஆண்டுகளில் அதிகமாக கேரளாவில்தான் நான் இருந்தேன். அதிகமான மலையாளப் படங்களில் நடித்து வந்தாலும், தமிழில் நம்மை நடிக்க யாரும் கூப்பிடவில்லையே என்ற ஏக்கம் எனக்குள் இருந்து கொண்டேயிருந்தது.

இந்த நேரத்தில்தான் ஒரு நாள் நான் கோயம்புத்தூரில் எனது வீட்டில் இருந்தேன். அப்போது எனக்கு ஒரு போன் வந்தது. இயக்குநர் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் என்னை போனில் அழைத்து பாரதிராஜா என்னை உடனே தேனிக்குக் கிளம்பி வரச் சொல்வதாகச் சொன்னார்.

உடனேயே கிளம்பி குரங்கு குல்லா அணிந்து கொண்டு ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் பயணித்து ஒரு வழியாக தேனிக்கு வந்து சேர்ந்தேன். அங்கே ‘மண்வாசனை’ படப்பிடிப்பை நடத்தக் கொண்டிருந்தார் இயக்குநர் பாரதிராஜா.

மறுநாளே ஷூட்டிங். என்னுடைய கதாபாத்திரம் எனக்கே மிகவும் பிடித்திருந்தது. அழகு தமிழில், கவிதை நடையில் பேச வேண்டிய வசனங்களை எனக்குத் தந்திருந்தார் இயக்குநர்.

அந்தப் படத்தின் டப்பிங்கின்போது நான் நடித்தக் காட்சிகளைப் பார்த்தபோது எனக்கே பிரமிப்பாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்தபோது மிக ஏமாற்றமாகிவிட்டது. நான் நடித்த பல காட்சிகளை வெட்டிவிட்டதால் அங்கொன்றும், இங்கொன்றுமாக சில காட்சிகளே இருந்தன.

அன்றைக்கு ராத்திரி ரூமுக்கு வந்து குமுறி, குமுறி அழுதேன். நம்ம இயக்குநரே இப்படி செஞ்சுட்டாரேன்னு நினைச்சு அழுதேன்.. ஆனாலும் மறுநாள் சத்யம் தியேட்டரில் இந்தப் படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தபோது அகமகிழ்ந்தேன். ஏன்னா.. படத்தில் நான் வருகிறன்ற காட்சிகளிலெல்லாம் கை தட்டல்கள் பறந்தன. அந்தக் கை தட்டல்களே என் கண்ணீரைத் துடைத்தன.

இந்தப் பட வெளியீட்டுக்குப் பின்புதான் எனக்கு மளமளவென்று படங்கள் வந்து குவிந்தன. நானும் ஒரு பிஸியான ஆர்ட்டிஸ்ட்டா மாறினேன். அதுக்குக் காரணம் அந்த ‘மண்வாசனை’ படம்தான்..” என்றார் நிழல்கள் ரவி.

The post “என் சினிமா வாழ்க்கைக்கு திருப்பு முனையாக இருந்தது ‘மண்வாசனை’ படம்தான்..” appeared first on Touring Talkies.

]]>