Friday, April 12, 2024

லாக்டவுனில் சிக்கிய தொலைக்காட்சி சேனல்களின் சீரியல்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்புகள் இன்று முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன.

சென்ற ஆண்டு இதேபோல் லாக் டவுனின்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று லாக் டவுன் அறிவிக்கப்பட்டதால் கையில் இருந்த எபிசோடுகளை வைத்து ஒளிபரப்பி முடித்தன சேனல்கள்.

அதன் பின்பு வேறு வழியில்லாமல் பழைய தொடர்களையே தூசி தட்டி ஒளிபரப்பி வந்தன. மீண்டும் லாக் டவுன் முடிந்த பின்பே ஷூட்டிங்கை நடத்தி அதே தொடர்களை தொடர்ந்து நடத்தினார்கள்.

ஆனால் இந்த முறை அதை தவிர்க்கும் பொருட்டே தேர்தல் நேரத்திலேயே மிக வேகம், வேகமாக படப்பிடிப்பை நடத்தச் சொன்னார்கள் சேனல் நிர்வாகிகள். அப்படியிருந்தும் இன்றைக்கும் பல சேனல்களில் எபிசோடு  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் சன் தொலைக்காட்சி தனது சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களின் நேரத்தைக் குறைத்தும், நாட்களைக் குறைத்தும் சமாளிக்க எண்ணியுள்ளது.

தொடர்கள் ஒளிபரப்பாகும் நாட்களாக இப்போது இருக்கும் திங்கள் முதல் சனிவரை என்பதை திங்கள் முதல் வியாழன்வரையிலும் என்று நாட்களைக் குறைக்க இருக்கிறதாம். அதேபோல் தொடர்களின் நேரமான 24 நிமிடங்களை மேலும் குறைத்து 20 நிமிடங்களாக்கப் போகிறதாம்.

அந்த 4 நிமிடங்களை சரிக்கட்ட அந்தத் தொடரின் டைட்டிங் பாடல் காட்சியின் நேரத்தைக் கூட்டும்படியும், இல்லாவிடில் முந்தைய எபிசோடின் சுருக்கத்தை நீட்டிக்கும்படியும் சொல்லியிருக்கிறார்களாம்.

ஸ்டார் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களை நிறுத்திவிட்டு அதன் முந்தைய பகுதிகளையே மீண்டும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். ஸ்டார் விஜய் தனக்கு பெரிய பலமாக இருக்கும் ரியாலிட்டி ஷோக்களை மட்டும் திரும்பவும் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

ராஜ் தொலைக்காட்சியில் சமீபத்தில்தான் புத்தம் புதிய தொடர்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின. இப்போதுதான் டி.ஆர்.பி.க்குள்ளேயே நுழைந்தோம். அதற்குள்ளேயாவா இப்படி என்று வருத்தப்பட்ட ராஜ் டிவி நிர்வாகம் மிக வேகம், வேகமாக தனது தொடர்களின் ஷூட்டிங்கை நடக்க வைத்தது. அப்படியிருந்தும் ஷார்ட்டேஜ் இருப்பதால் புட்டேஜ் இல்லாமல் ரிப்பீட் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

மக்களும் ஏற்கெனவே ரிப்பீட் பார்த்து பழகிவிட்டதால், இதையும் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள் என்றே நம்பலாம்.

- Advertisement -

Read more

Local News