Friday, April 12, 2024

டப்பிங் பணிகளை துவக்கிய ‘வேலன்’ படக் குழு…!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Sky Films International நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்து வரும் திரைப்படம் ‘வேலன்’.

இப்படத்தில் ‘பிக்பாஸ்’ முகேன் நாயகனாகவும், மீனாக்‌ஷி நாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரபல மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத் தொகுப்பு செய்ய, சண்டை இயக்கத்தை மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்க்கி, ஏகாதசி, வேல்முருகன் மூவரும் இணைந்து எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா A பிள்ளை மற்றும் K.ராஜன் செய்துள்ளனர். M.சந்திரன், சவரிமுத்து, கவின் மூவரும் வசனமெழுதியுள்ளனர். சிற்றரசு புகைப்படங்கள் பணிகளை செய்துள்ளார்.

தமிழின் முன்னணி இயக்குநரான சிவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கவின் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

வேலன்’ படத்தின் முழுப் படப்பிடிப்பும் திட்டமிடப்பட்ட காலத்தில், முடிக்கப்பட்டதில் உற்சாகத்தில் இருக்கிறது படக் குழு. தற்போது படத்தின் போஸ்ட் டப்பிங் பணிகள் துவங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் இது குறித்துப் பேசும்போது, “நாங்கள் தயாரிக்கும் ‘வேலன்’ படத்தின் பணிகள் இயக்குநர் கவின் உறுதியளித்தபடி மிகச் சரியாக நடந்து வருகிறது. படம் உருவாகி வந்திருக்கும்விதமும் எங்களுக்கு மிகுந்த திருப்தியை தந்துள்ளது.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மிகச் சரியான விழாக் காலத்தில் படத்தின் மோஷன் போஸ்டர், இசை, மற்றும் ட்ரெய்லர், வெளியீட்டு தேதிகள் குறித்த தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும்…” என்றார்.

- Advertisement -

Read more

Local News