Thursday, April 11, 2024

எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா சுட்டது ஏன்?: தொடர் வெளியாகிறது!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எம்.ஜி.ஆரை எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் குறித்த தொடர் வெளியாக உள்ளது.

இது தொடர்பான   வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சுமார் மூன்று மாதங்கள் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டிற்கு என்னவெல்லாம் காரணம் என்று அரசு தரப்பு வக்கீல் தெளிவாகவே நீதிமன்றத்தில் விவரித்தார். எம்.ஆர்.ராதாவின் வக்கீல் என்.டி.வானமாமலை ஆஜராகினார் எம்.ஆர்.ராதாவுக்கு எம்.ஜி.ஆர்க்கும் நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டனர்.

தொழிலாளி படத்தின் சூட்டிங்கில் எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா இருவரும் நடிக்கும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதில், “இந்த பஸ் தான் இனிமேல் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரம்” என வசனம் இருந்தது. அதை எம்.ஜி.ஆர், “இனி இதுதான் தொழிலாளர்களின் உதயசூரியன்” என மாற்றி சொன்னார்.

இதனால் ஆத்திரமான எம்.ஆர்.ராதா, “சினிமாவுக்குள் உன் கட்சியை கொண்டுவர கூடாது” என கொந்தளித்தார்.

இதனால் ஏற்பட்ட சண்டையில் எம்.ஜி.ஆர் சூட்டிங் நிறுத்தினார்.  பிறகு தயாரிப்பாளர் சின்னப்பா தேவர் வந்து இந்த சண்டையை நிறுத்தி எம்.ஜி.ஆரை இந்த பஸ் தான் இனி தொழிலாளர்களை நம்பிக்கை நட்சத்திரம் என்றபடியே வசனம் பேச வைத்தார்.

இது மட்டும் இல்லாமல் எம் ஆர் ராதா எழுதிய ஒரு கட்டுரையில் காமராஜரை கொல்ல சதி நடந்தது என்று எழுதினார்.

இதனால் நீண்ட மன உளைச்சலில் இருந்த எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதாவின் வளர விடாமல் பட வாய்ப்புகளை தட்டிச் சென்றார் என கூறப்படுகிறது. இதுவே இவர்களுக்கு இடையில் இருந்த கருத்து வேறுபாடு ஆகும் இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தான் தற்போது ராதிகாவின் ராடான் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. எம்.ஆர்.ராதாவின் மகளான ராதிகா இந்த தொடர் மூலம் அன்று என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைரின் மனதிலும் எழுந்துள்ளது.

- Advertisement -

Read more

Local News