Thursday, April 11, 2024

அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அஜித் பற்றி அதிகம் தெரியாத இரு விசயங்களை பத்திரிகையாளர் சுந்தரம் பகிர்ந்துகொண்டார். அவர், “பொதுவாக அஜித்தும் விஜயும் கடுமையான தொழில் போட்டியாளர்கள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல நண்ர்கள்.

இருவரும் நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார்.  அஜித்தும்  அவரை அம்மா அம்மா என்றே அழைப்பார்.

பலருக்கும் தெரியாத இன்னொரு விசயம, கல்லூரி வாசல்  படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்தி நடிகை பூஜா பட். அவருக்கு அஜித்தின் நடவடிக்கைகள் பிடித்துப்போக, இருவரும் ‘திக் ஃப்ரெண்ட்ஸ்’ ஆனார்கள். அந்தப் பழக்கத்தில் அஜித்தை இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தார் பூஜா. ஆனால், ‘தமிழே போதும். இந்தி இஷ்டம் இல்லை’ என அன்பாக மறுத்துவிட்டார் அஜித்” என்று பத்திரிகையாளர் சுந்தரம் தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News