Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஆர்.ஜே.பாலாஜி – Touring Talkies https://touringtalkies.co Sat, 12 Nov 2022 08:53:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஆர்.ஜே.பாலாஜி – Touring Talkies https://touringtalkies.co 32 32 கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் https://touringtalkies.co/singapore-saloon-movie-preview-news/ Sat, 12 Nov 2022 08:52:56 +0000 https://touringtalkies.co/?p=26989 வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம். நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் […]

The post கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர். ஐசரி கே கணேஷ் வழங்கும் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம்.

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி ’எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய மூன்று படங்கள் மூலம் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைக் கொடுத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தக வட்டத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் டாக்டர் ஐசரி கே கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ’சிங்கப்பூர் சலூன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் இணைந்திருக்கிறார்.

இந்த வெற்றிகரமான கூட்டணியில் புதிய இயக்குநர் இணைந்திருப்பது சுவாரஸ்யம் தரக் கூடிய ஒன்று. வழக்கமாக ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை/ உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை ஆர்.ஜே. பாலாஜி- டாக்டர் ஐசரி கே.கணேஷ், இணை இயக்குநர் கோகுலுடன் (ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா புகழ் இயக்குநர்) இணைந்திருக்கிறது. நிச்சயமாக இந்தக் கூட்டணி பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான ஒரு கதையைத் தரும்.

ஆர்.ஜே. பாலாஜி இதற்கு முன்பு தான் நடித்திருந்த படங்களின் வெற்றி மூலம் வர்த்தக வட்டாரத்தில் நல்லதொரு வசூல் செய்து வியாபாரம் கொடுத்திருக்கிறார். அதேபோல, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலும் அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது.

இப்போது, சினிமா ரசிகர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு இயக்குநரான கோகுலுடன் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் இந்தக் கூட்டணி இணைந்திருப்பது பார்வையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம், முக்கிய கதாபாத்திரத்தில் பல முக்கிய நடிகர்கள் நடிக்கக் கூடிய மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் அடுத்த வருடம் அதாவது 2023 கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது.

The post கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் appeared first on Touring Talkies.

]]>
‘மக்கள் இயக்குநர்கள்’ பட்டம் பெற்ற இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி https://touringtalkies.co/p-vasu-k-s-ravikumar-sundar-c-gets-makkal-iyakkunargal-award/ Sat, 11 Jun 2022 14:07:35 +0000 https://touringtalkies.co/?p=22618 Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் திரைப்படம் ‘வீட்ல விசேஷம்.’ பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். RJ.பாலாஜி – N.J.சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். இத்திரைப்படம் வரும் ஜூன் […]

The post ‘மக்கள் இயக்குநர்கள்’ பட்டம் பெற்ற இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி appeared first on Touring Talkies.

]]>
Zee Studios & BayView Projects நிறுவனங்களுடன்  Romeo Pictures இணைந்து தயாரிக்கும் போனி கபூர் வழங்கும் திரைப்படம் வீட்ல விசேஷம்.’

பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த இந்தி திரைப்படமான ‘பதாய் ஹோ’வின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்கான இந்தப் படத்தில் RJ.பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, KPAC லலிதா, பவித்ரா லோகேஷ், விஸ்வேஷ் மற்றும் பல முன்னணி  நடிகர்கள் நடித்துள்ளனர். RJ.பாலாஜி – N.J.சரவணன் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, ஆடியோ விஷேசம்’ என்ற பெயரில் நேற்று மாலை சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது.

இந்த விழாவில் கமர்சியல் பார்முலா சினிமாவில் மக்களை மகிழ்வித்தும், வணிக ரீதியாக பெறும் வெற்றியடைந்த திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி வரும் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி, பி.வாசு ஆகிய இயக்குநர்களுக்கு ‘மக்கள் இயக்குநர்‘ என்ற பட்டம் கொடுத்து படக் குழுவினர் கௌரவித்தனர்.

இவ்விழாவினில் இயக்குநர் பி.வாசு பேசும்போது, “குடும்பங்களை சென்றடையும் படங்களை அதன் பாணியில் புரோமோஷன் செய்கிறார் பாலாஜி. இது போன்ற படத்திற்கு தயாரிப்பாளரும், அதற்கு உயிர் கொடுக்கும் நடிகர்கள் மட்டும் கிடைத்துவிட்டால்போதும், படம் உயிர்பெற்றுவிடும்.

ஒரு படத்திற்கு பிளானிங் என்பது முக்கியமான விஷயம். படத்தின் அனைத்து கூறுகளையும் மனதில் வைத்து படத்தை திட்டமிட்டு எடுக்க வேண்டும்.

இந்தப் படத்தில் நடிப்பு ராட்சசி’ நடிகை ஊர்வசி நடித்துள்ளார். ஊர்வசி தன்னுடன் நடிக்கும் அனைத்து நடிகர்களின் வசனங்களையும் மனதில் வைத்து அதற்கேற்றார் போல், மற்றவர்களுக்கும் உதவுவார். அத்தோடு சரியாக ரியாக்ட்டும் செய்வார்.

எனக்கு மிகவும் பிடித்தமான சத்யராஜூம் இதில் நடித்துள்ளார். சத்யராஜ் நடிப்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து, பெரிய அர்ப்பணிப்புடன் வேலை செய்வார். அதனால்தான் அவருடைய பல கதாபாத்திரங்கள் இப்போதும் நின்று பேசுகின்றன.

தமிழகத்திற்கு வந்து இது போன்ற படங்களை தயாரிக்கும் போனி கபூருக்கு நன்றி.  இந்த படத்தின் வெற்றி எங்கள் படத்தைவிட மிகப் பெரிய வெற்றியாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்…“ என்றார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “நாங்கள் எடுத்த பழைய படங்களை நியாபகம் வைத்து எங்களை அழைத்தது படக் குழுவின் பெருந்தன்மை. பாலாஜியின் உழைப்பு மிகப் பெரியது. பல படங்களில் காமெடியனாக நடித்து, பின்னர் ஹீரோவாகி, தற்போது இயக்குநராகவும் மாறியுள்ளார். ஒரு கதையை பார்வையாளர்களுக்கு எப்படி சொன்னால் பிடிக்கும் என்பதை தெரிந்து செய்பவர் பாலாஜி.

இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை பல நாள் முன்னாடி நான் கேட்டிருந்தேன், ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை. இந்தப் படத்தை பார்க்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். படத்தின் பாடல் மற்றும் டிரைலர் நன்றாக இருக்கிறது. படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்…” என்றார்.

இயக்குநர் சுந்தர்.சி பேசும்போது, “நான் சினிமாவில் அறிமுகப்படுத்திய பாலாஜி நடிகராகி இப்போது இயக்குநராக மாறி இருப்பது எனக்கு சந்தோசமாக இருக்கிறது. பாலாஜியிடம் நல்ல கிரியேட்டிவ் திறமை இருக்கிறது. நான் அவர் திறமையைத்தான் பயன்படுத்தினேன். அவர் இப்போது அவரது திறமையை வெளிக்காட்டியுள்ளார்.

இந்தியைவிட பல திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். அதனால் இந்த படம் மிகப் பெரிய வெற்றியடையும். படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் சிறப்பாக உள்ளன. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்..” என்றார்.

The post ‘மக்கள் இயக்குநர்கள்’ பட்டம் பெற்ற இயக்குநர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர்.சி appeared first on Touring Talkies.

]]>
R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்..! https://touringtalkies.co/r-j-balaji-aishwarya-rajesh-acting-a-new-movie/ Fri, 04 Mar 2022 11:24:14 +0000 https://touringtalkies.co/?p=21054 கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான S.லக்‌ஷ்மன் குமார் தனது 7-வது படைப்பாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி வேடத்தில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது. ஒளிப்பதிவு – எஸ்.யுவா, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – ஜி.வீரமணி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பால்பாண்டி, வசனம் […]

The post R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான S.லக்‌ஷ்மன் குமார் தனது 7-வது படைப்பாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் R.J.பாலாஜி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி வேடத்தில் நடிக்க தேர்வு நடந்து வருகிறது.

ஒளிப்பதிவு – எஸ்.யுவா, படத் தொகுப்பு – ஜி.மதன், கலை இயக்கம் – ஜி.வீரமணி, மக்கள் தொடர்பு – ஜான்ஸன், தயாரிப்பு நிர்வாகம் – ஏ.பால்பாண்டி, வசனம் – பாபு தமிழ், நேரடி தயாரிப்பு பொறுப்பு – கே.வி.துரை, இணை தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு – பிரின்ஸ் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் – எஸ்.லஷ்மண் குமார், எழுத்து, இயக்கம் – ஜியன் கிருஷ்ணகுமார்.

இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார், பிரித்விராஜ் நடித்த மலையாள படமான தியான்’(‘TIYAAN’) என்ற ஹிட் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்களிடம் தனி இடம் பிடித்து வரும்  R.J.பாலாஜி நடிக்கும் இப்படத்தின் கதையும் வித்தியாசமான கதைக் களம் கொண்டதுதான். இப்படம்  டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது.

படத்தின் பெயரும், மற்ற நடிகர், நடிகைகள் விவரமும்  விரைவில் அறிவிக்கப்படுமாம்.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் மிக எளிமையாக நடை பெற்றது.

வரும் மார்ச் 23-ம் தேதியன்று சென்னையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது.

The post R.J.பாலாஜி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம்..! appeared first on Touring Talkies.

]]>
Spotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…! https://touringtalkies.co/r-j-balaji-presented-naalana-murukku-podcast/ Mon, 21 Jun 2021 06:55:32 +0000 https://touringtalkies.co/?p=15664 இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார். இன்றைய டிஜிட்டல் உலகில் வாழும், இளைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள், மிக பிரபலமானதாக இருக்கிறது. இளைஞர்களின் உலகை ஆக்கிரமித்திருக்கும் Podcast உலகத்திற்குள மிக பெரிய அளவில், இன்றைய நவீன விசயங்களை, உள்ளூர் அறிஞர்களுடன் கலந்துரையாடும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, Spotify original நிறுவனம் […]

The post Spotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…! appeared first on Touring Talkies.

]]>
இன்றைய நவீன உலகின் பிரச்சனைகள், சந்தோஷங்களை, புதிய கோணத்தில் வழங்கக் கூடிய, ஒரு அழகான Podcast ஐ ரேடியோ ஜாக்கியும், நடிகரும், இயக்குநருமான R.J.பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

இன்றைய டிஜிட்டல் உலகில் வாழும், இளைய தலைமுறையினரிடம் Podcast எனும் ஒலி வழியான நிகழ்ச்சிகள், மிக பிரபலமானதாக இருக்கிறது. இளைஞர்களின் உலகை ஆக்கிரமித்திருக்கும் Podcast உலகத்திற்குள மிக பெரிய அளவில், இன்றைய நவீன விசயங்களை, உள்ளூர் அறிஞர்களுடன் கலந்துரையாடும் ஒரு அற்புதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியை, Spotify original நிறுவனம் நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜி  Podcast என்ற பெயரில் வழங்கவுள்ளது. 

இந்நிகழ்ச்சியை, ரேடியோ ஜாக்கி, நடிகர், காமெடியன், இயக்குநர், வர்ணனையாளர் மற்றும் சமூக ஆர்வலர் பாலாஜி பட்டுராஜ் எனும் R.J.பாலாஜி  தொகுத்து வழங்குகிறார். வாராவாரம் ஒளிபரப்பாகவுள்ள இந்நிகழ்ச்சி இன்று முதல் துவங்கவுள்ளது.

பன்முக திறமைகள் மூலம் இளைஞர்களிடம் மிகப் பெரும் பிரபல்யத்தை பெற்றிருக்கும் R.J.பாலாஜி அவர்கள், தனது பிரத்தியேகமான அசத்தும் பேச்சு திறமையால், புது வகையில் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இன்றைய நவீன உலகில் இந்தியா எதிர்கொள்ளும்,  பொது பிரச்சனைகள் குறித்து,  அழைக்கப்பட்ட விருந்தினர்களுடன் உரையாடி, அவர்களின் பார்வைகளை, அனுபவங்களை இந்நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

இது குறித்து R.J.பாலாஜி பேசும்போது, “Spotify original நிறுவனத்துடன் இப்படியொரு அழகான நிகழ்ச்சியில், இணைந்து பணியாற்றுவது மிகப் பெரும் மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி எனது பயணத்தில் ஒரு புதிய அத்தியாயமாக, புதிதானதை  கற்றுக் கொள்ள,  எனக்கொரு வழிகாட்டியாக இருக்குமென நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சி இன்றைய இந்தியாவின் பொது பிரச்சனைகளை, முக்கியமாக இணையத்தில் தவறான வகையில் பரப்பப்படும் பொய்யான கருத்துக்களில்,  ரசிகர்களுக்கு  சரியான விழிப்புணர்வை  எடுத்துரைப்பதாக இருக்கும். எந்தவித பொறுப்பும் இல்லாமல், எல்லாம் கொட்டிக் கிடக்கும் டிஜிட்டல் உலகில், இந்நிகழ்ச்சி இன்றைய அதிமுக்கிய பிரச்சனைகளில் மிகப் பொறுப்புடன்,  நகைச்சுவை கலந்து,  ரசிகர்களை ஒரு அற்புத பயணத்திற்கு அழைத்து செல்லும்…” என்று கூறினார்.

The post Spotify original வழங்கும் ‘நாலணா முறுக்கு’ – R.J.பாலாஜியின் புதிய Podcast…! appeared first on Touring Talkies.

]]>
மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம் https://touringtalkies.co/mookkuthi-amman-movie-review/ Sun, 15 Nov 2020 17:48:14 +0000 https://touringtalkies.co/?p=10066 ஒரு வரியில் ‘பக்திப் படம்’ என்று இந்த ’மூக்கத்தி அம்மன்’ படத்தை வரையறுக்க முடியாது. ஏனென்றால் அம்மன் படங்களில் வெறும் ‘அருள்’ மட்டும்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அருளோடு சேர்த்து அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகனான ஆர்.ஜே.பாலாஜி நாகர்கோவில் அருகேயிருக்கும் மணப்பாடு கிராமத்தில் லோக்கல் டிவி சேனலில் வேலை செய்யும் இளைஞன். மூன்று தங்கைகள், அம்மா மற்றும் தாத்தாவோடு கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்துகிறார். அதேநேரம் அந்தப் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் 11,000 ஏக்கர் நிலத்தை தன் […]

The post மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
ஒரு வரியில் ‘பக்திப் படம்’ என்று இந்த ’மூக்கத்தி அம்மன்’ படத்தை வரையறுக்க முடியாது. ஏனென்றால் அம்மன் படங்களில் வெறும் ‘அருள்’ மட்டும்தான் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் அருளோடு சேர்த்து அரசியலும் பேசப்பட்டிருக்கிறது.

படத்தின் நாயகனான ஆர்.ஜே.பாலாஜி நாகர்கோவில் அருகேயிருக்கும் மணப்பாடு கிராமத்தில் லோக்கல் டிவி சேனலில் வேலை செய்யும் இளைஞன். மூன்று தங்கைகள், அம்மா மற்றும் தாத்தாவோடு கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்துகிறார்.

அதேநேரம் அந்தப் பகுதியில் பரந்து விரிந்திருக்கும் 11,000 ஏக்கர் நிலத்தை தன் சுயலாபத்திற்காக ஆட்டையப் போட நினைக்கும் ஒரு சாமியாரின் முகத்திரையை கிழிக்கவும் அவர் போராடுகிறார். அதற்கு அவருடைய குல தெய்வமான ‘மூக்குத்தி அம்மனும்’ உதவுகிறார்.

முடிவில் சாமி ஜெயித்ததா..? அல்லது சாமியார் ஜெயித்தாரா..? என்பதே இந்த மூக்குத்தி அம்மனின்’ மீதிக் கதை.

‘L.K.G.’ படத்தில் இப்போதுதான் எல்.கே.ஜி ஸ்டுடண்ட் என்ற ரேஞ்சிற்கு பவ்யமாய் நடிக்க வந்த ஆர்.ஜே பாலாஜி, இந்தப் படத்தில் டிகிரி பெற்றவர் போல் சில இடங்களில்  வெளுத்துக் கட்டியிருக்கிறார். (கவனிக்க சில இடங்களில் மட்டும்) 

நடிகர்களின் நடிப்பைப் பட்டியல் போட்டால் நயன்தாராவை பின்னுக்குத் தள்ளி முன்னுக்கு வந்துவிடுகிறார் நடிகை ஊர்வசி. அவரின் அனுபவ நடிப்பு மொத்தத்தையும் கொட்டி, கண்ணில் நீர் வரும் அளவுக்கு சிரிக்கவும் வைக்கிறார். சில இடங்களில் கனத்த இதயத்தோடு கண்ணீர் வரவும் வைக்கிறார்.

மெளலி மெஸ்ஸில் சர்வர்கள் பேசும் அளவிற்கு கொஞ்சம்தான் பேசுகிறார். ஆனாலும், அவரது கதாப்பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் கூடுதல் எனர்ஜியை கொடுத்திருப்பது அந்தப் பகவதி பாபா’ சாமியார். மனிதரின் உடலும் கண்களும் கதகளி ஆடுகின்றன. மிகச் சிறந்த நடிப்பு.

மூக்கத்தி அம்மனாக’ வரும் நயன்தாராவை மூக்குத்தி அம்மனாகவே ஏற்கத் துவங்கி விடுகிறோம். அதுதான் அவரின் நடிப்பைப் பற்றி சொல்ல வேண்டிய அளவு. ஊர்வசியின் மூன்று மகள்கள், ஒரே சீனில் அசத்திய மயில்சாமி, வெட்டிங் போட்டோ கிராபராக வரும் ஆர்.ஜே.பாலாஜியின் நண்பர் கேரக்டர் என படத்தில் ஆங்காங்கே புஸ் ஆகாத பட்டாசு கேரக்டர்கள் இருப்பது சிறப்பு.

கிரிஷின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே தரம். குறிப்பாக நயன்தாராவிற்காக…. இல்லை மூக்குத்தி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ள பி.ஜி.எம். செம! நாகர்கோவிலின் அழகை அதன் அழகு கொஞ்சமும் கெடாமல் கேமராவிற்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

அரசியல் வசனங்களை வம்படியாக திணிக்காமல் போகிறபோக்கில் தெளித்திருப்பது இயக்குநர்கள் ஆர்.ஜே. பாலாஜி சரவணன் இருவரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

மதத்தின் பெயரால் நடக்கும்… சாமியார்கள் நடத்தும் மோசடிகளை எந்தச் சமரசமும் இல்லாமல் பேசியிருப்பது அசத்தல். அதிலும் கடவுள் சம்பந்தப்பட்ட மூட நம்பிக்கை சார்ந்த விசயங்களை கடவுளை வைத்தே பேசியிருப்பது மாஸ் மெட்டிரியல்.

நிறைய விசயங்களை குறிப்பிட்டுச் சொல்லிப் பாராட்டும்போது  குறைகளையும் சொல்லித்தான ஆகணும். போலிச் சாமியார்கள் என்றாலே மங்குனிகள்தான் என்றாலும் அதை ஒரு சினிமாவாக காட்டும்போது கொஞ்சம் லாஜிக்கையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்தச் சாமியார் கேரக்டர் இடைவேளைக்குப் பிறகு வெறும் காமெடி நடிகர் போல் டீல் செய்யப்பட்டிருப்பதால் அவரால் எதுவும் ஆபத்து நடக்காது என்பது மனதில் நன்றாகப் பதிந்து விடுகிறது. அதனால்  படத்தின் மீது பெரிய தாக்கம் வரவில்லை.

அந்த ஏரியாவை மட்டும் இன்னும் பலப்படுத்தி இருந்தால் இந்த மூக்குத்தி அம்மனின்’ ஆசி நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும். நாம் இப்படி சொல்வதற்கும் படத்தில் பதில் இருக்கிறது.

ஆமாம்.. நாம்தான் எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடைய மாட்டோமே..!!!

The post மூக்குத்தி அம்மன் – சினிமா விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ‘ஆடிக் குத்து’ பாடலின் வீடியோ காட்சி https://touringtalkies.co/mookkuthi-amman-movie-title-video-song/ Tue, 03 Nov 2020 06:44:51 +0000 https://touringtalkies.co/?p=9631 The post ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ‘ஆடிக் குத்து’ பாடலின் வீடியோ காட்சி appeared first on Touring Talkies.

]]>
The post ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ‘ஆடிக் குத்து’ பாடலின் வீடியோ காட்சி appeared first on Touring Talkies.

]]>