Thursday, April 11, 2024

விஜய் சேதுபதியின் ‘ஃபார்ஸி’ இந்தி பட முன்னோட்டம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகியந்து. இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான ‘ஃபார்ஸி’,  பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் வெளியாக உள்ளதாக  கூறுகின்றனர்.

விரைவில் வெளியாகவிருக்கும்  அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. D2R ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவான இந்த வலைதளத் தொடர், பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10ஆம் தேதி பிரத்யேகமாக திரையிடப்படும்  என தெரிவித்துள்ளனர்.

கதை சுருக்கம் என்று பார்த்தால் ’  தவறான பாதையில்  பயணிக்கும் சன்னி,  திடீரென  தான் செய்வது தவறு என உணர்கிறான்.  அதில் இருந்து விடுபட நினைக்கும் போது அவன் எதிர்கொள்ளும் பிரச்சனை ஒருபுறம். அவனால்  நாட்டுக்கு ஏற்படக்கூடிய  பாதிப்பை  தடுக்க நினைக்கும் அதிரடிப்படை அதிகாரியாக  பிடுக்காக தோன்றும்  விஜய் சேதுபதி. இவருகளுக்குள் நடக்கும் போராட்டங்கள் ,க்ரைம் திரில்லர் இதைச்சுற்றி கதை அமைந்திருக்கிறது. இவர்களுடன்  மற்ற நடிகர்களின் பங்குகளுடன்  விறுவிறுப்பான  தொடராக  வெளிவருகிறது ஃபார்ஸி.

இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும் போது…” குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பது தான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது. ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும் போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சி தான்.  இந்த தொடர் ஒரு கூட்டுமுயற்சியால் உருவாகியுள்ளது.  தொடர் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.”என்றார்.

- Advertisement -

Read more

Local News