Touring Talkies
100% Cinema

Sunday, November 2, 2025

Touring Talkies

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான தீம் பாடலை பாடியுள்ள நடிகை ஆன்ட்ரியா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம்” என்ற பாடலை பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் நகுல் அபயங்கர். பாடல் வரிகளை ஆண்ட்ரியா மற்றும் நஸீப் முகம்மது இணைந்து எழுதியுள்ளனர். 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்தப் பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. வரவிருக்கும் மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நாளில் இந்தப் பாடல் உலகம் முழுவதும் ஒலிக்கவிருக்கிறது. 

இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது, “இது ஒரு சாதாரண பாடல் அல்ல; பெரிய கனவுகளை காணும், கடினமாக உழைக்கும், வெற்றியை தங்களது இல்லத்திற்கே கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான ஒரு கொண்டாட்டம்,” எனப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News