Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

‘பெய்டு வியூஸ்’ வழியே ரசிகர்கள் படம் மீது உண்மையாக ஆர்வம் காட்டுகிறார்களா என ஒருபோதும் உணர முடியாது – தயாரிப்பாளர் தில் ராஜூ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தை தயாரித்த பிரபல தெலுங்குத் தயாரிப்பாளர் தில் ராஜு, தனது தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தம்முடு’ படத்தின் ரீ ரிலீஸ் டிரைலர் வெளியீட்டு விழாவில் ‘பெய்டு வியூஸ்’ குறித்து திறந்த மனதுடன் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது: “இந்த ‘தம்முடு’ படத்திலிருந்து நான் ஒரு புதிய முறையை துவக்குகிறேன். இந்தப் படத்திற்கு கிடைக்கும் அனைத்து பார்வைகளும் (வியூஸ்) முற்றிலும் இயல்பானவைதான். எனது பிஆர்ஓவுக்கும் அலுவலகத்தாருக்கும் பணம் கொடுத்து பார்வைகளை அதிகரிக்க வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டேன். இப்படியான நேர்மையான அணுகுமுறையால், எங்கள் படத்திற்கு உண்மையில் எவ்வளவு வேல்யூ கிடைக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

‘பெய்டு வியூஸ்’ வழியாக, ரசிகர்கள் படம் மீது உண்மையாக ஆர்வம் காட்டுகிறார்களா என்பதை ஒருபோதும் உணர முடியாது. இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி இயல்பான பார்வைகளை மட்டுமே எதிர்பார்ப்பது கடினம் தான். ஆனால், இது தான் எதிர்காலத்திற்கு செல்லும் ஒரே வழி.ஊடகங்கள் பல்வேறு சிக்கலான சூழல்களை உருவாக்கும் வாய்ப்புகளைத் தேடுகின்றன. எனவே, படம் நன்றாக இருந்தால், ரசிகர்கள் அதை பார்த்து ரசிப்பார்கள். பொய்யான டிஜிட்டல் பார்வைகளை உருவாக்கவேண்டிய அவசியமே இல்லை,” என அவர் கூறினார்.

- Advertisement -

Read more

Local News