Thursday, April 11, 2024

“வடிவேலு செய்த தவறு!”: அது என்ன?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நகைச்சுவை நடிகர்களில் மிக முக்கியமானவர் வடிவேலு. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு வடிவேலு நடிப்பில் வெளிவந்த “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி” படத்தில் முதன் முறையாக நாயகனாக நடித்தார்.

இத்திரைப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருந்தார். இப்படம் பெரும் வெற்றி பெற்று, வடிவேலுவின் சினிமா வாழ்க்கையிலேயே மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

ஆனால் அடுத்தடுத்து அவர் நாயகனாக நடித்த, “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்”, “தெனாலி ராமன்”, “எலி” ஆகிய திரைப்படங்கள் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சரியாக ஒத்துழைப்பு தரவில்லை.

தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர், தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இப்புகாரை தொடர்ந்து வடிவேலு சினிமாவில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டது. எனினும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வர, கடந்த 2021 ஆம் ஆண்டு வடிவேலு மீதான தடை நீங்கியது. இதனை தொடர்ந்துதான் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்தார் அதுவும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தற்போது “மாமன்னன்”, “சந்திரமுகி 2” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணனிடம், டூரிங் டாக்கிஸ் யூ டியுப் சேனலில் ஒரு நேயரின் கேள்விக்கு இது குறித்து பதில் அளித்தார்.
அதாவது அந்த நேயர், “வடிவேலு ஏன் சிம்புதேவன் போன்ற நல்ல இயக்குனர்கள் கூறுகிற கதையை கேட்டு நடிக்காமல், கதையில் தலையிட்டு தன்னை தானே தாழ்ந்த நிலைக்கு கொண்டுப்போயிருக்கிறார்?” என்பதுதான் அந்த கேள்வி.

இதற்கு சித்ரா லட்சுமணன், “வடிவேலு தாழ்ந்த நிலைக்குச் சென்றதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சிம்புதேவனின் திரைப்படத்தில் அவர் கொஞ்சம் அட்ஜெஸ்ட் செய்து நடித்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி என்ற வெற்றிப்படத்தை வடிவேலுவுக்கு தந்தவர் சிம்புதேவன். அதுமட்டுமல்லாமல் வடிவேலுவை மனதில் வைத்துக்கொண்டு அந்த படத்தில் எல்லா காட்சிகளையும் மிகச்சிறப்பாக வடிவமைத்து இருந்தார் சிம்புதேவன். அப்படிப்பட்ட இயக்குனரோடு வடிவேலு தொடர்ந்து படம் பண்ணியிருந்தால் நிச்சயமாக பல வெற்றித் திரைப்படங்களை அளித்திருக்க முடியும்” என்று தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

இது போன்ற சுவாரஸ்யமான திரைப்பட தகவல்களை அறிய, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலை பாருங்கள்..

- Advertisement -

Read more

Local News