Touring Talkies
100% Cinema

Thursday, December 11, 2025

Touring Talkies

தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தனுஷ் – ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மெய்ன்’‌. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தில்லியில் தொடங்கியது. ‘ராஞ்சனா’, ‘அட்ராங்கி ரே’ போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல். ராய் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீரித்தி சனோன் நடித்துள்ளார். மும்பை, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் வரும் இந்த மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ராஞ்சனாவுடன் தொடர்புடைய கதை கொண்டதாக பேசப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனுஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார்.சமீபத்தில் வெளியான டீசர், காதல்–ஆக்ஷன் கலந்து உருவாக்கப்பட்ட காட்சிகளும், ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. இந்நிலையில், தற்போது ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

Read more

Local News