Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

சமுத்திரக்கனி நடிப்பில் சுப்ரமணிய சிவா இயக்கிய ‘வெள்ளை யானை’ தொலைக்காட்சியில் வெளியாகிறது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் சுப்ரமணியம் சிவாவின் இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடித்திருக்கும் வெள்ளை யானை’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகப் போகிறதாம்.

2003-ம் ஆண்டு திருடா திருடி’ என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானர் இயக்குர் சுப்ரமணியம் சிவா. அதனைத் தொடர்ந்து ‘பொறி’, ‘யோகி’, ‘சீடன்’ ஆகிய படங்களையும் சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார்.

மேலும் இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வட சென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். தற்போது இவர் நடிகர் மற்றும் இயக்குநரான சமுத்திரக்கனியை வைத்து  இயக்கியுள்ள படம் வெள்ளை யானை’.

இந்த ‘வெள்ளை யானை’ திரைப்படத்தை ‘WHITE LAMB TALKIES’ தயாரிப்பு நிறுவனத்தின்  சார்பில் தயாரிப்பாளர் S.வினோத் குமார்  தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடிகை ஆத்மியா  நடித்துள்ளார். இவர் தமிழில் மனங்கொத்தி பறவை’ என்னும் படத்தில் அறிமுகமானவர்.

மேலும் யோகிபாபு, E.ராமதாஸ், இயக்குநர் மூர்த்தி, S.S.ஸ்டான்லி, பவா செல்லத்துரை, ‘சாலை ஓரம்’ ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர் .

எழுத்து – இயக்கம் – சுப்ரமணியம் சிவா, தயாரிப்பு – S.வினோத்குமார் (WHITE LAMB TALKIES), தயாரிப்பு மேற்பார்வை – S.A.சிவச்சந்திரன், இசை – சந்தோஷ் நாராயணன், கலை இயக்கம் –  ஆ.ஜெகதீசன், ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி, படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், சண்டை இயக்கம் – தினேஷ் சுப்பராயன், சிறப்பு ஒலிகள் – சேது, ஆடை வடிவமைப்பு – நாகு, ஒப்பனை – A.சரவணக் குமார், B.ராஜா, விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது. 

விவசாயம், விவசாயிகளின் வாழ்க்கையை நையாண்டியாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியுள்ளார் இயக்குநர் சுப்ரமணியம் சிவா.

இந்தப் படம் சென்ற ஆண்டே தயாராகியிருந்த நிலையில் கொரோனா லாக் டவுன் காரணமாக படத்தின் திரையிடல் தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே சென்றது.

இந்த நிலையில் இதற்கு மேலும் படத்தினைத் தள்ளிப் போட முடியாத சூழலுக்கு உள்ளான படத்தின் தயாரிப்பாளர் படத்தினை தொலைக்காட்சியிலும், ஓடிடி தளத்திலும் வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டார்.

இந்த வெள்ளை யானை திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. அதே சன் தொலைக்காட்சியின் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட் தளத்தில்தான் இந்த வெள்ளை யானை படமும் வெளியாகவிருக்கிறதாம்.

ஆனால் முதலில் தொலைக்காட்சியில்.. பின்புதான் ஓடிடி தளத்தில் என்று ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம்.

எப்படியோ.. முதலுக்கு மோசமில்லாமல் தயாரிப்பாளர் தப்பித்துவிட்டதால் இயக்குநர் நிம்மதிப் பெருமூச்சுவிட.. தயாரிப்பாளரோ ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்.

- Advertisement -

Read more

Local News