Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
இயக்குநர் சற்குணம் – Touring Talkies https://touringtalkies.co Thu, 10 Nov 2022 15:38:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png இயக்குநர் சற்குணம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’! https://touringtalkies.co/pattathu-arasan-movie-news/ Thu, 10 Nov 2022 15:38:11 +0000 https://touringtalkies.co/?p=26909 பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த […]

The post சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’! appeared first on Touring Talkies.

]]>
பலதரப்பட்ட வித்தியாசமான கருப்பொருள்கள் மற்றும் கதைக்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிப்பதன் மூலம் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது உலகளவில் தொடர்ந்து தன்னுடைய கவனத்தை நிலைநாட்டி வரக்கூடிய லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து தன்னுடைய புதிய படமான அதர்வா நடிப்பில் ‘பட்டத்து அரசன்’ திரைப்படத்தை அறிவிக்க உள்ளது. ’சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் சற்குணத்துடன் இரண்டாவது முறையாக இணைகிறார்.

ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய அடுத்த உயரத்தை அடைகிறர் அதர்வா முரளி. அந்த வகையில் அவருடைய சமீபத்திய ஆக்‌ஷன் திரைப்படமான ’ட்ரிகர்’ மற்றும் அவருடைய அடுத்தடுத்தப் படங்கள் வணிக வர்த்தகத்தில் நம்பிக்கை ஊட்டும் விதமாக அமைந்திருக்கிறது.நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘பட்டத்து அரசன்’ திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆடு பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பங்கள் பார்க்கும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டான கதையாக நிச்சயம் இது இருக்கும்.

தொழில்நுட்பக் குழு விவரம்:

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,
எடிட்டிங்: ராஜா முகமது,
கலை இயக்கம்: ஆண்டனி,
பாடல் வரிகள்: விவேகா- மணி, அமுதவன். A, சற்குணம்,
ஆடை வடிவமைப்பு: நடராஜ்,
ஒப்பனை: சசி குமார்,
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,
நடனம்: பாபி ஆண்டனி- ஷெரிஃப்,
தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,
படங்கள்: மூர்த்தி மெளலி,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: சுப்பு நாராயணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)
லைகா புரொடக்‌ஷனின் தலைமை G.K.M. தமிழ்க்குமரன் இந்தப் படத்தை மேற்பார்வை பார்க்கிறார்.

The post சற்குணம் இயக்கத்தில் அதர்வா முரளி நடிக்கும் ‘பட்டத்து அரசன்’! appeared first on Touring Talkies.

]]>
‘சூ மந்திரக்காளி’ படம் செப்டம்பர் 24-ல் வெளியாகிறது https://touringtalkies.co/choo-mandirakaali-movie-release-on-september-24/ Sun, 19 Sep 2021 10:39:09 +0000 https://touringtalkies.co/?p=18123 பிரபல இயக்குநரான சற்குணம் வழங்கும் நகைச்சுவை திரைப்படம் ‘சூ மந்திரகாளி’ செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.ஶ்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்து, இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை, ஒளிப்பதிவு – முகமது பர்ஹான், பாடல்கள் இசை – சதிஷ் […]

The post ‘சூ மந்திரக்காளி’ படம் செப்டம்பர் 24-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>
பிரபல இயக்குரான சற்குணம் வழங்கும் நகைச்சுவை திரைப்படம் ‘சூ மந்திரகாளி’ செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

அன்னம் மிடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் அன்னக்கிளி வேலு இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் புதுமுகமான கார்த்திகேயன் வேலு கதாநாயகனாக நடிக்க சஞ்சனா புர்லி கதாநாயகியாக நடித்துள்ளார். உடன் கிஷோர் தேவ், முகில், கோவிந்த் மாயோன், V.்ரீதர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஈஸ்வர் கொற்றவை, ஒளிப்பதிவு – முகமது பர்ஹான், பாடல்கள் இசை – சதிஷ் ரகுநாதன், பின்னணி இசை – நவிப் முருகன், கலை இயக்கம் – J.K.ஆண்டனி, படத் தொகுப்பு – கோகுல், நடன இயக்கம் – தீனா, சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM).

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஈஸ்வர் கொற்றவை பேசும்போது, “சேலத்தில் பங்காளியூர்’ என்ற கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மற்றவர் மீது பொறாமை பிடித்தால் ஒருவரை ஒருவர் பில்லி சூனியம் வைத்து கெடுப்பதுதான் இவர்களது வேலை.

படத்தின் கதாநாயகன் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்துவதற்காக அவர்கள் பாணியிலேயே பில்லி-சூனியம் செய்பவரை அழைத்து வர உள்ள பில்லி சூனியம் வைப்பதை மட்டுமே தொழிலாக கொண்ட கொல்லிமலையில் உள்ள சிங்கப்பூர் என்ற கிராமத்திற்கு செல்கிறான்.

அங்கு மிகவும் சக்தி வாய்ந்த அழகாக பதுமையாக இருக்கும் கதாநாயகியை பார்த்ததும் காதல் துளிர்விட, அவளை காதலித்து தனது கிராமத்திற்கு அழைத்து சென்றால் தனது பங்காளிகளை திருத்தலாம் என திட்டம் தீட்டுகிறான்.

ஆனால் பங்காளியூர் மக்கள் இவ்வளவு அழகான பெண்ணை காதலிக்கும் கதாநாயகன் மீது கொண்ட பொறாமையால் அவர்களது காதலுக்கு தடைகளை ஏற்படுத்த இறுதியில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததா..? பங்காளியூர் திருந்தியதா..? என்பதை நகைச்சுவையாக சொல்லும் படமே இந்த ‘சூ மந்திரகாளி’ திரைப்படம்..” என்றார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெயிலர் சினிமா ரசிகர்களின் பெரும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

பிரபல இயக்குநரான சற்குணம் தனது வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தப் படத்தை வெளியிடுகிறார். வரும் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘சூ மந்திரகாளி.’

The post ‘சூ மந்திரக்காளி’ படம் செப்டம்பர் 24-ல் வெளியாகிறது appeared first on Touring Talkies.

]]>