Thursday, April 11, 2024

சம்பளம் வாங்காமல் நடித்து ஹிட் படம் கொடுத்த விஜயகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஜயகாந்த் நடிப்பதையும் தாண்டி தமிழ் சினிமாவில் பலருக்கு உதவியவர். அவரிடம் உதவி பெற்றவர்களில் ஒருவர் விஜய்.

நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு ஹீரோவாக அறிமுகமாகி நடித்த நாளைய தீர்ப்பு படம் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி இருந்தார். இப்படம் பெருந்தோல்வியான நிலையில், தனது மகனின் கேரியரை காப்பாற்ற வேண்டி எஸ்.ஏ சந்திரசேகர் அடுத்தடுத்த படங்களில் விஜயை நடிக்க வைக்க திட்டம் தீட்டினார்.

மேலும் விஜயின் அடுத்த படமமான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க நினைத்தார். விஜயகாந்தும் சரி என்று அப்படத்தில் விஜய்க்கு அண்ணன் கதாபாத்திரத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். அத்திரைப்படம் சூப்பர்ஹிட்டான நிலையில், அப்படத்தில் கிடைத்த லாபத்தை விஜயகாந்திடம் கொடுத்துள்ளார்.

அதை விஜயகாந்த் வாங்க மறுத்த நிலையில், நான் என் கடமையை தான் செய்தேன். விஜய் மேலும்,மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென கூறி அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.

இதை விஜயே ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News