Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
ஆர்.கே.செல்வமணி – Touring Talkies https://touringtalkies.co Wed, 09 Nov 2022 06:00:41 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png ஆர்.கே.செல்வமணி – Touring Talkies https://touringtalkies.co 32 32 சினிமாவுக்கு கதையைவிட முக்கியம் எது?: ஆர்.கே. செல்வமணி https://touringtalkies.co/what-is-more-important-than-story-for-cinema-r-k-selvamani/ Wed, 09 Nov 2022 05:58:00 +0000 https://touringtalkies.co/?p=26799 புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் என தமிழ்த் திரையுலகையே புரட்டிப்போட்ட திரைப்படங்களை அளித்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி. இவர் சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்த விசயம், சுவாரஸ்யம் மட்டுமல்ல. திரைத்துறை கலைஞர்களுக்கு முத்தான பாடமும் கூட. அவர், “எந்த ஒரு படமாக இருந்தாலும், கதை என்பது அஸ்திவாரம்.  ஆனால் அதன் மீது அழுத்தமாக உறுதியாக கட்டப்படும் கட்டம் மிக முக்கியம். ஏனென்றால்,  கதையை எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அதைக் காட்சிப் படுத்துவது திரைக்கதைதான். அதை காட்சிப் படுத்தும்போது […]

The post சினிமாவுக்கு கதையைவிட முக்கியம் எது?: ஆர்.கே. செல்வமணி appeared first on Touring Talkies.

]]>
புலன்விசாரணை, கேப்டன் பிரபாகரன் என தமிழ்த் திரையுலகையே புரட்டிப்போட்ட திரைப்படங்களை அளித்தவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.

இவர் சமீபத்தில் ஒரு வீடியோ பேட்டியில் தெரிவித்த விசயம், சுவாரஸ்யம் மட்டுமல்ல. திரைத்துறை கலைஞர்களுக்கு முத்தான பாடமும் கூட.

அவர், “எந்த ஒரு படமாக இருந்தாலும், கதை என்பது அஸ்திவாரம்.  ஆனால் அதன் மீது அழுத்தமாக உறுதியாக கட்டப்படும் கட்டம் மிக முக்கியம். ஏனென்றால்,  கதையை எளிதாக சொல்லி விடலாம். ஆனால் அதைக் காட்சிப் படுத்துவது திரைக்கதைதான். அதை காட்சிப் படுத்தும்போது எந்த மாதிரி கேமரா கோணம் இருக்க வேண்டும் என்பதிலிருந்து அத்தனையும் மிக முக்கியம். இதை திரைக்கதைதான் முடிவு செய்யும். ஆகவே கதையை விட அதை மக்களுக்குச் சொல்லும் திரை மொழி.. திரைக்கதை மிக முக்கியம்” என்றார் ஆர்.கே. செல்வமணி.

The post சினிமாவுக்கு கதையைவிட முக்கியம் எது?: ஆர்.கே. செல்வமணி appeared first on Touring Talkies.

]]>
“கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்” https://touringtalkies.co/karthik-is-a-known-play-boy-ramki-is-a-known-play-boy-r-k-selvamani-speech/ Mon, 07 Nov 2022 15:44:09 +0000 https://touringtalkies.co/?p=26738 ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவசலபதி சாய் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’. நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் […]

The post “கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்” appeared first on Touring Talkies.

]]>
ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவசலபதி சாய் சரவணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘குருமூர்த்தி’.

நட்டி நடராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் ராம்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக பூனம் பஜ்வா நடிக்க மற்றும் சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் கே.பி.தனசேகரன் இயக்கியுள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச் சின்ன ஆசைகள் நிச்சயமாக இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார்.

அது மட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும்விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது. அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் உறுதியாகச் சொல்ல முடியும்.

ராம்கியும் இதில் நடித்திருக்கிறார். கார்த்திக்கை எல்லோருமே ப்ளேபாய் என்பார்கள். அது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தெரியாத விஷயம் இந்த ராம்கியும் ஒரு பிளேபாய்தான். ஆனால் இது யாருக்கும் தெரியாது.

சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம்கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத் துறைக்கு வழங்கப்படவில்லை.

வங்கியில் கடன் கேட்டால் சினிமாவிற்காகக் கொடுத்த 250 கோடி வாராக் கடன் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் மற்ற தொழில்களில் 10 லட்சம் கோடி வாராக் கடன் என்று அறிவிப்பு வெளியானதே, அவர்களுக்கு மட்டும் எப்படி கடன் கொடுக்க முடிந்தது..?

இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத் துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்களது எதிர்காலத்துக்காக அவர்களது சம்பளத்தில் பிடிக்கப்படும் நல நிதிகூட அரசாங்கத்துக்குச் செலுத்தப்பட்டு, ஆனால் அது வேறு துறைகளில் செலவுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிச்சயம் மாற்றும் வரவேண்டும். அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்றார் கூறினார்.

The post “கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்; ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்” appeared first on Touring Talkies.

]]>
“இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம் https://touringtalkies.co/you-cant-film-only-the-truth-in-india-director-rk-selvamani-regrets/ Fri, 28 Oct 2022 15:39:29 +0000 https://touringtalkies.co/?p=26186 “இன்றைக்கு இந்தியாவில் ஆபாசப் படம்கூட எடுக்கலாம். ஆனால் உண்மையை மட்டும் படமாக்க முடியாது…” – என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்த விழா எங்கள் சங்கத்தில் நடப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் சட்ட அமைப்பு எல்லாம் வெளிநாடுகளைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும், கடைப்பிடிப்பதிலும்தான் இங்கு சிக்கல் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். இந்தப் படம் மிக சிக்கலான பிரச்சனையை பேசுகிறது. இது எந்தப் பக்கத்தில் இருந்து […]

The post “இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
“இன்றைக்கு இந்தியாவில் ஆபாசப் படம்கூட எடுக்கலாம். ஆனால் உண்மையை மட்டும் படமாக்க முடியாது…” – என்று இயக்குநர் ஆர்.கே.செல்வமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “இந்த விழா எங்கள் சங்கத்தில் நடப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் சட்ட அமைப்பு எல்லாம் வெளிநாடுகளைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது.

ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும், கடைப்பிடிப்பதிலும்தான் இங்கு சிக்கல் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். இந்தப் படம் மிக சிக்கலான பிரச்சனையை பேசுகிறது. இது எந்தப் பக்கத்தில் இருந்து பேசுகிறது என்பதே முக்கியம்.

இந்தியாவில் எந்தக் கதையை வேண்டுமானாலும் படமெடுக்கலாம். ஆபாசமாகவும் படமெடுக்கலாம். ஆனால், உண்மையை மட்டும் எடுக்க கூடாது. என் படத்திற்கு அதுதான் நடந்தது. உண்மை பலரை சுடும்.

இந்தக் காலத்தில் சமூக வலைதளங்கள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போனில் இருக்கும் அனைத்தும் வேறொருவரால் கண்காணிக்கப்படுகிறது. இதை இளைய தலைமுறைக்கு சொல்லித் தர வேண்டும். இந்தப் படம் அந்த விசயத்தையும் பேசும் என நம்புகிறேன்..” என்றார்.

The post “இந்தியாவில் உண்மையை மட்டும் படமாக்க முடியாது” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் வருத்தம் appeared first on Touring Talkies.

]]>
“ஆர்.கே.செல்வமணிக்கு வில்லன் கே.பாக்யராஜ்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் விமர்சனம் https://touringtalkies.co/villain-k-bhagyaraj-for-rk-selvamani-review-by-director-rv-udayakumar/ Sat, 26 Feb 2022 08:47:24 +0000 https://touringtalkies.co/?p=20952 “இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணிக்கு வில்லனாக கே.பாக்யராஜ் வந்திருக்கிறார்…” என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார். இந்த விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சினிமா சங்கத் தேர்தல்களில் என்றைக்குமே தோல்வி அடையாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் ராதாரவிதான். அவர் படத்தில்தான் வில்லன். உங்களுக்கெல்லாம் நாயகன். எனக்கும் டப்பிங் யூனியனில் மெம்பராக வேண்டும் என ஆசை. “எப்போது வேண்டுமானாலும் வந்து சேர்ந்து […]

The post “ஆர்.கே.செல்வமணிக்கு வில்லன் கே.பாக்யராஜ்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
“இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணிக்கு வில்லனாக கே.பாக்யராஜ் வந்திருக்கிறார்…” என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.

இந்த விழாவில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “சினிமா சங்கத் தேர்தல்களில் என்றைக்குமே தோல்வி அடையாத ஒருவர் இருக்கிறார் என்றால் அது அண்ணன் ராதாரவிதான். அவர் படத்தில்தான் வில்லன். உங்களுக்கெல்லாம் நாயகன்.

எனக்கும் டப்பிங் யூனியனில் மெம்பராக வேண்டும் என ஆசை. “எப்போது வேண்டுமானாலும் வந்து சேர்ந்து கொள்…” என்று சொன்னார்.

இன்று சொந்த வாய்ஸில் பேசும் நடிகைகள் இல்லை.  அவர்களின் குரல் நீங்கள்தான். நீங்கள்தான் நட்சத்திரங்களை வாழ வைக்கிறீர்கள். அண்ணன் ராதாரவிக்கு எதுவுமே தேவை இல்லை. உங்களுக்கு அவர் நல்லது செய்வார்.

அவருக்கு நான் ஒரு படத்தில் கூட வாய்ப்பு தந்ததில்லை. ஆனால், என் மீது அன்பாக இருப்பார். செல்வமணி சூப்பர். அவரே எத்தனை நாள் ஹீரோவாக இருப்பார்?… வில்லன் வந்துதானே ஆக வேண்டும். அதனால்தான் இயக்குநர் சங்கத்தில் தற்போது எதிர்ப்பு வந்துள்ளது. வரட்டும்.. இதெல்லாம் அண்ணன், தம்பிக்குள்தான். வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.

The post “ஆர்.கே.செல்வமணிக்கு வில்லன் கே.பாக்யராஜ்…” – இயக்குநர் ஆர்.வி.உதயகுமாரின் விமர்சனம் appeared first on Touring Talkies.

]]>
பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது https://touringtalkies.co/tfpc-fefsi-agreement-cancelled-by-tfpc/ Sat, 07 Aug 2021 12:28:27 +0000 https://touringtalkies.co/?p=16855 பெப்சி அமைப்புடன் செய்து கொண்ட சம்பள ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் தாங்கள் விலகிக் கொள்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நடிகர் சிம்புவிடம் இருந்து  4 தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பண விவகாரத்தில் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக செயல்படுவதால் அவர் பெப்சி அமைப்பன் தலைவராக இருக்கும்வரையிலும் அந்தச் சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள […]

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது appeared first on Touring Talkies.

]]>
பெப்சி அமைப்புடன் செய்து கொண்ட சம்பள ஒப்பந்தம் உட்பட அனைத்து ஒப்பந்தங்களிலும் தாங்கள் விலகிக் கொள்வதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நடிகர் சிம்புவிடம் இருந்து  4 தயாரிப்பாளர்களுக்கு வர வேண்டிய பண விவகாரத்தில் பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி தன்னிச்சையாக செயல்படுவதால் அவர் பெப்சி அமைப்பன் தலைவராக இருக்கும்வரையிலும் அந்தச் சங்கத்துடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு இது :

“தமிழ்த் திரையுலகம் சுமூகமாகவும், பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதை திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புக் கொண்டார்கள்.

ஆனால் அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்மேளன தலைவர் திரு. ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்குரியது.

ஆகவே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும், தமிழ்த் திரையுலத்தை காப்பாற்றும் வகையிலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் 06.08.2021-அன்று நடைபெற்று அதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :

1. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் (ஒன் டு ஒன்) 06.08.2021-முதல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

2. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக் கொண்டு திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி தொடர்ந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.

4. மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ, பணி செய்பவர்களை தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றபட்டது.”

The post பெப்சி-தயாரிப்பாளர் சங்கம் உறவு முறிந்தது appeared first on Touring Talkies.

]]>