தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள நடிகை அனு இம்மானுவேல், தற்போது இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கிய “தி கேர்ள்பிரண்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் அவர் “துர்கா” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தற்போது இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. இதே வேளையில், அனு இம்மானுவேல் பேசிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள். எப்படிப் பேச வேண்டும், என்ன மாதிரியான உடை அணிய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதெல்லாம் சமூகம் நிர்ணயிக்கிறது. ஆனால் ஆண்கள் பெரும்பாலும் வேலை மற்றும் வருமானம் சார்ந்த சிக்கல்களையே அதிகமாக எதிர்கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

